கேரளாவில் பள்ளிச் சுற்றுலா பேருந்து விபத்து: மாணவர்கள் உள்பட 9 பேர் பலி

பாலக்காடு: கேரளாவில் சுற்றுலா பேருந்து விபத்துக்குள்ளானதில் மாணவர்கள் உள்பட 9 பேர் பலியாகினர். கேரள மாநிலம் பாலக்காட்டில் தனியார் சுற்றுலா வாகனம் அரசுப் பேருந்துடன் மோதியதில் இந்த விபத்து நடந்துள்ளது. இது குறித்து கேரள போக்குவரத்து துறை அமைச்சர் அந்தோனி ராஜூ கூறுகையில், “நேற்றிரவு 11.30 மணிக்கு விபத்து நடந்துள்ளது. தனியார் பேருந்து அதிகமாகச் சென்று முன்னால் சென்ற அரசுப் பேருந்தை முந்த முயன்றுள்ளது. அதில் விபத்து நடந்தது. இதில் 5 மாணவர்கள் உள்பட 9 பேர் … Read more

டெல்லி அரசின் மதுபான விற்பனை கொள்கை முறையீடு வழக்கு தொடர்பாக 35 இடங்களில் அமலாக்கத்துறை சோதனை..!!

டெல்லி: டெல்லி அரசின் மதுபான விற்பனை கொள்கை முறையீடு வழக்கு தொடர்பாக 35 இடங்களில் அமலாக்கத்துறை சோதனை நடத்தி வருகிறது. டெல்லி, பஞ்சாப் உள்ளிட்ட மாநிலங்களில் 35 இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.

மதுபான கொள்கை வழக்கு | டெல்லி, பஞ்சாப், ஹைதராபாத் உள்ளிட்ட 35 இடங்களில் அமலாக்கத்துறை சோதனை

புதுடெல்லி: டெல்லி அரசின் புதிய மதுபானக் கொள்கையில் பணமோசடி நடந்துள்ளதாக எழுந்த குற்றச்சாட்டு தொடர்பாக விசாரணை நடத்தி வரும் அமலாக்கத்துறையினர், வழக்கு தொடர்பாக டெல்லி, பஞ்சாப், ஹைதராபாத் -ல் உள்ள 35 இடங்களில் இன்று (வெள்ளிக்கிழமை) சோதனை நடத்தினர். புதிய மதுபானக் கொள்கையில் பணமோசடி நடந்துள்ளாத எழுந்த குற்றச்சாட்டுகளின் அடிப்படியில் அமலாக்கத்துறையினர் நடத்தி வரும் விசாரணையைத் தீவிரப்படுத்தும் விதமாக இந்த புதிய சோதனைகள் நடத்தப்படுகிறது. இன்று அதிகாலையில் தொடங்கிய இந்த சோதனைகள் மூன்று மாநிலங்களில் உள்ள மதுபான … Read more

புராதன மதராசாவில் இந்து வழிபாடு விவகாரம்! பூட்டை உடைத்தவர்களை தேடும் போலீசார்

கர்நாடகா: கர்நாடக மாநிலத்தில், 550 ஆண்டுகள் பழமையான மதரஸாவின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்த கும்பல், வழிபாடு செய்ததாக குற்றம் சாட்டப்பட்டது. இந்த விவகாரத்தில், 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். வகுப்புவாத பதற்றம் நிலவி வரும் சூழ்நிலையில் தற்போது காவல்துறை இந்த விவகாரத்தில் கடும் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். தசரா தினத்தன்று, 550 ஆண்டுகள் பழமையான வரலாற்று மதரஸாவிற்குள் ஒரு கும்பல் பூட்டை உடைத்து உள்ளே நுழைந்து, வழிபாடு நடத்தியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்திற்குப் பிறகு, … Read more

உச்சநீதிமன்ற அடுத்த தலைமை நீதிபதியாக யாரை நியமிப்பது: யு.யு.லலித்திடம் ஒன்றிய அரசு கருத்து கேட்பு

டெல்லி: அடுத்த தலைமை நீதிபதியை பரிந்துரைக்குமாறு தற்போதைய தலைமை நீதிபதி யு.யு.லலித்திடம் ஒன்றிய அரசு கடிதம் அனுப்பியுள்ளது. உச்சநீதிமன்றத்தின் தற்போதைய தலைமை நீதிபதி யு.யு.லலித் அடுத்த மாதம் 8-ம் தேதி ஓய்வு பெறுகிற நிலையில் அடுத்த தலைமை நீதிபதியாக நீதிபதி சந்திரசூட் தேர்வாக வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.  

