10 ஆம் ஆத்மி எம்.எல்.ஏ.க்களை பாஜக விலைபேசி வருகிறது..! – அரவிந்த் கெஜ்ரிவால் பரபரப்பு குற்றச்சாட்டு..!

ஆம் ஆத்மி கட்சி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கும் மத்தியில் ஆளும் பாஜக விற்கும் எப்போதும் ஏழாம் பொருத்தமாகவே இருந்து வரும் நிலையில், தனது கட்சியில் 10 எம்.எல்.ஏ.க்களை பாஜக விலைபேசி வருகிறது என அரவிந்த் கெஜ்ரிவால் பேசி இருப்பது அரசியல் அரங்கில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. பஞ்சாப்பில் ஆம் ஆத்மி அரசை கவிழ்க்க 10 சட்டமன்ற உறுப்பினர்களை பாஜக விலைபேசி வருவதாக அரவிந்த் கெஜ்ரிவால் பரபரப்பு குற்றஞ் சாட்டியுள்ளார். டெல்லி மற்றும் பஞ்சாப் மாநிலத்தில் ஆட்சி செய்து … Read more

முதலிரவில் மணமகன் மாரடைப்பால் மரணம்

திருமலை: ஆந்திர மாநிலம், அன்னமையா மாவட்டம், பாகால மண்டலம் பட்டிப்பாடி வாரிப்பள்ளியை சேர்ந்தவர் துளசி பிரசாத்(30). இவரும் மதனப்பள்ளி சந்திரா காலனியை சேர்ந்த 26 வயது இளம்பெண்ணும் காதலித்து வந்தனர்.  இதையடுத்து இருவீட்டாரின் சம்மதத்துடன் கடந்த 12ம் தேதி பெரியோர்கள் முன்னிலையில் திருமணம் நடந்தது. தொடர்ந்து மணப்பெண் வீட்டில் முதலிரவுக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டது. அன்றிரவு முதலிரவு அறைக்கு புதுமண தம்பதிகளை சடங்குகள் செய்து அனுப்பி வைத்தனர். அறைக்குள் சென்ற சில நிமிடங்களில் துளசி பிரசாத் மயங்கி விழுந்துள்ளார். … Read more

குழந்தைகளுக்கான ஹெல்ப்லைன் 1098 இனி..?

புதுடெல்லி: குழந்தைகளுக்காக பிரத்யேகமாக இயங்கும் சைல்ட்லைன் 1098, கடந்த 26 ஆண்டுகளாக வெற்றிகரமாக இயங்கி வரும் நிலையில் இந்த எண்ணை மத்திய அரசு சிங்கிள் ஹெல்ப்லைன் எண்ணான 112வுடன் இணைக்கவுள்ளதாக தகவல்கள் வெளிவந்தன. அதற்கு மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது. இது குறித்து மத்திய மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகத்தின் துணைச் செயலர் மனோஜ் குமார் கடந்த 12ஆம் தேதி எழுதியுள்ள கடிதத்தில், மத்திய அரசு குழந்தைகள் உதவி எண் (1098) ஐ 112 என்ற … Read more

கோவாவில் பாஜக-வுக்கு தாவிய 8 காங்கிரஸ் எம்.எல்.ஏ-க்கள்… அதிர்ச்சியில் அரசியல் வட்டாரங்கள்..!!

பனாஜி: ஒருபுறம் ராகுல்காந்தி இந்தியாவை ஒருங்கிணைப்போம் என்ற பெயரில் நடைபயணம் மேற்கொண்டிருக்க, கோவாவில் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் 8 பேர் பாரதிய ஜனதா கட்சியில் இணைந்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கோவா முன்னாள் முதல்வர் திகம்பர் காமத், மைக்கேல் லோபோ உள்ளிட்ட 8 காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள்  முதல்வர் பிரமோத் சாவந்த் மற்றும் சபாநாயகர் விதான் சபாவையும் சந்தித்தனர். சட்டப்பேரவை கூட்டத்தொடர் நடைபெறாத நிலையில், எம்எல்ஏக்கள் சபாநாயகரை சந்திப்பது வழக்கத்திற்கு மாறானது என்பதால் அவர்கள் பாரதிய ஜனதா கட்சியில்  இணையப்போவதாக தகவல் … Read more

1098 சைல்டுலைன் எண் தொடரும்: மத்திய அரசு விளக்கம்

டெல்லி: குழந்தைகள் மற்றும் சிறார்களுக்கான 1098 சைல்டு ஹெல்ப்லைன் எண் சேவை தொடரும் என நாளிதழில் வெளியான செய்திக்கு மறுப்பு தெரிவித்து மத்திய அரசு விளக்கம் கொடுத்துள்ளது. அது குறித்து விரிவாக பார்ப்போம். “Centre hanging up on 1098; Children will have to call 112” என்ற தலைப்பில் இன்று (செப்டம்பர் 14) பத்திரிக்கையில் செய்தி ஒன்று வெளியானது. அதற்கு மறுப்பு தெரிவித்து விளக்கம் கொடுத்துள்ளது மத்திய மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம். … Read more

சுப்ரமணிய சுவாமி அரசு வீட்டை காலி செய்ய வேண்டும்..! – உயர்நீதிமன்ற உத்தரவால் பரபரப்பு..!

