ரஷ்யாவிலிருந்து எண்ணெய் வாங்கும் நாடுகளுக்கு 500% வரி: அமெரிக்க மசோதா குறித்து ஜெய்சங்கர் கருத்து

வாஷிங்டன்: ரஷ்யாவிலிருந்து எண்ணெய் இறக்குமதி செய்யும் நாடுகளுக்கு 500% வரி விதிக்க முன்மொழியும் அமெரிக்க மசோதா குறித்து மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் கவலை தெரிவித்தார். அமெரிக்காவிற்கு நான்கு நாள் பயணமாகச் சென்றுள்ள அமைச்சர் ஜெய்சங்கர், வாஷிங்டனில் நடந்த செய்தியாளர் கூட்டத்தில் பேசியபோது, “இந்தியாவுக்கு தாக்கம் ஏற்படுத்தும் இந்த மசோதா குறித்து எப்போதும் உன்னிப்பாகக் கண்காணித்து வருகிறோம். ரஷ்யாவுடன் வர்த்தகம் செய்யும் நாடுகளுக்கு 500% வரி விதிக்கும் மசோதாவை ஆதரித்த அமெரிக்க செனட்டர் லிண்ட்சே கிரஹாமுடன் … Read more

அசாமில் நடந்த சோதனையில் 1,000 கிலோ மாட்டிறைச்சி பறிமுதல்: மாநிலம் முழுவதும் 132 பேர் கைது

குவாஹாட்டி: அசாம் மாநிலத்தில் 1,000 கிலோ மாட்டிறைச்சியை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர். இதுகுறித்து அசாம் ஐஜிபி (சட்டம் ஒழுங்கு) அகிலேஷ் குமார்சிங் கூறுகையில், “செவ்வாய்க் கிழமை இரவு மாநிலம் முழுவதும் 112 உணவகங்களில் சோதனை நடத்தப்பட்டது. அதில் 1,084 கிலோ மாட்டிறைச்சி கைப்பற்றப்பட்டது. இதுதொடர்பாக 132 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்’’ என்றார். துப்ரி, கோல்பாரா, லக்கிம்பூரில் உள்ள கோயில்களுக்கு அருகில் மாட்டிறைச்சி விற்ற 150-க்கும் மேற்பட்டோர் அண்மையில் கைது செய்யப்பட்டனர். இது அமைதியின்மையை உருவாக்கும் என்று அசாம் … Read more

'மாதம் ரூ.4 லட்சம் கொடுங்க' – ஷமிக்கு பறந்த உத்தரவு – ஜீவனாம்சம் கணக்கிடுவது எப்படி?

Mohammed Shami Alimony: முகமது ஷமி தனது மகளுக்கும், முன்னாள் மனைவிக்கும் ஜீவனாம்சமாக மொத்தம் ரூ.4 லட்சம் வழங்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த தொகையை நீதிமன்றம் எப்படி நிர்ணயிக்கிறது என்பதை இங்கு தெரிந்துகொள்ளலாம்.

ரஷ்யாவில் நடைபெற்ற விழாவில் தமால் போர்க்கப்பல் இந்திய கடற்படையில் இணைப்பு

புதுடெல்லி: ரஷ்​யா​வின் கலினின்​கிரட் பகு​தி​யில் உள்ள யாந்​தர் கப்​பல் கட்​டும் தளத்​தில் நடை​பெற்ற விழா​வில் ஐஎன்​எஸ் தமால் என்ற புதிய போர்க்​கப்​பல் இந்​திய கடற்​படை​யில் இணைக்​கப்​பட்​டது. இந்​திய கடற்படை பயன்​பாட்​டுக்​காக போர்க்​கப்​பல்​கள் உள்​நாட்​டிலும், ரஷ்​யா​வில் தயாரிக்​கப்​படு​கின்​றன. எதிரி நாட்டு ரேடாரில் சிக்​காத துஷில் ரக போர்க்​கப்​பல்​களை ரஷ்​யா​வில் தயாரிக்க, இந்​திய பாது​காப்​புத்​துறை ஆர்​டர் கொடுத்​தது. இதில் பிரம்​மோஸ் ஏவு​கணை​கள் உட்பட 26 சதவீதம் இந்​தி​யா​வில் தயாரிக்​கப்​பட்ட பாகங்​கள் பயன்​படுத்​தப்​பட்​டுள்​ளன. இந்த கப்​பல் ரஷ்​யா​வின் கலினின்​கிரட் பகு​தி​யில் உள்ள … Read more

