வங்கிக்கடன் மோசடி – பிரபல கப்பல் கட்டுமான நிறுவனத் தலைவர் ரிஷி கமலேஷ் கைது

வங்கிகளில் சுமார் 23ஆயிரம் கோடி ரூபாய் மோசடி செய்த வழக்கில் குஜராத்தைச் சேர்ந்த பிரபல கப்பல் கட்டுமான நிறுவனத்தின் தலைவர் கைது செய்யப்பட்டுள்ளார். குஜராத் மாநிலம் சூரத்தை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் கப்பல் கட்டும் நிறுவனம் ஏ. பி.ஜி. ஷிப் யார்டு. இதன் தலைவராக இருக்கும் ரிஷி கமலேஷ் அகர்வால், எஸ்.பி.ஐ., ஐ.சி.ஐ.சி.ஐ. உள்ளிட்ட 28 வங்கிகளில் 22ஆயிரத்து 842 கோடி ரூபாய் கடன் வாங்கிவிட்டு வேண்டுமென்றே திருப்பிச் செலுத்தாமல் மோசடி செய்துள்ளதாக புகார் எழுந்தது. 2012 … Read more

உ.பி.யில் கனமழை 10 பேர் உயிரிழப்பு

இட்டாவா: உத்தரப் பிரதேசத்தில் தொடர்ந்து மழை பெய்து வருகின்றது. இதன் காரணமாக சந்திரபுரா கிராமத்தில் நேற்று முன்தினம் இரவு வீட்டின் சுவர் இடிந்து விழுந்தது. இதில் வீட்டிற்குள் தூங்கிக் கொண்டு இருந்த 4 சிறுவர்கள் உயிரிழந்தனர். மேலும், சிறுவர்களின் பாட்டி சாந்தினி தேவி (70) மற்றும் 5 வயது குழந்தையும் காயமடைந்தனர். இதேபோல், கிரிபால்புர் கிராமத்தில் பெட்ரோல் பங்க் அருகில் இருந்த குடிசை மீது சுற்றுச்சுவர் இடிந்து விழுந்ததில் ராம் சனேகி (65) அவரது மனைவி ரேஷ்மா … Read more

பஞ்சாப்பில் சட்டப்பேரவையை கூட்ட ஆளுநர் அனுமதி மறுப்பு – காரணம் என்ன?

பஞ்சாப் மாநிலத்தில் சட்டப்பேரவை கூட்டத்தை கூட்ட ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் அனுமதி மறுத்துள்ளார். பஞ்சாப் மாநிலத்தில் ஆம் ஆத்மி கட்சி சட்டமன்ற உறுப்பினர்களை பாஜக விலைக்கு வாங்க தொடர்ந்து முயற்சிப்பதாகக் கூறப்படுகிறது. இதனால், சட்டப்பேரவையைக் கூட்டி நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என அம்மாநில முதலமைச்சர் பகவந்த் மான் ஆளுநரிடம் தெரிவித்திருந்தார். இதற்கு நம்பிக்கை வாக்கெடுப்புக்கு அவசியம் இல்லை எனக்கூறி ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் அனுமதி மறுத்துள்ளார். இதனால் முதலமைச்சர் தலைமையில் ஆம் ஆத்மி கட்சி சட்டமன்ற … Read more

ஹிஜாப் மேல்முறையீடு வழக்கு – தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை ஒத்திவைத்தது உச்சநீதிமன்றம்!

கல்வி நிறுவனங்களில் ஹிஜாப் அணிந்து வர தடை விதிக்கப்பட்ட விவகாரத்தில் கர்நாடக உயர்நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் மீதான விசாரணை நிறைவடைந்த நிலையில் தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை உச்சநீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது. ஹிஜாப் அணிந்து வருவது என்பது இஸ்லாமிய மதத்தில் அடிப்படையான விஷயம் அல்ல என்றும், சீருடை விவகாரத்தில் சில குறிப்பிட்ட கட்டுப்பாடுகளை விதிப்பது அடிப்படை உரிமைகளை பறிக்கும் செயல் கிடையாது எனவும், கர்நாடகா உயர்நீதிமன்றம் கடந்த மார்ச் மாதம் தீர்ப்பு வழங்கியிருந்தது. இதற்கு எதிராக … Read more

பாஜகவினர் மீது போலீசார் தடியடி..! – பஞ்சாப் மாநிலத்தில் பரபரப்பு ..!

