என்னது… திருப்பதி லட்டு வாங்க இவ்ளோ கூட்டமா? கி.மீ கணக்கில் நீளும் வரிசை!

ஏழுமலையானை தரிசிக்க வேண்டுமா? அப்படியெனில் இதைப் படித்து விட்டு பிளான் போட்டால் நன்றாக இருக்கும். ஏனெனில் அந்த அளவிற்கு திருமலையில் கூட்டம் அலைமோதிக் கொண்டிருக்கிறது. இதற்கு முக்கிய காரணம் புரட்டாசி சனிக்கிழமை. நாளைய தினம் நடப்பு தமிழ் மாதமான புரட்டாசியின் 3வது சனிக்கிழமை வருகிறது. இதையொட்டி ஏழுமலையான் பக்தர்கள் பலரும் திருப்பதிக்கு சென்று தரிசனம் செய்ய விரும்புவர். இந்நிலையில் தான் திருமலையில் பக்தர்கள் கூட்டம் நிரம்பி வழிந்து கொண்டிருக்கிறது. கடந்த சில நாட்களாகவே தொடர்ந்து பக்தர்கள் வருகை … Read more

Watch: 'ஜெய் ஸ்ரீராம்' – வாள், துப்பாக்கியுடன் தசரா கொண்டாட்டம்; உ.பி.,யில் பாரம்பரியமா?

நாடு முழுவதும் நவராத்திரி (அ) துர்கா பூஜை பண்டிகை கடந்த 10 நாள்களாக கொண்டாடப்பட்டது. இந்தியாவின் ஒவ்வொரு பகுதிகளிலும் இந்த பண்டிகைக்கு வெவ்வேறு பெயர்களும், வெவ்வேறு சடங்குகளும், வித்தியாசமான கொண்டாட்டங்களும் உள்ளன. பெரும்பாலும், பெண் தெய்வங்களின் ஒன்பது அவதாரங்களை கொண்டாடும் நோக்கிலும், ராவணனை ராமர் வதம் செய்ததை கொண்டாடும் வகையிலும் இந்த நவராத்திரி (அ) துர்கா பூஜை கொண்டாடப்பட்டு வருகிறது.  அந்த வகையில், உத்தரப் பிரதேசத்தின் சித்தார்த் நகர் மாவடத்தில் நடைபெற்ற தசரா ஊர்வலம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  … Read more

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சாமி தரிசனத்திற்காக பக்தர்கள் 35 மணி நேரம் வரிசையில் காத்திருப்பு

ஆந்திரா: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் இலவச சாமி தரிசனம் செய்ய பக்தர்கள் 35 மணி நேரம் வரிசையில் காத்திருக்கின்றனர். நாளை புரட்டாசி சனிக்கிழமை என்பதால் சாமி தரிசனத்திற்காக பக்தர்கள் வரிசையில் 6 கி.மீ. தூரத்திற்கு காத்திருகின்றனர்.

உடனடியாக சீரமைக்கப்பட்ட விபத்துக்குள்ளான வந்தே பாரத் ரயில்

ரயில் தண்டவாளத்தில் மாடுகள் குறுக்கே வந்ததால் விபத்துக்குள்ளான வந்தே பாரத் ரயில் உடனடியாக சீரமைக்கப்பட்டுள்ளது. பிரதமர் நரேந்திர மோடி கடந்த 30ம் தேதி தொடங்கி வைத்த வந்தே பாரத் ரயில் மும்பையில் இருந்து குஜராத் மாநிலம் காந்தி நகர் நோக்கிச் சென்றபோது வந்தே பாரத் ரயில் 4 எருமை மாடுகள் மீது மோதி விபத்துக்குள்ளானது. இதனால் ரயில் என்ஜின் முன்பக்கம் சேதமடைந்த நிலையில் பயணிகள் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. இருப்பினும் 3 எருமை மாடுகள் உயிரிழந்தன. இந்த … Read more

ரூபாயின் மதிப்பு வரலாறு காணாத வீழ்ச்சி.. வெளிநாட்டு பயணச் செலவு அதிகமாகும்..!

அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு வரலாறு காணாத கடும் வீழ்ச்சியை அடைந்துள்ளது. இந்திய ரூபாய் மதிப்பு சரிவால் வெளிநாட்டுப் பயணச் செலவு அதிகமாகும் அபாயம் உள்ளது. அந்நிய செலாவணி வர்த்தகத்தில் அமெரிக்க டாலருக்கு எதிராக ரூபாயின் மதிப்பு தொடர்ந்து இதுவரை இல்லாத அளவு வீழ்ச்சி அடைந்து வருகிறது. இன்று ஆரம்ப வர்த்தகத்தில் 16 பைசா சரிந்து டாலரின் மதிப்பு ரூ.82.33 க்கு வர்த்தகம் செய்யப்படுகிறது. இதனால் டாலரின் மதிப்பு வலுப்பெற்று இந்திய ரூபாயின் மதிப்பு … Read more

வேகமாக வந்த ஆம்புலன்ஸை பார்க்காமல் ஓடி வந்த சிறுவனை தூக்கிவீசிய பயங்கரம்..!!

கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தில் இருந்து 108 ஆம்புலன்ஸ் ஒன்று, இருதய நோயாளி ஒருவரை ஏற்றிக்கொண்டு அவசர சிகிச்சைக்காக, கோட்டயம் நோக்கி அதிவேகத்தில் சென்றுள்ளது. அப்போது அடிமாலி ஜங்ஷன் பகுதியில், 14 வயது சிறுவன் ஒருவன் சாலையை ஓடி கடக்க முயன்றுள்ளான். அந்த நேரத்தில் வேகமாக வந்த ஆம்புலன்ஸ் சிறுவன் மீது மோதியுள்ளது. இந்த விபத்தில் சிறுவன் படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வருகிறான். இந்நிலையில் இது தொடர்பான சிசிடிவி காட்சி வெளியாகி உள்ளது. சிறுவனை ஆம்புலன்ஸ் தூக்கிய … Read more

கேரளாவில் பள்ளிச் சுற்றுலா பேருந்து விபத்து: மாணவர்கள் உள்பட 9 பேர் பலி

பாலக்காடு: கேரளாவில் சுற்றுலா பேருந்து விபத்துக்குள்ளானதில் மாணவர்கள் உள்பட 9 பேர் பலியாகினர். கேரள மாநிலம் பாலக்காட்டில் தனியார் சுற்றுலா வாகனம் அரசுப் பேருந்துடன் மோதியதில் இந்த விபத்து நடந்துள்ளது. இது குறித்து கேரள போக்குவரத்து துறை அமைச்சர் அந்தோனி ராஜூ கூறுகையில், “நேற்றிரவு 11.30 மணிக்கு விபத்து நடந்துள்ளது. தனியார் பேருந்து அதிகமாகச் சென்று முன்னால் சென்ற அரசுப் பேருந்தை முந்த முயன்றுள்ளது. அதில் விபத்து நடந்தது. இதில் 5 மாணவர்கள் உள்பட 9 பேர் … Read more

டெல்லி அரசின் மதுபான விற்பனை கொள்கை முறையீடு வழக்கு தொடர்பாக 35 இடங்களில் அமலாக்கத்துறை சோதனை..!!

டெல்லி: டெல்லி அரசின் மதுபான விற்பனை கொள்கை முறையீடு வழக்கு தொடர்பாக 35 இடங்களில் அமலாக்கத்துறை சோதனை நடத்தி வருகிறது. டெல்லி, பஞ்சாப் உள்ளிட்ட மாநிலங்களில் 35 இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.

மதுபான கொள்கை வழக்கு | டெல்லி, பஞ்சாப், ஹைதராபாத் உள்ளிட்ட 35 இடங்களில் அமலாக்கத்துறை சோதனை

புதுடெல்லி: டெல்லி அரசின் புதிய மதுபானக் கொள்கையில் பணமோசடி நடந்துள்ளதாக எழுந்த குற்றச்சாட்டு தொடர்பாக விசாரணை நடத்தி வரும் அமலாக்கத்துறையினர், வழக்கு தொடர்பாக டெல்லி, பஞ்சாப், ஹைதராபாத் -ல் உள்ள 35 இடங்களில் இன்று (வெள்ளிக்கிழமை) சோதனை நடத்தினர். புதிய மதுபானக் கொள்கையில் பணமோசடி நடந்துள்ளாத எழுந்த குற்றச்சாட்டுகளின் அடிப்படியில் அமலாக்கத்துறையினர் நடத்தி வரும் விசாரணையைத் தீவிரப்படுத்தும் விதமாக இந்த புதிய சோதனைகள் நடத்தப்படுகிறது. இன்று அதிகாலையில் தொடங்கிய இந்த சோதனைகள் மூன்று மாநிலங்களில் உள்ள மதுபான … Read more

புராதன மதராசாவில் இந்து வழிபாடு விவகாரம்! பூட்டை உடைத்தவர்களை தேடும் போலீசார்

கர்நாடகா: கர்நாடக மாநிலத்தில், 550 ஆண்டுகள் பழமையான மதரஸாவின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்த கும்பல், வழிபாடு செய்ததாக குற்றம் சாட்டப்பட்டது. இந்த விவகாரத்தில், 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். வகுப்புவாத பதற்றம் நிலவி வரும் சூழ்நிலையில் தற்போது காவல்துறை இந்த விவகாரத்தில் கடும் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். தசரா தினத்தன்று, 550 ஆண்டுகள் பழமையான வரலாற்று மதரஸாவிற்குள் ஒரு கும்பல் பூட்டை உடைத்து உள்ளே நுழைந்து, வழிபாடு நடத்தியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்திற்குப் பிறகு, … Read more