Watch: சின்னாப்பின்னமான ரயில் – போன வாரம்தான் பிரதமர் தொடங்கிவச்சாரு; மோதிய மாடுகளுக்கு என்னாச்சு?

மகாராஷ்டிரா தலைநகர் மும்பையில் இருந்து குஜராத்தின் தலைநகர் காந்திநகர் சென்றுகொண்டிருந்தபோது, அதிவேக விரைவு ரயிலான வந்தே பாரத் ரயில் இன்று காலையில் விபத்துக்குள்ளானது. தண்டவாளத்தின் குறுக்கே எருமை மாடுகள் புகுந்ததால், அவற்றின் மீது மோதியதில் ரயிலுக்கு சிறிய சேதம் ஏற்பட்டுள்ளது. இந்த விபத்து குறித்து ரயில்வே துறையின் செய்தித்தொடர்பாளர்,”மூன்று – நான்கு எருமை மாடுகள் திடீரென மும்பை – காந்திநகர் வந்தே பாரத் ரயிலின் குறுக்கே வந்தன. ஃபைபர், பிளாஸ்டிக்கால் ஆன முகப்பு பகுதி மட்டும் சிறிது … Read more

விதிகளை மீறி மாற்றம் செய்யப்பட்ட சுற்றுலா பேருந்துகள் மீது நடவடிக்கை: கேரளா ஐகோர்ட் உத்தரவு

திருவனந்தபுரம்: விதிகளை மீறி மாற்றம் செய்யப்பட்ட சுற்றுலா பேருந்துகள் மற்றும் அதனை ப்ரமோஷன் செய்யும் யூடியூப் சேனல்கள் மீது நடவடிக்கை எடுக்க கேரள உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பாலக்காடு அருகே பள்ளி மாணவர்கள் உள்பட 9 பேர் உயிரிழந்த விபத்தில் தொடர்புடைய சுற்றுலா பேருந்து RTO அலுவலகத்தால் கருப்பு பட்டியலில் வைக்கப்பட்டிருப்பது விசாரணையில் தெரியவந்தது.

குஜராத்தின் மணிநகர் அருகே தண்டவாளத்தில் நின்றுகொண்டிருந்த மாடுகள் மீது மோதியதில், வந்தே பாரத் ரயில் சேதம்

காந்திநகர்: பிரதமர் மோடி தொடங்கி வைத்த ‘வந்தே பாரத்’ ரயில் தண்டவாளத்தில் நின்று கொண்டிருந்த மாடுகள் மீது மோதியதில் சேதமடைந்துள்ளது. மும்பையில் இருந்து குஜராத் காந்திநகர் நோக்கி வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கப்பட்டு வருகிறது. இதன்படி, இன்று காலை எக்ஸ்பிரஸ் ரயில் புறப்பட்டு சென்றது. அந்த ரயில், வத்வா ரயில் நிலையத்தில் இருந்து மணிநகர் ரயில் நிலையம் இடையே சென்று கொண்டிருந்தபோது, காட்டெருமை கூட்டம் ஒன்று அந்த வழியே சென்றுள்ளது. விரைவாக சென்று கொண்டிருந்த ரயில் … Read more

காதல் கடிதமும்..கவர்னரும்; தெறிக்க விடும் கெஜ்ரிவால்!

டெல்லியில் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், துணை முதல்வர் மணிஷ் சிசோடியா ஆகியோர் தலைமையில், ஆம் ஆத்மி ஆட்சி நடந்து வருகிறது. இந்த ஆட்சிக்கு மக்களிடையே நல்ல ஆதரவு உள்ளது. இந்நிலையில் டெல்லியில் மதுபான கடைகளுக்கு உரிமம் வழங்கியதில் முறைகேடுகள் நடைபெற்றதாக, துணை முதல்வர் மணிஷ் சிசோடியா வீடு உள்ளிட்ட 21 இடங்களில் சிபிஐ சோதனை நடத்தியது. இந்த சோதனையின்போது, அதிகாரிகளின் வீடுகளில் இருந்து முக்கிய ஆவணங்கள் சிக்கியதாக தகவல்கள் வெளியானாலும் அது, வதந்தி என்பது நாளடைவில் தெரிந்தது. … Read more

தீயணைப்பு வீரர்களுக்கான புதிய சென்சார் ஹெல்மட்டையை ஸ்காட்லாந்து ஆராச்சியாளர்கள் தயாரித்து சோதனை

தீயணைப்பு வீரர்களுக்கான புதிய சென்சார் ஹெல்மட்டையை ஸ்காட்லாந்து ஆராச்சியாளர்கள் தயாரித்து சோதனை நடத்தியுள்ளனர். செயற்கை நுண்ணறிவை கண்டறியும் வகையில் தயாரிக்கப்பட்டுள்ள இந்த ஹெல்மட்டில், ரேடார் மற்றும் இன்டர்ஷியல் சென்சார்கள் இருப்பதால் பாதிக்கப்பட்டவர்களை எளிதில் அடையாளம் காண்பதன் மூலம் தீ விபத்தில் சிக்கியவர்களை விரைவாக மீட்பதற்கு உதவியாக இருக்கும் என ஆராய்ச்சியாளர்கள் கூறியுள்ளனர்.     Source link

