சித்தூர் அரசு ஆஸ்பத்திரியில் கிட்னிக்காக ஆண் குழந்தை கடத்தல்- பெண் கைது

திருப்பதி: ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் சந்தப்பேட்டை அருகே உள்ள மங்கசமுத்திரம் பகுதியை சேர்ந்தவர் ரஷீத். இவரது மனைவி சபீனா (வயது 35.). தம்பதிக்கு 2 வயதில் பெண் குழந்தை உள்ளது. சபீனா மீண்டும் கர்ப்பமானார். நிறைமாத கர்ப்பிணியான சபீனா பிரசவத்திற்காக கடந்த 14-ந் தேதி சித்தூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு அழகான ஆண் குழந்தை பிறந்தது. தாயும் குழந்தையும் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தனர். இந்தநிலையில் நேற்று அதிகாலை 4 மணியளவில் ஒரு … Read more

கொரோனா தினசரி பாதிப்பு புதிய தொற்று 2075 ஆக சரிவு

புதுடெல்லி:  நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா புதிய தொற்று பாதிப்பு 2075 ஆக பதிவாகி உள்ளது. ஒன்றிய சுகாதார துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘நேற்று காலை 8 மணி வரையிலான 24 மணி நேரத்தில் கொரோனா புதிய தொற்று பாதிப்பானது 2075ஆக பதிவாகி உள்ளது. மொத்த பாதிப்பு எண்ணிக்கையானது 4 கோடியே 30 லட்சத்து 6 ஆயிரத்து 80 ஆக உயர்ந்துள்ளது. தொற்று பாதித்தோர்களில் கேரளாவில் 59 பேர் உட்பட மொத்தம் … Read more

ஹோலியில் சோகம்.: ஆற்றில் குளித்த 6 சிறுவர்களுக்கு நேர்ந்த பரிதாபம்

ஒடிசாவில் ஹோலி விளையாடிவிட்டு ஆற்றில் குளித்த 6 சிறுவர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்தனர். ஒடிசா மாநிலம் ஜாஜ்பூரில் ஹோலி பண்டிகையை முன்னிட்டு 6 சிறுவர்கள் ஒருவர் மீது ஒருவர் வண்ணப்பொடிகளை தூவி விளையாடி மகிழ்ந்தனர். பின்னர் அங்குள்ள ஆற்றில் குளித்துக் கொண்டிருந்தபோது எதிர்பாராதவிதமாக  6 சிறுவர்களும் நீரில் மூழ்கி உயிரிழந்தனர். காவல்துறையினரின் தகவல்படி, முதலில் நீரில் மூழ்கிய ஒரு சிறுவனை காப்பாற்ற முயன்றபோது அடுத்தடுத்து 5 சிறுவர்கள் உள்பட 6 சிறுவர்கள் உயிரிழந்திருப்பதாக கூறுகின்றனர்.   நேற்று … Read more

ரஷ்யாவிடமிருந்து சலுகை விலையில் கச்சா எண்ணெய் வாங்க இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் ஒப்பந்தம்

இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனம் ரஷ்ய எண்ணெய் நிறுவனத்திடமிருந்து சலுகையில் விலையில் 3 மில்லியன் பீப்பாய்கச்சா எண்ணெய் இறக்குமதி செய்யஒப்பந்தம் மேற்கொண்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. உக்ரைன் மீதான ரஷ்யாவின் தாக்குதலை கண்டிக்கும் விதமாக அமெரிக்கா, இங்கிலாந்து உட்பட மேற்கத்திய நாடுகள் ரஷ்யா மீது பல்வேறு பொருளாதார தடைகள் விதித்துவந்தன. அனைத்திலும் உச்சமாக கடந்த வாரம்,ரஷ்யாவிடமிருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்வதற்கு அமெரிக்கா தடைவிதித்தது. ரஷ்யாவுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் விதமாக மற்ற நாடுகளும் ரஷ்யாவிடமிருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி … Read more

யோகி அமைச்சரவை மார்ச் 25 அன்று பதவியேற்க உள்ள நிலையில் நாளை சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம்..

உத்தரப் பிரதேசத்தில் யோகி ஆதித்யநாத் தலைமையிலான அமைச்சரவை மார்ச் 25 அன்று பதவியேற்க உள்ள நிலையில், நாளை லக்னோவில் பாஜக சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம் நடைபெற உள்ளது. திங்கள் காலை நடைபெறும் இந்தக் கூட்டத்தில் அனைவரும் தவறாமல் பங்கேற்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்தக் கூட்டத்தில் மேலிடப் பார்வையாளராக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பங்கேற்க உள்ளார். கூட்டத்துக்குப் பின் அமித் ஷாவும், யோகி ஆதித்யநாத்தும் கூடிப் பேசிப் புதிய அமைச்சரவையில் இடம்பெறுவோரின் பட்டியலை இறுதிசெய்வர் … Read more

கேரளாவில் அடுத்த 5 நாட்கள் பலத்த மழைக்கு வாய்ப்பு

திருவனந்தபுரம்: தென்கிழக்கு வங்கக்கடலில் உருவான குறைந்த காற்றழுத்தம், காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாறியது. இது தொடர்பாக இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட தகவலில், காற்றழுத்த தாழ்வு பகுதி வடக்கு நோக்கி நகர்ந்து இன்று காலை அந்தமான் நிகோபார் தீவுகள் அருகே புயலாக வலுவடையும் என்று தெரிவித்தது. இந்த புயலுக்கு அசானி என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்த புயல் வடகிழக்கு திசையில் நகர்ந்து வங்கதேசம் மற்றும் மியான்மர் அருகே கரையை கடக்கக்கூடும் என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் … Read more

லாலு பிரசாத்தின் ராஷ்ட்ரீய ஜனதா தளத்துடன் தனது கட்சியை இன்று முறைப்படி இணைக்கிறார் சரத் யாதவ்..!

