E-Nuggets செயலி மூலம் மோசடி.. ரூ.17 கோடி ரொக்கம்.. வலையில் சிக்கிய தொழிலதிபர்!

E-Nuggets (இ-நக்கெட்ஸ்) என்ற செல்போன் செயலில் மூலம் மோசடி செய்ததாக கொல்கத்தாவை சேர்ந்த தொழிலதிபர் அமீர் கான் உள்ளிட்ட சிலர் மீது அமலாக்கத்துறையில் பாதிக்கப்பட்டவர்கள் புகார் அளித்தனர். புகாரின் அடிப்படையில் பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் அமலாக்கத்துறை அதிகாரிகள் அமீர் கானுக்குச் சொந்தமான இடங்களில் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது ரூ.17 கோடி ரொக்கம் மற்றும் பல்வேறு ஆவணங்கள் கைப்பற்றப்பட்டது. முதற்கட்ட விசாரணையில் மக்களை ஏமாற்றி பணம் பறிக்கவே தொழிலதிபர் அமீர் கான் இ-நக்கெட்ஸ் என்ற செயலியை … Read more

படகுப் போட்டியில் பங்கேற்பதற்காக சென்ற படகு கவிழ்ந்ததில் 2 இளைஞர்கள் உயிரிழப்பு!

கேரளாவில் படகுப்போட்டியில் பங்கேற்கச் சென்ற படகு ஆற்றில் கவிழ்ந்து 2 பேர் உயிரிழந்தனர். பத்தணந்திட்டா மாவட்டம் ஆறான்முளா பகுதியில் நடைபெறும் போட்டியில் கலந்து கொள்வதற்காக ஆலப்புழா அருகே சென்னித்தலா பகுதியிலிருந்து ஒரு படகு புறப்பட்டது. 15க்கும் மேற்பட்டோர் துடுப்பு போட்டபடி சென்ற நிலையில் அந்த படகு திடீரென நீரில் கவிழ்ந்தது. படகிலிருந்து தண்ணீரில் விழுந்தவர்களை மீட்க அங்கிருந்தவர்கள் முயன்றனர். 4 பேரை மீட்க முடியாததை அடுத்து தீயணைப்புத் துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் தேடுதல் பணியில் ஈடுபட்டு … Read more

ராணி எலிசபெத்தின் மறைவை தொடர்ந்து இந்தியாவில் துக்கம் அனுசரிப்பு

டெல்லி: ராணி எலிசபெத்தின் மறைவை தொடர்ந்து இந்தியா சார்பில் இன்று துக்கம் அனுசரிக்கப்படுகிறது. செங்கோட்டை, ராஷ்டிரபதி பவனில் மூவர்ணக் கொடிகள் அரை கம்பத்தில் பறக்கவிடப்பட்டுள்ளன.

தெரு நாய்களுக்கு உணவளிப்போர்தான் எல்லாவற்றுக்கும் பொறுப்பு – கடிபட்டவர்களுக்கான செலவையும் ஏற்க உச்ச நீதிமன்றம் உத்தரவு

கொச்சி/புதுடெல்லி: தெரு நாய்களுக்கு உணவளிக்கும் நபர்கள்தான், அந்த நாய்கள் யாரையாவது கடித்தால் அதற்கு பொறுப்பேற்க வேண்டும். மேலும், அவர்களுக்கான மருத்துவச் செலவுகளையும், பராமரிப்புச் செலவுகளையும் ஏற்கவேண்டும் என்றுஉச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கேரள மாநிலத்தில் தெரு நாய்கள் தொல்லை அதிகரித்துவிட்டது. அதைக் கட்டுப்படுத்த உத்தரவிட வேண்டும் எனக் கோரி வழக்கறிஞர் வி.கே.பிஜு என்பவர் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். அதில் அவர் கூறியிருப்பதாவது: கடந்த ஆகஸ்ட் மாதத்திலிருந்து கேரளாவில் நாய்க்கடியால் மட்டும் 8 பேர் உயிரிழந்துள்ளனர். அண்மையில் … Read more

சீனாவில் படிக்க செல்லும் இந்திய மாணவர்களுக்கு எச்சரிக்கை.!

சீனாவில் மருத்துவப் படிப்பு தொடர்பான எச்சரிக்கை மாணவர்களுக்கும் பெற்றோருக்கும் அவசியம் என்று மத்திய அரசு விரிவான அறிவுறுத்தலை வெளியிட்டுள்ளது. கட்டாய சீனமொழி பயிலுதல், தகுதித்தேர்வில் தேர்ச்சி , கட்டாய நீட் தேர்வு தகுதி என்று பல்வேறு கட்டாயத் தகுதிகளை மாணவர்கள் பெற வேண்டும் என்பதையும் தேர்ச்சி விகிதம் குறைவு என்பதையும் இந்திய தூதரகம் பட்டியலிட்டுள்ளது. சீன பல்கலைக்கழகங்களில் மருத்துவக் கல்வியை மேற்கொள்ள மாணவர்கள் ஆர்வம் காட்டி வரும்நிலையில், மாணவர்கள், நன்கு திட்டமிட்டு பயணத்தைத் தொடங்குமாறு இந்திய தூதரகம் … Read more

பிரபல தெலுங்கு நடிகர் கிருஷ்ணம் ராஜூ உயிரிழப்பு

ஹைதராபாத்: பிரபல தெலுங்கு நடிகர் கிருஷ்ணம் ராஜூ(83) உடல்நலக்குறைவால் உயிரிழந்தார். ஹைதராபாத் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் இன்று காலை உயிரிழந்தார்.

