தீவிரவாத மருத்துவர்களிடம் இருந்து கைப்பற்றிய வெடிபொருள் வெடித்து காஷ்மீரில் 9 பேர் பரிதாப உயிரிழப்பு: 32 பேர் படுகாயம்

புதுடெல்லி: தீவிரவாத மருத்துவர்களிடம் இருந்து கைப்பற்றப்பட்ட வெடிபொருட்களை ஜம்மு – காஷ்மீரில் உள்ள காவல் நிலையத்தில் ஆய்வு செய்தபோது திடீரென வெடித்ததில் போலீஸார், தடயவியல் நிபுணர்கள் உட்பட 9 பேர் உயிரிழந்தனர். 32 பேர் படுகாயம் அடைந்தனர். இந்த விபத்தில் காவல் நிலையக் கட்டிடம் பலத்த சேதமடைந்தது. ஜம்மு – காஷ்மீரில் போலீஸார் மற்றும் பாதுகாப்புப் படையினர் மீது தாக்குதல் நடத்தப்படும் என மிரட்டல் விடுத்து புன்போரா, நவ்காம் உள்ளிட்ட இடங்களில் கடந்த அக்டோபர் மாத மத்தியில் … Read more

பிஹார் முதல் டெல்லி வரை ஆதிக்கம் செலுத்தும் ஆளுமை: யார் இந்த நிதிஷ் குமார்?

‘நிதிஷ் குமார் ஒரு மண் குதிரை’ – 2024 மக்களவைத் தேர்தலுக்கு முன்னர் மகாகட்பந்தன் கூட்டணியை முறித்துக் கொண்டு பாஜகவுடன் அவர் கைகோர்த்தபோது பரவலாக முன்வைக்கப்பட்ட விமர்சனம் இது. ஆனால் ஜோதி பாசு, நவீன் பட்நாயக் போன்றோர் செய்த சாதனையை (தொடர்ந்து 20 ஆண்டுகளாக மாநில முதல்வர் பதவி) சமன் செய்து ‘அங்கே சிரிப்பவர்கள் சிரிக்கட்டும்’ என தனது அரசியல் ஆளுமையை வெளிப்படுத்தியுள்ளார் நிதிஷ் குமார். 10-வது முறையாக முதல்வர் பதவி! – முதன்முதலில் இவர் மார்ச் … Read more

‘ராகுல் எங்கள் தலைவர்; அவருக்கு ஊக்கம் கொடுத்தோம்’ – கர்நாடக முதல்வர் சித்தராமையா @ டெல்லி

புதுடெல்லி: கர்நாடக மாநில முதல்வர் சித்தராமையா டெல்லிக்கு பயணமாக சென்றுள்ளார். இந்த பயணத்தில் மழை மற்றும் வெள்ளம் காரணமாக பயிர் சேதம் ஏற்பட்ட நிலையில் விவசாயிகளுக்கு நிவாரணம் கோரியும், மேகதாது அணை விவகாரம் குறித்தும் மத்திய அரசின் உதவியை அவர் கோரவுள்ளதாக தகவல். இந்நிலையில், சனிக்கிழமை அன்று டெல்லியில் செய்தியாளர்களை அவர் சந்தித்தார். “அமைச்சரவை மாற்றம் குறித்து எங்கள் அமைச்சர்கள் யாரும் எதுவும் பேசவில்லை. பிரதமர் மோடியை இன்று நான் சந்தித்திருக்க வேண்டும். பிஹார் தேர்தல் காரணமாக … Read more

Office காதலில் இந்தியவிற்கு 2வது இடம்! 10ல் 4 இந்தியர்கள் ஆஃபிஸ் டேட்டிங்கிற்கு ரெடி..

Workplace Secret Love Affairs India : இந்தியாவில் 10ல் 4 ஆண்கள் தங்களுடன் ஆபீஸில் வேலை பார்க்கும் பெண்களை டேட் செய்ய ரெடியாக இருப்பதாக ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது.   

