ஆகாஷ் ஏர்லைன்சில் நாய், பூனைகளையும் கூட்டிட்டு போகலாம்: அக்.15 முதல் முன்பதிவு

புதுடெல்லி: ஆகாஷ் ஏர்லைன்சில் நவம்பர் 1 முதல், செல்ல பிராணிகளை எடுத்து செல்லலாம் என்று அந்நிறுவனம் தெரிவித்து உள்ளது. இந்தியாவில் ஆகாஷ் ஏர்லைன்ஸ் என்ற நிறுவனம் கடந்த 2 மாதங்களுக்கு முன் தனது முதல் விமான சேவையை தொடங்கியது. 2 மாதங்கள் முடிந்த நிலையில், அந்நிறுவனத்தின் இணை நிறுவனர் மற்றும் தலைமை வணிக அதிகாரி பிரவீன் ஐயர் நிருபர்களிடம் கூறியதாவது: 2023ம் ஆண்டு 2ம் பாதியில் சர்வதேச சேவைகள் தொடங்க திட்டமிடப்பட்டு உள்ளது. முதல் 60 நாட்களில் … Read more

குஜராத் | எருமை மாடுகள் மீது மோதிய வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் – இன்ஜின் சேதம்

மும்பை: குஜராத் தலைநகர் காந்திநகரில் இருந்து – மும்பைக்கு வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கப்பட்டு வருகிறது. இந்த நவீன ரயில் 100 கிலோ மீட்டர் வேகத்தை 52 வினாடிகளில் எட்டும். அதிகபட்சமாக மணிக்கு 180 கி.மீ வேகத்தில் பயணம் செய்யும். காந்திநகரில் இருந்து மும்பைக்கு 6 முதல் 7 மணி நேரத்துக்குள் இந்த ரயில் சென்றுவிடும். வைபை, 32 இன்ச் டி.வி போன்ற வசதிகள் இதில் உள்ளன. கடந்த மாதம் 30ம் தேதி தான் இந்த … Read more

மனித உரிமை மீறல் இலங்கை மீதான தீர்மானம் தோல்வி: புறக்கணித்தது இந்தியா

புதுடெல்லி : இலங்கைக்கு எதிரான மனித உரிமை மீறல் வரைவு தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பில் இந்தியா பங்கேற்காமல் ஒதுங்கி நின்றது. இலங்கையில் இறுதிக்கட்ட போரின் போது, ஆயிரக்கணக்கான தமிழர்கள் கொன்று குவிக்கப்பட்டனர். இதற்கு இலங்கை அரசை பொறுப்பேற்க வைக்கவும், அதன் மீது நடவடிக்கை எடுக்கவும் ஜெனிவாவில் உள்ள ஐநா மனித உரிமை கவுன்சிலில் நேற்று வரைவு தீர்மானம் தாக்கல் செய்யப்பட்டது. 47 உறுப்பு நாடுகள் உள்ள இந்த கவுன்சிலில், 20 நாடுகள் தீர்மானத்தை ஆதரித்து வாக்களித்தன. சீனா, … Read more

தாயார் சோனியா காந்தியின் ஷூ லேசை கட்டிவிட்ட ராகுல் காந்தி – வைரல் புகைப்படம்

மாண்டியா: இந்திய ஒற்றுமை பயணத்தில் உடன் நடந்து வந்த தனது தாயார் சோனியா காந்தியின் ஷூ லேசை, ராகுல் காந்தி கட்டிவிட்ட புகைப்படம் வைரலாகி வருகிறது. காங்கிரஸ் முன்னாள் தலைவரும், அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினருமான ராகுல் காந்தி, இந்திய ஒற்றுமை பயணத்தை கடந்த மாதம் 8-ம் தேதி முதல் மேற்கொண்டு வருகிறார். கன்னியாகுமரியில் தொடங்கிய இந்த யாத்திரை, கேரளா வழியாக தற்போது கர்நாடகாவில் நடைபெற்று வருகிறது. கர்நாடகாவின் மாண்டியா மாவட்டத்தில் இன்று நடைபெற்ற யாத்திரையில் ராகுல் காந்தியுடன் … Read more

கலிஃபோர்னியாவில் இந்தியக் குடும்பம் படுகொலை: உயர்மட்ட விசாரணைக்கு பஞ்சாப் முதல்வர் கோரிக்கை

சண்டிகர்: அமெரிக்காவின் கலிஃபோர்னியா மாகாணத்தில் இந்தியக் குடும்பம் ஒன்று படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில் உயர்மட்ட விசாரணைக்கு உத்தரவிடுமாறு வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கருக்கு பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் கோரிக்கை விடுத்துள்ளார். 4 பேர் படுகொலையும் பின்னணியும்: அமெரிக்காவில் கடத்தப்பட்ட இந்தியக் குடும்பம் ஒன்று கலிஃபோர்னியாவில் சடலமாக மீட்கப்பட்டுள்ளது. இச்சம்பவத்தால் அங்கு வாழும் இந்தியர்கள் மத்தியில் அச்சமும் கவலையும் நிலவுகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்னர் கலிஃபோர்னியா மாகாணத்தில் 8 மாதக் குழந்தை அரூஹி தேரி, அவரது பெற்றோர் … Read more

