இலங்கையில் பள்ளிப் பாடப்புத்தகங்கள் அச்சிட இந்தியா கடனுதவி..!

கடுமையான பொருளாதார நெருக்கடியில் தவிக்கும் இலங்கைக்கு மத்திய அரசு உதவ முன்வந்துள்ளது. பள்ளிப் பாடப்புத்தகங்களை அச்சிடுவதற்கான கடனுதவியை அளிப்பதாக இந்திய அரசு ஒப்புதல் அளித்திருப்பதாக இலங்கை கல்வித்துறை அமைச்சர் சுசில் பிரேமஜனதா கொழும்புவில் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார். நோட்டு பாடப்புத்தகங்களை அச்சிடத் தேவையான மை, காகிதம் உள்ளிட்ட பொருட்கள் இந்தியாவின் கடனுதவி மூலம் பெறப்படும் என்றும் அவர் கூறினார். வரும் ஜனவரி மாதம் அச்சுப்பணிகள் முடிந்து, மார்ச் முதல் தொடங்கும் கல்வியாண்டின் ஆரம்பத்தில் மாணவர்களுக்கு பாடப்புத்தகங்கள்  விநியோகிக்கப்படும் என்று இலங்கை அரசு … Read more

பாதாம் பருப்பை திருடியதாக சிறுவனை மரத்தில் கட்டி சரமாரி அடி: மபி மதகுரு வெறிச்செயல்

சாகர்: மத்தியப்பிரதேசத்தின் சாகர் பகுதியில் ஜெயின் கோயில் அமைந்துள்ளது. இந்த கோயில் பூஜைக்கு வைத்திருந்த பாதாம் பருப்பை 11வயது சிறுவன் யாருக்கும் தெரியாமல் எடுத்துவிட்டதாக தெரிகின்றது. இதனை பார்த்த மத குரு ராகேஷ் ஜெயின் சிறுவனை பிடித்து மரத்தில் கட்டிவைத்துள்ளார். மேலும் சிறுவனை அவர் சரமாரியாக அடித்து உதைத்துள்ளார். சிறுவன் தன்னை விட்டுவிடும்படி கதறி அழும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகியது. இதனிடையே தகவல் அறிந்த சிறுவனின் தந்தை அவனை மீட்டதோடு சம்பவம் குறித்து மோதிநகர் காவல்நிலையத்தில் … Read more

பஞ்சாப் பாடகர் மூசேவாலாவை கொன்ற 6வது நபர் கைது

சண்டிகர்: பிரபல பாடகர் மூசேவாலா கடந்த மே 29ம் தேதி பஞ்சாப்பில் உள்ள மான்சா மாவட்டத்தில் சென்று கொண்டிருந்தபோது மர்ம கும்பலால் சுட்டுக்கொல்லப்பட்டார். விசாரணையில் 6 பேர் கொண்ட கும்பல் செய்தது தெரியவந்தது. அதன்படி குற்றவாளிகளான  பிரியவ்ரத் பௌஜி, காஷிஷ் மற்றும் அங்கித் செர்சா ஆகிய 3 பேரை டெல்லி சிறப்பு பிரிவு போலீசார் கைது செய்தனர். மன்பிரீத் சிங் மற்றும் ஜக்ரூப் சிங் ரூபா ஆகிய 2 பேரை பஞ்சாப் போலீசார் சுட்டுக்கொன்றனர். மற்றொரு குற்றவாளியான … Read more

மின்சார ஸ்கூட்டருக்கு மாசு கட்டுப்பாட்டு சான்று இல்லை என அபராதம் விதித்த போலீசார்