“முஸ்லிம் லீக், மாவோயிஸ்ட், காங்கிரஸ் கட்சிகளை நாடு நிராகரித்துவிட்டது” – பிரதமர் மோடி

சூரத்: முஸ்லிம் லீக், மாவோயிஸ்ட், காங்கிரஸ் ஆகிய கட்சிகளை நாடு நிராகரித்துவிட்டதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். குஜராத்தின் சூரத் நகரில் நடைபெற்ற கூட்டத்தில் உரையாற்றிய பிரதமர் மோடி, “பிஹார் ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றியைப் பெற்றுள்ளது. குஜராத்தில் குறிப்பாக சூரத்தில் வசிக்கும் பிஹார் சகோதரர்கள், இந்த வெற்றிக் கொண்டாட்டத்தில் பங்கேற்க உரிமை உண்டு. குஜராத் மக்கள் என்னை முதல்வராக தேர்ந்தெடுத்தபோது, இந்தியாவின் வளர்ச்சிக்காக குஜராத்தின் வளர்ச்சியை நாங்கள் முன்னிருத்தினோம் என்பது உங்களுக்குத் தெரியும். பிஹார் மக்களும் … Read more

நடுங்க வைத்த சம்பவம்.. துண்டிக்கப்பட்ட பெண்ணின் தலை! காதலன் செய்த கொடூரம்

Noida Man Killed Woman : உத்தர பிரதேச மாநிலம் நொய்டாவில் பெண்ணின் தலையை துண்டித்து காதலன் கொலை செய்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  

பிஹார் தோல்வி எதிரொலி: அரசியலையும் குடும்பத்தையும் விட்டு விலகுவதாக லாலு மகள் ரோகிணி அறிவிப்பு

பாட்னா: அரசியலையும் தனது குடும்பத்தையும் விட்டு விலகுவதாக லாலு பிரசாத் யாதவின் இரண்டாவது மகளான ரோகிணி ஆச்சார்யா தெரிவித்துள்ளார். பிஹார் சட்டப்பேரவைத் தேர்தலில் லாலு பிரசாத் யாதவின் ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சி மிகப் பெரிய பின்னடைவை சந்தித்துள்ளது. கடந்த 2020-ல் நடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் 75 தொகுதிகளில் வெற்றி பெற்று மாநிலத்தின் மிகப் பெரிய அரசியல் சக்தியாக திகழ்ந்த அந்த கட்சி, இந்த தேர்தலில் 25 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றது. அக்கட்சி வழிநடத்திய மகா … Read more

மாதம் ரூ.2 லட்சம் சம்பளம்.. மத்திய அரசு பள்ளியில் வேலை.. பெண்களே மிஸ் பண்ணாதீங்க!

Central Governement Jobs: மத்திய அரசு பள்ளியில் காலிப் பணியிடங்கள் குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கு 10ஆம் வகுப்பு முடித்திருந்தாலே போதும்.

பாஜகவுக்கு எதிரான சக்திகளை ஒருங்கிணைக்க காங்கிரஸ் தவறிவிட்டது: சிபிஎம்

திருவனந்தபுரம்: பாஜகவுக்கு எதிரான சக்திகளை ஒருங்கிணைப்பதில் காங்கிரஸ் தவறிவிட்டதாக சிபிஎம் குற்றம் சாட்டியுள்ளது. பிஹார் சட்டப்பேரவைத் தேர்தலில் மெகா கூட்டணியில் (இண்டியா கூட்டணி) இடதுசாரி கட்சிகள் இடம் பெற்றிருந்தன. சிபிஐ (எம்எல்) 20 தொகுதிகளிலும், சிபிஐ 9 தொகுதிகளிலும், சிபிஎம் 4 தொகுதிகளிலும் போட்டியிட்டன. மொத்தம் 33 தொகுதிகளில் போட்டியிட்ட போதிலும் 3 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றன. இந்த தேர்தல் முடிவு இடதுசாரிகளுக்கு பெரிய பின்னடைவாகப் பார்க்கப்படுகிறது. இந்நிலையில், பாஜகவின் தொடர் வெற்றியைத் தடுப்பதற்கு ஏற்ப … Read more

பிஹார் தேர்தல்: 23% வாக்குகளுடன் ஆர்ஜேடி முதலிடம்

பாட்னா: பிஹார் சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றி பெற்ற சட்டப்பேரவைத் தொகுதிகளின் எண்ணிக்கையில் மூன்றாவது இடத்துக்கு தள்ளப்பட்டாலும், வாக்கு சதவீதத்தில் ஆர்ஜேடி முதலிடம் பிடித்துள்ளது. நேற்று அறிவிக்கப்பட்ட பிஹார் சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகளின்படி, தேசிய ஜனநாயகக் கூட்டணி 202 இடங்களில் வெற்றி பெற்றது. இதில், பாஜக 89 தொகுதிகளிலும், ஜேடியு 85 தொகுதிகளிலும், லோக் ஜனசக்தி கட்சி (ராம் விலாஸ்) 19 தொகுதிகளிலும், இந்துஸ்தானி அவாமி மோர்ச்சா 5 தொகுதிகளிலும், ராஷ்ட்ரிய லோக் மோர்ச்சா 4 இடங்களிலும் வெற்றி … Read more