தேனீக்களை பாதுகாக்க 50 கூண்டுகள்

பெங்களூரு: பெங்களூருவில் தேனீக்களை பாதுகாப்பதற்காக மரத்தில் செய்யப்பட்ட 50 கூண்டுகளை விஞ்ஞானிகள் பொருத்தியுள்ளனர். வேகமாக அழிந்துவரும் பூச்சி இனங்களின் பட்டியலில் தேனீயும் இருக்கிறது. அவற்றின் அழிவு மனித இனத்தின் அழிவுக்கு வழிவகுக்கும் என விஞ்ஞானிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். ஆனால் அவற்றை பாதுகாப்பதற்கான திட்டங்கள் குறைவாக இருக்கின்றன. குறிப்பாக பெங்களூருவில் அதிகரித்து வரும் கட்டிடங்களின் எண்ணிக்கையால் தேனீக்களின் எண்ணிக்கை வெகுவாக குறைந்துள்ளது. இத்தகைய‌ நகரங்களில் தேனீக்களை அழியாமல் பாதுகாப்பதற்காக விஞ்ஞானிகள் ‘தேனீ கூண்டு’ என்ற திட்டத்தை உருவாக்கியுள்ளனர். இதுகுறித்து … Read more

இந்தியாவில் ஒரே நாளில் 10,649 பேருக்கு கொரோனா… 36 பேர் பலி : ஒன்றிய சுகாதாரத்துறை ரிப்போர்ட்!!

டெல்லி: நாட்டில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 5 லட்சத்தை தாண்டியது.இன்று காலை 9 மணியுடன் முடிந்த 24 மணி நேரத்தில், நாட்டில் கொரோனாவால் புதிதாக பாதித்தவர்கள், குணமடைந்தோர், பலியானோர், இறப்பு விகித நிலவரம் குறித்து மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு: * புதிதாக 10,649 பேர் பாதித்துள்ளனர். * இதன் மூலம், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 4,43,68,195ஆக உயர்ந்தது. * புதிதாக 36 பேர் இறந்துள்ளனர். * இதனால், நாட்டின் மொத்த உயிரிழந்தோர் எண்ணிக்கை … Read more

மருத்துவ சிகிச்சைக்காக வெளிநாடு செல்கிறார் சோனியா: ராகுலும், பிரியங்காவும் உடன் பயணம்

புதுடெல்லி: காங்கிரஸ் கட்சியின் இடைக்காலத் தலைவர் சோனியா காந்தி மருத்துவ சிகிச்சைக்காக வெளிநாடு செல்கிறார் என்று அக்கட்சியின் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக ராஜ்யசபா உறுப்பினரும், கட்சி பொதுச் செயலாளருமான ஜெய்ராம் ரமேச்ஜ் ஓர் அறிக்கையை வெளியிட்டிருக்கிறார். அந்த அறிக்கையில் அவர் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி மருத்துவ பரிசோதனைகளை மேற்கொள்வதற்காக வெளிநாடு செய்கிறார். டெல்லி திரும்பும் முன் அவர் தனது தாயாரையும் சந்தித்து வருவார். சோனியாவுடன் ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி … Read more

பீகாரில் லாலு பிரசாத் யாதவுக்கு நெருக்கமானவர்கள் வீடுகளில் சிபிஐ அதிரடி சோதனை

பாட்னா: பீகாரில் லாலு பிரசாத் யாதவுக்கு நெருக்கமானவர்கள் வீடுகளில் சிபிஐ அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர். ரயில்வே வேலைவாய்ப்பு முறைகேடு தொடர்பாக ஆர்.ஜே.டி. கட்சி நிர்வாகிகள் 2 பேர் வீடுகளில் சோதனை நடைபெற்று வருகிறது.

விமான பயணி எண்ணிக்கை 40 கோடியாக அதிகரிக்கும் – மத்திய அமைச்சர் நம்பிக்கை

புதுடெல்லி: அடுத்த 7 முதல் 10 ஆண்டுகளில் நாட்டின் விமானப் பயணிகள் எண்ணிக்கை 40 கோடியாக அதிகரிக்கும் என மத்திய சிவில் விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா நம்பிக்கை தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் நேற்று மேலும் கூறியதாவது: உள்நாட்டு விமான சேவை நிறுவனங்களுக்கு வளர்ச்சிக்கான வாய்ப்புகள் மிகப்பெரிய அளவில்உள்ளன. இதையடுத்து, அடுத்த5 ஆண்டுகளில் விமான நிறுவனங்கள் 1,200 விமானங்களை கையாளும் என எதிர்பார்க்கப்படுகிறது. கரோனாவுக்கு முன்பாக நமது விமான சேவை நிறுவனங்கள் உள்நாடு மற்றும் … Read more

குழந்தைகளை தாக்கும் தக்காளி காய்ச்சல்: மாநில அரசுகள் தேவையான நடவடிக்கைகளை எடுக்க ஒன்றிய அரசு அறிவுறுத்தல்..!