கர்நாடகாவில் பாரம்பரிய மதரஸாவில் அத்துமீறி துர்கா பூஜை கொண்டாடிய கும்பல்

பெங்களூரு: கர்நாடகாவில் தசரா ஊர்வலத்தின் போது பாரம்பரிய மதரஸாவில் நுழைந்து இந்துக்கள் சிலர் பூஜை நடத்தியது சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. கர்நாடக மாநிலம் பிதார் மாவட்டத்தில் புதன் கிழமை இரவு தசரா ஊர்வலம் நடந்துள்ளது. அப்போது வழியில் இருந்த பாரம்பரிய மதரஸாவுக்குள் ஊர்வலம் சென்ற சிலர் நுழைந்தனர். கட்டிடத்தின் ஒரு பகுதியில் அவர்கள் பூஜை நடத்தினர். அங்கே ஜெய் ஸ்ரீ ராம், இந்து தர்மம் வாழ்க போன்ற கோஷங்களை எழுப்பினர். இது தொடர்பாக போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர். … Read more

நேஷனல் ஹெரால்டு வழக்கு: கர்நாடக காங். தலைவர் டி.கே.சிவக்குமாரிடம் அமலாக்கத்துறை விசாரணை..!!

டெல்லி: கர்நாடக காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமாரிடம் நேஷனல் ஹெரால்டு வழக்கு தொடர்பாக அமலாக்கத்துறை விசாரணை நடத்தி வருகிறது. அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியதை அடுத்து டெல்லியில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் டி.கே.சிவக்குமார் ஆஜரானார். டி.கே.சிவக்குமார் மற்றும் அவரது சகோதரர் டி.கே.சுரேஷ் விசாரணைக்கு ஆஜராகுமாறு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியது.

”பாலியல் வன்கொடுமையில் பாதிக்கப்பட்டவர் நன்றாக படிக்க முடியாதா?”- நீதிபதி கேள்வி

தந்தையால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான சிறுமியின் வழக்கு விசாரணையில் முக்கிய கருத்தை மும்பை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.  பாலியல் வன்கொடுமைக்கு ஆளான சிறுமி, அதிலிருந்து மீண்டு வர பல காலமாகும். அதை மறக்கும் வரை அந்த சிறுமி இயல்பாக நடந்துகொள்ள முடியாது, படிப்பில் கவனம் செலுத்த முடியாது என நினைக்கக் கூடாது” என முப்பை உயர்நீதிமன்ற கருத்து தெரிவித்துள்ளது. சவுதியில் கப்பல் ஊழியராக பணிபுரிபவர், விடுமுறையில் மும்பையில் இருக்கும் தனது வீட்டிற்கு வரும் போதெல்லாம் தனது மகளை பாலியல் … Read more

உத்தர பிரதேச முன்னாள் முதல்வர் முலாயம் சிங் யாதவ் கவலைக்கிடம் – உயிர்காக்கும் மருந்துகளுடன் தீவிர சிகிச்சை

புதுடெல்லி: உத்தர பிரதேச முன்னாள் முதல்வரும், சமாஜ்வாதி கட்சி நிறுவனருமான முலாயம் சிங் யாதவ், உயிர் காக்கும் மருந்துகளுடன் மிகவும் கவலைக்கிடமான நிலையில் சிகிச்சை பெற்றுவருவதாக டெல்லி குருகிராமில் உள்ள மெதந்தா மருத்துவமனை தெரிவித்துள்ளது. இதுகுறித்து மருத்துவமனை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: உத்தர பிரதேச முன்னாள் முதல்வர் முலாயம் சிங் யாதவ் (82) உடல்நலக் குறைவு காரணமாக டெல்லி குருகிராமில் உள்ள மெதந்தா மருத்துவமனையில் கடந்த ஆகஸ்ட் மாதம் அனுமதிக்கப்பட்டார். அவரது உடல்நிலை மிகவும் மோசமடைந்ததால், கடந்த … Read more

தமிழ்நாட்டில் அடுத்த 2 நாட்கள் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது: இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்

டெல்லி: தமிழ்நாட்டில் அடுத்த 2 நாட்கள் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ஆந்திர கடலோரப் பகுதியில் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக கனமழை பெய்ய வாய்ப்பு இருக்கிறது. வட தமிழ்நாடு மாவட்டங்கள், உள் மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.