ராகுலை வெற்றிகரமான தலைவராக உருவாக்க முயற்சித்தோம்.. ஆனால்… குலாம் நபி ஆசாத் பளீச்!

ராகுல் காந்தியை வெற்றிகரமான தலைவராக உருவாக்க முயற்சித்தோம். ஆனால் அவர் விருப்பம் காட்டவில்லை என, காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகிய குலாம் நபி ஆசாத் தெரிவித்து உள்ளார். காங்கிரஸ் மூத்தத் தலைவராக இருந்த குலாம் நபி ஆசாத், கடந்த 26 ஆம் தேதி, அக்கட்சியில் இருந்து விலகினார். பல ஆண்டுகள் காங்கிரஸ் கட்சியின் பல்வேறு முக்கியப் பொறுப்புகளில் இருந்த குலாம் நபி ஆசாத், அக்கட்சியில் இருந்து விலகியது, பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும், 2019 நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் … Read more

உலோகப் பொருட்களின் மீதத்தை பயன்படுத்தி அயர்ன் மேன் சூட் தயாரித்த இளைஞர் மகேந்திரா குழுமத்தில் தனது பொறியியல் கல்வியை துவங்கினார்

அயர்ன் மேன் ஹாலிவுட் திரைப்படத்தில் வருவது போன்ற ஆடையை, உலோகம் மற்றும் எலக்ட்ரானிக் பொருட்களின் மீதத்தை பயன்படுத்தி உருவாக்கி பிரபலமான மணிப்பூர் இளைஞர், மகேந்திரா குழுமத்தில் தனது பொறியியல் கல்வியை துவங்கியுள்ளார். இதுகுறித்து தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்ட ஆனந்த் மகேந்திரா, ஹைதரபாத்தில் உள்ள மகேந்திரா பல்கலைக்கழகத்தில் பிரேம் பொறியியல் கல்வியை துவங்கியுள்ளதாகவும், மேம்பட்ட கார் கதவு திறக்கும் வழிமுறைகள் குறித்து அவர் பயிற்சி பெற்றுள்ளதாகவும் குறிப்பிட்டார்.       Source link

CUET PG தேர்வுக்கு விண்ணப்பித்துள்ளவர்களுக்கான ஹால் டிக்கெட் இணையத்தில் வெளியீடு

டெல்லி: CUET PG தேர்வுக்கு விண்ணப்பித்துள்ளவர்கள் ஹால் டிக்கெட்டை இணையத்தில் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் என தேசிய தேர்வுமுகாமாய் தெரிவித்துள்ளது. ஹால் டிக்கெட்டை http://cuet.nta.nic.in என்ற இணையத்தில் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் என தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது. மத்திய பல்கலைக்கழகங்களில் முதுநிலை படிப்புல சேர CUET PG நுழைவு தேர்வு செப்.1,2,3 தேதிகளில் நடைபெறுகிறது.

”80% நீதிபதிகள், 95% பத்திரிகையாளர்கள் மது அருந்துகின்றனர்” – பப்பு யாதவ் குற்றச்சாட்டு

பத்திரிகையாளர்கள், நீதிபதிகள் மற்றும் அதிகார வர்க்கத்தினர்தான் அதிகளவில் மது அருந்துகின்றனர் என ஜன் அதிகார் கட்சியின் தலைவர் ராஜேஷ் ரஞ்சன் என்கிற பப்பு யாதவ் தெரிவித்துள்ளார். பீகாரில் அமலில் உள்ள பூரணமதுவிலக்கு குறித்து அவர் காட்டமான விமர்சனத்தை முன்வைத்துள்ளார். பப்பு யாதவ் தன்னுடைய பேட்டியில்,”‘வறண்ட மாநிலமான’ குஜராத்தில் மக்கள் இறக்கின்றனர். அதேசமயம் மதுவிற்பனை மூலம் டெல்லி அரசு தன்னுடைய பொருளாதாரத்தை மேம்படுத்துவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 80% நீதிபதிகள், 90% அதிகாரவர்க்கத்தினர் மற்றும் 95% பத்திரிகையாளர்கள் மது அருந்துகின்றனர்” … Read more

ராகுல் காந்தி அரசியலுக்கு வேஸ்ட்: குலாம் நபி அடுக்கும் காரணங்கள்

புதுடெல்லி: “ராகுல் காந்தி ஒரு நல்ல மனிதர். ஆனால் அவரிடம் அரசியல் சூட்சுமமும், கடின உழைப்பும் இல்லை” என்று குலாம் நபி ஆசாத் கூறியுள்ளார். காங்கிரஸ் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உள்ளிட்ட அனைத்தையும் துறந்து கட்சியிலிருந்து விலகி அதிர்ச்சி கொடுத்த மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத் அண்மையில் தனியார் தொலைக்காட்சிக்கு ஒரு பேட்டியளித்தார். அதில், “ராகுல் காந்தி ஒரு நல்ல மனிதர்; ஆனால் அவரிடம் அரசியல் சூட்சுமமும், கடின உழைப்பும் இல்லை” என்று கூறியுள்ளார். … Read more

சிட்டியாக மாறிய சாவர்க்கர்: பாடபுத்தக்கத்தில் புது உருட்டு!

