அதிகார போதையில் இருக்கிறீர்கள் : கெஜ்ரிவாலுக்கு அன்னா ஹசாரே எழுதிய கடிதம்

அன்னா ஹசாரே டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு எழுதியுள்ள கடிதத்தில், நீங்கள் முதலமைச்சராக பதவியேற்ற பிறகு முதல்முறையாக உங்களுக்கு கடிதம் எழுதுகிறேன். ஏனென்றால் உங்கள் அரசாங்கத்தின் மதுபானக் கொள்கை குறித்த சமீபத்திய செய்திகளால் நான் வேதனைப்படுகிறேன். “உங்கள் ‘ஸ்வராஜ்’ புத்தகத்தில் மதுபானக் கொள்கைகள் பற்றி முக்கியமான விஷயங்களை எழுதியிருந்தீர்கள். அதற்கு நான் முன்னுரை எழுதிக் கொடுத்தேன்.  அதில், மக்களின் சம்மதம் இல்லாமல் அந்தப் பகுதியில் மதுபானக் கடைகளே திறக்கக் கூடாது எனக் கூறியிருந்தீர்கள். முதலமைச்சரான பிறகு அதையெல்லாம் … Read more

BMW நிறுவனத்துடன், எல்என்டி டெக்னாலஜிஸ் நிறுவனம் பல மில்லியன் டாலர் ஒப்பந்தம்..!

அதிநவீன சொகுசு கார்கள் உற்பத்தியில் முன்னணி நிறுவனமான BMW குழுமத்தின் ஹைப்ரிட் மின்சார வாகனங்களுக்கு, பொறியியல் தொழில்நுட்பம் மற்றும் ஆராய்ச்சி பணிகளை மேற்கொள்ள எல்என்டி நிறுவனம் 5 ஆண்டுகளுக்கான பல மில்லியன் டாலர் மதிப்புள்ள ஒப்பந்தத்தை பெற்றுள்ளது. இதன்மூலம், BMW நிறுவனத்தின் தகவல் மற்றும் பொழுதுபோக்கு சேவைகளை வழங்கும் பணிமனைக்கு உயர்நிலை பொறியியல் சேவைகளை எல்என்டி டெக்னாலஜிஸ் நிறுவனம் வழங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. Source link

சபரிமலை கோயில் தங்க மேற்கூரையில் 13 இடங்களில் நீர்க்கசிவு; சீரமைப்பு பணி தொடங்கியது

திருவனந்தபுரம்: சபரிமலை கோயில் தங்க மேற்கூரையில் நீர்க்கசிவு ஏற்பட்ட பகுதியில் சீரமைப்பு பணிகள் தொடங்கின. பிரசித்தி பெற்ற சபரிமலை ஐயப்பன் கோயிலில் மூல விக்ரகம் அமைந்துள்ள பகுதி  கோயில் என்று அழைக்கப்படுகிறது. இந்த பகுதி மேற்கூரை முழுவதும் தங்கத் தகடுகளால் வேயப்பட்டதாகும். இந்த நிலையில் மழை பெய்யும்போது தங்க மேற்கூரையில் இருந்து நீர் கசிவது கண்டுபிடிக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து மேற்கூரையை உடனடியாக சீரமைக்க திருவிதாங்கூர் தேவசம்போர்டு தீர்மானித்தது. இதற்கான பணிகள் நேற்று தொடங்கின. பிரபல சிற்பிகளான பழனி … Read more

தற்கொலையில்முதலிடம் வகிக்கும் மாநிலம் எது தெரியுமா..? – ஓர் அதிர்ச்சி ரிப்போர்ட்..!

