ஆந்திர முதலமைச்சர் ஜெகன் மோகனின் தாயார் சென்ற கார் டயர்கள் வெடித்து விபத்து; காயமின்றி உயிர் தப்பினார்..!!

ஐதராபாத்: ஆந்திர முதலமைச்சர் ஜெகன் மோகனின் தாயார் விஜயம்மா பயணம் செய்த காரின் 2 சக்கரங்களும் ஒரே நேரத்தில் வெடித்து விபத்துக்குள்ளானது. ஓட்டுநரின் சாமர்த்தியத்தால் எந்தவித காயமுமின்றி அவர் உயிர் தப்பினார். விஜயம்மா என்று ஆந்திர மக்களால் அழைக்கப்பட கூடிய ஜெகன் மோகனின் தாயார் விஜயலட்சுமி, நேற்று தனது கணவரின் நண்பரான ஐபாபு ரெட்டியின் குடும்பத்தினரை பார்க்க காரில் கர்னூல் சென்றிருக்கிறார். பின்னர் அங்கிருந்து ஐதராபாத்துக்கு திரும்பி செல்லும் போது புத்தி பெட்ரோல் நிலையம் அருகே திடீரென … Read more

காஷ்மீரில் மீண்டும் தீவிரவாத தாக்குதல் | புலம்பெயர்ந்த தொழிலாளி சுட்டுப் படுகொலை

பந்திப்போரா: காஷ்மீரில் புலம் பெயர்ந்த தொழிலாளி ஒருவர் தீவிரவாதிகளால் சுட்டுப் படுகொலை செய்யப்பட்டார். நேற்று காலை (ஆக..11 காலை) ரஜோரி மாவட்டத்தில் ராணுவ முகாம் மீது நடத்தப்பட்ட தீவிரவாத தாக்குதலில் தமிழக வீரர் உட்பட 4 பேர் வீர மரணம் அடைந்தனர். இந்நிலையில் நேற்றிரவு பந்திப்போரா மாவட்டத்தில் சும்பால் எனும் பகுதியில் பிஹாரைச் சேர்ந்த 19 வயது இளைஞரை தீவிரவாதிகள் சுட்டுக் கொன்றனர். வீட்டில் இருந்த முகமது அம்ரேஸ் என்ற அந்த நபரை தீவிரவாதிகள் வீட்டிற்குள் நுழைந்து … Read more

காங்கிரஸ் மூத்த தலைவரும் எம்.பி.யுமான சசி தரூருக்கு பிரான்சின் உயரிய விருதான செவாலியர் விருது அறிவிப்பு

பாரிஸ்: காங்கிரஸ் மூத்த தலைவரும் எம்.பி.யுமான சசி தரூருக்கு பிரான்சின் உயரிய விருதான செவாலியர் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. எழுத்து மற்றும் பேச்சாற்றலுக்காக பிரான்ஸ் நாட்டின் உயரிய விருதான செவாலியர் விருதுக்கு சசி தரூர் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

“தியேட்டருக்கு வரும் வழியில் பள்ளம் இருக்கலாம்” – கேரளாவில் அரசியல் சர்ச்சைகளுக்கு வித்திட்ட ஒற்றை போஸ்டர்

ஆலப்புழா: கேரளாவில் ஒரு திரைப்படத்தின் ஒற்றை போஸ்டர் அரசியல் சர்ச்சைகளுக்கு வித்திட்டுள்ளது. ஆன்ராய்டு குஞ்சப்பன் பட புகழ் இயக்குநர் ரதீஷ் பாலகிருஷ்ணன் பொதுவால் இயக்கத்தில் குஞ்சாகோ போபன், காயத்ரி நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘ந்நா தான் கேஸ் கொடு’ (Nna, Thaan Case Kodu). மலையாள படமான இது நேற்று (ஆகஸ்ட் 11) திரையரங்குகளில் வெளியானது. இதில் சைஜூ குரூப், வினய் போர்ட், ஜாபர் இடுக்கி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். படம் முதல் காட்சி திரையரங்குகளில் … Read more

48 நாட்கள் நடைபெற்ற அமர்நாத் யாத்திரை நிறைவு

ஸ்ரீநகர்: கடந்த ஜூன் 30ம் தேதி தொடங்கிய அமர்நாத் குகை கோயில் பனிலிங்கத்தை தரிசிப்பதற்கான யாத்திரை நிறைவடைந்தது. 6 லட்சம் முதல் 8 லட்சம் பக்தர்கள் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 3.03 பக்தர்கள் மட்டுமே சென்றுள்ளனர்.

