குஜராத் கலவரம் தொடர்பான அனைத்து வழக்குகளையும் முடித்து வைத்த உச்சநீதிமன்றம்..! – நிலுவையில் இருக்கும் ஒரே ஒரு வழக்கு..!

குஜராத்தில் 2002 கோத்ரா கலவரத்தைத் தொடர்ந்து தொடங்கப்பட்ட அனைத்து வழக்குகளையும் உச்ச நீதிமன்றம் இன்று முடித்து வைத்தது. 1992 ஆம் ஆண்டு அயோத்தியில் பாபர் சர்ச்சைக்குரிய கட்டிடம் இடிக்கப்பட்டது தொடர்பாக உத்தரப்பிரதேச அரசு மற்றும் அதன் அதிகாரிகளுக்கு எதிராக தொடரப்பட்ட அவமதிப்பு மனுக்களுக்கு உச்ச நீதிமன்றம் முடித்து வைத்தது. உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியு.யு.லலித் தலைமையிலான அமர்வு முன்பு குஜராத்தில் 2002ஆம்ஆண்டு நடந்த கோத்ரா கலவர வழக்குகள் தொடர்பான மேல்முறையீடு மனுக்கள் விசாரணைக்குவந்தன. அப்போது வாதிட்ட மூத்த … Read more

கெட்டி மேளம் கொட்டி.. மலர் மாலைகள் அணிவித்து உறவினர்களுடன் வைர விழா கொண்டாடிய தம்பதி: கிருஷ்ணகிரியில் நெகிழ்ச்சி..!!

கிருஷ்ணகிரி: ஓசூர் அருகே வயது முதிர்ந்த தம்பதிக்கு வைர விழா திருமணம் நடத்தி உறவினர்கள் மற்றும் ஊர்மக்கள் ஆசிபெற்றனர். கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அடுத்த தேன்கனிக்கோட்டை டி.ஜி. தோட்டை கிராமத்தில் வசிக்கும் முனியப்பா 100 வயதை கடந்தார். அவருடைய மனைவி குண்டம்மா என்கின்ற மாரம்மாவுக்கு 96 வயதாகிறது. ஆரோகியத்துடன் வாழ்ந்து வரும் இவர்களது நூற்றாண்டு விழாவை குடும்பத்தினர் கொண்டாடினர். தேன்கனிக்கோட்டை கதிலட்சுமி – நரசிம்மசுவாமி கோயிலில் நடைபெற்ற விழாவில் வைரவிழா கொண்டாடும் இந்த தம்பதியினருக்கு புரோகிதர்கள் வேத … Read more

என்னையே அட்டாக் பண்றீயா! தாக்க வந்த புலிய தெறிச்சு ஓட விட்ட காளை! – வீடியோ

தைரியம், துணிச்சல் என்பது எல்லோருக்குள்ளும் இருப்பது. சிறு உயிரினங்கள்கூட கொடூரமான பெரிய விலங்குகளை எதிர்த்து வெற்றிபெறுவதை அவ்வப்போது நாம் சமூக ஊடகங்களில் பார்ப்பதுண்டு. அப்படி ஒரு சம்பவத்தை அருமையான வாசகங்களுடன் பகிர்ந்திருக்கிறார் புவனேஸ்வரைச் சேர்ந்த ஐஎஃப்எஸ் அதிகாரி. இந்திய வனத்துறை அதிகாரி சுஷாந்தா நந்தா தனது ட்விட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில் புலி ஒன்று மெதுவாக பதுங்கி பதுங்கி சாலையில் வந்துகொண்டிருந்த காளையை தாக்க முற்படுகிறது. காளை சிறிதும் பயப்படாமல் துணிச்சலாக புலியை தாக்குவதுபோல் … Read more

“தனிநபர் தாக்குதலுக்கு அன்னா ஹசாரேவை பயன்படுத்துகிறது பாஜக” – கடிதத்துக்கு கேஜ்ரிவால் பதிலடி

