'இந்தியாவை ''ஹிந்து ராஷ்டிரா'' என்று மோடி அறிவிப்பார்'… 'ஆயுதம் ஏந்த தயாராகுங்கள்'…

இந்தியாவின் பதினெட்டாவது மக்களவைத் தேர்தல் 2024 மே மாதம் நடக்கவுள்ளது. இந்நிலையில், 2024 தேர்தலில் பாஜக ஆட்சி அமைந்ததும் இந்திய அரசியல் சூழல் வெகுவாக மாற வாய்ப்புள்ளதாக எதிர்கட்சிகளை சேர்ந்தவர் கலக்கமாக பேசி வருகின்றனர். மேலும் அப்போது, இதுவரை நடைமுறையில் இருந்த அரசியலமைப்பு சட்டம் இருக்காது என்றும் மனுதர்மமே இனி அரசமைப்பு சட்டமாக இருக்கும் என சொல்வார்கள் என்றும் பல்வேறு வியூகங்களை வகுத்து வருகின்றனர். இந்த நிலையில், பிரதமர் மோடி இந்தியாவின் பெயரை ஹிந்து ராஷ்ட்ரியமாக அறிவித்தவுடன் … Read more

விவசாயிகள் போராட்டம் லக்கிம்பூர் கொலை: ஓராண்டு நிறைவு

பக்வாரா: லக்கிம்பூரில் விவசாயிகள் கொல்லப்பட்டு ஓராண்டு நிறைவடைந்த நிலையில், ஒன்றிய அமைச்சரை பதவி நீக்கக்கோரி விவசாயிகள் நேற்று போராட்டம் நடத்தினர்.  உத்தரப் பிரதேசம் துணை முதல்வர் கேசவ் பிரசாத் மவுரியாவின் வருகைக்கு  எதிர்ப்பு தெரிவித்து, கடந்த ஆண்டு அக்டோபர் 3ம் தேதி, உபி மாநிலம் லக்கிம்பூரில்  விவசாயிகள் போராட்டம் நடத்தி கொண்டிருந்தார். அப்போது, ஒரு கார் போராட்ட  கூட்டத்தில் புகுந்ததில் 4 பேர் கொல்லப்பட்டனர். இதன்பின் ஏற்பட்ட  வன்முறையில் 4 பேர் கொல்லப்பட்டனர். போராட்டத்தில் நுழைந்த கார் … Read more

ஜம்மு காஷ்மீரில் உயர் போலீஸ் அதிகாரி கொலை – இணைய சேவை துண்டிப்பு

ஜம்மு: ஜம்மு காஷ்மீர் சிறைத்துறை இயக்குநர் ஹேமந்த் லோஹியாவை, அவரது வீட்டு வேலையாள் கொலை செய்திருப்பது தெரியவந்துள்ளது. அஸ்ஸாம் மாநிலத்தைச் சேர்ந்த ஹேமந்த் லோஹியா, 1992-ஆம் ஆண்டு பேட்ச்-ஐ சேர்ந்த ஐபிஎஸ் அதிகாரி. 57 வயதான இவர், கடந்த ஆகஸ்ட் மாதம் பதவி உயர்வு பெற்று ஜம்மு காஷ்மீரின் சிறைத்துறை இயக்குநராக நியமிக்கப்பட்டார். இந்த நிலையில், கடந்த திங்கள் கிழமை ஜம்முவின் உதயவாலாவில் உள்ள அவரது வீட்டில் மர்மான முறையில் கழுத்து அறுபட்டு இறந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டார். … Read more

அமித் ஷா வரும் நேரத்தில் பயங்கரம்… அதிர்ந்த ஜம்மு… இண்டர்நெட் வசதி கட்!

ஜம்மு காஷ்மீருக்கு மூன்று சுற்றுப்பயணமாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா சென்றுள்ளார். இதையொட்டி பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டன. ராஜௌரி மற்றும் பாராமுல்லா ஆகிய நகரங்களில் பாஜக சார்பில் பேரணிகள் மற்றும் பொதுக்கூட்டங்கள் இன்றும், நாளையும் நடத்தப்படவுள்ளன. இதில் அமித் ஷா கலந்து கொள்கிறார். இதுதவிர அரசு அதிகாரிகள் உடன் உயர்மட்ட அளவிலான கூட்டங்கள் நடைபெறுகின்றன. இதில் ஜம்மு காஷ்மீர் வளர்ச்சி தொடர்பாக பல்வேறு விஷயங்கள் குறித்து ஆலோசிக்கப்படுகிறது. இதையடுத்து மூத்த பாஜக தலைவர்கள் உடன் … Read more

அக்.11ம் தேதி முதல் எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கான மருத்துவ கலந்தாய்வு தொடங்கும்; மருத்துவக் கலந்தாய்வு கமிட்டி அறிவிப்பு

டெல்லி: நாடு முழுவதும் எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கான அகில இந்திய மருத்துவ ஒதுக்கீட்டு இடங்களுக்கான மருத்துவ கலந்தாய்வு வருகிற 11-ம் தேதி தொடங்கும் என மருத்துவ கலந்தாய்வு குழு அறிவித்துள்ளது. அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்கள் எய்ம்ஸ்,  ஜிம்பர் உள்ளிட்ட மருத்துவ கல்லூரிகளில் அக்டோபர் 11ம் தேதி தொடங்கும் முதல்கட்ட மருத்துவ கலந்தாய்வு இருபதாம் தேதி வரை நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அக்டோபர் 17ஆம் தேதி முதல் 28ஆம் தேதிக்குள் மாநிலங்களில் முதல் கட்ட மருத்துவ கலந்தாய்வை … Read more

