திருப்பதியில் பிரமோற்சவத்தின் முதல் நாள் கோலாகலம் பெரிய சேஷ வாகனத்தில் மலையப்ப சுவாமி வீதியுலா: முதல்வர் பட்டு வஸ்திரங்கள் சமர்ப்பித்தார்

திருமலை: திருப்பதியில் நேற்று நடந்த முதல் நாள் வருடாந்திர பிரமோற்சவத்தில் பெரிய சேஷ வாகனத்தில் ஸ்ரீதேவி, பூதேவி சமேத மலையப்ப சுவாமி வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். திருப்பதி ஏழுமலையான் கோயிலில் 9 நாட்கள் வருடாந்திர பிரமோற்சவம் நேற்று மாலை கொடியேற்றத்துடன் கோலாகலமாக தொடங்கியது. முன்னதாக, மகா விஷ்ணுவின் வாகனமான கருட உருவம் வரையப்பட்ட மஞ்சள் கொடியை மலையப்ப சுவாமி தாயார்கள், சக்கரத்தாழ்வார், விஷ்வ சேனாதிபதி ஆகியோர் 4 மாடவீதியில்  ஊர்வலமாக கொண்டு வந்தனர். பின்னர், கோயிலில் … Read more

திருமண மண்டபமாக மாறிய ட்ரக் வாகனம்! – வியந்து பாராட்டிய ஆனந்த் மஹிந்திரா

மஹிந்திரா நிறுவனத்தின் நிறுவனரும் இந்தியாவின் முக்கிய தொழிலதிபர்களில் ஒருவருமான ஆனந்த் மஹிந்திரா எப்போதும் சமூக வலைதளங்களில் ஆக்டிவாகவே இருப்பார். புதுமையான கண்டுபிடிப்புகளை பகிர்ந்து அதனை பாராட்டுவதோடு, அந்த கண்டுபிடிப்புகளுக்கு காரணமாக இருந்தவர்களை அங்கீகரிக்கவும் ஆனந்த் மஹிந்திரா தவறியதில்லை. அதன்படி அண்மையில் ஆனந்த் மஹிந்திரா தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ள வீடியோ ஒன்று நெட்டிசன்களை பெரிதளவில் கவர்ந்திருக்கிறது. அந்த வீடியோ எட்டு லட்சத்துக்கும் அதிகமானோரால் பார்க்கப்பட்டும் வியப்படையவும் செய்திருக்கிறது. மொபைலிட்டி என்ற சொல்லாடல் தற்போது மிகவும் பிரசித்தமாகியிருக்கிறது. மொபைல் … Read more

சச்சின் பைலட்டை முதல்வராக்குவதற்கு அசோக் கெலாட் ஆதரவு எம்எல்ஏக்கள் எதிர்ப்பு..!

காங்கிரஸ் கட்சியின் புதிய தலைவராக தேர்ந்தெடுக்கப்படுபவர் தான் ராஜஸ்தான் முதல்வரை தேர்ந்தெடுக்க வேண்டும் என்று, அசோக் கெலாட் ஆதரவு எம்எல்ஏக்கள் போர்கொடி உயர்த்தியுள்ளதால், அசோக் கெலாட் காங்கிரஸ் தலைவர் ஆவாரா என்பதில் கேள்விக்குறி எழுந்துள்ளது. அக்டோபர் 17 ஆம் தேதி நடைபெறும் காங்கிரஸ் கட்சி தலைவர் தேர்தலில் போட்டியிடப் போவதாக அசோக் கெலாட் அறிவித்துள்ள சூழ்நிலையில், அவர் வகித்து வரும் ராஜஸ்தான் முதல்வர் பதவியை ராஜினாமா செய்யும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. அம்மாநிலத்தின் புதிய முதல்வராக சச்சின் பைலட்டை … Read more

’’மறுநாள் எழுந்தபோது நிர்வாணமாக்கப்பட்டிருந்ததை கண்டேன்’’ – பிரான்ஸ் சுற்றுலாப்பெண் கதறல்!

இன்று உலக சுற்றுலாத்தினத்தை பயண விரும்பிகள் பலரும் கொண்டாடி வருகின்றனர். பெரும்பாலான நாடுகளின் பொருளாதார முன்னேற்றத்திற்கு சுற்றுலாத்துறை முக்கியப்பங்கு வகிக்கிறது. அதேபோலத்தான் இந்தியாவிலும். ஆனால் அதேசமயம் இந்தியாவில் பெண்களுக்கு எதிரான குற்றங்களும் நாளுக்குநாள் அதிகரித்துக்கொண்டேதான் வருகிறது. இந்தியாவிற்கு சுற்றுலாவந்த பெண்ணிடம் தகாத முறையில் நடந்துகொண்ட நபர் கைது செய்யப்பட்டுள்ளார். செப்டம்பர் 21ஆம் தேதி பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த 30 வயது பெண் ஒருவர் வாரணாசிக்கு சுற்றுலாப்பயணம் வந்துள்ளார். அன்று அங்கு வீதிகளில் நடந்து சென்றுகொண்டிருந்தபோது டூரிட்ஸ்ட் கைடு … Read more

சச்சின் பைலட்டுக்கு மறைமுகமாக அழைப்பு விடுத்த பாஜக? என்ன நடக்கிறது ராஜஸ்தானில்?

