பிரபல நடிகை தூக்குப் போட்டு தற்கொலை: கைப்பட எழுதிய கடிதம் சிக்கியது..!

நடிகையும், மாடல் அழகியுமான அகன்ஷா மோகன் ஹோட்டல் அறையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மகாராஷ்டிர மாநிலம் மும்பையில் வசித்து வந்தவர் அகன்ஷா மோகன் (30). மாடலிங் துறையில் பணியாற்றி வந்த இவர் கடந்த 16-ம் தேதி ரிலீஸ் ஆன ‘சியா’ என்ற படத்தில் ஷிபெய்ல் எனும் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அத்துடன், விளம்பரங்களிலும் நடித்துள்ளார். இந்நிலையில், மும்பை அந்தேரியில் உள்ள ஒரு ஹோட்டலில் தங்கி இருந்த அகன்ஷா மோகன் வெகு நேரமாகியும் தனது அறையில் … Read more

மல்லிகார்ஜூன கார்கே Vs சசி தரூர்: காங்கிரஸ் தலைமை பதவி யாருக்கு?

காங்கிரஸ் தலைவர் பதவிக்கான தேர்தலில் மல்லிகார்ஜூன கார்கே – சசி தரூர் ஆகியோர் இடையே பலத்த போட்டி ஏற்பட்டுள்ளது. அகில இந்திய காங்கிரஸ் கட்சித் தலைவர் பதவிக்கு வரும் அக்டோபர் மாதம் 17 ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இந்தத் தேர்தலில் பதிவாகும் வாக்குகள், அக்டோபர் மாதம் 19 ஆம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. சுமார் 20 ஆண்டுகளுக்கு பிறகு காந்தி குடும்பத்தைச் சேராதவர் ஒருவர் கட்சித் தலைவராக உள்ளார். இந்த முடிவில் … Read more

இலங்கை சிறையில் அடைக்கப்பட்டுள்ள தமிழ்நாடு மீனவர்களை விடுவிக்க ஒன்றிய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு

டெல்லி: இலங்கை சிறையில் அடைக்கப்பட்டுள்ள தமிழ்நாடு மீனவர்களை விடுவிக்க எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து விரிவான அறிக்கை தாக்கல் செய்ய ஒன்றிய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இலங்கை சிறையில் வாடும் தமிழ்நாடு மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்கக்கோரி வழக்கறிஞர் சிஜின் என்பவர் தொடர்ந்துள்ள மனுவை உச்சநீதிமன்றம் விசாரணை செய்து வருகிறது. இந்த வழக்கு இன்று நீதிபதிகள் அனிருந்த பொஸ் மற்றும் விக்ரம்நாத் அமர்வில் விசாரணைக்காக வந்த போது ஆஜரான சிஜின் 90-ருக்கும் மேற்பட்ட தமிழக மீனவர்கள் இலங்கை சிறையில் … Read more

'ரூ. 25 கோடி' கத்தை கத்தையாக கள்ளநோட்டு – குஜராத் தேர்தலுக்கா அல்லது சினிமாவுக்கா?

குஜராத்தில் இந்தாண்டு இறுதியில் அல்லது அடுத்தாண்டு தொடக்கத்தில் சட்டப்பேரவை தேர்தல் நடக்க உள்ளது. இதை முன்னிட்டு அங்கு பாஜக, ஆம் ஆத்மி, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் தங்களின் பிரச்சாரப் பணியை ஏற்கனவே தொடங்கிவிட்டன. மேலும், போலீசாரும் முக்கிய இடங்களில் தீவிர கண்காணிப்பை மேற்கொண்டு வருகின்றனர். குஜராத்தில் கள்ள நோட்டு புழக்கம் தற்போது அதிகமாகியிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகின. அந்த வகையில், ரூ. 25 கோடி கள்ள நோட்டுகளை குஜராத் போலீசார் நேற்று கைப்பற்றியுள்ளனர்.  சூரத் நகரில் அகமதாபாத் – … Read more

நடிகர் மகேஷ்பாபு வீட்டில் திருட முயற்சி சுவர் ஏறி குதித்த வாலிபர் கால் முறிவு

திருமலை: ஐதராபாத்தில் தெலுங்கு திரைப்பட சூப்பர் ஸ்டார் மகேஷ்பாபு வீட்டில் திருட முயன்ற வாலிபரின் கால் முறிந்தது. தெலங்கானா மாநிலம், ஐதராபாத் ஜூப்லி ஹில்ஸ் பகுதி பிலிம் நகரில் தெலுங்கு திரைப்பட சூப்பர் ஸ்டார் மகேஷ்பாபுவின் வீடு உள்ளது. சம்பவத்தன்று இரவு மர்மநபர் ஒருவர் மகேஷ்பாபுவின் வீட்டு சுவர் ஏறி குதித்து திருட முயன்றார். ஆனால், வீட்டின் மதில் சுவர் 10 அடி உயரத்திற்கு மேல் இருந்ததால் சுவர் ஏறி குதித்தபோது கால் முறிந்தது. இதனால் அந்த … Read more

போலி ஆவணங்களில் சிம்கார்டு.. ரூ.50,000 அபராதம்.. தொலைத்தொடர்பு துறை அதிரடி..!