டெல்லி: குழந்தைகளை தாக்கும் தக்காளி காய்ச்சல் அதிக அளவில் பரவுவதால் மாநில அரசுகள் தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என ஒன்றிய அரசு தெரிவித்துள்ளது. கொரோனா, குரங்கம்மை உட்பட உலகளவில் உருவாகும் அனைத்து நோய்களும் முதலில் கண்டறியப்படும் மாநிலமாக கேரளா இருக்கிறது. கொரோனாவால் இந்த மாநிலம் ஏற்கனவே கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ள நிலையில், ‘தக்காளி காய்ச்சல்’என்ற புதிய நோய், சிறுவர்களிடையே வேகமாக பரவி வருகிறது. கடந்த மே மாதம் 5ம் தேதி கேரளாவில் உள்ள கொல்லத்தில் இந்த … Read more

பிரதமரின் எஸ்பிஜி பாதுகாப்பு படையில் இணையும் கர்நாடகாவின் முதோல் வேட்டை நாய்கள்

பெங்களூரு: பிரதமருக்கு பாதுகாப்பு அளிக்கும் சிறப்புப் பாதுகாப்புப் படையில் (எஸ்பிஜி) கர்நாடகாவைச் சேர்ந்த பிரபல வேட்டை வகை நாயான முதோல் வகை நாய்கள் சேர்க்கப்படவுள்ளன. கர்நாடக மாநிலம் பாகல்கோட்டை மாவட்டம் முதோல் பகுதியில் பிரபலமாக உள்ளவை முதோல் வகை நாய்கள். இவை பார்ப்பதற்கு தமிழகத்திலுள்ள சிப்பிப்பாறை வகை நாய்களைப் போலவே காணப்படும். இந்த முதோல் வகை நாய்கள் வேட்டை, மோப்பம் பிடித்து ஆட்களை அடையாளம் காண வெகுவாகப் பயன்படுத்தப்படுகின்றன. இந்நிலையில், இந்த வகை நாய்களை பிரதமரின் எஸ்பிஜி … Read more

சுற்றுலா பயணிகளுக்கு கேரள காவல்துறை அறிவுறுத்தல்

திருவனந்தபுரம்: சுற்றுலா செல்லும் போது பயண விபரங்களை சமூக வலைதளங்களில் பகிர வேண்டாம் என கேரள காவல்துறை அறிவுறுத்தியுள்ளது. சைபர் தாக்குதல்கள் அதிகரித்து வரும் நிலையில் சுற்றுலா பயணிகளுக்கு கேரள காவல்துறை அறிவுறுத்தியுள்ளது.

திரௌபதி முர்மு – சோனியா சந்திப்பு: குடியரசுத் தலைவர் மாளிகை விளக்கம்!

குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவை, காங்கிரஸ் கட்சியின் இடைக்காலத் தலைவர் சோனியா காந்தி நேற்று (ஆகஸ்ட் 23) சந்தித்துப் பேசினார். ஜார்க்கண்ட் மாநிலத்தின் முன்னாள் ஆளுநராக இருந்த திரௌபதி முர்மு இந்தியாவின் 15ஆவது ஜனாதிபதியாக ஜூலை 25ஆம் தேதி பதவியேற்றார். அவருக்கு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா பதவிப் பிரமாணம் செய்துவைத்தார். இந்தியாவின் முதல் பழங்குடியின ஜனாதிபதி என்ற பெருமையை திரௌபதி முர்மு பெற்றுள்ளார். இதைத் தொடர்ந்து திரவுபதி முர்முவை பல்வேறு மாநில முதல்வர்கள், மத்திய … Read more

மருத்துவ பரிசோதனைக்காக வெளிநாடு செல்கிறார் சோனியா காந்தி

டெல்லி: காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா காந்தி மருத்துவப் பரிசோதனைக்காக வெளிநாடு செல்ல உள்ளார். ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி ஆகியோரும் உடன் செல்லவுள்ளனர்.