சுதந்திரத்தினத்தை முன்னிட்டு வீடுகள்தோறும் தேசியக்கொடி ஏற்றும் நிகழ்வு இன்று முதல் தொடக்கம்

டெல்லி: 75-வது சுதந்திரத்தினத்தை முன்னிட்டு வீடுகள்தோறும் தேசியக்கொடி ஏற்றும் நிகழ்வு இன்று முதல் தொடங்கியுள்ளது. இன்று முதல் 3 நாட்களுக்கு வீடுகளில் தேசியக்கொடியை ஏற்ற ஒன்றிய அரசு அறிவுறுத்தியுள்ளது.

தட்டச்சு பிழை- 22 மாதம் சிறையில் தவித்த நைஜிரீய இளைஞர்! ரூ.2 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவு

தட்டச்சு பிழை காரணமாக 1.5 ஆண்டுகளுக்கும் மேலாக தவறாக சிறையில் அடைக்கப்பட்ட நைஜீரிய இளைஞருக்கு 2 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க மகாராஷ்டிர அரசுக்கு மும்பை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. அக்டோபர் 23, 2020 அன்று மகாராஷ்டிர காவல்துறையின் பயங்கரவாத எதிர்ப்புப் படை (Anti Terrorism Squad) நைஜீரிய இளைஞர் ஒருவரிடம் சோதனை நடத்தியதில் அவரிடம் இருந்து 116.19 கிராம் எடையுள்ள கோகோயின் மற்றும் 40.73 கிராம் எடையுள்ள குங்குமப்பூ நிற இதய வடிவ மாத்திரைகள் அடங்கிய … Read more

ஷீரடி சாய்பாபா கோயிலுக்கு ரூ.36 லட்சத்தில் தங்க கிரீடம் – ஆந்திர பக்தர் காணிக்கை வழங்கினார்

ஷீரடி: மகாராஷ்டிர மாநிலத்தில் உள்ள ஷீரடி சாய்பாபா கோயிலுக்கு ஆந்திராவைச் சேர்ந்த முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் ரூ.36.98 லட்சம் செலவில் தங்க கிரீடத்தை காணிக்கையாக வழங்கினார். ஆந்திர மாநிலம், பாபட்லா சட்டப் பேரவைத் தொகுதியின் முன்னாள் உறுப்பினரான அன்னம் சதீஷ் பிரபாகர் தீவிர ஷீரடி சாய்பாபா பக்தராவார். இவர், ரக்ஷா பந்தன் பண்டிகையை முன்னிட்டு, நேற்றுமுன் தினம், மகாராஷ்டிரா மாநிலம் ஷீரடி சாய்பாபா கோயிலுக்கு சென்று, 770 கிராம் எடையுள்ள ரூ. 36.98 லட்சம் மதிப்பிலான தங்க … Read more

இந்தியாவில் ஒரே நாளில் 15,815 பேருக்கு கொரோனா… 68 பேர் பலி: ஒன்றிய சுகாதாரத்துறை அறிக்கை!!

டெல்லி: நாட்டில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 5 லட்சத்தை தாண்டியது. அதே போல், பாதிப்பு 4 கோடியை தாண்டியது. இன்று காலை 9 மணியுடன் முடிந்த 24 மணி நேரத்தில், நாட்டில் கொரோனாவால் புதிதாக பாதித்தவர்கள், குணமடைந்தோர், பலியானோர், இறப்பு விகித நிலவரம் குறித்து மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:* புதிதாக 15,815 பேர் பாதித்துள்ளனர்.* இதன் மூலம், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 4,42,39,372 ஆக உயர்ந்தது.* புதிதாக 68 பேர் இறந்துள்ளனர்.* இதனால், … Read more

தலைமை பயிற்சியாளராக விவிஎஸ் லக்‌ஷ்மன் செயல்படுவார்.. பிசிசிஐ அறிவிப்பு.

இந்தியா – ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையேயான ஒருநாள் கிரிக்கெட் தொடர் வரும் ஆகஸ்டு 18 ஆம் தேதி தொடங்குகிறது. இதற்காக இந்திய வீரர் கேஎல் ராகுல் தலைமையில் இந்திய அணி ஜிம்பாப்வே சென்றுள்ளது. இந்நிலையில் நடைபெற இருக்கும் ஜிம்பாபேவிற்கு எதிரான ஒருநாள் தொடரில் இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட்டிற்கு பதிலாக முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரரும், ஐபிஎல்-இல் ஹைதராபாத் அணிக்கு தலைமை பயிற்சியாளராக இருக்கும் விவிஎஸ் லக்‌ஷ்மன் தற்காலிக தலைமை பயிற்சியாளராக இந்திய அணிக்கு … Read more