இமாச்சலில் கனமழைக்கு 51 பேர் உயிரிழப்பு: இதுவரை 22 பேரை காணவில்லை

சிம்லா: இமாச்சலபிரதேசத்தில் கனமழை மற்றும் வெள்ளப் பெருக்கு நீடித்துவரும் நிலையில் இதுவரை பேர் 51 பேர் உயிரிழந்துள்ளனர். 22 பேரைக் காணவில்லை. இமாச்சலில் கடந்த 10 நாட் களுக்கும் மேலாக பெய்துவரும் பருவ மழையால் வெள்ளப் பெருக்கு, நிலச்சரிவு உள்ளிட்ட பேரிடர்கள் ஏற்பட்டுள்ளன. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இமாச்சலபிரதேச வருவாய் துறையின் கீழ் இயங்கி வரும் மாநில அவசர உதவி மையம் (எஸ்இஓசி) ஒட்டுமொத்த சேத மதிப்பீட்டு அறிக்கையை நேற்று வெளியிட்டுள்ளது. இதன்படி … Read more

மக்கள் இயக்கமாக மாறிய டிஜிட்டல் இந்தியா திட்டம்: 10 ஆண்டுகள் நிறைவை ஒட்டி பிரதமர் மோடி பெருமிதம்

புதுடெல்லி: டிஜிட்​டல் இந்​தியா திட்​டம் 10 ஆண்​டு​களை நிறைவு செய்​துள்ள நிலை​யில் இத்​திட்​டம் மக்​கள் இயக்​க​மாக மாறியுள்ளது என்று பிரதமர் நரேந்​திர மோடி பெரு​மிதம் தெரி​வித்​துள்​ளார். கடந்த 2015-ம் ஆண்டு ஜூலை 1-ம் தேதி டிஜிட்​டல் இந்தியா திட்​டம் தொடங்​கப்​பட்​டது. இத்​திட்​டம் வெற்​றிகர​மாக 10 ஆண்​டு​களை நிறைவு செய்​துள்​ளது. இதையொட்டி பிரதமர் நரேந்​திர மோடி தனது சமூக வலை​தளப் பக்​கத்​தில் கூறி​யிருப்​ப​தாவது: பத்து ஆண்​டு​களுக்கு முன், இந்தியா மிகுந்த நம்​பிக்​கை​யுடன் அறியப்​ப​டாத பிரதேசத்​தில் ஒரு துணிச்​சலான பயணத்தை … Read more

இமாச்சலப் பிரதேசத்தில் கனமழை, திடீர் வெள்ளப்பெருக்கு: 10 பேர் பலி; 34 பேரை காணவில்லை

சிம்லா: இமாச்சலப் பிரதேசத்தில் தொடர்ந்து பெய்து வரும் கனமழை, மேகவெடிப்பு மற்றும் திடீர் வெள்ளப்பெருக்கு காரணமாக கடந்த 32 மணி நேரத்தில 10 பேர் உயிரிழந்தனர், 34 பேர் காணாமல் போயினர். மாநிலம் முழுவதும் நூற்றுக்கணக்கான சாலைகள் மற்றும் மின்மாற்றிகள் சேதமடைந்தன. இமாச்சலப் பிரதேசத்தின் மண்டி மாவட்டத்தில் பெய்த கனமழையால் ஏற்பட்ட திடீர் வெள்ளம் காரணமாக 10 பேர் உயிரிழந்தனர், பலர் காயமடைந்தனர், 34 பேர் காணாமல் போயுள்ளனர் என்று அதிகாரிகள் இன்று (புதன்கிழமை) தெரிவித்தனர். செவ்வாய்க்கிழமை … Read more

