66 குழந்தைகளின் மரணத்துடன் தொடர்பான இருமல் சிரப், இந்தியாவிலும் விற்பனையா? – அரசு விளக்கம்

காம்பியாவில் 66 குழந்தைகளின் மரணத்துக்கு காரணமாக கூறப்படும் இருமல் சிரப்கள் இந்தியாவில் தயாரிக்கப்பட்டது என்பதால், அந்த மருத்துகள் இந்தியாவிலும் விற்பனையானதா? என்ற அச்சம் பொதுமக்களிடம் ஏற்பட்டத்தை தொடர்ந்து மத்திய சுகாதாரக அமைச்சகம் விளக்கமளித்துள்ளது.  இந்தியாவிலிருந்து கள்ளச்சந்தை வழியாக ஆப்பிரிக்க நாடான காம்பியாவில், குழந்தைகளின் இறப்புடன் தொடர்புடையதாகக் கூறப்பட்ட 4 இருமல் மருந்துகளின் மாதிரிகள் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. மேலும், இந்த சிரப்கள் ஏற்றுமதிக்காக மட்டுமே தயாரிக்கப்பட்டவை என்றும் இந்தியாவில் விற்கப்படவில்லை என்றும் சுகாதார … Read more

பிஎஃப்ஐ தடை குறித்து விசாரணை தீர்ப்பாயத்தின் தலைவராக தினேஷ்குமார் நியமனம்

புதுடெல்லி: நாடு முழுவதும் பிஎஃப்ஐ அமைப்பின் நிர்வாகிகள் வீடு, அலுவலகங்களில் தேசிய புலனாய்வு அமைப்பு, அமலாக்கத் துறை அண்மையில் சோதனை நடத்தியது. இதன் அடிப்படை யில் பிஎஃப்ஐ மற்றும் அது சார்ந்த 8 அமைப்புகளுக்கு 5 ஆண்டுகளுக்கு தடை விதிக்கப்பட்டது. பலர் கைது செய்யப்பட்டனர். சட்டவிரோத செயல்கள் தடுப்பு சட்டத்தின் கீழ் 1,400-க்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. இந்த சூழலில் பிஎஃப்ஐ தொடர்பான சட்டவிரோத செயல்கள் தடுப்பு சட்ட தீர்ப்பாயத்தின் தலைவராக நீதிபதி தினேஷ்குமார் சர்மா … Read more

ஆகாசா ஏர் விமானங்களில் செல்லப்பிராணிகளை கொண்டு செல்ல அனுமதி

அடுத்த மாதம் முதல் தனியார் விமானத்திலும் செல்லப்பிராணிகளை கொண்டு செல்லலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது, ஏர் இந்தியா விமானங்களில் மட்டுமே செல்லப்பிராணிகளுடன் பயணிக்க அனுமதிக்கப்படுகிறது. இந்த நிலையில் ஆகாசா ஏர் என்ற தனியார் விமான நிறுவனமும் தங்கள் விமானங்களில் செல்லப்பிராணிகளை அனுமதிக்க முடிவு செய்துள்ளது. நவம்பர் மாதத்தில் இருந்து ‘ஆகாசா ஏர்’ விமானங்களில், நாய், பூனை போன்ற செல்லப்பிராணிகளுடன் பயணம் செய்ய அனுமதி அளிக்கப்படுவதாக அந்த விமான நிறுவன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.  Source link

உத்தராகண்ட் மாநிலத்தில் பனிச்சரிவில் சிக்கி உயிரிழந்த 19 பேரின் உடல்கள் மீட்பு: டிஜிபி அசோக்குமார் தகவல்

உத்தராகண்ட்: உத்தராகண்ட் மாநிலத்தில் பனிச்சரிவில் சிக்கி உயிரிழந்த 19 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளது, பனிச்சரிவில் சிக்கிய மேலும் 10 பேரை மீட்கும் பணியில் 30 மீட்புக்குழுக்கள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது என்று உத்தராகண்ட் டிஜிபி அசோக்குமார் தெரிவித்துள்ளார்.

அடுத்த தலைவராகும் மல்லிகார்ஜூன கார்கே – சரிவில் இருந்து காங்கிரஸ் மீண்டெழ ‘தலித் அரசியல்' கைகொடுக்குமா?

பெங்களூரு: நாட்டின் பழமையான கட்சிகளில் ஒன்றான இந்திய தேசிய காங்கிரஸ் முன் எப்போதும் இல்லாத அளவுக்குசரிவில் இருக்கிறது. நாடும், கட்சியும் கடும் சவாலை எதிர்கொண்டிருக்கும் இத்தருணத்தில், நிரந்தர தலைவர் இல்லாத நிலை நீண்ட காலமாக உள்ளது. 2024 மக்களவைத் தேர்தலுக்கு முன்பாக, தலைவரை தேர்ந்தெடுக்க வேண்டிய கட்டாயத்துக்கு காங்கிரஸ் தள்ளப்பட்டிருக்கிறது. தலைவர் பதவிக்கு அசோக் கெலாட், திக் விஜய் சிங், சசி தரூர், கே.என். திரிபாதி ஆகியோர் காய் நகர்த்திய நிலையில், கடைசியாக களமிறங்கினார் மூத்த தலைவர் … Read more

75 ஆண்டுகளில் நடக்காத சாதனை காஷ்மீரில் பத்தே மாதங்களில் 1.62 கோடி சுற்றுலா பயணிகள்

