ரூ.360 கோடியில் பிரதமர் இல்லம் அமைக்க ஒன்றிய அரசு முடிவு

டெல்லி: டெல்லியில் ரூ.360 கோடி செலவில் பிரதமர் இல்லம் மற்றும் அலுவலகம் இணைந்த வளாகப் பணி கட்டுமானம் விரைவில் தொடங்குகிறது. சென்ட்ரல் விஸ்டா திட்டத்தின் ஒரு பகுதியாக ரூ.360 கோடியில் புதிய பிரதமர் இல்லம் அமைக்க ஒன்றிய அரசு முடிவு செய்துள்ளது. சவுத் பிளாக் பகுதியில் குடியரசு தலைவர் இல்லம் அருகே பிரதம இல்லம், குடியரசு துணைத் தலைவர் இல்லம் அமையவுள்ளது.

ஆயுதம் ஏந்திய படகுகள் பரிசோதனை! ரிமோட் மூலம் கட்டுப்படுத்தப்படும் ஆளில்லா படகு

புதுடெல்லி: பாதுகாப்புத் துறை கண்காட்சி அக்டோபர் 18 முதல் 22 வரை நடைபெற உள்ள நிலையில், அதற்குக் முன்னதாக, புனேவில் 3 ஆளில்லா தொலை கட்டுப்பாட்டு ஆயுதம் பொருத்தப்பட்ட படகுகளை பாதுகாப்புத் துறை ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம், டிஆர்டிஓ சோதனை செய்தது. இந்த படகுகளை தனியார் பாதுகாப்பு உற்பத்தி நிறுவனமான சாகர் டிஃபென்ஸ் இன்ஜினியரிங் நிறுவனத்துடன் இணைந்து DRDO உருவாக்கியுள்ளது. இந்தப் படகுகள், கண்காணிப்பு நோக்கங்களுக்காகவும், ரோந்துப் பணிக்காகவும், உளவு பார்க்கவும் ஒட்டுமொத்த கடல் பாதுகாப்புக்கும் பயனுள்ளதாக … Read more

கோவிந்தா..கோவிந்தா..!: ஆகம முறைப்படி வேத மந்திரங்கள் முழங்க கருட உருவம் பொறிக்கப்பட்ட கொடி இறக்கத்துடன் திருப்பதி பிரம்மோற்சவம் நிறைவு..!!

ஆந்திரா: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் கடந்த 9 நாட்களாக வெகுவிமர்சியாக நடைபெற்ற பிரம்மோற்சவம் நிறைவு பெற்றது. ஆகம முறைப்படி வேத மந்திரங்கள் முழங்க கருட உருவம் பொறிக்கப்பட்ட கொடி இறக்கத்துடன் பிரம்மோற்சவம் நிறைவடைந்தது. திருப்பதி ஏழுமலையான் கோயில் வருடாந்திர பிரம்மோற்சவம் கடந்த மாதம் 27ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. அன்று இரவு முதல் வாகன புறப்பாடாக ஏழுமலையானின் பெரிய சேஷவாகன சேவை நடைபெற்றது. அதனை தொடர்ந்து தினமும் காலை, இரவு ஆகிய வேலைகளில் கோயில் மாட வீதிகளில் … Read more

உத்தரகாண்ட் பள்ளத்தாக்கில் பஸ் கவிழ்ந்த விபத்தில் உயிரிழந்த பயணிகளின் எண்ணிக்கை 33-ஆக அதிகரிப்பு..!!

டேராடூன்: உத்தரகாண்ட் மாநிலத்தில் பேருந்து பள்ளத்தாக்கில் கவிழ்ந்து நேரிட்ட விபத்தில் உயிரிழந்த பயணிகளின் எண்ணிக்கை 33 ஆக அதிகரித்துள்ளது. உத்தராகண்டின் மலை மாவட்டமான பவுரிகல்யாணில் திருமண விழாவில் பங்கேற்பதற்காக 52 பேர் பேருந்து ஒன்றில் சென்று கொண்டிருந்தனர். அவர்கள் பயணித்த பேருந்து சிந்து என்ற கிராமத்தின் அருகே சென்ற போது கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்தாக்கிற்குள் கவிழ்ந்தது. மலை முகட்டில் இருந்து பலமுறை உருண்ட பேருந்து 2 ஆயிரம் அடி பள்ளத்தில் மோதியது. பயணிகளின் அபாய குரலை கேட்ட … Read more

சுங்க கட்டணம் வசூலித்ததில் ரூ. 6 ஆயிரம் கோடி முறைகேடு – மணீஷ் சிசோடியா..!

