மனைவியுடன் தகாத உறவு வைத்திருந்ததாக இளைஞரை கொலை செய்த கணவன்

கேரளாவின் எர்ணாகுளத்தில் மனைவியுடன் தகாத உறவை வைத்திருந்ததாக இளைஞரை கொலை செய்த கணவனை சிசிவிடி காட்சிகளை வைத்து போலீசார் கைது செய்தனர். பாலக்காடு பகுதியை சேர்ந்த சுரேஷ் என்பவரது மனைவிக்கும், அதே பகுதியை சேர்ந்த அஜய் என்பவருக்கும் இடையே தகாத உறவு இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால், சுரேஷ் – அஜய் இடையே அடிக்கடி பிரச்னை ஏற்பட்டு முன்விரோதம் இருந்ததாகவும் தெரிகிறது. இந்நிலையில், எர்ணாகுளம் நெட்டூர் பகுதியில் விடுதியில் வாடகை அறை எடுத்து தங்கி வேலை பார்த்து … Read more

நடிகை சோனாலி கொலை: 3 பேருக்கு 5 நாள் காவல்

பனாஜி: அரியானா மாநிலத்தை சேர்ந்த நடிகை சோனாலி, நண்பர்களுடன் கோவா சென்றபோது கடந்த 22ம் தேதி இரவு மர்மமான முறையில் மரணமடைந்தார். மாரடைப்பால் இறந்ததாக கூறப்பட்டது. ஆனால், அவரது சாவில் மர்மம் இருப்பதாக சோனாலியின் சகோதரர் புகார் அளித்தார். இதைத் தொடர்ந்து சோனாலியின் தனி உதவியாளர் சுதிர் சக்வான், சுக்விந்தர் சிங், கர்லிஸ் ஓட்டல் உரிமையாளர் எட்வின் நன்ஸ் கைது செய்யப்பட்டனர். சோனாலிக்கு போதைப்பொருள் விநியோகித்த ராம்தாஸ் மண்ட்ரேகர், தத்தாபிரசாத் கோயங்கரை போலீசார் கைது செய்தனர். இதுவரை … Read more

த்ரிஷ்யம் 3-ம் பாகம்; உறுதிப்படுத்திய மோகன்லால்

திருவனந்தபுரம்: ஜீத்து ஜோசப் இயக்கத்தில் மோகன்லால் நடித்த த்ரிஷ்யம் படம் 2013ம் ஆண்டு வெளியானது. பேமிலி த்ரில்லர் பாணியில் உருவான இந்த படத்தில் மீனா, எஸ்தர் அலி, ஆஷா சரத், அன்சிபா ஹசன் நடித்திருந்தார்கள். கேரளாவில் முதன் முறையாக 100 கோடி வசூலித்த படம் இது. தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி மொழிகளில் ரீமேக் ஆனது. அதற்கு பிறகு இந்த படத்தின் 2ம் பாகம் கடந்த ஆண்டு ஓடிடி தளத்தில் வெளியானது. அதுவும் நல்ல வரவேற்பை பெற்றது. … Read more

யுனெஸ்கோ பட்டியலில் கர்பா நடனமும் சேர்ப்பு: ஒன்றிய அரசு பரிந்துரை

புதுடெல்லி: யுனெஸ்கோவின் கலாசார பாரம்பரிய பட்டியலில் கர்பா நடனத்தை சேர்ப்பதற்கு ஒன்றிய அரசு பரிந்துரைத்துள்ளதாக ஐநா அதிகாரி தெரிவித்தார்.ஐக்கிய நாடுகள் கல்வி, அறிவியல் மற்றும் பண்பாட்டு அமைப்பு (யுனெஸ்கோ), ஐநா அவையின் முக்கிய துணை நிறுவனங்களில் ஒன்று. இந்நிறுவனம், இதன் உறுப்பு நாடுகளிடையே கல்வி, அறிவியல், பண்பாடு மற்றும் தொடர்புத் துறைகளில் ஒத்துழைப்பை ஊக்குவித்து வருகிறது. கொல்கத்தாவில் மிகவும் சிறப்புடன் கொண்டாடப்படும்  துர்கா பூஜை விழாவை  கலாசார பாரம்பரிய நிகழ்வுகள் பட்டியலில் கடந்தாண்டு யுனெஸ்கோ இணைத்தது. இது … Read more

6 ஆண்டு தண்டனை குற்றத்துக்கு தடயவியல் விசாரணை சோதனை கட்டாயம்: ஒன்றிய உள்துறை அமைச்சர் தகவல்

காந்திநகர் : ஆறு ஆண்டுகளுக்கும் மேலான தண்டனை பெறக் கூடிய குற்றங்களுக்கு தடயவியல் சோதனை கட்டாயமாக்கப்படும்,’ என்று ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறினார்.குஜராத் மாநிலம், காந்திநகரில் உள்ள  தேசிய தடயவில் பல்கலைக் கழகத்தில் நடந்த பட்டமளிப்பு விழாவில் ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா கலந்து கொண்டார். அதில் அவர் பேசியதாவது: குற்றவியல் நீதி அமைப்புடன் தடயவியல் துறை இணைக்கப்படும்.  6 ஆண்டுகளுக்கும் மேலான தண்டனை பெறக் கூடிய குற்றங்களுக்கு தடயவியல் சோதனையும், விசாரணையும் கட்டாயமாக்கப்படும். இதற்காக, … Read more

டெல்லியில் புதிதாக கட்டப்படும் நாடாளுமன்ற பிரதான கட்டிட பணி முடிந்தது; டாடா நிறுவனம் தகவல்