எனது மரணத்துக்குப் பிறகும் இந்த அறக்கட்டளை தொடரும்: தலாய் லாமா

புதுடெல்லி: 600 ஆண்டுகள் பழமையான தனது அறக்கட்டளை தன்னுடைய மரணத்திற்குப் பிறகும் தொடரும் என்று புத்த மதகுரு தலாய் லாமா முறையாக உறுதிப்படுத்தியுள்ளார். இது தொடர்பாக தலாய் லாமா தனது எக்ஸ் பக்கத்தில் இன்று (ஜூலை 2) அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “செப்டம்பர் 24, 2011 அன்று, திபெத்திய ஆன்மிக மரபுகளின் தலைவர்கள் கூட்டத்தில் நான் ஓர் அறிக்கை வெளியிட்டேன். திபெத்துக்கு உள்ளேயும், வெளியேயும் உள்ள சக திபெத்தியர்கள், திபெத்திய பவுத்தத்தைப் பின்பற்றுபவர்கள், திபெத்தியர்களுடன் தொடர்பு … Read more

மக்களின் தனிநபர் கடன் சராசரி ரூ.4.8 லட்சமாக அதிகரிப்பு: காங்கிரஸ் கண்டனம்

புதுடெல்லி: மக்கள் வாங்கும் தனி நபர் கடன்கள் கடந்த 2 ஆண்டுகளில் ரூ.3.9 லட்சத்தில் இருந்து ரூ.4.8 லட்சமாக அதிகரித்திருப்பதாக காங்கிரஸ் கட்சி குற்றம் சாட்டியுள்ளது. இது தொடர்பாக காங்கிரஸ் கட்சியின் தகவல் தொடர்பு பொதுச் செயலாளர் ஜெயராம் ரமேஷ் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “கடந்த 11 ஆண்டுகளில் மோடி அரசாங்கம் நாட்டின் பொருளாதாரத்தை நாசமாக்கியுள்ளது. மக்களின் வாழ்க்கையை மேம்படுத்த எந்த முயற்சியும் எடுக்கப்படவில்லை. அனைத்து கொள்கைகளும் முதலாளித்துவ நண்பர்களுக்காக மட்டுமே எடுக்கப்பட்டுள்ளன. இதனால் ஏற்படும் இழப்புகளை … Read more

நடுவானில் விலகிய ஸ்பைஸ்ஜெட் விமானத்தின் ஜன்னல் ஃப்ரேம்: விமான நிறுவனம் விளக்கம்

குருகிராம்: கோவாவில் இருந்து புனேவுக்கு சென்ற ஸ்பைஸ்ஜெட் விமானத்தின் ஜன்னல் சட்டகம் நடுவானில் விலகியது. இது குறித்த தகவல் சமூக வலைதளங்களில் வைரலான நிலையில் தற்போது விளக்கம் தந்துள்ளது ஸ்பைஸ்ஜெட் விமான நிறுவனம். ஸ்பைஸ்ஜெட் விமான நிறுவனத்துக்கு சொந்தமான ‘எஸ்ஜி1080’ விமானம் செவ்வாய்க்கிழமை (ஜூலை 1) அன்று கோவாவில் இருந்து புனே நகருக்கு பயணிகளுடன் புறப்பட்டது. அந்த விமானம் நடுவானில் பறந்து கொண்டிருந்த போது அதன் ஜன்னலின் சட்டகம் விலகியது. அதை கவனித்த பயணி ஒருவர் வீடியோவாக … Read more