காமன்வெல்த் தொடர்: ‘பேட்டிங்கா இது?’ -இந்திய மகளிர் கிரிக்கெட் அணியை விமர்சித்த அசாரூதின்
காமன்வெல்த் போட்டியில் நேற்று நடைபெற்ற ஆஸ்திரேலியாவிற்கு எதிரான மகளிர் கிரிக்கெட் ஆட்டத்தில் இந்திய மகளிர் அணி 9 ரன்களில் தோல்வியடைந்த நிலையில், இந்திய ஆடவர் கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் முகமது அசாரூதின் விமர்சித்துள்ளார். இங்கிலாந்து பர்மிங்ஹாமில் நடந்துவரும் 22-வது காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளில் முதல் முறையாக மகளிர் டி20 கிரிக்கெட் போட்டி சேர்க்கப்பட்டது. இதையடுத்து இந்தியா, ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்கா, இலங்கை, பாகிஸ்தான், நியூசிலாந்து, பார்படாஸ், இங்கிலாந்து உள்ளிட்ட 8 நாடுகளைச் சேர்ந்த மகளிர் அணிகள் கலந்துகொண்டன. … Read more