ஆட்டோவில் அழைத்து சென்றபோது குண்டும், குழியுமான சாலையில் பெண்ணுக்கு பிரசவம்

மும்பை: மும்பையில் குண்டும், குழியுமான சாலையில் பெண்ணுக்கு குழந்தை பிறந்தது. ஆனால் அவரது கணவர் விருப்பப்படி மருத்துவமனையில் பிரசவம் பார்க்க முடியாத நிலை ஏற்பட்டது. மகாராஷ்டிரா மாநிலம் சாந்தாகுரூஸ் அடுத்த சாஸ்திரிநகர் பகுதியில் ரமேஷ் யாதவ் வசித்து வருகிறார். இவரது மனைவிக்கு முதன் முறையாக பிரசவம் பார்ப்பதற்காக, கிராமத்தில் இருந்து நகரத்திற்கு அழைத்து சென்றார். ஆனால் முதல் குழந்தை பிறந்த சில நாட்களிலேயே இறந்து விட்டது. மருத்துவ வசதி இல்லாததால், தனது முதல் குழந்தை இறந்ததாக வருந்தினார். … Read more

இந்திய ராணுவத்தில் 1 லட்சம் ஜவான்கள் பற்றாக்குறை

சென்னை: இந்திய ராணுவத்தில் 1 லட்சம் ஜவான்கள் பற்றாக்குறை உள்ளது தெரியவந்துள்ளது. இந்திய ராணுவத்தில் தரைப்படையில் தேவையான வீரர்கள் சீரான இடைவெளியில் தேர்வு செய்யப்படுவார்கள். ஆனால், கரோனா காரணமாக கடந்த 2020-21 மற்றும் 2021-22 ஆண்டுகளில் இந்த தேர்வுகள் நடைபெறவில்லை. இந்நிலையில், கடந்த ஜூன் மாதம் ‘அக்னிபத்’ திட்டத்தின் கீழ் ‘அக்னி வீரர்கள்’ தேர்வு செய்யும் திட்டத்திற்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்தது. இந்தத் திட்டத்தின்கீழ் தேர்வு செய்யப்படும் அக்னி வீரர்களுக்கு, அபாயம் மற்றும் சிரமப்படிகளுடன் ஈர்க்கும் … Read more

இலவசங்கள் தொடர்பான வழக்கு 3 நீதிபதிகள் கொண்ட அமர்வுக்கு மாற்றம்.. உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி

இலவசங்கள் தொடர்பான வழக்கை 3 நீதிபதிகள் கொண்ட அமர்வுக்கு மாற்றி உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா உத்தரவிட்டுள்ளார்.  தேர்தல்களில் அரசியல் கட்சிகள் இலவசங்கள் வழங்குவது தொடர்பான அறிவிப்புகளை வெளியிடுவதற்கு எதிராக பாஜகவை சேர்ந்த அஸ்வினி உபாத்யாய் உள்ளிட்டோர் பொதுநல வழக்கு தொடர்ந்தனர். இலவச திட்ட அறிவிப்புகளை முறைப்படுத்த வேண்டும் என்று கோரி இருந்தனர். தலைமை நீதிபதி என்.வி.ரமணா இன்றுடன் ஓய்வுபெறும் நிலையில், 70 ஆண்டு கால உச்சநீதிமன்ற வரலாற்றில் முதல்முறையாக அவரது அமர்வில் முதல் வழக்காக, இலவசங்கள் … Read more

இறப்பதற்கு முன் உடலில் காயங்கள், கீறல்கள் நடிகைக்கு பாலியல் துன்புறுத்தல் இருந்ததா?.. கொலை வழக்கில் உதவியாளர், நண்பர் கைது

பனாஜி: நடிகை சோனாலி போகத் மரண விவகாரத்தில் அவரது உதவியாளர், நண்பர் ஆகியோர் மீது கொலை வழக்கு பதியப்பட்டுள்ளது. தற்போது அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். அரியானா மாநில நடிகையும், பாஜக பிரமுகருமான சோனாலி போகத் (42) மர்மமான முறையில் கோவாவில் உயிரிழந்தார். அவருக்கு நடத்தப்பட்ட பிரேத பரிசோதனை ஆய்வில் அவரது உடலில் காயங்கள் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. ஆனால், மாரடைப்பு ஏற்பட்டதால் அவர் உயிரிழந்ததாக கூறப்பட்ட நிலையில், தற்போது அவர் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என அவரது குடும்பத்தினர் … Read more

”நீங்கள்தான் தேர்ந்தெடுத்தீர்கள்”..உக்ரைனில் இருந்து திரும்பிய மாணவர்கள் குறித்து நீதிபதி

போர் காரணமாக உக்ரைனில் இருந்து நாடு திரும்பிய மருத்துவ மாணவர்கள், இந்தியாவிலேயே தங்களது படிப்பை தொடர அனுமதி கோரி தொடர்ந்த மனுமீது பதில் அளிக்குமாறு மத்திய அரசு மற்றும் தேசிய மருத்துவ கமிஷனுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ் பிறப்பித்துள்ளது. உக்ரைன் நாட்டில் படித்து வந்த சுமார் 22,000 இந்திய மாணவர்கள், ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையான போர் காரணமாக கட்டாயமாக அந்நாட்டை விட்டு வெளியேற்றப்பட்டு இந்தியா அழைத்து வரப்பட்டனர். இந்நிலையில் அவர்களது எதிர்காலமும், மருத்துவ படிப்பும் கேள்விக்குறியாகி உள்ள … Read more

'அரசுகளை கவிழ்ப்பதில் பாஜக சீரியல் கில்லர்' – அரவிந்த் கெஜ்ரிவால் ஆவேசம்!