சிம் கார்டு மற்றும் ஓடிடி சேவைகளுக்கு போலி ஆவணங்களை வழங்கினால் ஓராண்டு சிறை அல்லது ரூ.50,000 அபராதம் அல்லது இரண்டையும் சேர்த்து தண்டனையாக விதிக்கப்படும் என இந்திய தொலைத்தொடர்புத்துறை தெரிவித்துள்ளது. தொலைத்தொடர்பு வாடிக்கையாளர்களிடையே ஆன்லைன் மூலமாக மோசடியில் ஈடுபடுவது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதேபோன்று, சட்டவிரோதமான காரியங்களும் தொலைத்தொடர்பு சேவையை அடிப்படையாக கொண்டே அதிக அளவில் நடைபெறுகின்றன. இதனை கருத்தில் கொண்டு, இதுபோன்ற பல்வேறு மோசடி நிகழ்வுகளிலிருந்து தொலைத்தொடர்பு பயனாளர்களை பாதுகாக்க தொலைத்தொடர்பு வரைவு மசோதாவில் … Read more

தடை செய்யப்பட்ட 63 ஆபாச இணையதளங்கள் – என்னென்ன தெரியுமா?

கடந்தாண்டு, மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் புதிய தகவல் தொழில்நுட்ப விதிமுறைகளை (IT Rules 2021) வெளியிட்டிருந்தது. அந்த விதியை மீறி, பெண்களின் கண்ணியத்தை கெடுக்கும் வகையில் ஆபாச புகைப்படங்கள்/காணொலிகள் இடம்பெற்றிருப்பதாகக் கூறி புனே நீதிமன்றம் 63 ஆபாச இணையதளங்களை சுட்டிக்காட்டியது. அதேபோன்று, உத்தரகாண்ட் உயர் நீதிமன்றம் 4 இணையதளங்களை தனது தீர்ப்பில் குறிப்பிட்டது.  இந்த நீதிமன்ற உத்தரவுகளை மேற்கோள்காட்டி, பரிந்துரைக்கப்பட்ட 67 இணையதளங்களில், 63 இணையதளங்களை தடை செய்யுமாறு, இணைய நிறுவனங்களுக்கு தொலைத்தொடர்பு துறை … Read more

பஞ்சாப் மாநிலத்தில் வீடு தேடி ரேஷன் பொருள் வழங்கும் திட்டத்துக்கு அம்மாநில உயர்நீதிமன்றம் இடைக்கால தடை

பஞ்சாப் : பஞ்சாப் மாநிலத்தில் வீடு வீடாக சென்று ரேஷன் பொருட்களை வழங்கும் திட்டத்தை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் அம்மாநில உயர்நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது. பஞ்சாப் மாநிலத்தில் ஆளும் ஆம் ஆத்மி கட்சி ஆட்சியை தக்க வைத்து கொள்ள பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அதன் ஒரு பகுதியாக வீடு தேடி ரேஷன் பொருட்கள் திட்டத்தை நாளை மறுநாள் தொடங்கிவைக்க இருந்தது. அங்கு உணவு பொருட்கள் உட்பட மளிகை பொருட்கள் 17 ஆயிரம் நியாய விலை … Read more

புதுச்சேரி: மின் ஊழியர் பிரச்னை – ஆளுநருடன் முதல்வர் ரங்கசாமி அவசர ஆலோசனை

புதுச்சேரியில் மின்துறை ஊழியர்கள் போராட்டம் காரணமாக ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலை காரணமாக ஆளுநர தமிழிசையை சந்தித்து முதல்வர் ரங்கசாமி அவசர ஆலோசனையில் ஈடுபட்டார். புதுச்சேரி மின் துறையை தனியார் மயமாக்கும் மாநில அரசின் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து மின்துறை ஊழியர்கள் இன்று மூன்றாவது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் காரணமாக புதுச்சேரியின் பல்வேறு பகுதிகளிலும் மின்தடை ஏற்பட்டதன் காரணமாக இன்று மூன்றாவது நாளாக ஆங்காங்கே பொதுமக்கள் சாலை மறியல் உள்ளிட்ட போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் … Read more

பாஜக ஆளும் மாநிலத்தில் தொடங்கும் இந்திய ஒற்றுமை பயணம்: கர்நாடகாவில் ராகுல் காந்திக்கு வரவேற்பு

பெங்களூரு: ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமைப் பயணம் (பாரத் ஜோடோ யாத்திரை) 23-வது நாளில் அடியெடுத்து வைத்துள்ளது. முதன்முதலாக பாஜக ஆளும் மாநிலத்தில் ராகுல் இன்று தனது பயணத்தைத் தொடங்குகிறார். கர்நாடகா வந்த ராகுல் காந்தியை அம்மாநில முன்னாள் முதல்வர் சித்தராமையா, மாநில எல்லைக்குச் சென்று வரவேற்றார். காங்கிரஸ் கட்சியின் முக்கியத் தலைவர் ராகுல் காந்தி செப்.7-ம் தேதி கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரையிலான இந்திய ஒற்றுமை பயணத்தைத் தொடங்கினார். மொத்தம் 150 நாட்களில் 12 மாநிலங்கள் … Read more