'கட்சியில் மூத்தவர்களைக் கையாளத் தெரியவில்லை' – ராகுலை காரணம் காட்டி எம்.ஏ.கான் விலகல்

காங்கிரஸ் கட்சியிலிருந்து குலாம் நபி ஆசாத் அண்மையில் விலகிய நிலையில், கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான எம்.ஏ.கான் விலகினார். இது காங்கிரஸ் கட்சிக்கு மேலுமொரு பின்னடைவாக பார்க்கப்படுகிறது. ஏம்.ஏ.கான் தெலங்கானாவைச் சேர்ந்தவர். முன்னாள் மாநிலங்களவை உறுப்பினர். சிறுபான்மையினர் ஆதரவு பெற்றவர். இந்நிலையில் இவர் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவி உள்ளிட்ட அனைத்தையும் துறந்து கட்சியிலிருந்து விலகியுள்ளார். ராகுல் மீது புகார்: ஏற்கெனவே காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகிய குலாம் நபி ஆசாத் கட்சியின் வீழ்ச்சிக்கு ராகுல் காந்தியின் சிறுபிள்ளைத்தனமே … Read more

விடுமுறை நாள் என்பதால் திருப்பதியில் ஆயிரக்கணக்கில் பக்தர்கள் குவிந்தனர்

திருப்பதி; திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஒரே நாளில் 5 கோடியே 14 லட்சம் ரூபாய்  காணிக்கையை உண்டியலில் செலுத்தியுள்ளனர். விடுமுறை நாள் என்பதால் 24 மணி நேரத்தில் 80 ஆயிரம் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

எதிர்க்கட்சி ஆட்சியை கவிழ்க்க ரூ.6,300 கோடி செலவிட்ட பாஜக – அர்விந்த் கேஜ்ரிவால் குற்றச்சாட்டு

புதுடெல்லி: அர்விந்த் கேஜ்ரிவால் தலைமையிலான டெல்லி அரசின் புதிய மது விற்பனைக் கொள்கையில் முறைகேடு நடந்துள்ளதாக, துணைநிலை ஆளுநர் வி.கே.சக்சேனா தெரிவித்தார். இதுதொடர்பாக விசாரணை நடத்த சிபிஐக்கு பரிந்துரை செய்தார். இதன் அடிப்படையில், துணை முதல்வர் மணிஷ் சிசோடியா உள்ளிட்டோர் மீது சிபிஐ வழக்கு பதிவு செய்துள்ளது. இதையடுத்து, பாஜக – ஆம் ஆத்மி கட்சி இடையே வார்த்தைப் போர் நடந்து வருகிறது. ஆம் ஆத்மி அரசை கவிழ்க்க பாஜக பேரம் பேசியதாகவும் குற்றம் சாட்டப்பட்டது. இந்நிலையில், … Read more

கோதுமை மாவு, மைதா, ரவை ஆகிய பொருட்களை ஏற்றுமதி செய்ய ஒன்றிய அரசு தடை

டெல்லி: கோதுமை மாவு, மைதா, ரவை ஆகிய பொருட்களை ஏற்றுமதி செய்ய ஒன்றிய அரசு தடை விதித்துள்ளது. ஆகஸ்ட் 25-ம் தேதி நடந்த பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரவை கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது. கோதுமை மாவு,ரவை,மைதா ஆகிய பொருட்களின் விலை ஏற்றத்தை கட்டுப்படுத்த ஏற்றுமதிக்கு ஒன்றிய அரசு தடை விதித்துள்ளது.

”ஆள விடுங்கப்பா.. நான் இங்கயே இருந்துக்குறேன்” – மனைவி தொல்லையால் மரத்தில் வாழும் கணவன்!

கணவன் மனைவி இடையேயான சண்டைகள் எல்லாம் வீட்டுக்கு வீடு வாசப்படி என்பது போல வழக்கமான ஒன்றாகும். சண்டை முற்றிப்போனால் அதிகபட்சம் சில நாட்களுக்கு பேசாமல் இருப்பார்கள் அல்லது தனித்து இருப்பார்கள். ஆனால் உத்தர பிரதேசத்தில் இருக்கும் ஒரு தம்பதியின் சண்டை சற்று விசித்திரமானதாக இருக்கிறது. தினந்தோறும் மனைவி சண்டையிடுவதால் வேறு வழியில்லாமல் 100 அடி உயரத்தில் இருக்கு பனை மரத்தில் அந்த கணவர் குடியேறியிருக்கிறாராம். இது தொடர்பான வீடியோக்களும் சமூக வலைதளங்களில் பரவ விடப்பட்டிருக்கிறது. அதன்படி, உத்தரபிரதேசத்தின் … Read more

விநாயகர் சதுர்த்திக்கு சொந்த ஊர் செல்வோருக்கு சுங்க கட்டண சலுகை – மகாராஷ்டிர அரசு அறிவிப்பு