இறந்துபோன சகோதரிக்கு சிலை வைத்து ரக்‌ஷா பந்தன் கொண்டாடிய உடன் பிறப்புகள்

காக்கிநாடா: சாலை விபத்தில் இறந்துபோன சகோதரிக்கு சிலை வைத்து ஆந்திராவில் ரக்ஷா பந்தன் பண்டிகையை சகோதர, சகோதரிகள் கொண்டாடினர். ஆந்திர மாநிலம், காக்கிநாடா மாவட்டம், சங்காவரம் மண்டலம், கத்திபூடி கிராமத்தை சேர்ந்த இளம்பெண் மணி (29). இவருக்கு கணவர் மற்றும் 2 பிள்ளைகள் உள்ளனர். கடந்த 7 மாதங்களுக்கு முன்பு சாலை விபத்தில் மணி உயிரிழந்தார். இவரது மரணம் கணவர், பிள்ளைகள் மட்டுமின்றி மூத்த சகோதரி வரலட்சுமி, அண்ணன் சிவா மற்றும் தம்பி ராஜு ஆகியோரையும் மிகவும் … Read more

மருத்துவம், என்ஜினியரிங் படிப்புக்கு ஒரே நுழைவு தேர்வு: ஒன்றிய அரசு பரிசீலனை

புதுடெல்லி: நமது நாட்டில் தற்போது மருத்துவ படிப்புகளில் ‘நீட்’ என்னும் பொது நுழைவுத்தேர்வு மூலம் மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது. ஒன்றிய  அரசின் நிதியுதவியுடன் நடைபெறுகிற என்.ஐ.டி. மற்றும் ஐ.ஐ.ஐ.டி.களிலும், குறிப்பிப்பிட்ட சில தொழில்நுட்ப நிறுவனங்களிலும் என்ஜினீயரிங் மற்றும் தொழில்நுட்பப்படிப்புகளில் சேருவதற்கு ஜே.இ.இ. மெயின் தேர்வு நடத்தப்படுகிறது. ஐ.ஐ.டி. மாணவர் சேர்க்கைக்கு ஜே.இ.இ. அட்வான்ஸ்டு தேர்வு உள்ளது. இந்த நிலையில் நீட், ஜே.இ.இ. மெயின் நுழைவுத்தேர்வுகளையும் தற்போதுள்ள ‘கியூட்’ என்று அழைக்கப்படுகிற பல்கலைக்கழக பொது நுழைவுத்தேர்வுடன் (இளநிலை) இணைப்பதற்கான … Read more

இந்தியா சீனா இடையே நல்ல உறவு இல்லை : வெளியுறவுத்துறை அமைச்சர்

நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசிய இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், இந்தியா சீனா இடையேயான உறவு எப்படி இருக்கிறது என்று கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளித்து பேசினார். அப்போது பேசிய அவர், சீனா தொடர்ந்து இந்திய எல்லையில் அமைதியை சீர்குலைத்து வருவதாக தெரிவித்தார். சீனாவின் இந்த நடவடிக்கைகளால் இந்தியா சீனாவிற்கு இடையான உறவு எப்போதும் நல்ல முறையில் இருக்கும் வாய்ப்பு இருக்காது என்றும் தெரிவித்தார். மேலும் இந்திய – சீன எல்லையில் தற்பாது இந்திய ராணுவம் முகாமிட்டுள்ளதாகவும் … Read more

இந்தியாவுக்குள் அத்துமீறி நுழைந்த வங்கதேசத்தினர் 10 பேரை திருப்பி அனுப்பிய போலீஸார்

சில்ஷர்: உரிய அனுமதியின்றி இந்தியாவுக்குள் நுழைந்த இரண்டு சிறுவர்கள் உள்பட வங்கதேசத்தினர் 10 பேரை போலீஸார் கைது செய்தனர். இருநாட்டுக்கு இடையில் பேச்சுவார்த்தைக்கு பிறகு அவர்கள் சொந்த நாட்டுக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து அசாம் மாநில காவல் துறை அதிகாரிகள் கூறியதாவது: உரிய ஆவணங்கள் இன்றி சட்டவிரோதமாக இந்தியாவுக்குள் நுழைந்த வங்கதேசத்தினர் 10 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களில், 4 பேர் கோலகாட் மாவட்ட ரயில்வே போலீஸாரால் கைது செய்யப்பட்டவர்கள். எஞ்சிய அனைவரும் கரீம் கஞ்ச் மாவட்டத்தில் … Read more

வீடு, அலுவலகம் உள்ளிட்ட அணைத்து இடங்களில் தேசிய கோடி: பிரதமர் மோடி கோரிக்கை

டெல்லி: 75-வது சுதந்திரத்தினத்தை முன்னிட்டு வீடுகள்தோறும் தேசியக்கொடி ஏற்றும் நிகழ்வு இன்று முதல் தொடங்கியுள்ளது. இன்று முதல் 3 நாட்களுக்கு வீடுகளில் தேசியக்கொடியை ஏற்ற ஒன்றிய அரசு அறிவுறுத்தியுள்ளது.75-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு நாட்டில் உள்ள அணைத்து வீடு, அலுவலகம், உள்ளிட்ட அணைத்து இடங்களிலும் தேசிய கோடி ஏற்றுமாறு பிரதமர் மோடியின் வேண்டுகோள் விடுத்துள்ளார். பிரதமர் மோடியின் வேண்டுகோளை ஏற்று தமிழகம் உட்பட நாடுமுழுவதும் வீடுகளில் தேசியக்கொடி ஏற்றி வருகின்றனர்.