நடிகையின் தாய் மீது மேலும் ஒரு வழக்கு

பெங்களூரு: கன்னட திரையுலகில் நடிகையாக இருந்து வருபவர் ஸ்ரீலீலா. இவரது தாய் சுவர்ணலதா. இவர், பெங்களூரு புறநகரில் உள்ள ஒரு தனியார் பல்கலைக்கழகத்திற்குள் புகுந்து சமீபத்தில் தகராறு செய்ததாகவும் அங்கிருந்த ஊழியர்களை அடியாட்கள் மூலமாக தாக்க முயன்றதாகவும் கூறப்படுகிறது. இதுதொடர்பாக சுவர்ணலதா மீது ஆனேக்கல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். சுவர்ணலதாவின் கணவர் சுபாகர் ராவ். இவர், கோரமங்களாவில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் தனியாக வசித்து வருகிறார். இந்த நிலையில், அடியாட்களுடன் குடியிருப்புக்கு … Read more

உத்தவ் தாக்கரே vs ஏக்நாத் ஷிண்டே: தசராவில் யார் கை ஓங்கியது? மார் தட்டும் சிவசேனா!

மகாராஷ்டிராவில் கொடிகட்டி பறந்த சிவசேனாவின் செல்வாக்கு, தற்போது சச்சரவில் மாட்டிக் கொண்டு தவித்து வருகிறது. பால் தாக்கரே மகனிடம் இருந்தே கட்சியை பறித்து தன்வசமாக்கி ஒட்டுமொத்த நாட்டையும் திரும்பி பார்க்க வைத்துள்ளார் ஏக்நாத் ஷிண்டே. இருப்பினும் இருதரப்பிலும் ஆதரவாளர்கள் இருப்பதால் சிவசேனா இரண்டு அணிகளாக பிரிந்து செயல்பட்டு கொண்டிருக்கிறது. இதனால் ஒவ்வொரு விஷயத்திலும் தாங்கள் தான் உண்மையான சிவசேனா என்பதை தொண்டர்களுக்கும், பொதுமக்களுக்கும் நிரூபிக்க வேண்டிய கட்டாயம் நிலவுகிறது. கிட்டதட்ட தமிழகத்தில் அதிமுகவிற்குள் நிலவும் ஈபிஎஸ், ஓபிஎஸ் … Read more

உத்தராகண்ட் பனிச்சரிவில் சிக்கி உயிரிழந்த 16 பேரின் உடல்கள் மீட்பு: மாவட்ட ஆட்சியர் தகவல்

டொராடூன்: உத்தராகண்ட் பனிச்சரிவில் சிக்கி உயிரிழந்த 16  பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளதாக உத்தரகாசி மாவட்ட ஆட்சியர் தகவல் தெரிவித்துள்ளார். உத்தரகாசியில் உள்ள திரவுபதி கா தண்டா மலைச் சிகரத்தில் ஏறுவதற்காக பயிற்சியாளர்கள் உள்பட 41 பேர் சென்றிருந்தனர். பனிச்சரிவில் சிக்கி காணாமல் போன எஞ்சியவர்களை மீட்க்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருவதாக ஆட்சியர் தகவல் தெரிவித்துள்ளார்.

முலாயம் சிங் யாதவ் உடல்நிலை; வெளியானது ஹேப்பி நியூஸ்!

உத்தரப் பிரதேசத்தில் கடந்த 1960ம் ஆண்டு காங்கிரஸ் கட்சிக்கு எதிராக இளைஞர்கள் பேரலையாக எழுந்தனர். அப்படி எழுந்த இளைஞர்களில் முலாயம் சிங் யாதவ்வும் ஒருவர். இதன் பிறகு கடந்த 1967ம் ஆண்டு உத்தரப் பிரதேச சட்டசபை தேர்தலில் முலாயம் சிங் யாதவ் முதன்முறையாக போட்டியிட்டார். முதல் தேர்தலில் வெற்றியை பெற்றதால் முலாயம் சிங் யாதவ் எம்எல்ஏ ஆனார். இதை தொடர்ந்து கடந்த 1975ம் ஆண்டு பிரதமர் இந்திரா காந்தி அவசர நிலை பிரகடனம் செய்தபோது முலாயம் சிங் … Read more

2022 ஜனவரி முதல் ஜம்மு காஷ்மீர்-க்கு 1.62 கோடி சுற்றுலா பயணிகள் வந்துள்ளனர்

ஜம்மு காஷ்மீர்: 2022 ஜனவரி முதல் ஜம்மு காஷ்மீர்-க்கு 1.62 கோடி சுற்றுலா பயணிகள் வந்துள்ளதாக காஷ்மீரின் தகவல் மற்றும் மக்கள் தொடர்பு இயக்குனரகம் தெரிவித்துள்ளது. சுதந்திர  இந்தியாவின் வரலாற்றில் 1.62 கோடி சுற்றுலா பயணிகள் காஷ்மீர் வந்தது இதுவே முதன் முறை என தகவல் மற்றும் மக்கள் தொடர்பு இயக்குனரகம் கூறியுள்ளது.