"காங்கிரஸ் தலைவராக என்னை தேர்ந்தெடுத்தால் இளம் இந்தியாவை உருவாக்குவேன்" – சசிதரூர்

அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி தேர்தலில் தான் வெற்றி பெற்றால் இளம் இந்தியாவை உருவாக்குவேன் என மூத்த தலைவர் சசிதரூர் தெரிவித்துள்ளார். அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி தலைவர் பதவிக்கு போட்டியிடும் மூத்த தலைவர் சசிதரூர், தமிழக காங்கிரஸ் கமிட்டி நில்வாகிகளிடம் ஆதரவு கேட்க தமிழகம் வந்துள்ளார். தமிழகம் வந்த சசிதரூர், சைதாப்பேட்டையில் உள்ள ராஜீவ்காந்தி சிலைக்கு மரியாதை செலுத்தினார். இதனைத் தொடர்ந்து கிண்டியில் உள்ள காமராஜர் நினைவிடத்தில் அவரது சிலைக்கு மரியாதை செலுத்தி, காமராஜர் நினைவிடத்திலும் … Read more

பெற்ற மகளை பாலியல் வன்கொடுமை செய்த தந்தை!!

மகாராஷ்டிராவில் பெற்ற மகளை பல முறை பாலியல் வன்கொடுமை செய்த தந்தையை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். மும்ப்ரா பகுதியை சேர்ந்த 17 வயது சிறுமி, துணிச்சலாக போலீசில் புகார் ஒன்றை அளித்தார். அதில், தனது தந்தை தன்னை பல முறை வன்கொடுமை செய்துள்ளதாக தெரிவித்துள்ளார். அதிர்ச்சியடைந்த போலீசார், தந்தையை கைது செய்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், அவரது தந்தை, சிறுமியிடம் நீ பிறந்த போதே உனது தாய் இறந்து விட்டார் என கூறி அவரை … Read more

ரூ.100 கோடி மதிப்புள்ள ஹெராயின் பறிமுதல்!!

மும்பை விமான நிலையத்தில் ரூ.100 கோடி மதிப்புள்ள போதைப்பொருளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். ஆப்பிரிக்க நாடான மலாவியில் இருந்து கத்தார் வழியாக மும்பைக்கு பயணித்த பயணி ஒருவர் போதைப்பொருள் கடத்திவருவதாக சுங்கத்துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் அதிகாரிகள் சம்மந்தப்பட்ட நபரின் உடமைகளை சோதனை செய்ததில், அவரிடம் 16 கிலோ ஹெராயின் போதைப்பொருள் இருப்பது தெரியவந்தது. இதனையடுத்து கானா நாட்டைச் சேர்ந்த அந்த பயணி மற்றும் பெண்ணை கைது செய்தனர். இந்த வழக்கு தொடர்பாக … Read more

திரவுபதி முர்மு குறித்த சர்ச்சை கருத்து – காங்கிரஸ் பிரமுகர் மன்னிப்பு கோர தேசிய மகளிர் ஆணையம் வலியுறுத்தல்

புதுடெல்லி: குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு குறித்து தகாத வார்த்தைளுடன் கருத்து தெரிவித்த காங்கிரஸ் மூத்த தலைவர் உதித் ராஜ் மன்னிப்பு கோர வேண்டும் என்று தேசிய மகளிர் ஆணையம் வலியுறுத்தி உள்ளது. குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு சமீபத்தில் குஜராத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றுப் பேசினார். அப்போது, குஜராத் 70% உப்பை நாட்டிற்காக உற்பத்தி செய்கிறது என்றும், அந்த வகையில் நாட்டு மக்கள் பெரும்பாலும் குஜராத் உப்பைத்தான் உண்கிறார்கள் என்றும் குறிப்பிட்டார். அவரது இந்த … Read more

பிரதமருக்கு ரூ.360 கோடியில் வீடு; நவீன வசதிகளுடன் உருவாகிறது!

பிரதமருக்கு ரூ.360 கோடியில் புதிய பிரமாண்ட வீடு கட்டுவதற்கு, மத்திய அரசு முடிவு செய்து டெண்டர் வெளியிட்டுள்ளது. தாரா ஷிகோ சாலையில் அமைய இருக்கும் பிரதமரின் இல்லம் 2 தளங்களை கொண்டதாக அமைய இருக்கிறது. புதிய குடியிருப்பு வளாகத்தின் தரைத்தளத்தில் வாகன நிறுத்துமிடம் மற்றும் முதல் தளம் மற்றும் விருந்தினர் இல்லம், சிறப்பு பாதுகாப்பு குழு அலுவலகம், துணை பணியாளர்கள் குடியிருப்பு, புதிய இல்லம் மற்றும் மத்திய பொதுப்பணித்துறை அலுவலகம் உள்ளிட்டவை அமைக்கப்பட உள்ளது. மேலும், பிரதமரின் … Read more