திருப்பதி லட்டுவில் சர்க்கரையை குறைக்க வேண்டும் – சர்க்கரை நோயாளி பக்தர் வேண்டுகோள்

திருமலை: திருமலை அன்னமைய்யா பவனில் நேற்று காலை 9 மணியிலிருந்து 10 மணி வரை தொலைபேசி மூலம் பக்தர்களிடம், தேவஸ்தான தலைமை நிர்வாக அதிகாரி (பொறுப்பு) தர்மா ரெட்டி குறைகளை கேட்டறிந்தார். இதில் 30 பக்தர்கள் நிறை, குறைகளை அதிகாரியிடம் தெரிவித்தனர். அப்போது ஆந்திர மாநிலம், குண்டூரை சேர்ந்த தசரத ராமய்யா எனும் பக்தர் பேசும் போது, திருமலையில் பக்தர்களுக்கு தேவையான வசதிகள் எல்லாம் மிக நன்றாக இருக்கின்றன. ஆனால், லட்டு பிரசாதத்தில் மட்டும் இனிப்பு சற்று … Read more

பக்கத்து வீட்டுக்காரரின் அந்தரங்க உறுப்பை கடித்து குதறிய நாய்

லக்னோ: உத்தரப்பிரதேசத்தின் லக்னோவை சேர்ந்தவர் சங்கர் பாண்டே. இவர் தனது வீட்டில் செல்லப்பிராணியாக நாயை வளர்த்து வருகின்றார். சங்கர் வீட்டிற்கு பக்கத்து வீட்டில் வசிப்பர் சங்கல்ப் நிகாம். இந்நிலையில் கடந்த 3ம் தேதி ஜாக்ரானில் இருந்து இரவு 10.30 மணிக்கு சங்கல்ப் வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது சங்கரின் நாய், சங்கல்ப்பின் அந்தரங்க உறுப்பை கடித்து குதறியுள்ளது. இதனால் அவர் கூச்சலிட்டு அலறி துடித்துள்ளார். இதனை தொடர்ந்து தானாகவே சங்கல்ப், லோக் பந்து மருத்துவமனைக்கு சென்றுள்ளார். அங்கிருந்து கேஜிஎம்யூ … Read more

அரசியல் கட்சிகளின் வெற்றிக்கு வழிவகுத்த யாத்திரைகள் – தென் மாநிலங்களில் 129 தொகுதிக்கு ராகுல் இலக்கு

புதுடெல்லி: காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி, ‘பாரத் ஜோடோ’ எனும் இந்தியாவை இணைக்கும் தேசிய ஒற்றுமை பாத யாத்திரையை தொடங்கி உள்ளார். 2 யூனியன் பிரதேசங்கள் மற்றும் 12 மாநிலங்களில் நடைபெறும் இந்த யாத்திரையில் 22 முக்கிய இடங்களில் பொதுக் கூட்டங்கள் நடத்தப்பட உள்ளன. இவற்றில் மொத்தம் உள்ள 129 மக்களவை தொகுதிகளில் 2019 தேர்தலில் காங்கிரஸுக்கு 28 இடங்கள் மட்டுமே கிடைத்தன. ஆனால், காங்கிரஸின் சிக்கலான காலங்களில் தென் மாநிலங்களே அக்கட்சிக்கு பக்க பலமாக … Read more

பீகார் அரசு புது திட்டம் வளையல்களாக மாறும் பறிமுதல் மதுபாட்டில்

பாட்னா: பீகார் மாநிலத்தில் முதல்வர் நிதிஷ்குமார்  தலைமையிலான அரசு மதுவிலக்கை அமல்படுத்தி உள்ளது. ஆனாலும் அதிகளவில் மதுபாட்டிகள் பிடிபடுகின்றன. பறிமுதல் செய்யப்பட்ட மதுபாட்டில்கள் ஜேசிபி இயந்திரத்தால் உடைக்கப்படுகின்றன. இதனால் பெரும் கண்ணாடி கழிவுகள் ஏற்படுகின்றது. இவற்றை அகற்றுவதில் சிக்கல்கள் எழுகின்றன. இந்நிலையில் பறிமுதல் செய்யும் மது பாட்டில்களில் இருந்து கண்ணாடி வளையல் செய்வதற்கு அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. இதற்காக ஜீவிகா திட்டம் என்ற புதிய திட்டத்தை பீகார் அரசு தொடங்கி உள்ளது. இந்த திட்டத்தின் கீழ் கண்ணாடி … Read more