ஜார்கண்ட்: மாணவிகளுக்கு ஆபாச படங்களை காட்டிய ஆசிரியை! கிராமத்தினர் கொடுத்த கொடூர தண்டனை!

ஜார்கண்ட் மாநிலத்தின் மேற்கு சிங்பூம் மாவட்டத்தில் உள்ள நவாமுண்டி (Noamundi) தொகுதியில் அரசு நடுநிலைப் பள்ளி ஒன்று இயங்கி வந்தது. இப்பள்ளியில் பயின்று வரும் ஆறு மாணவிகள் தங்கள் ஆசிரியை மீது வைத்துள்ள புகார்கள் அம்மாநிலத்தில் புயலைக் கிளப்பியுள்ளது. தங்களுக்கு பாடம் எடுக்கும் ஆசிரியை வகுப்பறையில் தங்களுக்கு அநாகரீகமான ஆபாச வீடியோக்களை காட்டியதாகவும், தகாத முறையில் தங்களை தொட்டதாகவும் அம்மாணவிகள் தங்கள் பெற்றோரிடம் புகார் அளித்தனர். இதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர் காவல் நிலையத்தில் புதன் கிழமையன்று … Read more

'ப்ளீஸ் என்ன மன்னிச்சுருங்க..!' – நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்ட சசி தரூர்.. நடந்தது என்ன?

அகில இந்திய காங்கிரஸ் கட்சித் தலைவர் பதவிக்கு போட்டியிடும் சசி தரூர், இந்தியாவின் வரைப்படத்தை தவறாக வெளியிட்டதற்காக, நிபந்தனையற்ற மன்னிப்பு கோரினார். அகில இந்திய காங்கிரஸ் கட்சித் தலைவர் பதவிக்கு வரும் அக்டோபர் மாதம் 17 ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இந்தத் தேர்தலில் பதிவாகும் வாக்குகள், அக்டோபர் மாதம் 19 ஆம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. சுமார் 20 ஆண்டுகளுக்கு பிறகு காந்தி குடும்பத்தைச் சேராதவர் ஒருவர் கட்சித் தலைவராக உள்ளார். … Read more

நீட் தேர்வு விவகாரம்: முன்னாள் நீதிபதி ஏ.கே.ராஜன் குழுவின் அறிக்கைக்கு தடை கோரிய வழக்கை தள்ளுபடி செய்தது சுப்ரீம் கோர்ட்..!!

டெல்லி: நீட் தேர்வின் தாக்கம் குறித்து முன்னாள் நீதிபதி ஏ.கே.ராஜன் குழுவின் அறிக்கைக்கு தடை கோரி தொடுக்கப்பட்ட வழக்கை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் திமுக ஆட்சிக்கு வந்ததும் நீட் தேர்வில் இருந்து விலக்கு பெறுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டது. முதற்கட்டமாக நீட் தேர்வால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து ஆராய நீதிபதி ஏ.கே.ராஜன் தலைமையில் குழு அமைக்கப்பட்டது. இந்த குழு 85 ஆயிரத்திற்கும் மேற்பட்டோரிடம் கருத்து கேட்டு கடந்த ஆண்டு ஜூலை மாதம் முதலமைச்சரிடம் 165 பக்க … Read more

தமிழகம் உள்ளிட்ட பல மாநிலங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு – இந்திய வானிலை மையம் அறிவிப்பு

தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் அக்டோபர் 1ஆம் தேதி கன முதல் மிக கனமழை பெய்யும் என இந்திய வானிலை மையம் எச்சரிக்கை விடுத்திருக்கிறது. தற்போது தென்மேற்கு பருவமழை தொடங்கியதை அடுத்து பல்வேறு இடங்களில் தொடர்மழை பெய்துவருகிறது. இந்நிலையில் அக்டோபர் 1ஆம் தேதி இந்தியாவில் பல்வேறு மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை மையம் எச்சரிக்கை விடுத்திருக்கிறது. வெப்ப மண்டல மாற்றங்களால் ஆந்திராவில் மேற்கு மத்திய வங்காள விரிகுடாவில் … Read more

பட்டு வேட்டி சட்டை அணிந்து விருதைப் பெற்றுக் கொண்ட சூர்யா!!

டெல்லியில் தேசிய திரைப்பட விருதுகள் வழங்கும் விழா குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு தலைமையில் நடைபெற்றது. 2020ஆம் ஆண்டு வெளியான படங்களுக்கான 68ஆவது தேசிய திரைப்பட விருதுகள் ஜூலை மாதம் அறிவிக்கப்பட்டது. 30 மொழிகளில் 295 படங்கள் தேசிய விருதுக்கு அனுப்பப்பட்டிருந்த நிலையில் தமிழில் சூரரைப்போற்று திரைப்படத்திற்கு 5 விருதுகள் அறிவிக்கப்பட்டன. சூரரைப்போற்று திரைப்படத்தில் சிறந்த நடிப்பை வழங்கிய நடிகர் சூர்யாவுக்கு சிறந்த நடிகருக்கான தேசிய விருது அறிவிக்கப்பட்டது. நடிகை அபர்ணா பாலமுரளி சிறந்த நடிகைக்கான தேசிய … Read more

பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் கான்வாயில் 42 கார்கள் – விளாசும் எதிர்க்கட்சிகள்!