புதுடெல்லி: நாடாளுமன்ற கட்டிடத்தின் முக்கிய பணிகள் அனைத்தும் முடிந்து விட்டது என்றும்  தற்போது உள் அலங்காரப் பணிகள் நடைபெற்று வருகிறது என்றும் டாடா புராஜக்ட்ஸ் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி வினாயக் பை தெரிவித்தார். டெல்லியில் தற்போதுள்ள நாடாளுமன்ற கட்டிடத்துக்கு பதிலாக, பிரமாண்டமான முறையில் புதிய நாடாளுமன்றம் கட்டிடம் கட்டுவதற்கு, கடந்த 2020ம் ஆண்டு டிசம்பர் 10-ம் தேதி பிரதமர்  மோடி அடிக்கல் நாட்டினார். இதில் எம்பி.க்கள், பார்வையாளர்களுக்கு நவீன வசதிகள் இடம் பெறுகின்றன. ஒன்றிய  அமைச்சர்கள் … Read more

உள்நாட்டு உற்பத்தியை ஊக்குவிக்க 780 ராணுவ தளவாட இறக்குமதிக்கு தடை; அமைச்சர் ராஜ்நாத் சிங் ஒப்புதல்

புதுடெல்லி: உள்நாட்டு உற்பத்தியை ஊக்குவிக்க, 780 ராணுவ தளவாட உதிரிபாகங்களின் இறக்குமதிக்கு தடை விதிக்க பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் ஒப்புதல் அளித்துள்ளார். பிரதமர் மோடியின் தற்சார்பு இந்தியா திட்டத்தை ஊக்குவிக்கும் வகையில், அனைத்து துறைகளிலும் உள்நாட்டு தயாரிப்புகளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் ராணுவத்திலும் பாதுகாப்பு தளவாடங்கள் உற்பத்தியில் உள்நாட்டு தயாரிப்புகளை ஊக்குவிக்கும் வகையில் கடந்தாண்டு டிசம்பர் மற்றும் கடந்த மார்ச் மாதம் என 2 முறை ராணுவ தளவாட உதிரிபாகங்கள் இறக்குமதிக்கு பாதுகாப்பு … Read more

இன்னும் சில தினங்களில் திருமணம்.. சிறிய வாக்குவாதத்தில் மகளை தாக்கிய தந்தை.. பறிபோன உயிர்!

உத்தர பிரதேசத்தில் உணவு கொண்டுவர தாமதப்படுத்திய 21 வயது மகளை கொலைசெய்த தந்தையை போலீசார் கைது செய்துள்ளனர். உத்தரபிரதேச மாநிலம் ஹபூர் பகுதியைச் சேர்ந்தவர் மோஹித் ஃபரியாத்(55). இவருக்கு 6 குழந்தைகள் உள்ளனர். அதில் ஒரு மகள் ரேஷ்மா(21). ரேஷ்மாவிற்கு இன்னும் சில நாட்களில் திருமணம் நடக்கவிருந்தது. இந்நிலையில் சாப்பிட உட்கார்ந்திருந்த தந்தைக்கு உணவை கொண்டுவந்து தர தாமதப்படுத்தியிருக்கிறார் ரேஷ்மா. இதனால் இருவருக்குமிடையே வாக்குவாதம் ஏற்பட்டிருக்கிறது. அதில் மிகவும் கடுமையான வார்த்தைகளால் கோபமாக பேசியிருக்கிறார் ரேஷ்மா. அது … Read more

தாயை கிண்டல் செய்த நபரை ஓட ஓட விரட்டி கொலை செய்து தாயின் காலடியில் போட்ட மகன்

திருப்பதியில், தாயை கிண்டல் செய்த நபரை ஓட ஓட விரட்டி வெட்டிக் கொலை செய்த மகனை போலீசார் தேடி வருகின்றனர். விசாகப்பட்டினத்தில் உள்ள அலிபுரம் பகுதியைச் சேர்ந்த சீனு, நேற்று சாலையில் நடந்து சென்ற பெண்ணை கேலி செய்ததாக கூறப்படுகிறது. இது குறித்து அப்பெண் தனது மகனிடம் கூறியதையடுத்து, தாயுடன் இருசக்கர வாகனத்தில் வந்த அந்த இளைஞர், சீனுவை துரத்திச் சென்று தாக்கியதுடன் அங்கிருந்த சுவற்றில் தலையை மோதிக் கொலை செய்துள்ளார். பின்னர், 30 அடி தூரத்திற்கு … Read more

`அட எழுந்துருச்சு ஓடிவாப்பா…’-நொய்டா கோபுர தகர்ப்பின்போது அசதியில் தூங்கியவரால் பரபரப்பு

நொய்டாவில் கட்டடம் இடிக்கப்பட்ட போது, அருகிலிருந்த அபார்ட்மெண்டில் இருந்த ஒருவர் அசதியில் வீட்டுக்குள்ளேயே தூங்கியிருந்திருக்கிறார். அவரை ஒருவழியாக போராடி எழுப்பி அங்கிருந்து வெளியேற்றியுள்ளனர் அதிகாரிகள். நொய்டாவில் விதிகளை மீறி கட்டப்பட்ட இரட்டைக் கட்டங்கள், இன்று கண் இமைக்கும் நேரத்தில் தகர்க்கப்பட்டன. இதற்காக 3,700 கிலோ வெடிமருந்து பயன்படுத்தப்பட்டது. உத்தரப்பிரதேச மாநிலம் நொய்டாவில் அபேக்ஸ், சியான் என்ற பெயர்களில் குடியிருப்பு இரட்டை கட்டடங்கள் கட்டப்பட்டதில் விதிமீறல் இருப்பதாக புகார் எழுந்தது. இதனையடுத்து தொடரப்பட்ட வழக்கில், இரண்டு கட்டடங்களையும் இடிக்க … Read more