தற்கொலை செய்து கொள்வதில் மகராஷ்டிரா முதலிடத்திலும் தமிழகம் இரண்டாம் இடத்திலும் உள்ளது. இந்தநிலையில் தற்கொலை செய்பவர்களில், தினசரி ஊதியம் பெறுபவர்கள் எண்ணிக்கை 37,751, சுயதொழில் செய்பவர்கள் 18,803 மற்றும் வேலையில்லாதவர்கள் 11,724 என்று தேசிய குற்ற ஆவணக் காப்பகம் (NCRB) தெரிவித்துள்ளது. என்.சி.ஆர்.பி அறிக்கையின்படி, தொழில் சார்ந்த பிரச்சனைகள், தனிமை உணர்வு, துஷ்பிரயோகம், வன்முறை, குடும்ப பிரச்சனைகள், மனநல கோளாறுகள், மதுவுக்கு அடிமையாதல், நிதி இழப்பு மற்றும் நாள்பட்ட வலி ஆகியவை நாட்டில் தற்கொலை சம்பவங்களுக்கு முக்கிய … Read more

ரூ.12 ஆயிரத்துக்கு கீழ் விலையுள்ள சீன செல்போன்கள் விற்பனையை தடை செய்யும் எந்த திட்டமும் இல்லை; ஒன்றிய அமைச்சர் விளக்கம்.!

புதுடெல்லி: ரூ.12 ஆயிரத்துக்கு கீழ் விலையுள்ள சீன செல்போன்கள் விற்பனையை தடை செய்யும் எந்த திட்டமும் இல்லை என்று ஒன்றிய அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் உறுதிப்படுத்தியுள்ளார். உலகம் முழுவதிலும் சீன நிறுவனங்களின் போன்கள் விற்பனை ஆதிக்கம் அதிகமாக உள்ளது. இந்தியாவில் விற்பனையாகும் 80 சதவீத செல்போன்கள் சீன நிறுவனங்களின் தயாரிப்பு என்பதால், இந்திய செல்போன் நிறுவனங்கள் பெரும் இழப்பை சந்தித்துள்ளன. அதனால் இந்திய தயாரிப்புகளுக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் 12 ஆயிரம் ரூபாய் விலைக்கு குறைவான உள்ள … Read more

ரயில் பயணிகள் கவனத்திற்கு.. டிக்கெட் ரத்து செய்தால் அபராத தொகைக்கும் GST வசூலிக்கப்படும்!

இந்தியாவில் பண்டிகை காலம் அடுத்தடுத்து வரும் வேளையில் ரயில் பயணிகளுக்கு கவலை அளிக்கும் வகையில் முக்கியமான அறிவிப்பை மத்திய அரசு வெளியிட்டிருக்கிறது. நீண்ட நேரம் ஆனாலும் குறைந்த விலையிலான போக்குவரத்து சேவையை கொண்டிருக்கும் ரயில் போக்குவரத்தை அன்றாடம் கோடிக்கணக்கான மக்கள் பயன்படுத்தி வருகின்றனர். அதுவும் தொலைதூர பயணம் என்றாலே ரயில் சேவை அனைவருக்கும் எட்டும் போக்குவரத்தாக இருக்கும். அந்த ரயில் போக்குவரத்தை மேற்கொள்ள பல்வேறு வசதிகள் அரசு தரப்பில் மேற்கொள்ளப்பட்டு வந்தாலும் சில அதிர்ச்சியான அறிவிப்புகளை வெளியிட்டு … Read more

நாடு முழுவதும் உயர் நீதிமன்றங்களில் 20 ஆண்டுகளுக்கு மேலாக நிலுவையில் உள்ள வழக்குகள் 2.52 லட்சம்