பஞ்சாப் மாநில முதலமைச்சர் பக்வந்த் மான் கான்வாயில் 42 கார்கள் உள்ளது, தகவல் அறியும் சட்டத்தின் கீழ் தெரிய வந்துள்ளது. பஞ்சாப் மாநிலத்தில், முதலமைச்சர் பகவந்த் மான் தலைமையிலான ஆம் ஆத்மி கட்சியின் ஆட்சி நடைபெற்று வருகிறது. கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் 90-க்கும் அதிகமான இடங்களில் வெற்றி பெற்று முதன் முறையாக பஞ்சாப் மாநிலத்தில் ஆம் ஆத்மி ஆட்சியை பிடித்துள்ளது. இந்நிலையில், முதலமைச்சர் பகவந்த் மான் கான்வாய் குறித்து தகவல் அறியும் அறியும் சட்டத்தின் கீழ் அறிக்கை … Read more

அதிவேக இணைய வசதியை கொடுக்கும் 5 ஜி தொழில்நுட்பம்: நாளை டெல்லியில் பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார்

புதுடெல்லி: அதிவேக இணைய வசதியை கொடுக்கும் 5 ஜி தொழில்நுட்பம் இந்தியாவில் வரும் அக்டோபர் மாதம் முதல் பயன்பாட்டுக்கு வருவது உறுதி செய்யப்பட்டுள்ளது. நாளை காலை 10 மணிக்கு டெல்லியில் உள்ள பிரகதி மைதானத்தில் 5ஜி சேவையை,பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார். இந்திய மொபைல் காங்கிரசின் (ஐ.எம்.சி.) 6-வது பதிப்பையும் பிரதமர் தொடங்கி வைக்கிறார். ஐ.எம்.சி. 2022 புதிய டிஜிட்டல் யுனிவர்ஸ் என்ற கருப்பொருளுடன் அக்டோபர் 1 முதல் 4-ம் தேதி வரை நடைபெற உள்ளது. 5ஜி … Read more

'அங்க 21 வருஷமா பாஜக ஆட்சிதான்… அப்படியிருக்க மோடி ஜி இப்படி பேசலாமா?'

மொத்தம் 29 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான பல்வேறு நலத் திட்டங்களை துவக்கி வைப்பதற்காக, இரண்டு நாள் பயணமாக பிரதமர் நரேந்திர மோடி தமது சொந்த மாநிலமான குஜராத்துக்கு சென்றுள்ளார். தமது இந்த பயணத்தின் ஒரு பகுதியாக, சௌராஷ்டிரா பகுதிக்கு உட்பட்ட பாவ்நகர், பொடாட் மற்றும் அம்ரேலி மாவட்டங்களில் மொத்தம் 6000 கோடி ரூபாய் மதிப்பிலான நலத்திட்டங்களை இன்று துவக்கி வைத்தார். இதனையொட்டி பாவ்நகர், ஜவகர் மைதானத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பேசும்போது, “நாட்டிலேயே நீளமான … Read more

68-வது தேசிய திரைப்பட விருது வழங்கும் விழாவில் சூரரைப் போற்று திரைப்படம் 5 விருதுகளை பெற்றது

டெல்லி: 68-வது தேசிய திரைப்பட விருது வழங்கும் விழாவில் சூரரைப் போற்று திரைப்படம் 5 விருதுகளை பெற்றுள்ளது. சிறந்த படம், சிறந்த நடிகர், நடிகை, பின்னணி இசை, திரைக்கதை ஆகிய பிரிவுகளில் சூரரைப் போற்று படத்துக்கு விருது பெற்றது.

'தாஜ்மகாலை கட்டியது ஷாஜகான்தான் என்பதற்கான ஆதாரம் இல்லை' – உச்சநீதிமன்றத்தில் புதிய மனு!

தாஜ்மகாலை கட்டியது ஷாஜகான் தான் என்பதற்கான வலுவான ஆதாரம் கிடையாது எனவே இந்த விவகாரத்தில் உண்மை தன்மையை கண்டறிய குழுவை அமைக்க கோரி உச்ச நீதிமன்றத்தில் புதிய மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக ரஜினிஸ் சிங் என்பவர் தாக்கல் செய்த பொதுநல மனுவில், தாஜ்மஹாலை மும்தாஜ் நினைவாக ஷாஜகான் தான் கட்டினார் என்பதற்கான அறிவியல் பூர்வமான ஆதாரங்கள் எதுவும் இல்லை என்றும், எனவே இது குறித்து உண்மை தன்மை கண்டறியும் குழு ஒன்றை அமைத்து விரிவான … Read more