இந்தியாவில் நடப்பாண்டில் முதல் 9 மாதத்தில் ஆடி சொகுசு கார் விற்பனை 29 சதவீதம் அதிகரிப்பு..!

நடப்பாண்டில் ஜனவரி முதல் செப்டம்பர் வரையிலான 9 மாதத்தில் ஆடி சொகுசு கார் விற்பனை இந்தியாவில் 29 சதவீதம் அதிகரித்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.  நடப்பாண்டில் 2947 யூனிட்டுகள் விற்பனை செய்யப்பட்டுள்ளதாகவும், A8 மற்றும் Q7 மாடல்களால் விற்பனை அதிகரித்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.  Source link

தனியார் செல்போன் நிறுவனத்தில் மலையாள நடிகை சிறைபிடிப்பு

திருவனந்தபுரம்: கேரள மாநிலம் கொச்சியில் உள்ள தனியார் செல்போன் நிறுவனத்தில் டூப்ளிகேட் சிம் கார்டு வாங்கச் சென்ற பிரபல மலையாள நடிகை அன்னா ரேஷ்மா ராஜனை ஊழியர்கள் சிறை வைத்தது பரபரப்பை ஏற்படுத்தியது. மலையாள சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவர் அன்னா ரேஷ்மா ராஜன். கடந்த 2017ல் லிஜோ ஜோஸ் பெல்லிசேரி இயக்கிய அங்கமாலி டைரீஸ் என்ற படத்தின் மூலம் அறிமுகமானார். அதன்பிறகு வெளிபாடின்டெ புஸ்தகம், மதுர ராஜா, ஐயப்பனும் கோஷியும் உள்பட பல்வேறு படங்களில் நடித்து … Read more

அருணாச்சலில் ராணுவ ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கியதில் விமானி உயிரிழப்பு

குவாஹாட்டி: அருணாச்சல பிரதேசத்தில் பூடான் மற்று சீன எல்லையை ஒட்டி தவாங் மாவட்டம் அமைந்துள்ளது. இம்மாவட்டத்தில் சீன எல்லைக்கு அருகில் இந்திய ராணுவத்தின் சீட்டா ஹெலிகாப்டர் ஒன்று நேற்று காலை 10 மணியளவில் பயிற்சியின் போது திடீரென விழுந்து நொறுங்கியது. இதில் விமானிகள் இருவரும் படுகாயம் அடைந்தனர். அவர்களில் சவுரவ் யாதவ் என்ற விமானி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். மற்றொரு விமானி சிகிச்சை பெற்று வருகிறார். விபத்துக்கான காரணம் தெரியவில்லை. இதுகுறித்து ஆராயப்பட்டு வருவதாக ராணுவம் தெரிவித்துள்ளது. … Read more

திருநங்கையாக நடிக்கும் சுஷ்மிதா சென்

மும்பை: சுஷ்மிதா சென் தமிழில் ரட்சகன் படத்தில் நடித்தார். அதன்பிறகு பாலிவுட்டில் பிசியாக நடித்துக் கொண்டிருந்தார். சமீபகாலமாக சினிமாவில் நடிப்பதை குறைத்துக் கொண்டு வெப் தொடர்களில் அதிகமாக நடித்து வருகிறார். தற்போது அவர் ‘தாஹ்லி’ என்ற வெப் தொடரில் திருநங்கை கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். மும்பையில் வசிக்கும் சமூக ஆர்வலரும், திருநங்கைகளுக்காக குரல் கொடுத்து வருபவருமான சவுரி சாவந்த் என்ற திருநங்கையின் வாழ்க்கையை அடிப்படையாக வைத்து இந்த தொடர் உருவாகி வருகிறது. இதை தேசிய விருது பெற்ற … Read more

உத்தராகண்டில் பேருந்து கவிழ்ந்து 25 பேர் உயிரிழப்பு

டேராடூன்: உத்தராகண்ட் மாநிலத்தின் ஹரித்துவார் மாவட்டம் லால்தாங் என்ற இடத்திலிருந்து திருமண விருந்தினர்களுடன் பேருந்து ஒன்று நேற்று முன்தினம் இரவு புறப்பட்டது. இதில் பெண்கள், குழந்தைகள் உட்பட 45-க்கும் மேற்பட்டோர் பயணம் செய்தனர். இந்தப் பேருந்து பவுரி கார்வால் மாவட்டம், திமரி என்ற கிராமத்தில் வரும் போது, கட்டுப்பாட்டை இழந்து 500 மீட்டர் ஆழ பள்ளத்தில் கவிழ்ந்தது. தகவல் அறிந்த மாநில போலீ ஸார் மற்றும் பேரிடர் மீட்புக் குழுவினர் அங்கு விரைந்து சென்றுமீட்புப் பணியில் ஈடுபட்டனர். … Read more

மதம் மாறிய தலித்துகளுக்கும் இடஒதுக்கீடு வழங்க திட்டம்; முன்னாள் தலைமை நீதிபதி தலைமையில் குழு