ஆற்றில் அடித்து செல்லப்பட்ட குட்டி யானை.. மீட்டதோடு பழங்கள் கொடுத்து பசியாற்றிய பொதுமக்கள்

கர்நாடகாவில் ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட குட்டி யானையை பொதுமக்கள் மீட்டு உணவு வழங்கினர். கர்நாடக மாநிலம்  குடகு மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக  கனமழை பெய்து வருவதால் ஏரி, குளம், குட்டை என அனைத்தும்  நிரம்பி வழிகிறது.  மேலும்  தண்ணீர் எங்கும்  பெருக்கெடுத்து ஓடுவதால் வயல்வெளிகள், சாலைகளில் வெள்ளம் சூழ்ந்து வெள்ளக்காடாகக் காட்சி அளிக்கிறது. இந்நிலையில் கர்நாடக மாநிலம் குடகு மாவட்டம் மஞ்சள்ளி பகுதியில் பெருக்கெடுத்து ஓடும் ஆற்றில் ஒரு குட்டி யானை சிக்கிக் கொண்டது. இதையறிந்த  … Read more

பெங்களூருவில் உணவு டெலிவரி செய்யும் மாற்றுத்திறனாளிக்கு ஆதரவு – வாடிக்கையாளர் பகிர்ந்த நெகிழ்ச்சி பதிவு வைரல்

பெங்களூரு: பெங்களூருவில் மாற்றுத்திறனாளி ஒருவர் கடும் மழையிலும் உணவு டெலிவரி செய்வது தொடர்பான பதிவு சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது. அவருக்கு பலரும் பாராட்டும் ஆதரவும் தெரிவித்து வருகின்றனர். இதுகுறித்து கர்நாடக மாநிலம் பெங்களூருவில் வசிக்கும் ரோஹித் குமார் சிங் என்பவர் தனது சமூக வலைதள பக்கத்தில் கூறியிருப்பதாவது: பெங்களூருவில் கடந்த ஞாயிற்றுக்கிழமை பலத்த மழை பெய்து கொண்டிருந்த போது செல்போன் ஆப் மூலம் உணவு ஆர்டர் செய்தேன். ஆனால் உணவு வருவதற்கு கால தாமதம் ஆனதால் டெலிவரி … Read more

கால்நடை கடத்தல் வழக்கு திரிணாமுல் மூத்த தலைவர் கைது: மேற்கு வங்கத்தில் சிபிஐ நடவடிக்கை

பிர்பும்: மேற்கு வங்கத்தில் கால்நடை கடத்தல் வழக்கில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் அனுப்ரதா மண்டலை சிபிஐ கைது செய்துள்ளது. மேற்கு வங்கத்தில் ஆசிரியர் பணி நியமன ஊழல் வழக்கில். திரிணாமுல் காங்கிரசை சேர்ந்த அமைச்சர் பார்தா சட்டர்ஜி சில வாரங்களுக்கு முன்பு அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டார். பின்னர், அவருடைய பதவி பறிக்கப்பட்டது. இந்நிலையில், கால்நடை கடத்தல் வழக்கில் அக்கட்சியின் மூத்த தலைவரும், முதல்வர் மம்தாவுக்கு மிக நெருங்கியவருமான அனுப்ரதா மண்டலுக்கு தொடர்பு இருப்பது சிபிஐ.க்கு … Read more

'உலகில் போர்களை தடுக்க மோடி தலைமையில் குழு அமைக்கலாம்' – மெக்சிகோ அதிபர் யோசனை

உலகில் போர்களை நிறுத்த பிரதமர் மோடி உள்ளிட்ட மூன்று உலகத் தலைவர்களைக் கொண்ட ஆணையத்தை உருவாக்க வேண்டும் என மெக்சிகோ அதிபர் ஆண்ட்ரெஸ் மானுவல் யோசனை தெரிவித்துள்ளார். உக்ரைன் மீது ரஷியா கடந்த 5 மாதங்களாக போர் தொடுத்து வருகிறது. இந்த போர் முடிவில்லாமல் நீண்டு வருகிறது. அதேபோல் சீனா, தைவானை நாலாபுறமும் சுற்றிவளைத்து போர்ப்பயிற்சி நடத்தி உள்ளது.  இப்படியாக உலகின் பல்வேறு பகுதிகளில் நிலவும் போர் பதற்ற சூழல், உலக அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் … Read more

உ.பி படகு விபத்து: 4 பேர் உயிரிழப்பு

பாண்டா: உத்தர பிரதேசத்தின் பாண்டா மாவட்டத்தில் உள்ள மர்க்கா என்ற பகுதியிலிருந்து ஒரு படகில் சுமார் 40 பேர், பதேபூர் மாவட்டத்தில் உள்ள ஜராலி படித்துறைக்கு பயணம் மேற்கொண்டனர். அப்போது படகு யமுனை ஆற்றில் கவிழ்ந்தது. 13 பேர் நீந்தி கரையேறினர். 4 பேர் ஆற்றில் மூழ்கி உயிரிழந்தனர். குழந்தைகள் உட்பட பலர் நீரில் மூழ்கிவிட்டதாக அஞ்சப்படுகிறது. படகு விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு உ.பி முதல்வர் யோகி ஆதித்யநாத் இரங்கல் தெரிவித்துள்ளார். மீட்புப் பணியில் தேசிய பேரிடர் … Read more