7 சட்டப்பேரவை தொகுதிகளில் இடைத்தேர்தல் – தேர்தல் ஆணையம் அறிவிப்பு

புதுடெல்லி: 6 மாநிலங்களில் காலியாக உள்ள ஏழு சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு நவம்பர் 3-ல் இடைத்தேர்தல் நடத்தப்படும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதுகுறித்து தேர்தல் ஆணையம் நேற்று மேலும் கூறியுள்ளதாவது: பிஹாரின் மோகமா மற்றும் கோபால்கஞ்ச் ஆகிய இரு சட்டப்பேரவை தொகுதிகள், மகாராஷ்டிராவில் (கிழக்கு) அந்தேரி, ஹரியாணாவில் ஆதம்பூர், தெலங்கானாவில் முனுகோட், உ.பி.யில் கோலா கோரக்நாத் மற்றும் ஒடிசாவில் தாம்நகர் பேரவை தொகுதிகளுக்கு நவம்பர் 3-ல் தேர்தல் நடைபெறவுள்ளது. இந்த தேர்தலில் பதிவான வாக்குகள் நவம்பர் 6-ல் … Read more

இந்தியாவில் கொரோனா தடுப்பூசி: அடேங்கப்பா இத்தனை கோடியா?

இந்தியாவில் கொரோனா தடுப்பூசியை பொறுத்தவரை இன்று காலை 7 மணி நிலவரப்படி 218.80 கோடிக்கும் அதிகமான (2,18,80,50,600) டோஸ்கள் செலுத்தப்பட்டுள்ளன 12-14 வயதிற்குட்பட்டோருக்கான கொரோனா தடுப்பூசி , 16 மார்ச் 2022 முதல் செலுத்தப்பட்டு வருகிறது. இதுவரை, ஏறத்தாழ 4.10 கோடிக்கும் அதிகமான (4,10,44,847) இளம் பருவத்தினருக்கு கொரோனா தடுப்பூசியின் முதல் டோஸ் செலுத்தப்பட்டுள்ளது. 18-59 வயதுடையவர்களுக்கு கொரோனா முன்னெச்சரிக்கை தவணை தடுப்பூசி செலுத்தும் பணி 10 ஏப்ரல் 2022 அன்று தொடங்கியது. இந்தியாவில் தற்போது சிகிச்சை … Read more

உத்தர பிரதேச முன்னாள் முதல்வரும், சமாஜவாதி நிறுவனருமான முலாயம் சிங் யாதவின் உடல்நிலை கவலைக்கிடம்

டெல்லி: உத்தர பிரதேச முன்னாள் முதல்வரும், சமாஜவாதி நிறுவனருமான முலாயம் சிங் யாதவின் உடல்நிலை கவலைக்கிடம் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அவருக்கு விரிவான சிறப்பு நிபுணர்கள் குழு சிகிச்சை அளித்து வருகிறது என மேதாந்தா மருத்துவமனை அறிக்கை அளித்துள்ளது.

தாயகம் திரும்பும் மியன்மாரில் சிக்கிய தமிழர்கள்!- நேரில் வரவேற்கிறார் செஞ்சி மஸ்தான்

மியன்மார் நாட்டில் சிக்கித் தவித்த 13 தமிழர்கள் இன்று தாயகம் திரும்புகின்றனர். சென்னை விமான நிலையத்திற்கு வருகை தரும் அவர்களை வெளிநாட்டு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான் வரவேற்கிறார்.  மியான்மர் நாட்டில் சுமார் 50 தமிழர்கள் உட்பட சுமார் 300 இந்தியர்கள் கடுமையான இன்னல்களுக்கு ஆட்பட்டிருப்பதாக மாநில அரசுக்கு தகவல் கிடைத்திருந்நது. இது தொடர்பாக தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் பாரத பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதியிருந்தார் எழுதியிருந்தார். விசாரணையில், இவர்கள் … Read more

டி.கே.சிவகுமாருக்கு அமலாக்கத்துறை சம்மன்

பெங்களூரு: காங்கிரஸ் ஆதரவு பத்திரிகையான நேஷனல் ஹெரால்டு நிறுவனத்தின் சொத்துக்கள் காங்கிரஸ் கட்சிக்கு கைமாற்றப்பட்டதில் நிதி மோசடி நடந்தது தொடர்பான வழக்கை அமலாக்கத் துறை விசாரித்து வருகிறது. இந்த வழக்கில் சோனியா காந்தி, ராகுல் காந்தியிடம் விசாரணை நடந்தது. இந்நிலையில் ராகுல் காந்தி கர்நாடகாவில் ஒற்றுமை யாத்திரையை மேற்கொண்டுள்ளார். இதை கர்நாடக மாநில காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவகுமார் முன்னின்று ஒருங்கிணைத்து வருகிறார். இந்நிலையில் டி.கே.சிவகுமாருக்கு அமலாக்கத்துறை நேற்று சம்மன் அனுப்பியுள்ளது. அதில், ‘வரும் 7-ம் தேதி டெல்லியில் … Read more