புதுடெல்லி: நாட்டில் உள்ள 25 உயர் நீதிமன்றங்களில் 2.52 லட்சம் வழக்குகள் கடந்த 20 ஆண்டுகளுக்கும் (ஆக.27 நிலவரப்படி) மேலாக நிலுவையில் உள்ளது தெரியவந்துள்ளது. உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்த என்.வி.ரமணா சமீபத்தில் ஓய்வு பெற்றார். நீதிபதிகளின் பற்றாக்குறையால் வழக்குகள் தேக்கமடைந்துள்ளதை கருத்தில்கொண்டு, தனது 16 மாத பணிக்காலத்தில் நாட்டில் உள்ள உயர் நீதிமன்றங்களில் காலியாக இருந்த நீதிபதி பணியிடங்களுக்கு புதிய நீதிபதிகளை நியமனம் செய்தார். இருப்பினும், தேங்கியுள்ள வழக்குகளுக்கு தீர்வு காணும் விகிதத்தில் அந்த … Read more

சீனியர்கள் விலகல்: காங்கிரஸ் கட்சிக்கு பாதிப்பை ஏற்படுத்துமா?

சுதந்திர இந்தியாவில் கிட்டத்தட்ட அரை நூற்றாண்டு காலத்துக்கு மேலாக ஆட்சி செய்து வந்த காங்கிரஸ் கட்சியின் நிலைமை தற்போது பரிதாபத்துக்குரியதாக மாறி வருகிறது. பல்வேறு மாநிலங்களில் கோலோச்சி வந்த அக்கட்சி படிப்படியாக கீழே இறங்கி பாஜக கொடியை பறக்க விட வழிவகை செய்துள்ளது. கடந்த ஆண்டுகளில் மக்களவை மற்றும் மாநில சட்டமன்றத் தேர்தல்களில் மோசமான செயல்பாட்டிற்குப் பிறகு, சிறந்த வாய்ப்புகளுக்காக காங்கிரஸ் கட்சியின் இளம் தலைவர்கள் தொடங்கி சீனியர்கள் வரை ராஜினாமா செய்து வருகின்றனர். அவர்கள் அனைவரும் … Read more

Shocking! ஆட்டோவின் கூரையில் பயணித்த மாணவர்கள்; அதிர்ச்சியூட்டும் வீடியோ!

ஆட்டோ ரிக்ஷாவின் மேல் அமர்ந்து மூன்று மாணவர்கள் பயணித்ததை காட்டும் வீடியோ பல்வேறு சமூக ஊடக தளங்களில் வைரலாகி வருகிறது. வீடியோவில், 11-13 வயதுக்குட்பட்ட 3 மாணவர்கள், ஆட்டோவின் மேல் அமர்ந்து பயணிப்பதை கேமராவில் ஒருவரு பதிவு செய்து, சமூக ஊடகத்தில் பகிர்ந்துள்ளார். இந்த வீடியோ வைரலானதை அடுத்து, ‘அடையாளம் தெரியாத டிரைவர் மீது பரேலியில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.  மாணவர்களின் உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும் வகையில் செயல்பட்ட ஆட்டோ ஓட்டுநரை பலர் விமர்சித்துள்ளனர். ட்விட்டர் பயனர் … Read more

குஜராத் பேரவை தேர்தலில் ஆம்ஆத்மி முதல்வர் வேட்பாளர் மேதா பட்கர்? பாஜக நிர்வாகி தகவல்

புதுடெல்லி: குஜராத் பேரவை தேர்தலில் ஆம்ஆத்மி சார்பில் முதல்வர் வேட்பாளராக மேதா பட்கர் களம் இறக்கப்படுவார் என்று மும்பை பாஜக செய்தித் தொடர்பாளர் சுரேஷ் நகுவா தெரிவித்தார்.  குஜராத்தில் வரும் நவம்பர் – டிசம்பர் மாதம் வாக்கில் சட்டப் பேரவை தேர்தல் நடைபெறுகிறது. ஆளும் பாஜகவுக்கு எதிராக ஆம்ஆத்மி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் குஜராத்தில் தீவிர பிரசாரம் மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில் ஆம்ஆத்மி சார்பில் முதல்வர் வேட்பாளர் யார்? என்ற கேள்வி எழுந்துள்ள நிலையில், இதுகுறித்து மும்பை … Read more