அசோக் கெலாட் மீது ஒழுங்க நடவடிக்கைகள் எடுக்கப்படலாம் என்ற கேள்விகள் எழுந்துகொண்டிருக்கும் போது மறுபக்கம் சச்சின் பைலட்டை தன் பக்கம் கொண்டுவர பாஜக மீண்டும் முயன்று வருகிறது. அதற்காக மறைமுக அழைப்பை விடுத்துள்ளது.  காங்கிரஸின் தலைவர் பதவிக்கு அசோக் கெலாட் போட்டியிடுவதை அடுத்து ராஜஸ்தான் முதல்வர் பதவியை சச்சின் பைலட்டுக்கு கொடுக்கலாம். இதன் மூலம் பெரிய நெருக்கடியாக இருந்த ராஜஸ்தான் மாநிலத்திலிருந்த உட்கட்சி பூசல் முடிவுக்கு வரும் என காங்கிரஸ் தலைமை திட்டம் வைத்திருந்த நிலையில், அசோக் … Read more

'பணம் சம்பாதிப்பதே காங். தலைவர்கள் நோக்கம்' – அமித் ஷா குற்றச்சாட்டு

மருத்துவ உட்கட்டமைப்பை மேம்படுத்துவதற்கு பதிலாக காங்கிரஸ் பணம் சம்பாதித்தது என, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா குற்றம் சாட்டி உள்ளார். குஜராத் மாநிலத்தில் நடப்பு ஆண்டு இறுதியில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. கடந்த 27 ஆண்டுகளாக இங்கு பாஜக ஆட்சியில் உள்ளது. இருப்பினும் இந்த முறை குஜராத்தில் ஆட்சியை பிடிக்க வேண்டும் என்ற முனைப்பில் காங்கிரஸ், ஆம் ஆத்மி உள்ளிட்ட கட்சிகள் தீவிர முனைப்பு காட்டி வருகின்றன. இந்த நிலையில் பாஜக மூத்தத் தலைவரும், … Read more

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வருடாந்திர பிரம்மோற்சவம் கொடியேற்றத்துடன் கோலாகலமாக தொடங்கியது

திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தினந்தோறும், வாராந்திர, வருடாந்திர உற்சவங்கள் என 450-க்கும் மேற்பட்ட உற்சவங்கள் நடத்தப்பட்டு வருகிறது. இதில் வருடாந்திர பிரம்மோற்சவம் மிகவும் சிறப்பு வாய்ந்தது  வருடாந்திர பிரம்மோற்சவம் பிரம்மனே முன்னின்று நடத்தியதாக ஐதீகம். இதன் காரணமாகவே இதனை பிரம்ம உற்சவம் என்று அழைக்கப்படுகிறது. இந்த பிரம்மோற்சவம் ஒவ்வொரு ஆண்டும் மிகக் கோலாகலமாக நடைபெற்று வரக்கூடிய நிலையில் கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா பரவல் காரணமாக பக்தர்கள் இல்லாமல் கோவிலுக்குள் நடத்தப்பட்டது. தற்பொழுது கொரோனா கட்டுப்பாடுகள் … Read more

`பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா’ அமைப்பை தடைசெய்யப்போகிறது மத்திய அரசு?!

பிரதமர் நரேந்திர மோடி மீது தாக்குதல் நடத்த பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பினர் சதித்திட்டம் தீட்டியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ள நிலையில், அந்த அமைப்புக்கு தடை விதிக்க மத்திய அரசு ஆலோசனையை நடத்தி வருவதாக சொல்லப்பட்டுள்ளது. இரண்டு கட்டங்களாக பாப்புலர் ஃப்ரண்ட் அமைப்புக்கு தொடர்புடைய இடங்களில் சோதனை நடந்துள்ள நிலையில், தேச விரோத நடவடிக்கைகள் மற்றும் சட்ட விரோத பணப்பரிவர்த்தனை தொடர்பாக ஆதாரங்கள் கிட்டியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். வன்முறையான பல போராட்டங்களை நடத்தியது மற்றும் மதக் கலவரங்களை தூண்டியது … Read more

பேய் மீது வழக்கு; பாஜக ஆளும் மாநிலம்ன்னா சும்மாவா?

பேய் இருக்கா? இல்லையா? பேய் வர்றதுக்கு ஏதாவது அறிகுறி இருக்கா? என, சந்திரமுகி படத்தில் வடிவேலு கேட்ட கேள்விகள் இன்றளவும் நகைச்சுவையின் உச்சமாக பேசப்பட்டு வருகிறது. அப்படி இருக்கையில் சினிமாவில் வடிவேலு கேட்ட கேள்விக்கு பாஜக ஆளும் மாநிலத்தில் போலீசார் ‘ஆம்’ என பதில் அளித்துள்ளதோடு, பேய் மீது எப்ஃஐஆர் ஒன்று பதிவு செய்து நகைச்சுவைக்கு மேலும் வலுசேர்த்துள்ளனர். உத்திரப்பிரதேச மாநிலம் வாரணாசியில் வெள்ளை உடை அணிந்த பேய் வீட்டின் கூரைகளில் நடமாடுவது போன்ற ஒரு வீடியோ … Read more

ஆந்திர அரசு போக்குவரத்து கழகம் சார்பில் திருப்பதி – திருமலை இடையே 10 மின்சார பேருந்து சேவையை தொடங்கி வைத்தார் முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி

திருமலை: ஆந்திர அரசு போக்குவரத்து கழகம் சார்பில் திருப்பதி திருமலை இடையே  10 மின்சார பேருந்து சேவையை முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி தொடங்கி வைத்தார். திருமலை – திருப்பதியை மையமாக கொண்டு முதல் முறையாக மின்சார பேருந்துகளை ஆந்திர மாநில அரசு போக்குவரத்து கழகம்  100 மின்சார பேருந்துகளை இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. ஈவே டிரான்ஸ் லிமிடெட் என்கிற தனியார் நிறுவனம் இதற்கான ஒப்பந்தம் செய்து கொண்ட நிலையில் மலைப்பாதையில்  சோதனை ஓட்டம் ஏற்கனவே நடத்தப்பட்டுள்ளது. … Read more