மும்பை: விநாயகர் சதுர்த்திக்கு கொங்கன் பகுதியில் உள்ள சொந்த ஊருக்குசெல்வோருக்கு வாகனங்களுக்கான சுங்கக் கட்டணம் தள்ளுபடி செய்யப்படும் என மகாராஷ்டிர அரசு அறிவித்துள்ளது. இதுகுறித்து மகாராஷ்டிர மாநில போக்குவரத்து ஆணையர் அவினாஷ் தக்னே கூறும்போது, “இந்த ஆண்டு விநாயகர் சதுர்த்திவிழா ஆகஸ்ட் 31-ம் தேதி தொடங்குகிறது. செப்டம்பர் 9-ம் தேதி விசர்ஜன ஊர்வலம் நடைபெறுகிறது. இப்பண்டிகை காலத்தில் மும்பை மற்றும் புனேவில் இருந்து கொங்கன் பகுதிக்கு ஏராளமானோர் சென்று வருவது வழக்கமாக உள்ளது. இந்நிலையில் முதல்வர் ஏக்நாத் … Read more

குஜராத் மாநிலம் புஜ் பகுதியில் ஸ்மிருதி வன நினைவிடத்தை திறந்து வைத்தார் பிரதமர் மோடி

குஜராத்; குஜராத் மாநிலம் புஜ் பகுதியில் சுமார் ரூ,4,400 கோடி மதிப்பில் பல்வேறு நலத்திட்டங்களுக்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார். குஜராத் புஜ் பகுதியில் வளர்ச்சி திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டிய பிரதமர் மோடி ஸ்மிருதி வன நினைவிடத்தை திறந்து வைத்தார். 2001 நிலநடக்கத்தின் போது மக்கள் வெளிப்படுத்திய உணர்வை பெருமைப்படுத்தும் பகையில் 470 ஏக்கரில் வனநினைவிடம் அமைக்கப்பட்டுள்ளது.

சபர்மதி பாலம் – பிரதமர் மோடி திறந்து வைத்தார்

அகமதாபாத்: குஜராத் மாநிலம் அகமதாபாத்திலுள்ள சபர்மதி ஆற்றை பொதுமக்கள் கடக்க வசதியாக நடைபாலத்தை மாநில அரசு அமைத்துள்ளது. கட்டி முடிக்கப்பட்டுள்ள இந்த பாலத்தை பிரதமர் நரேந்திர மோடி நேற்று திறந்து வைத்தார். பாலத்துக்கு அடல் நடைமேம்பாலம் என்று பெயரிடப்பட்டுள்ளது. முன்னதாக நேற்று மாலை அகமதாபாத் வந்த பிரதமர் நரேந்திர மோடியை, குஜராத் முதல்வர் பூபேந்திர படேல் உள்ளிட்டோர் வரவேற்றனர். இதைத் தொடர்ந்து அகமதாபாத்தில் நடைபெற்ற காதி உற்சவத்தை பிரதமர் மோடி தொடங்கிவைத்தார். அப்போது 7,500 பெண்கள் ஒரே … Read more

இந்தியாவில் ஒரே நாளில் 9,436 பேருக்கு கொரோனா… 157 பேர் பலி: ஒன்றிய சுகாதாரத்துறை அறிக்கை!!

டெல்லி: நாட்டில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 5 லட்சத்தை தாண்டியது.இன்று காலை 9 மணியுடன் முடிந்த 24 மணி நேரத்தில், நாட்டில் கொரோனாவால் புதிதாக பாதித்தவர்கள், குணமடைந்தோர், பலியானோர், இறப்பு விகித நிலவரம் குறித்து மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு: * புதிதாக 9,436 பேர் பாதித்துள்ளனர். * இதன் மூலம், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 4,44,08,132 ஆக உயர்ந்தது. * புதிதாக 157 பேர் இறந்துள்ளனர். * இதனால், நாட்டின் மொத்த உயிரிழந்தோர் … Read more

நொய்டா இரட்டை கோபுரம் இன்று தகர்ப்பு: குடியிருப்புவாசிகள் வெளியேற்றம்-மின்சாரம் துண்டிப்பு

நொய்டாவில் உள்ள பிரமாண்ட இரட்டை கோபுரங்கள் இன்று பிற்பகல் 2:30 மணிக்கு  வெடிவைத்து தகர்க்கப்பட உள்ளது.   உத்தரப் பிரதேச மாநிலம் நொய்டாவில் ‘சூப்பர் டெக்’ என்ற நிறுவனத்தின் சார்பில் பிரமாண்ட இரட்டைக் கோபுர குடியிருப்புகள் கட்டப்பட்டன. இதில் ‘அபெக்ஸ்’ என்ற கோபுரம், 32 மாடிகளை உடையது. இதன் உயரம் 328 அடி. மற்றொரு கோபுரமான ‘சியான்’ 31 மாடிகளை உடையது; இதன் உயரம் 318 அடி. இந்த இரட்டை கோபுரங்கள் விதிமுறையை மீறி கட்டப்பட்டதாக வழக்கு … Read more