புதுடெல்லி: தன் மீது அரசியல் தாக்குதல் நடத்துவதற்காக காந்தியவாதியான அன்னா ஹசாரேவை பாஜக பயன்படுத்துகிறது என்று டெல்லி முதல்வரும், ஆம் ஆத்மி ஒருங்கிணைப்பாளருமான அரவிந்த் கேஜ்ரிவால் பதிலடி தந்துள்ளார். தலைநகர் டெல்லியின் புதிய மதுக்கொள்ளையில் ஊழல் நடந்திருப்பதாக எழுந்த குற்றச்சாட்டைத் தொடர்ந்து டெல்லி அரசியலில் சிபிஐ சோதனை, விசாரணை, சிறப்பு சட்டப்பேரவைக் கூட்டம் என்ற பரபரப்புக்கு இடையில், மூத்த சமூக ஆர்லவலரும் காந்தியாவதியுமான அன்னா ஹசாரே, ஆரம்பகாலத்தில் தன்னைப் பின்பற்றிவந்த அரவிந்த் கேஜ்ரிவாலை “அதிகாரபோதை”யில் இருப்பாதாக கடுமையாக … Read more

ஆபாசமாக பேசி கிண்டல் செய்ததால் ஆத்திரம்; பெயிண்டரை ஓடஓட விரட்டி கொன்று சடலத்தை தாயின் காலடியில் கிடத்திய மகன்

திருமலை: ஆந்திராவில் தாயை ஆபாசமாக கிண்டல் செய்த பெயிண்டரை ஓடஓட விரட்டி வாலிபர் கொலை செய்து, அவரது சடலத்தை தாயின் காலில் எடுத்து வந்து போட்டார். ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் மாவட்டம் அல்லிபுரத்தை சேர்ந்தவர் கொந்தினாசீனு(45), பெயிண்டர். இவர் தினமும் அல்லிபுரத்தில் உள்ள ஒரு ஓட்டல் முன் நிற்பது வழக்கம். அப்போது, பெயிண்டர் வேலைக்கு யாராவது வந்து அவரை அழைத்துசெல்வார்களாம். அதேபோல் சீனு நேற்றும் காத்திருந்தார். அப்போது அதே பகுதியில் வீட்டு வேலைக்கு சென்ற கவுரி(38) என்ற … Read more

ஒரு பக்கம் உலக பணக்காரர்! மறுபக்கம் பெரும் கடனாளி..கவுதம் அதானியின் நிதி நிலவரம்தான் என்ன?

இந்தியாவைச் சேர்ந்த அதானி குழுமத்தின் தலைவர் கவுதம் அதானி உலகின் 3ஆவது பெரும் பணக்காரராக உருவெடுத்துள்ளார். ஆனால் இந்தியாவில் மிக அதிக கடன் வாங்கிய நிறுவனங்களின் பட்டியலிலும் அவரது நிறுவனம்தான் முன்னணியில் இருக்கிறது. அதானி குழுமத் தலைவர் கௌதம் அதானி சுமார் 11 லட்சம் கோடி ரூபாய் சொத்து மதிப்புடன் உலகின் 3ஆவது பெரிய பணக்காரர் என்ற இடத்தை பிடித்துள்ளதாக BLOOMBERG BILLONAIRES INDEX தெரிவித்துள்ளது. 60 வயதான கௌதம் அதானி, ஏற்கனவே உலகின் 3ஆவது பணக்காரராக … Read more

ஓயாமல் சண்டை போட்ட மனைவி… கணவன் எடுத்த அதிர்ச்சி முடிவு… என்ன கொடும சார் இது?