புதுடெல்லி: மதம் மாறிய தாழ்த்தப்பட்ட மக்களுக்கு, எஸ்சி அந்தஸ்து வழங்குவது பற்றி ஆராய உச்ச நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி பாலகிருஷ்ணன் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது. தாழ்த்தப்பட்ட பிரிவுகளை சேர்ந்த மக்கள் இந்துவில் இருந்து  இஸ்லாம், கிறிஸ்தவ மதங்களுக்கு மாறினால், அவர்களுக்கு வழங்கப்படும் சலுகைகள் பறிக்கப்படுகிறது. மேலும், தாழ்த்தப்பட்டோர் என்ற அந்தஸ்தையும் அவர்கள் இழக்கின்றனர். இந்நிலையில், மதம் மாறியபோதிலம் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு இடஒதுக்கீட்டின் பலன்கள் வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை நீண்ட காலமாக எழுப்பப்பட்டு வருகிறது. இந்நிலையில், … Read more

வட மாநிலங்களில் தசரா கொண்டாட்டத்தில் மத நல்லிணக்கம் – ராவணன் உருவ பொம்மை தயாரிக்கும் முஸ்லிம்கள்

புதுடெல்லி: வட மாநிலங்களில் ராவணன் உருவ பொம்மை தயாரிப்பில் முஸ்லிம் குடும்பங்களும் ஈடுபட்டுவருகின்றன. தசரா கொண்டாட்டத்தில் இது மதநல்லிணக்கத்துக்கு சான்றாக திகழ்கிறது. வட இந்திய மாநிலங்களில் தசரா பண்டிகை விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது. இதில் முக்கிய நிகழ்வான ராவணன் உருவ பொம்மை எரிப்பு நேற்று நடைபெற்றது. ராமாயணத்தில் அரக்கர் குலத்தைச் சேர்ந்த ராவணனை ராமர் போரில் வென்று, கொன்ற தினத்தை வட மாநிலங்களில் தீபாவளியாக கொண்டாடுகிறார்கள். தசரா பண்டிகையின் இறுதியிலும் ராவணன் மற்றும் அவனது தம்பி கும்பகர்ணனின் உருவ … Read more

வில் அம்பு கேட்கும் ஷிண்டே தேர்தல் ஆணையம் கெடு உத்தவ் எக்ஸ்பிரஸ் பதில்

மும்பை: சிவசேனாவின் வில் அம்பு சின்னத்தை ஷிண்டே அணிக்கு ஒதுக்குவது தொடர்பாக இன்றைக்குள் பதில் அளிக்கும்படி உத்தவ்  தாக்கரேவுக்கு தேர்தல் ஆணையம் உத்தரவிட்ட நிலையில், நேற்றே அவர் தனது பதிலை அனுப்பினார். மகாராஷ்டிராவில் சிவசேனா உடைக்கப்பட்டு, முதல்வர் ஏக்நாத் ஷிண்டே தலைமையில் ஒரு அணியும், உத்தவ் தாக்கரே தலைமையில் ஒரு அணியும் செயல்பட்டு வருகின்றன. தங்கள் அணிதான் உண்மையான சிவசேனா என்று அறிவிக்கும்படி, உச்ச நீதிமன்றத்தில் இருதரப்பினரும் வழக்கு தொடர்ந்துள்ளனர். அது நிலையில் இருக்கும் நிலையில், கட்சியின் … Read more

பிற மதங்களுக்கு மாறிய பட்டியலின மக்களுக்கு எஸ்சி அந்தஸ்து கோரிக்கை – ஆராய 3 நபர் கமிஷன் அமைப்பு

புதுடெல்லி: மற்ற மதங்களுக்கு மாற்றப்பட்ட பட்டியலின மக்களுக்கு எஸ்சி அந்தஸ்து வழங்குவது குறித்து ஆராய 3 பேர் கொண்ட கமிஷன் அமைக்கப்பட்டுள்ளது. மதம் மாறிய பட்டியலின கிறிஸ்தவர்களும், பட்டியலின முஸ்லிம்களும் தங்களை பட்டியலினத்தில் சேர்க்க வேண்டும் என நீண்ட காலமாக கோரிக்கை விடுத்து வருகின்றனர். இந்த கோரிக்கையின் அடிப்படையில், சீக்கியம் அல்லது பௌத்தம் தவிர வேறு மதங்களுக்கு மாறிய தலித்துகளுக்கு பட்டியல் சாதி அந்தஸ்து வழங்குவது குறித்து ஆராய மூன்று பேர் கொண்ட விசாரணை ஆணையத்தை மத்திய … Read more

வாபஸ் பெறுவாரா சசிதரூர்.. காங்கிரஸ் தலைவரை தேர்ந்தெடுக்க வாக்குப்பதிவு நடைபெறுமா?

காங்கிரஸ் கட்சிக்கு புதிய தலைவரை தேர்ந்தெடுக்க வாக்கெடுப்பு நடைபெறுமா என காங்கிரஸ் வட்டாரங்களில் பரபரப்பாக கேள்வி எழுப்பப்படுகிறது. மல்லிகார்ஜுன் கார்கே மற்றும் சசி தரூர் ஆகிய இருவரும் களத்தில் உள்ள நிலையில், சசி தரூர் வெற்றி பெற வாய்ப்பு இல்லை என்பதால், போட்டியிலிருந்து அவர் விலக வாய்ப்பு உள்ளதாக காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் கருதுகின்றனர்.  மல்லிகார்ஜுன் கார்கே காங்கிரஸ் கட்சியின் இடைக்கால தலைவர் சோனியா காந்தி மற்றும் “பாரத் ஜோடோ” யாத்திரைக்கு தலைமை தாங்கும் ராகுல் … Read more