8 ஆண்டில் 277 எம்எல்ஏ.க்களை விலைக்கு வாங்கியது மாநில அரசுகளை கவிழ்க்கும் சீரியல் கொலைகாரன் பாஜ: டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் ஆவேசம்
புதுடெல்லி: ‘மாநில அரசுகளை கொல்லும் சீரியல் கொலைகாரனாக பாஜ செயல்படுகிறது,’ என்று கெஜ்ரிவால் குற்றம்சாட்டி உள்ளார். டெல்லியில் முதல்வர் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி அரசை கவிழ்ப்பதற்காக, இக்கட்சி எம்எல்ஏ.க்களுக்கு பாஜ தலா ரூ.20 கோடி பேரம் பேசியதாக குற்றம்சாட்டப்பட்டு உள்ளது. பாஜ.வின் ஆட்சி கவிழ்ப்பு முயற்சி பற்றி விவாதிப்பதற்காக, டெல்லி சட்டப்பேரவையின் சிறப்பு கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில் பேசிய கெஜ்ரிவால்: ‘ஒன்றியத்தில் பாஜ ஆட்சிக்கு வந்த 2014ம் ஆண்டு முதல், இதுவரையில் கோவா, கர்நாடகா, … Read more