சுப்ரமணிய சுவாமி அரசு வீட்டை காலி செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவு அரசு வீட்டை 6 வாரத்திற்குள் காலி செய்து அதனை உரிய அதிகாரிகளிடம் ஒப்படைக்க வேண்டும் என சுப்ரமணிய சுவாமிக்கு டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. கடந்த 2016 ஆண்டு ஏப்ரல் 16 ந் தேதி முதல் 2022 ஏப்ரல் 24ம் தேதி வரை மாநிலங்களவை உறுப்பினராக சுப்ரமணிய சுவாமி இருந்தார். நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு டெல்லியில் அரசு குடியிருப்பு வழங்கப்படுவது வழக்கம். அந்த வகையில் சுப்பிரமணிய சுவாமிக்கு … Read more

ரூ.200 கோடி மோசடி செய்யப்பட்ட வழக்கு: நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸ் விசாரணைக்கு ஆஜர்

டெல்லி : சுகேஷ் சந்திரசேகர் 200 கோடி ரூபாய் மோசடி செய்த வழக்கில் பாலிவுட் நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸ் டெல்லி பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் முன்பு விசாரணைக்கு ஆஜர் ஆனார். தொழிலதிபர் மனைவியை ஏமாற்றி இடைத்தரகர் சுகேஷ் சந்திரசேகர் 200 கோடி ரூபாய் மோசடி செய்தது தொடர்பாக விசாரணை தீவிரமடைந்து வருகிறது. இதுகுறித்து டெல்லி பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் ஏற்கனவே நடிகை நோரா ஃபதேஹியிடம்  விசாரணை நடத்தினர். இவ்வழக்கு தொடர்பாக அமலாக்க துறையின் துணை குற்றப் பத்திரிகையில் … Read more

லிஃப்ட் அறுந்து விழுந்து விபத்து..! – 8 பேர் பலியான சோகம்..!

குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் புதிதாக கட்டப்பட்டு வரும் கட்டடத்தில் லிஃப்ட் அறுந்து விழுந்ததில் அதில் பயணித்த 8 பேர் உயிரிழந்துள்ளனர். குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் ஆஸ்பயர்-2 என்கிற அடுக்குமாடி கட்டிடத்தின்கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகின்றன. தனியாருக்கு சொந்தமான இந்த கட்டடத்தில் இன்று வழக்கம் போல் பணியாளர்கள் வேலை செய்து வந்துள்ளனர். அப்போது திடீரென அந்த உயரடுக்கு மாடிக் கட்டிடத்தில் இருந்த லிஃப்ட் அறுந்து விழுந்துள்ளது. இதில் 8 தொழிலாளர்கள் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் லிஃப்ட் இடிபாடுகளில் சிக்கி … Read more

குற்றப்பின்னணி எம்பி, எம்எல்ஏக்கள் வழக்கு; அரசியல் கட்சிகளுக்கு உத்தரவிட முடியாது.! சுப்ரீம் கோர்ட்டில் தேர்தல் ஆணையம் பதில் மனு

புதுடெல்லி: வெறுப்பு பேச்சு பேசுவோரை தகுதி நீக்கம் செய்ய அரசியல் கட்சிகளுக்கு உத்தரவிட முடியாது என்று தேர்தல் ஆணையம் சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்த பதில் மனுவில் தெரிவித்துள்ளது. குற்றப்பின்னணி கொண்ட எம்பி, எம்எல்ஏக்கள் மீதான வழக்குகளை அந்தந்த மாநில சிறப்பு நீதிமன்றங்கள் விசாரித்து வருகின்றன. தற்போது உள்ள சட்டத்தின்படி குற்றப்பின்னணி உறுதி செய்யப்பட்ட எம்பி, எம்எல்ஏக்களுக்கு தேர்தலில் போட்டியிட 6 ஆண்டுகள் வரை தடை விதிக்கப்படுகிறது. பாஜக தலைவர்களில் ஒருவரான அஷ்வினி உபத்யாய் என்பவர்  உச்சநீதிமன்றத்தில் … Read more

உத்தராகண்டில் சோகம் – பாழடைந்த பள்ளிக் கட்டடத்தால் பறிபோன சிறுவனின் உயிர்!

உத்தராகண்டில் ஒரு பள்ளி கழிவறையின் உட்கூரை இடிந்து விழுந்ததில் 8 வயது மாணவன் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்தராகண்ட் மாநிலம் சாம்பவாத் மாவட்டத்தில் பட்டி பகுதியில் மன்கண்டே தொடக்கப்பள்ளி இயங்கி வருகிறது. இந்த பள்ளியில் பயன்றுவரும் 8 வயது மாணவர்களான சந்தன், சோனி, ரிங்கு மற்றும் ஷகுனி ஆகிய நால்வரும் கழிவறைக்கு சென்றுள்ளனர். அப்போது எதிர்பாராத விதமாக கட்டடத்தின் மேற்கூரை இடிந்து விழுந்ததில் சந்தன் என்ற மாணவன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தான். மற்ற 3 பேரும் … Read more