வீட்டு்க்கு வீடு வாசப்படி… சண்டையில கிழியாத சட்டை எங்கயிருக்கு… இதுபோன்ற சொலவடைகளின் வரிசையில் ‘விடு…விடு… சண்டை இல்லாத குடும்பம் எங்க இருக்கு’ என்ற சமாதான வார்த்தைகளை அடிக்கடி பயன்படுத்தும் அளவுக்கு நம் குடும்ப அமைப்பு முறையில் நாளுக்கு நாள் சண்டை, சச்சரவுகள் அதிகரிlத்து வருகின்றன. மாமியார் -மருமகள் சண்டை, நாத்தனார் கொடுமை, கணவன் -மனைவிக்கு இடையே கருத்து வேறுபாடு என குடும்ப வன்முறைகள் ஏராளம். இந்த வன்முறைகளில் பாதிக்கப்படுபவர்கள் பெரும்பாலும் பெண்களே என்ற கருத்து பரவலாக இருந்துவரும் … Read more

அதிகார போதையில் இருக்கிறீர்கள் : கெஜ்ரிவாலுக்கு அன்னா ஹசாரே எழுதிய கடிதம்

அன்னா ஹசாரே டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு எழுதியுள்ள கடிதத்தில், நீங்கள் முதலமைச்சராக பதவியேற்ற பிறகு முதல்முறையாக உங்களுக்கு கடிதம் எழுதுகிறேன். ஏனென்றால் உங்கள் அரசாங்கத்தின் மதுபானக் கொள்கை குறித்த சமீபத்திய செய்திகளால் நான் வேதனைப்படுகிறேன். “உங்கள் ‘ஸ்வராஜ்’ புத்தகத்தில் மதுபானக் கொள்கைகள் பற்றி முக்கியமான விஷயங்களை எழுதியிருந்தீர்கள். அதற்கு நான் முன்னுரை எழுதிக் கொடுத்தேன்.  அதில், மக்களின் சம்மதம் இல்லாமல் அந்தப் பகுதியில் மதுபானக் கடைகளே திறக்கக் கூடாது எனக் கூறியிருந்தீர்கள். முதலமைச்சரான பிறகு அதையெல்லாம் … Read more

BMW நிறுவனத்துடன், எல்என்டி டெக்னாலஜிஸ் நிறுவனம் பல மில்லியன் டாலர் ஒப்பந்தம்..!

அதிநவீன சொகுசு கார்கள் உற்பத்தியில் முன்னணி நிறுவனமான BMW குழுமத்தின் ஹைப்ரிட் மின்சார வாகனங்களுக்கு, பொறியியல் தொழில்நுட்பம் மற்றும் ஆராய்ச்சி பணிகளை மேற்கொள்ள எல்என்டி நிறுவனம் 5 ஆண்டுகளுக்கான பல மில்லியன் டாலர் மதிப்புள்ள ஒப்பந்தத்தை பெற்றுள்ளது. இதன்மூலம், BMW நிறுவனத்தின் தகவல் மற்றும் பொழுதுபோக்கு சேவைகளை வழங்கும் பணிமனைக்கு உயர்நிலை பொறியியல் சேவைகளை எல்என்டி டெக்னாலஜிஸ் நிறுவனம் வழங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. Source link

சபரிமலை கோயில் தங்க மேற்கூரையில் 13 இடங்களில் நீர்க்கசிவு; சீரமைப்பு பணி தொடங்கியது

திருவனந்தபுரம்: சபரிமலை கோயில் தங்க மேற்கூரையில் நீர்க்கசிவு ஏற்பட்ட பகுதியில் சீரமைப்பு பணிகள் தொடங்கின. பிரசித்தி பெற்ற சபரிமலை ஐயப்பன் கோயிலில் மூல விக்ரகம் அமைந்துள்ள பகுதி  கோயில் என்று அழைக்கப்படுகிறது. இந்த பகுதி மேற்கூரை முழுவதும் தங்கத் தகடுகளால் வேயப்பட்டதாகும். இந்த நிலையில் மழை பெய்யும்போது தங்க மேற்கூரையில் இருந்து நீர் கசிவது கண்டுபிடிக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து மேற்கூரையை உடனடியாக சீரமைக்க திருவிதாங்கூர் தேவசம்போர்டு தீர்மானித்தது. இதற்கான பணிகள் நேற்று தொடங்கின. பிரபல சிற்பிகளான பழனி … Read more