காஷ்மீர் பற்றி சர்ச்சை கருத்து கேரள எம்எல்ஏ மீது போலீசார் வழக்கு

திருவனந்தபுரம்: கேரளாவில் கடந்த முறை பினராய் விஜயன் ஆட்சியில்  உயர் கல்வித்துறை அமைச்சராக இருந்தவர் ஜலீல். தற்போது எம்எல்வுவாக செயல்பட்டு வருகிறார். கேரள சட்டப்பேரவை குழுவுடன்  சமீபத்தில் காஷ்மீருக்கு சுற்றுப்பயணம் செய்த ஜலீல், இந்திய  எல்லையில் உள்ள காஷ்மீரை இந்திய ஆக்ரமிப்பு காஷ்மீர் என்றும், பாகிஸ்தான்  வசமுள்ள காஷ்மீரை ஆசாத் காஷ்மீர்  என்றும் பேஸ்புக்கில் குறிப்பிட்டார். இதுதொடர்பாக டெல்லி போலீசில் புகார்  செய்யப்பட்டது. மேலும், கேரளாவில் பத்தனம்திட்டா நீதிமன்றத்திலும் வழக்கு தொடரப்பட்டது. இதை விசாரித்த நீதிமன்றம்,  ஜலீல் … Read more

நம்பிக்கை வாக்கெடுப்பில் நிதிஷ் குமார் அரசு வெற்றி

பாட்னா: பீகார் சட்டப்பேரவையில் நேற்று நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் முதல்வர் நிதிஷ் தலைமையிலான மகா கூட்டணி அரசு, குரல் வாக்கெடுப்பில் வெற்றி பெற்றது. பீகாரில் பாஜ.வுடன் ஏற்பட்ட மோதல் காரணமாக, கூட்டணியில் இருந்து விலகிய ஐக்கிய ஜனதா தள தலைவரும், முதல்வருமான நிதிஷ் குமார், ராஷ்டிரிய ஜனதா தளம், காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளுடன்  கூட்டணி அமைத்து கடந்த 10ம் தேதி மீண்டும் ஆட்சி அமைத்தார். இந்த அரசு மீதான நம்பிக்கை வாக்கெடுப்பு சட்டப்பேரவையில் நேற்று நடைபெற்றது. இதில், … Read more

பதவி காலம் முடியும் முன்பே குஜராத், இமாச்சலத்துடன் கர்நாடகாவுக்கும் தேர்தலா? தலைமை தேர்தல் ஆணையர் வருகையால் பரபரப்பு

பெங்களூரு: பதவி காலம் முடியும் முன்பே குஜராத் சட்டப்பேரவை தேர்தலுடன் கர்நாடக மாநிலத்துக்கும் தேர்தல் நடத்த தலைமை தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதற்காக,  தலைமை தேர்தல் ஆணையர் அனுப் சந்திர பாண்டே இன்று முதல் மூன்று நாட்கள் பெங்களூருவில் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்துகிறார். கர்நாடக மாநில சட்டப்பேரவையின் பதவி காலம் 2023ம் ஆண்டு, மே மாதம் முடிகிறது. தேர்தல் விதிமுறைகளின்படி, பேரவை பதவி காலம் முடிவதற்கு 6 மாதங்கள் இருக்கும்போது, எப்போது வேண்டுமானாலும் தேர்தல் நடத்தும் … Read more

டெல்லியில் கெஜ்ரிவால் அரசை கவிழ்க்க 4 எம்எல்ஏ.க்களிடம் ரூ.20 கோடி பேரம்: மோடி மீது ஆம் ஆத்மி குற்றச்சாட்டு

புதுடெல்லி: டெல்லியில் கெஜ்ரிவால் தலைமையிலான அரசை கவிழ்க்க, இக்கட்சியின் 4 எம்எல்ஏ.க்களுக்கு தலா ரூ.20 கோடி தருவதாக பாஜ பேரம் பேசியதாக ஆம் ஆத்மி குற்றம்சாட்டி உள்ளது. இது தொடர்பாக ஆம் ஆத்மி செய்தித் தொடர்பாளர் சஞ்சய் சிங் எம்பி, டெல்லியில் நேற்று அளித்த பேட்டி வருமாறு: எங்கள் கட்சி எம்எல்ஏக்கள் அஜய் தத், சஞ்சீவ் ஜா, சோம்நாத் பாரதி, குல்தீப் ஆகியோரை பாஜ தலைவர்கள் அணுகி, தலா ரூ.20 கோடி தருவதாகவும், பாஜவுக்கு வந்து விடும்படியும் … Read more

ராஜினாமா செய்யும் காங்கிரஸ் பிரமுகர்கள்..! – அதிர்ச்சியில் காங்கிரஸ் தலைமை..!!