டெல்லி மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் சுங்க கட்டணம் வசூலித்ததில் 6 ஆயிரம் கோடி ரூபாய் முறைகேடு நடந்ததாகக் கூறப்படும் விவகாரத்தில் சி.பி.ஐ. விசாரணை கோரி  துணைநிலை ஆளுநர் சக்சேனாவுக்கு துணை முதல்வர் மணீஷ் சிசோடியா கடிதம் எழுதியுள்ளார். இரண்டு மாதங்களுக்கு முன்பு எம்சிடி ஊழல் குறித்து அளித்த புகாரின் மீது இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை என்றும், பொதுப் பிரச்னைகளில் கவனம் செலுத்தாமல் ஜனநாயக முறைப்படி தேர்ந்தெடுக்கப்பட்ட டெல்லி அரசுக்கு எதிராக முறைகேடு செய்ததாகக் கூறி போலி வழக்குகள் போடப்படுகின்றன … Read more

இந்திய ஒற்றுமை பயணம்' பாதயாத்திரையில் சோனியா காந்தி பங்கேற்பு

பெங்களூரு: கர்நாடகாவில் ராகுல் காந்தியின் ‘இந்திய ஒற்றுமை பயணம்’ பாதயாத்திரையில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி பங்கேற்றுள்ளார். விஜயதசமியையொட்டி 2 நாள் ஓய்வெடுத்த ராகுல்காந்தி, கர்நாடகாவில் தனது 5-வது நாள் பயணத்தை தொடங்கினார். மொத்தம் 3,500 கிலோமீட்டர் தூரம் 150 நாட்கள் வரை ராகுலின் பயணம் நடைபெற உள்ளது.

தசரா நிகழ்வில் பெரும் சோகம்: ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட பக்தர்கள்!

மேற்கு வங்கம், ஜல்பைகுரியில் நடைபெற்ற தசரா விழாவில், துர்கா சிலை கரைக்கும் போது பெரும் ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டு 8 பேர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேற்கு வங்கம், ஜல்பைகுரியில் தசரா விழாவின் கடைசி நாளானா நேற்று துர்கா சிலையை ஆற்றில் கரைக்கும் நிகழ்வு நடைபெற்றது. 40க்கும் மேற்பட்டோர் ஆற்றில் இறங்கி பூஜை செய்தனர். அப்போது திடீரென மால் ஆற்றில் நீர்வரத்து அதிகரித்து வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. மக்கள் எதிர்பார்க்காத நிலையில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் பலர் … Read more

தடை செய்யப்பட்ட இயக்கங்களை சேர்ந்த 10 பேர் பயங்கரவாதிகளாக அறிவிப்பு: ஒன்றிய உள்துறை அமைச்சகம் தகவல்

டெல்லி: ஒன்றிய உள்துறை அமைச்சகம் சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்பு சட்டத்தின்கீழ் 10 பேரை பயங்கரவாதிகளாக அறிவித்துள்ளது. இவர்கள் ஹிஸ்புல் முஜாகிதீன், லஷ்கர் இ தொய்பா மற்றும் இதர தடை செய்யப்பட்ட பயங்கரவாத இயக்கங்களை சேர்ந்தவர்கள் ஆவர். பாகிஸ்தானை சேர்ந்த ஹபிபுல்லா மாலிக் என்ற சஜித் தத், காஷ்மீரின் பாரமுல்லாவை சேர்ந்தவரும், தற்போது பாகிஸ்தானில் இருப்பவருமான பசிட் அகமது ரேஷி, காஷ்மீரின் சோபோரை சேர்ந்தவரும், தற்போது பாகிஸ்தானில் இருப்பவருமான இம்தியாஸ் அகமது கான்டூ என்ற சஜத், பூஞ்ச் பகுதியை … Read more

ஐப்பசி மாத பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை வரும் 17-ந் தேதி திறப்பு

பம்பை: ஐப்பசி மாத பூஜைக்காக சபரிமலை கோவில் நடை வரும் 17-ந் தேதி திறக்கப்பட உள்ளது. வழக்கம் போல் ஆன்லைன் முன்பதிவு அடிப்படையில் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள். முன்பதிவு செய்யும் அனைவருக்கும் தரிசனம் செய்ய வசதி செய்யப்பட்டு உள்ளது.

பள்ளி சுற்றுலா பேருந்து விபத்து: மாணவ, மாணவிகள் உயிரிழப்பு! இரவில் நடந்த துயரம்!

கேரள மாநிலம் பாலக்காடு அருகே வடக்காஞ்சேரி தேசிய நெடுஞ்சாலையில் கேரள அரசு பேருந்தும் பள்ளி மாணவர்களுடன் சுற்றுலா சென்ற பேருந்தும் மோதிய விபத்தில் 9 பேர் உயிரிழந்துள்ளனர். 45 படுகாயமடைந்துள்ளனர். 10 பேர் கவலைக்கிடமாக உள்ளனர். கேரள மாநிலம் எர்ணாகுளம் அருகே முளங்குருத்தி பாசலியஸ் வித்யா நிகேதன் பள்ளியின் 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவி, மாணவர்கள் ஊட்டிக்கு சுற்றுலாவுக்காக புறப்பட்டனர். பேருந்தில் 43 மாணவர்கள் மற்றும் ஐந்து ஆசிரியர்கள், இரண்டு ஊழியர்கள் என 51 பேர் … Read more