பஞ்சாப் அரசை எதிர்த்து போராட்டம் நடத்திய பாஜகவினர் மீது அம்மாநில காவல் துறையினர் தடியடி நடத்தியுள்ளனர். பஞ்சாப் மாநிலத்தில் ஆளும் கட்சியான ஆம் ஆத்மி அரசு நம்பிக்கை தீர்மானத்தை கொண்டு வருவதற்காக சட்டப் பேரவையின் சிறப்பு கூட்ட தொடர் நடத்த முடிவு செய்யப்பட்ட சூழல் நிலவியது . ஆனால் பஞ்சாப் மாநில ஆளுநர் பன்வாரிலால் புரோகித் நேற்றைய தினம் சட்டமன்ற கூட்ட தொடர் நடத்துவதற்கான முடிவை திடீரென திரும்ப பெற்று விட்டார். ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தின் இந்த … Read more

பெங்களூரு- ஒசூர் சிறப்பு ரயில் 2 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் இயக்கம்

பெங்களூரு: பெங்களூரு யஷ்வந்த்பூர்- ஒசூர் சிறப்பு ரயில் 2 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் இயக்கப்பட்டுள்ளது. காலை 6.10 மணிக்கு யஷ்வந்த்பூரில் இருந்து புறப்பட்ட சிறப்பு ரயில் 7.50 மணிக்கு ஒசூர் வந்தடைந்தது.  

விரைவில் காங்கிரஸ் தலைவர் தேர்தல்..! – வெளியானது தேர்தல் அட்டவணை..!

அதன் அடிப்படையில் காங்கிரஸ் கட்சி தலைவருக்கான தேர்தலுக்கான அட்டவணை இன்று வெளியாகியுள்ளது.அதில், வரும் அக்டோபர் மாதம் 17ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளதாகவும், 19ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறவு உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.இதற்கான வேட்பு மனுத்தாக்கல் செப்டம்பர் 24-ம் தேதி முதல் 30-ம் தேதி வரை நடைபெறுகிறது. வேட்பு மனுக்கள் அக்டோபர் 1-ம் தேதி பரிசீலனை செய்யப்படுகின்றன. வேட்பு மனுக்களை வாபஸ் பெற அக்டோபர் 8-ம் தேதி கடைசி நாள் என்றும் . வாக்கு எண்ணிக்கை முடிவுற்ற … Read more

டெல்லியில் தேசிய புலனாய்வு முகமையின் இயக்குநர் உள்ளிட்டோருடன் ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆலோசனை

டெல்லி: டெல்லியில் தேசிய புலனாய்வு முகமையின் இயக்குநர், தேசிய பாதுகாப்பு ஆலோசகர், ஒன்றிய உள்துறை செயலாளர் உள்ளிட்டோருடன் ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆலோசனை நடத்தி வருகிறார். பாப்புலர் ஃப்ரண்ட் ஆப் இந்தியா அமைப்பை சேர்ந்த 100 பேரை என்ஐஏ கைது செய்துள்ள நிலையில் ஆலோசனை மேற்கொண்டுள்ளார்.

திருப்பதி பிரம்மோற்சவ விழா – முதல்வர் ஜெகன் மோகனுக்கு அழைப்பு

அமராவதி: உலக பிரசித்தி பெற்ற திருப்பதி ஏழுமலையான் கோயில் பிரம்மோற்சவ விழா வரும் 27-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி, அக்டோபர் 5-ம் தேதி வரை நடைபெற உள்ளது. இதில், 27-ம் தேதி மாலை ஆந்திர அரசு சார்பில் அம்மாநில முதல்வர், சுவாமிக்கு பட்டு வஸ்திரங்களை காணிக்கையாக வழங்குவது ஐதீகம். ஆதலால், தேவஸ்தான அறங்காவலர் ஒய்.வி. சுப்பாரெட்டி, திருப்பதி எம்.எல்.ஏ. கருணாகர் ரெட்டி, தேவஸ்தான தலைமை நிர்வாக அதிகாரி தர்மா ரெட்டி ஆகியோர் அமராவதியில் நேற்று முதல்வர் ஜெகன் … Read more

நாட்டு மக்களை ஒற்றுமைப்படுத்துவதே நடைப்பயணத்தின் நோக்கம்: காங்கிரஸ் எம்.பி. ராகுல்காந்தி பேச்சு

திருவனந்தபுரம்: நாட்டு மக்களை ஒற்றுமைப்படுத்துவதே நடைப்பயணத்தின் நோக்கம் என காங்கிரஸ் எம்.பி. ராகுல்காந்தி கூறியுள்ளார். இந்திய ஒற்றுமை நடைப்பயணத்திற்கு கேரளாவில் மிகப்பெரிய வரவேற்பு கிடைத்துள்ளதாக தெரிவித்த அவர், நாட்டில் ஏற்பட்டுள்ள வேலையில்லா திண்டாட்டம், விலைவாசி உயர்வுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.