காங்கிரஸ் கட்சியில் தேசிய செய்தி தொடர்பாளர் பொறுப்பு மிகவும் முக்கியம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. இந்நிலையில் காங்கிரஸ் கட்சியின் தேசிய செய்தி தொடர்பாளர் ஜெயவீர் என்பவர் திடீரென ராஜினாமா செய்துள்ளதால் காங்கிரஸ் தலைவர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். காங்கிரஸ் கட்சியின் தேசிய செய்தி தொடர்பாளர் பதவியிலிருந்து ராஜினாமா செய்வதாக இடைக்கால தலைவர் சோனியா காந்திக்கு திடீரென்று ஜெயவீர் கடிதம் எழுதியுள்ளார் . பொதுமக்கள் மற்றும் நாட்டின் நலனுக்காக காங்கிரஸ் கட்சி முடிவு செய்வதில்லை என்றும் சுயநலன் மற்றும் தனிநபர்களின் கட்சியாக … Read more

2016-ல் அமல்படுத்தப்பட்ட பினாமி பரிவர்த்தனை தடைச் சட்டத் திருத்ததை அமல்படுத்த முடியாது: உச்சநீதிமன்றம்

டெல்லி: பினாமி பரிவர்த்தனை தடுப்பு சட்டத்தில் 2016 ஆம் ஆண்டு ஏற்படுத்திய சில திருத்தங்கள் செல்லாது என்று உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது. 1988 ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட பினாமி பரிவர்த்தனை தடுப்புச் சட்டம் பல திருத்தங்களுடன் கடந்த 2016ஆம் ஆண்டு நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு அதே ஆண்டு நவம்பர் 1 தேதி முதல் சட்டமாக்கப்பட்டது. இந்நிலையில் 2019ஆம் ஆண்டு வழக்கு ஒன்றை விசாரித்த கொல்கத்தா உயர்நீதிமன்றம் 2016ஆம் ஆண்டு வந்த திருத்தச்  சட்டத்தை முந்தைய பரிவர்தனைகளுக்கு அமல்படுத்த … Read more

காங்கிரஸின் புதிய தலைவர் யார்? மாறி, மாறி கைகாட்டும் தலைவர்கள் – என்ன நடக்கிறது கட்சியில்?

வருகிற 2024-ம் ஆண்டு நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலுக்காக பாரதிய ஜனதா கட்சி,ஆம் ஆத்மி, திரிணாமுல் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் தற்போது தயாராகி வரும் நிலையில் காங்கிரஸ் கட்சியும் தேர்தலுக்கு தயாராகும் வகையில் புதிய தலைவரை தேர்வு செய்வதற்கு தீவிரம்காட்டி வருகிறது. காங்கிரஸ் கட்சியின் இடைக்கால தலைவராக உள்ள சோனியா காந்தியின் பதவிக்காலம் விரைவில் நிறைவடைய உள்ள நிலையில் புதிய தலைவரை தேர்வு செய்யவேண்டிய கட்டாயத்தில் காங்கிரஸ் உள்ளது. கட்சி தேர்தலுக்கான தேர்தல் அட்டவணையை இறுதி செய்வதற்காக … Read more

நபிகள் நாயகம் குறித்து அவதூறு பேச்சு: கைது செய்யப்பட்ட பாஜக எம்எல்ஏ ஜாமீனில் விடுவிக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஐதராபாத்தில் போராட்டம்

தெலுங்கானா: தெலங்கானாவில் நபிகள் நாயகம் குறித்து அவதூறாக பேசி, கைது செய்யப்பட்ட பாஜக சட்டபேரவை உறுப்பினர் ராஜாசிங் ஜாமீனில் விடுவிக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து, ஐதராபாத்தில் போராட்டங்கள் வெடித்ததால் பதற்றம் நிலவுகிறது. பாஜக எம்.எல்.ஏ. ராஜாசிங், தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் நபிகள் நாயகம் குறித்து பேசிய பதிவு சமூக வலைதளங்களில் பரவியது. இதைத்தொடர்ந்து ராஜ்சிங்கை கைது செய்ய வலியுறுத்தி நேற்று முன்தினம் ஐதராபாத் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் போராட்டங்கள் வெடித்தது. கட்சியில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்ட அவர் மீது … Read more

இலவசங்கள் தொடர்பான வழக்கு – 3 நீதிபதிகள் கொண்ட அமர்வுக்கு மாற்றம்

இலவசங்கள் தொடர்பான வழக்கை நீதிபதி சந்திசூட் தலைமையில் மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வில் பட்டியலிட உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி உத்தரவிட்டுள்ளார். அரசியல் கட்சிகள் தேர்தல் இலவசங்களை அறிவிக்கத் தடை கோரிய வழக்கு தலைமை நீதிபதி என்.வி.ரமணா அமர்வில் மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, இலவசம் தொடர்பான விவகாரங்களை ஆராய்ந்து அறிக்கை அளிக்க ஆணையத்தையோ, குழுவையோ உச்சநீதிமன்றமே அமைக்கலாம் என்றும், அவ்வாறு அமைப்பதாக இருந்தால், உச்சநீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி லோதா போன்ற நீதிபதிகள் தலைமையில் அமைக்கலாம் என வழக்கறிஞர்கள் கோரிக்கை விடுத்தனர். ஓய்வு பெற்றவர்களுக்கு இந்த நாட்டில் எந்த மதிப்பும் இல்லை என்று கூறிய தலைமை நீதிபதி, தேர்தல் இலவசத்தோடு, … Read more

பீகார் மாநில சட்டப்பேரவை சபாநாயகர் பதவியை ராஜினாமா செய்தார் வி.கே.சின்ஹா

பாட்னா: பீகார் மாநில சட்டப்பேரவை சபாநாயகர் பதவியை பாஜகவை சேர்ந்த வி.கே.சின்ஹா ராஜினாமா செய்தார். நிதிஷ்குமார் அரசு மீது இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறவுள்ள நிலையில் பதவியை சபாநாயகர் ராஜினாமா செய்தார்.