ஜம்மு: ஜம்மு காஷ்மீருக்கு  கடந்த 75 ஆண்டுகளில் இல்லாத வகையில் இந்தாண்டு பத்தே மாதத்தில் 1.62 கோடி சுற்றுலா  பயணிகள் வந்துள்ளனர். ஜம்மு காஷ்மீரில் தீவிரவாதிகளை தலை தூக்க விடாமல் ராணுவம் ஒடுக்கி வருகிறது. பாகிஸ்தான் எல்லையில் இருந்து ஊடுருவும் போதே அவர்களை சுட்டு தள்ளுகிறது. இதன் காரணமாக, தினமும் ஆங்காங்கு நடந்து வந்த தீவிரவாத தாக்குதல்கள் தற்போது எப்போதாவது ஒன்று, இரண்டு என்ற வகையில் மட்டுமே நடக்கிறது. இதன் காரணமாக, மக்கள் இயல்பு நிலைக்கு திரும்பி, … Read more

திருப்பதியில் குவிந்த பக்தர்கள் 36 மணி நேரம் காத்திருந்து சாமி தரிசனம்

திருப்பதியில் பிரமோற்சவம் முடிந்த நிலையில் புரட்டாசி மாதத்தையொட்டி ஏராளமான பக்தர்கள் குவிந்ததால் 36 மணி நேரம் காத்திருந்து இலவச தரிசனம் செய்து வருகின்றனர். திருப்பதியில் கடந்த 27-ஆம் தேதி தொடங்கி அக்டோபர் 5-ஆம் தேதி வரை வருடாந்திர பிரமோற்சவ விழா கோலாகலமாக நடைபெற்றது. இதில் நாடு முழுவதிலும் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர். சிறப்பு தரிசனம், விஐபி தரிசனங்கள் ரத்து செய்யப்பட்டு இலவச தரிசனத்தில் மட்டுமே பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர். இந்நிலையில், பிரமோற்சவம் முடிந்ததை … Read more

ராகுல் பாத யாத்திரையில் சோனியா பங்கேற்பு – காங்கிரஸ் தொண்டர்கள் உற்சாகம்

பெங்களூரு: கர்நாடகாவில் ராகுல் காந்தி மேற்கொண்டுள்ள இந்திய ஒற்றுமை பாத யாத்திரையில் காங்கிரஸின் தலைவரும் அவரின் தாயாருமான சோனியா காந்தி நேற்று பங்கேற்றார். நீண்ட இடைவெளிக்குப்பின் சோனியா காந்தி பொது நிகழ்ச்சியில் பங்கேற்றதால் காங்கிரஸார் உற்சாகம் அடைந்தனர். காங்கிரஸ் முன்னாள் தலைவரும், வயநாடு தொகுதி எம்.பி.,யுமான ராகுல் காந்தி இந்திய ஒற்றுமை பயணம் என்ற பெயரில் கடந்த மாதம் 7ம் தேதி கன்னியாகுமரியில் பாத யாத்திரையை தொடங்கினார். தமிழகம், கேரளாவைத் தொடர்ந்து கர்நாடகாவில் பாத யாத்திரையை மேற்கொண்டு … Read more

தாஜா செய்யும் ஜனாதிபதி இந்தியாவுக்கு வேண்டாம்: காங். முன்னாள் எம்பி சர்ச்சை

புதுடெல்லி: ‘முர்முவை போல் ஜால்ரா தட்டும் ஜனாதிபதி, எந்த நாட்டுக்கும் கிடைக்கக் கூடாது,’ என்று காங்கிரஸ் முன்னாள் எம்பி விமர்சித்தது பெரும் சர்ச்சையாகி இருக்கிறது. குஜராத்தில் சமீபத்தில் நடந்த நிகழ்ச்சியில் பேசிய ஜனாதிபதி திரவுபதி முர்மு, ‘நாட்டின் மொத்த உப்பு உற்பத்தியில்  80 சதவீதம் குஜராத்தில் செய்யப்படுகிறது. நாட்டு மக்கள் அனைவரும் இந்த உப்பை சாப்பிடுகின்றனர்,’ என்றார். இதை கண்டித்து காங்கிரஸ் முன்னாள் எம்பி உதித் ராஜ் வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில், ‘ஜனாதிபதியின் பேச்சு, பாஜ.வை தாஜா … Read more

பிரேக் போட்டு இருந்தால் பயணிகளுக்கு ஆபத்து ஏற்பட்டு இருக்கும் -வந்தே பாரத் ரயில் விபத்து!

கடந்த மாதம் 30ம் தேதியிலிருந்து குஜராத் – மும்பை இடையே வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கப்பட்டு வருகிறது. இந்த ரயில் 100 கிலோ மீட்டர் வேகத்தை 52 வினாடிகளில் சென்றடையும். மேலும் மணிக்கு 180 கி.மீ வேகத்தில் பயணம் செய்யும் நவீன ரயில். குஜராத் காந்திநகரிலிருந்து மும்பைக்கு 6 – 7 மணி நேரத்துக்குள் சென்றடையும். இந்நிலையில், வந்தே பாரத் , ரயில் துவக்கப்பட்ட ஒரு வாரத்திலேயே விபத்தில் சிக்கியுள்ளது. வத்வா மற்றும் மணிநகர் ரயில் … Read more