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுகளை கவிழ்ப்பதில் பாஜக ஒரு சீரியல் கில்லர் என, டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் கடுமையாக விமர்சனம் செய்துள்ளார். டெல்லி சிறப்பு சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் இன்று நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில், ஆம் ஆத்மி கட்சித் தலைவரும், முதலமைச்சருமான அரவிந்த் கெஜ்ரிவால் பேசியதாவது: தொடர்ந்து 14 மணி நேரம் துணை முதலமைச்சர் மணீஷ் சிசோடியா வீட்டில் சோதனை நடத்தியும் ஒரு பைசா கூட கிடைக்கவில்லை. நகைகளோ, பணமோ, சொத்து ஆவணங்களோ, குற்றவியல் ஆவணமோ எதுவும் கிடைக்கவில்லை. … Read more

கேரளாவில் வளர்ப்பு யானைகளை கயிறு இழுக்கும் போட்டிக்கு பயன்படுத்த திடீர் தடை

திருவனந்தபுரம்: கேரளாவில் வளர்ப்பு யானைகளை கயிறு இழுக்கும் போட்டிகளுக்கு பயன்படுத்தக் கூடாது என்று வனத்துறை உத்தரவிட்டுள்ளது. கேரளாவின் பாரம்பரிய பண்டிகையான ஓணம் செப்டம்பர் 8ம் தேதி கொண்டாடப்படுகிறது. இதையொட்டி 10 நாட்கள்  விழாக்கோலம் பூண்டிருக்கும். இந்த நாட்களில் தனியார் மற்றும் அரசுத்துறைகளின்  சார்பில் கலை நிகழ்ச்சிகள், கயிறு இழுக்கும் போட்டி, விளையாட்டுப் போட்டிகள் உள்பட பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்படும். கிராமங்களில் மட்டுமல்லாமல் நகர்ப்புறங்களிலும் பல்வேறு கண்கவர் நிகழ்ச்சிகள் நடத்தப்படும். கயிறு இழுக்கும் போட்டிகளுக்கு வழக்கமாக யானைகளையும் பயன்படுத்துவது … Read more

சட்டவிரோத பணப் பரிவர்த்தனை தடுப்பு சட்டம் – தீர்ப்பை மறுபரிசீலனை செய்ய உச்ச நீதிமன்றம் முடிவு

புதுடெல்லி: சட்டவிரோத பணப் பரிவர்த்தனை தடுப்பு சட்டம் தொடர்பாக கடந்த மாதம் அளிக்கப்பட்ட தீர்ப்பை மறு பரிசீலனை செய்ய உச்ச நீதிமன்றம் முடிவு செய்துள்ளது. இது தொடர்பாக மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் கொடுத்துள்ளது. சட்டவிரோத பணப்பரிவர்த்தனை தடுப்பு சட்டத்தின் கீழ் அமலாக்கத் துறைக்கு அளிக்கப்பட்ட அதிகாரங்கள் சரியே என உச்ச நீதிமன்றம் கடந்த மாதம் தீர்ப்பளித்தது. இதை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என காங்கிரஸ் கட்சியின் கார்த்தி சிதம்பரம் உச்சநீதிமன்றத்தில் மனு செய்திருந்தார். வழக்கு … Read more

பாஜகவின் ஆபரேஷன் லோட்டஸ்… ராகுல் கற்க வேண்டிய பாடம்!

‘காங்கிரஸ் இல்லாத இந்தியா’… 2014 இல் மோடி தலைமையிலான பாஜக அரசு மத்தியில் ஆட்சிப் பொறுப்பேற்றபோது அக்கட்சியின் தேசிய தலைவராக இருந்த அமித் ஷா உதிர்த்த வார்த்தைகள்தான் இவை. பாஜகவை தொண்டர்கள், மத்தியில் மட்டும் ஆட்சிக் கட்டிலில் அமர்த்தினால் போதாது. அனைத்து மாநிலங்களிலும் பாஜகவின் தாமரை கொடிதான் பறக்க வேண்டும் என்று கட்சியை நாடு முழுவதும் வளர்க்கும் நோக்கில் ஒரு கட்சித் தலைவராக அமித் ஷா இப்படி சொன்னதில் தவறொன்றும் இல்லைதான். ஆனால் இதற்கு பாஜக கையாண்டு … Read more

திருப்பதி தேவஸ்தானத்தில் வேலை வாய்ப்பு; கல்வித் தகுதி இதுதான் – உடனே விண்ணப்பியுங்கள்

திருப்பதி தேவஸ்தானத்துக்கு சொந்தமாக இருக்கும் மருத்துவமனையில் காலிப் பணியிடங்கள் நிரப்பப்படுகின்றன.  இப்போது வெளியிடப்பட்டிருக்கும் அறிவிப்பில் குழந்தை நல மருத்துவர் (Paediatrician), குழந்தை இருதய நிபுணர் (Paediatric Cardiac Anaesthetist) ஆகியோர் தேர்வு செய்யப்பட இருக்கின்றனர். தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் இந்த வேலை வாய்ப்புக்கு விண்ணப்பிக்கலாம்.      பணியின் பெயர்;  Paediatric Cardiac Anaesthetist – 02Paediatrician – 01   காலியிடங்கள்; 03 காலியிடங்கள்   விண்ணப்பிக்க கடைசி தேதி; 31.08.2022   விண்ணப்பிக்கும் முறை; … Read more