சிவிங்கிப் புலி நிகழ்வு | “மக்களை திசை திருப்ப பிரதமர் மோடி செய்த தமாஷ்” – காங்கிரஸ் கருத்து
புதுடெல்லி: “குனோ தேசிய பூங்காவில் சிவிங்கிப் புலிகளைத் திறந்துவிட்ட நிகழ்வு தேசிய பிரச்சினைகள், ராகுல் காந்தியின் பாரத் ஜோடோ யாத்திரையில் இருந்து மக்களைத் திசைதிருப்ப பிரதமர் மோடி நடத்திய தமாஷ்” என்று காங்கிரஸ் குற்றம்சாட்டியுள்ளது. இந்தியாவில் அழிந்துவிட்டதாக அறிவிக்கப்பட்ட சிவிங்கிப் புலிகளை இந்தியாவில் மறு அறிமுகம் செய்யும் விதமாக, நமீபியாவிருந்து வரவழைக்கப்பட்ட 8 சிவிங்கிப் புலிகளை பிரதமர் மோடி சனிக்கிழமை மத்தியப் பிரதேசத்தில் உள்ள குனோ தேசிய பூங்காவில் திறந்துவிட்டார். 70 வருடங்களுக்கு பின்னர் இந்தியா காடுகளுக்கு … Read more