“என்னுடைய பேச்சுக்கு மன்னிப்பு கேட்க மாட்டேன். என்னுடைய பெயர் ராகுல் சாவர்க்கர் அல்ல, ராகுல் காந்தி” என்று ஒருமுறை பொதுக்கூட்டம் ஒன்றில் காங்கிரஸ் எம்.பி., ராகுல் காந்தி பேசியிருந்தார். ‘வீர்’ சாவர்க்கர் என்று பாஜகவினரால் அழைக்கப்படும் சாவர்க்கரை மன்னிப்புக் கடிதத்துடன் தொடர்புபடுத்தி பாஜகவை எதிர்க்கும் அரசியல் கட்சிகள் விமர்சிப்பது வழக்கம். அந்தமான் சிறையில் இருந்து தப்பிக்க பிரிட்டிஷாரிடம் அவர் மன்னிப்புக் கடிதம் எழுதி கொடுத்தார் என்பதே இதற்கு காரணமாக கூறப்படுகிறது. சாவர்க்கர் பல முறை ஆங்கிலேயர்களிடம் மன்னிப்பு … Read more

ரிலையன்ஸ் சில்லறை வணிகத்தின் புதிய தலைவராக உருவெடுத்தார் இஷா முகேஷ் அம்பானி

மும்பை: ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட்  தலைவர் முகேஷ் அம்பானி மகள் இஷா அம்பானியை தனது குழுமத்தின் சில்லறை வணிகத்தின் புதிய தலைவராக அறிமுகப்படுத்தினார். சாதனை பதிவை செய்துள்ள ரிலையன்ஸ் குழுமத்தின் சில்லறை வணிகப் பிரிவு, ₹2 லட்சம் கோடி வருவாயை எட்டியதாகவும், ஆசியாவின் முதல் 10 சில்லறை விற்பனையாளர்களுள் ஒன்றாக இருப்பதாகவும் முகேஷ் அம்பானி தெரிவித்தார். திங்கள்கிழமை (ஆகஸ்ட் 29) நடைபெற்ற ரிலையன்ஸ் நிறுவனத்தின் 45 வது ஆண்டு பொதுக் கூட்டத்தில் இந்தத் தகவலை வெளியிட்டார். மகள் … Read more

பிள்ளைகளுக்கு தாய் வழியில் சாதிச்சான்றிதழ் தர ஆய்வு: புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி அறிவிப்பு

புதுச்சேரி: பிள்ளைகளுக்கு தாய் வழியில் சாதிச்சான்றிதழ் தர ஆய்வு செய்யப்படும் என முதல்வர் ரங்கசாமி அறிவித்தார். ஒன்றிய அரசின் வழிகாட்டுதல்படி தந்தை வழியில் பிள்ளைகளுக்கு சாதிச்சான்றிதழ் வழங்கப்பட்டு வருகிறது. 

ஜியோ 5ஜி சேவை எப்போது? – முகேஷ் அம்பானி வெளியிட்ட மாஸ் அறிவிப்பு

வருகிற தீபாவளிக்குள் ஜியோ 5ஜி சேவை முதற்கட்டமாக மெட்ரோ நகரங்களில் கொண்டுவரப்படும் என்று ரிலையன்ஸ் நிறுவனத்தின் பொதுக்குழு கூட்டத்தில் முகேஷ் அம்பானி தெரிவித்துள்ளார். ரிலையன்ஸ் இண்டட்ரீஸ் நிறுவனத்தின் 45-வது ஆண்டு பொதுக்கூட்டம் மும்பையில் இன்று மதியம் நடைபெற்றது. இதில் பேசிய அந்நிறுவனத்தின் தலைவர் முகேஷ் அம்பானி, “உலகின் அதிவேக 5ஜி சேவை திட்டத்தை ரிலையன்ஸ் ஜியோ தயாரித்துள்ளது. வருகிற தீபாவளிக்குள் சென்னை, மும்பை, கொல்கத்தா, டெல்லி ஆகிய நகரங்களில் முதற்கட்டமாக ஜியோ 5ஜி இணைய சேவை வழங்கப்பட … Read more

asia cup india vs pakistan: அமித் ஷா மகன் தேசியக் கொடியை வாங்க மறுத்தது ஏன்?

டி20 ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டிகள் துபாயில் நடைபெற்று வருகின்றன. இந்த போட்டியில் நேற்று (ஆகஸ்ட் 28) பரம எதிரிகளான இந்திய அணியும், பாகிஸ்தான் அணியும் மோதின. வழக்கம்போல் பரபரப்பாக நடைபெற்ற இந்த போட்டியில் 5 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி பெற்றது. அனல் பறந்த இப்போட்டியை பல்லாயிரக்கணக்கான ரசிகர்கள் நேரில், உலகெங்கும் கோடிக்கணக்கான ரசிகர்கள் டிவியிலும் கண்டு களித்தனர். போட்டியை நேரில் கண்டுகளித்த விஐபிகளில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் மகனும், இந்திய கிரிக்கெட் … Read more