மின்சார ஸ்கூட்டர்-க்கு மாசு கட்டுப்பாட்டு சான்றிதழ் இல்லை எனக் கூறி போலீசார் அபராதம் விதித்துள்ள சம்பவம் கேரளாவில் அரங்கேறிள்ளது. பெட்ரோல், டீசல் இல்லாமல் மின்சாரத்தில் இயங்கும் கார் மற்றும் பைக்குகள் மாசை ஏற்படுத்தாத வகையில் வடிவமைக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், கேரள மாநிலம் மலப்புரம் அருகே மின்சார ஸ்கூட்டர் ஓட்டி வந்த நபருக்கு மாசு கட்டுப்பாட்டு சான்று இல்லை எனக்கூறி போலீசார், வாகன உரிமையாளருக்கு 250 ரூபாய் அபராதம் விதித்துள்ளனர். இந்த விவகாரம் பேசுபொருளான நிலையில், ஸ்கூட்டரை ஓட்டிவந்த … Read more

கேரளாவில் அடேங்கப்பா…ஒரே ஒரு பூசணிக்காய் ரூ.47 ஆயிரத்துக்கு ஏலம்

மூணாறு: கேரளாவில் ஒரு பூசணிக்கு மட்டுமே ரூ.47 ஆயிரத்துக்கு ஏலம் போனது. கேரளாவில் ஓணம் பண்டிகை ஜாதி மத பேதமின்றி அனைத்து தரப்பு மக்களாலும் கொண்டாடப்படுகிறது. இப்பண்டிகை நாட்களில் கயிறு இழுத்தல், படகு போட்டி, பொது ஏலம் என பல்வேறு நிகழ்ச்சிகள் நடக்கும். இந்த பொது ஏலத்தில் தாங்கள் வளர்க்கும் கால்நடைகள், தங்கள் விளைநிலங்களில் விளையும் காய்கறி, பழங்களை மக்கள் ஏலம் விடுவர். நேற்று முன்தினம் கேரள மாநிலம், இடுக்கி மாவட்டத்தில் நெடுங்கண்டத்தை அடுத்த செம்மண்ணாற்றில் ஊராட்சி … Read more

தேர்வு எழுத சகோதரர்களின் உதவியுடன் வெள்ள நீரை நீந்திக் கடந்த பெண்

ஆந்திராவில், தேர்வு எழுதுவதற்காக தனது சகோதரர்களின் உதவியுடன் பெண் ஒருவர் வெள்ளம் பாந்தோடும் சம்பாவதி ஆற்றை நீந்தி கடந்துள்ளார். விசாகப்பட்டினத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வரும் கலாவதி, இரு நாட்களுக்கு முன் தனது சொந்த ஊரான கஜபதிநகரம் அருகேயுள்ள கிராமத்துக்கு வந்துள்ளார். கனமழையால் அப்பகுதியில் போக்குவரத்து துண்டிக்கப்பட்ட நிலையில், இன்று கலாவதிக்கு தேர்வு இருந்ததாக் கூறப்படுகிறது. இதனையறிந்த அவரது சகோதரர்கள், தனது சகோதரிக்கு உதவ எண்ணி அவரை வெள்ள நீரில் தோளில் சுமந்தபடி மறுகரைக்கு அழைத்து … Read more

இங்கிலாந்து பிரதமர் லிஸ் டிரஸ் உடன் தொலைபேசியில் உரையாடிய பிரதமர் மோடி, ராணி இரண்டாம் எலிசபெத் மறைவிற்கு இரங்கல்

இங்கிலாந்தின் புதிய பிரதமராக பதவியேற்ற லிஸ் டிரஸ் உடன் தொலைபேசியில் உரையாடிய பிரதமர் மோடி, ராணி இரண்டாம் எலிசபெத் மறைவிற்கு இரங்கல் தெரிவித்துள்ளார். இது குறித்த அரசின் செய்திக்குறிப்பில், பிரதமராக பொறுப்பேற்ற லிஸ் டிரஸ்க்கு வாழ்த்து தெரிவித்த பிரதமர் மோடி, வர்த்தகத்துறை மற்றும் வெளியுறவுச் செயலாளராக பதவி வகித்தபோது அவர் அளித்த பங்களிப்பை பாராட்டியதாக குறிப்பிடப்பட்டுள்ளது. தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் குறித்தும், பாதுகாப்பு ஒத்துழைப்பு உள்ளிட்டவை குறித்தும் இருநாடுகளின் தலைவர்கள் கலந்துரையாடியாக அரசு தெரிவித்துள்ளது.   Source … Read more

நடப்பாண்டில் நாட்டில் நெல் உற்பத்தி குறையும் என மத்திய அரசு தகவல்… காரணம் என்ன?

