எதிர்க்கட்சிகள் அமளி: மழைக்கால கூட்டத்தொடரின் முதல் நாளிலேயே மக்களவை ஒத்திவைப்பு

எதிர்க்கட்சிகளின் அமளியால் மாநிலங்களவையைத் தொடர்ந்து மக்களவையும் நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது. மழைக்கால கூட்டத் தொடர் தொடங்கிய நிலையில், குடியரசுத் தலைவர் தேர்தலில் வாக்களிக்கும் வகையில் பிற்பகல் 2 மணி வரை மக்களவை ஒத்திவைக்கப்பட்டது. மீண்டும் அவை கூடியதும் விலைவாசி உயர்வு குறித்து உடனடியாக விவாதிக்க வேண்டும் என எதிர்க்கட்சியினர் முழக்கமிட்டதால் அவை நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது. Source link

கேரளாவில் கண்ணூர் மாவட்டத்தில் ஒருவருக்கு குரங்கு அம்மை நோய் பாதிப்பு இருப்பது கண்டுபிடிப்பு..!!

கண்ணூர்: கேரளாவில் கண்ணூர் மாவட்டத்தில் ஒருவருக்கு குரங்கு அம்மை நோய் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. துபாயில் இருந்து கேரளா வந்த ஒருவருக்கு குரங்கு அம்மை பாதிப்பு இருப்பது கடந்த 12ம் தேதி உறுதி செய்யப்பட்டது.

”தோத்தாலும் ஜெயிச்சாலும் மீசைய முறுக்கு…” என கெத்து காட்டும் கேரளத்து மீசைக்காரி!

ஆண்களுக்கான கம்பீர தோற்றம் என்றாலே மீசைதான் என்று கூறப்படுவதுண்டு. ஆனால் கேரளாவைச் சேர்ந்த பெண் ஒருவர் என்னாலும் மீசை முறுக்கி வீரமாக உலாவ முடியும் என்பதை இந்த உலகுக்கு எடுத்துரைத்திருக்கிறார். ஹார்மோன் மாற்றம் காரணமாக பெண்களுக்கு மீசை வளரும். ஆனால் புருவத்தை தீட்டுவது போலவே உதட்டிற்கு மேல் வளரும் மீசை முடியை அகற்றுவதில் கவனமாக இருப்பதை கேள்விப்பட்டிருப்போம். ஆனால், கேரளாவின் கண்ணூர் மாவட்டத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் தனக்கு வளர்ந்திருக்கும் மீசையை அகற்றாமல் அது இருப்பதை பெருமையாகவே … Read more

'நான் குற்றவாளி அல்ல; தேர்ந்தெடுக்கப்பட்ட முதல்வர்' – அரவிந்த் கெஜ்ரிவால் ஆதங்கம்!

தான் குற்றவாளி அல்ல என்றும், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதலமைச்சர் என்றும், டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்து உள்ளார். சிங்கப்பூர் நாட்டில் இம்மாத இறுதியில், உலக நகரங்கள் மாநாடு நடைபெற உள்ளது. இந்த மாநாட்டில் கலந்து கொள்ள வரும்படி, ஆம் ஆத்மி கட்சி தலைவரும், டெல்லி முதலமைச்சருமான அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு, கடந்த ஜூன் மாதம் அழைப்பு விடுக்கப்பட்டு இருந்தது. இதை ஏற்றுக் கொண்ட அரவிந்த் கெஜ்ரிவால், மாநாட்டில் கலந்து கொள்வதாக உறுதி அளித்து இருந்தார். இதைத் தொடர்ந்து, … Read more

ஜூலை 11 அதிமுக பொதுக்குழு விவகாரம் தொடர்பாக எடப்பாடி பழனிசாமி தரப்பில் உச்சநீதிமன்றத்தில் கேவியட் மனுதாக்கல்..!!

டெல்லி: ஜூலை 11 அதிமுக பொதுக்குழு விவகாரம் தொடர்பாக எடப்பாடி பழனிசாமி தரப்பில் உச்சநீதிமன்றத்தில் கேவியட் மனுதாக்கல் செய்யப்பட்டது. பொதுக்குழு தொடர்பாக அதிமுக சார்பிலும்  தனியாக மற்றொரு கேவியட் மனுதாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதிமுக பொதுக்குழு தொடர்பாக தன்னை கேட்காமல் எந்த உத்தரவும் பிறப்பிக்கக்கூடாது என எடப்பாடி பழனிசாமி தரப்பில் தாக்கல் செய்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

"கிரிப்டோகரன்சிகளுக்கு தடை விதிக்க ரிசர்வ் வங்கி பரிந்துரை!ஆனால்.." – நிர்மலா சீதாராமன்

நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர் இன்று முதல் நடைபெற துவங்கியுள்ளது. இத்தொடரில் இன்று மக்களவை எம்.பியும் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவருமான தொல். திருமாவளவன் கிரிப்டோகரன்சி குறித்து கேள்வி எழுப்பினார். இதையடுத்து நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கிரிப்டோ கரன்சி விவகாரத்தில் ரிசர்வ் வங்கி நிலைப்பாடு குறித்து தகவல் அளித்தார். “பிட்காயின் உள்ளிட்ட கிரிப்டோ கரன்சிகளுக்கு தடை விதிக்க வேண்டும் என ரிசர்வ் வங்கி விரும்புகிறது. கிரிப்டோ கரன்சிகளுக்கு தடை விதிக்க அரசு சட்டம் இயற்ற வேண்டும் என ரிசர்வ் … Read more

18 மாதங்களில் மக்களுக்கு 200 கோடி டோஸ் தடுப்பூசி செலுத்தி சாதனை: ஒப்பிட முடியாத வேகம் என பிரதமர் மோடி பெருமிதம்

புதுடெல்லி: இந்தியாவில் செலுத்தப்பட்ட கரோனா தடுப்பூசி டோஸ் எண்ணிக்கை 200 கோடியைத் தாண்டி உள்ளது. இது ஒப்பிட முடியாத வேகம் என பிரதமர் நரேந்திர மோடி பெருமிதம் தெரிவித்துள்ளார். சீனாவின் வூகான் மாகாணத்தில்கடந்த 2019-ம் ஆண்டு இறுதியில்மனிதர்களுக்கு கரோனா வைரஸ்பாதிப்பு முதன்முதலில் கண்டறியப்பட்டது. பின்னர் உலகம் முழுவதும் பரவியது. இந்தியாவில் 2020-ம் ஆண்டு தொடக்கத்தில் பரவத் தொடங்கியது. அதன்பின் தடுப்பூசி கண்டுபிடிக்கும் பணியில் பல்வேறு நிறுவனங்கள் ஈடுபட்டன. இதில் இந்தியாவின் பாரத் பயோடெக் நிறுவனம்கோவாக்சின் என்ற தடுப்பூசியையும், … Read more

குடியரசு துணை தலைவர் தேர்தல்: பிரதமர் மோடி முன்னிலையில் ஜக்தீப் தன்கர் வேட்புமனு தாக்கல்!

குடியரசு துணைத் தலைவர் தேர்தலில், பிரதமர் நரேந்திர மோடி முன்னிலையில், மேற்கு வங்க மாநில முன்னாள் ஆளுநர் ஜக்தீப் தன்கர் வேட்புமனு தாக்கல் செய்தார். நாட்டின் 13வது குடியரசுத் துணைத் தலைவராக, ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த வெங்கையா நாயுடு பதவி வகிக்கிறார். இவரது பதவிக்காலம், வரும் ஆகஸ்ட் மாதம் 10 ஆம் தேதியுடன் முடிவடைகிறது. இதையொட்டி, குடியரசு துணைத் தலைவர் பதவிக்கான தேர்தல் அடுத்த மாதம் 6 ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் … Read more

வியட்நாம் – இந்தியா இடையே 13 புதிய வழித்தடங்களில் விமான சேவை – வியட்ஜெட் நிறுவனம் அறிவிப்பு !

வியட்நாம் – இந்தியா இடையே இந்த ஆண்டு இறுதிக்குள் 13 புதிய வழித்தடங்களை அறிமுகப்படுத்த உள்ளதாக வியட்நாமை சேர்ந்த வியட்ஜெட் விமான நிறுவனம் அறிவித்துள்ளது. மேலும் அதிக பயணிகளை ஏற்றும் வகையில் ஏர்பஸ் ஏ330 விமானங்களை சேர்க்க இருப்பதாகவும் வியட்ஜெட் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. Source link

சவான் மாதத்தையொட்டி சிவன் கோவில்களில் குவிந்த மக்கள் : முதல் திங்களையொட்டி பக்தர்கள் விரதம் எடுத்து வழிபாடு

உத்தரபிரதேசம்: பல்வேறு மாநிலங்களில் சவான் மாதத்தையொட்டி சிவன் கோவில்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. நாட்டின் வட மற்றும் கிழக்கு மாநிலங்களில் சவான் மாதம் சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது. இந்த மாதத்தில் ஒவ்வொரு திங்களன்றும்  பக்தர்கள் விரதமிருந்து சிவனை வழிபடுவார்கள். சவான் மதத்தின் முதல் திங்களான இன்று உத்திரப்பிரதேசத்தின் வாரணாசி உள்ள கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று கங்கையாற்றில் புனித நீராடினர்.ஜார்கண்டில் கன்வர் யாத்திரை சென்ற பக்தர்கள் டியோக்கரில் உள்ள கோவில்களில் கூடி … Read more