நாட்டின் கிழக்கு மாநிலங்களில் மழை குறைந்ததால் நெல் உற்பத்தி பாதிக்கப்படும் சூழல் ஏற்பட்டுள்ளது. இதனால் நெல் உற்பத்தி குறையும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. காலநிலை மாற்றத்தின் தாக்கத்தால் கர்நாடகா, குஜராத் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் அதிக மழைப்பொழிவால் வெள்ளப்பெருக்கு உண்டான நிலையில், நாட்டின் கிழக்குப் பகுதியில் உள்ள பல்வேறு மாநிலங்களில் மழைபொழிவு இந்த பருவமழை காலத்தில் இயல்பைவிட குறைவாகவே உள்ளதால் நெல் உற்பத்தி பாதிக்கப்படும் சூழல் ஏற்பட்டுள்ளது. மேற்கு வங்கம், ஜார்க்கண்ட், பீகார் மற்றும் சத்தீஸ்கர் … Read more

ராணி 2ம் எலிசபெத் மறைவையடுத்து, கோகினூர் வைரத்தை மீட்டு கொண்டு வர வேண்டுமென கோரிக்கை

ராணி 2ம் எலிசபெத் மறைவையடுத்து, கோகினூர் வைரத்தை மீட்டு கொண்டு வர வேண்டுமென கோரிக்கை வலுத்துள்ளது. இந்நிலையில் 1905ம் ஆண்டில் சுமார் 3 ஆயிரத்து 100 கோடி ரூபாய் மதிப்பிலான கிரேட் ஸ்டார் ஆப் ஆப்பிரிக்கா வைரத்தை தென்னாப்பிரிக்காவில் இருந்தும், 1799ம் ஆண்டு திப்பு சுல்தானின் மோதிரம், 1800ம் ஆண்டில் எகிப்தில் இருந்து கிறிஸ்து பிறப்பிற்கு முந்தைய காலத்தைய ரோசட்டா கல், கிரீஸ் நாட்டில் இருந்து 1803ம் ஆண்டில் எல்ஜின் மார்பிள்ஸ் ஆகியவை எடுத்து செல்லப்பட்ட தகவல் … Read more

கடத்தப்பட்ட 12 வயது மகள் – ’Taken’ திரைப்பட பாணியில் மீட்ட தினக்கூலி தொழிலாளி தந்தை

கடத்தப்பட்ட தனது மகளை ‘Taken’ திரைப்பட பாணியில் மீட்டுள்ளார் உத்தரபிரதேசத்தில் ஒரு தினக்கூலி தொழிலாளி தந்தை. மும்பையிலுள்ள புறநகர் பாந்த்ரா பகுதியைச் சேர்ந்தவர் ஷாஹித் கான்(24). இவர் ஆடை உற்பத்தி நிறுவனம் ஒன்றில் வேலைபார்த்து வருகிறார். இவர் செப்டம்பர் 4ஆம் தேதி அதேப்பகுதியைச் சேர்ந்த தினக்கூலி தொழிலாளர் ஒருவரின் 12 வயது மகளை பக்கத்தில் குர்லாவிற்கு ஷாப்பிங் கூட்டிச்செல்வதாகக் கூறி அழைத்துச் சென்றுள்ளார். ஆனால் குர்லாவிற்கு பதிலாக சூரத் பஸ் ஏறி, அங்கிருந்து டெல்லிக்கு ரயிலில் அழைத்துச் … Read more