டெல்லி: பீகார் முதலமைச்சர் நிதிஷ் குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதா தளம் கட்சியில் இருந்து பிரிந்து லோக் தந்திரிக் ஜனதா தளம் கட்சியை தொடங்கிய சரத் யாதவ் தனது கட்சியை லாலு பிரசாத்தின் ராஷ்ட்ரீய ஜனதா தளத்துடன் இணைக்க உள்ளார். டெல்லியில் உள்ள சரத் யாதவ் இல்லத்தில் வைத்து ராஷ்ட்ரீய ஜனதா கட்சி தலைவர் தேஜஸ்வி யாதவ் முன்னிலையில் இந்த இணைப்பு நடைபெற உள்ளது. இதன் மூலம் 25 ஆண்டுகளுக்கு பின் லாலு பிரசாத், மற்றும் சரத்யாதவ் … Read more

அழிந்து வரும் பறவை இனங்களை காக்கும் நரிக்குறவர்கள்.. சிலிர்க்க வைத்த இளைஞர்களின் முயற்சி!

பறவைகளை வேட்டையாடி வாழ்க்கை ஆதாரத்தை மேற்கொண்டு வந்த நரிக்குறவர் சமூக மக்ககளுக்கு, பறவைகளை பாதுகாக்கும் பணியை கொடுத்து அவர்களது வாழ்வியல் முறையை மாற்றி அமைததிருக்கிறார்கள் புதுச்சேரியைச் சேர்ந்த பல்லுயிர் பாதுகாப்பு அமைப்பைச் சேர்ந்த இளைஞர்கள். அழிந்து வரும் சிட்டுக்குருவி இனங்களை பாதுகாக்க புதுச்சேரி முழுவதும் ஆயிரக்கணக்கான கூடுகளை தயாரித்து அமைத்து வரும் பல்லுயிர் பாதுகாப்பு அமைப்பைச் சேர்ந்த இளைஞர்கள் நரிக்குறவர்களை அணுகி பறவைகளை பாதுகாக்கும் பொறுப்பை கொடுத்து கூடு தயாரிக்கும் வேலையை தருகிறார்கள். அழியும் நிலையில் உள்ள … Read more

பிரதமர் மோடி, அமைச்சர்கள், சாதுக்கள் முன்னிலையில் முதல்வராக 25-ல் ஆதித்யநாத் மீண்டும் பதவியேற்பு: உ.பி. தலைநகர் லக்னோவில் உள்ள அடல் பிஹாரி அரங்கில் பிரம்மாண்ட ஏற்பாடு

உ.பி. சட்டப்பேரவையில் மொத்தம் உள்ள 403 தொகுதிகளில் 275 இடங்களை கைப்பற்றி பாஜக மீண்டும் ஆட்சி அமைக்கிறது. சுமார் 36 ஆண்டுகளுக்கு பிறகு தொடர்ந்து 2-வது முறையாக ஆட்சியை பிடித்து பாஜக வரலாறு படைத்துள்ளது. அதேபோல் பாஜக சார்பில்2-வது முறையாக பதவி ஏற்கும்முதல்வராக யோகி ஆதித்யநாத் சாதனை படைத்துள்ளார். இந்நிலையில், லக்னோவில் உள்ள அடல் பிஹாரி அரங்கில் பதவியேற்பு விழாவை பிரம்மாண்டமாக நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இந்த அரங்கில் வரும் 25-ம் தேதி மாலை 4.00 மணிக்கு … Read more

உத்தரகாண்ட் மாநிலத்தின் புதிய முதலமைச்சர் யார்?

உத்தரகாண்ட் மாநிலத்தின் முதலமைச்சர் குறித்து இறுதி முடிவெடுக்க நாளை பாஜகவின் உயர்மட்டக் கூட்டம் கூடுகிறது. புதிதாக வெற்றி பெற்ற எம்.எல்.ஏக்களின் கூட்டத்தில் முதலமைச்சர் தேர்வு செய்யப்பட உள்ளார். பாஜக மேலிடப் பார்வையாளர்களான மத்திய அமைச்சர் ராஜ்நாத்சிங் மற்றும் மீனாட்சி லேகி ஆகியோர் இன்று உத்தரகாண்ட் செல்கின்றனர். நாளை முதலமைச்சர் தேர்ந்தெடுக்கப்பட்ட பின்னர் செவ்வாய்க்கிழமை பதவியேற்பு விழா நடைபெறும் என்றும் பிரதமர் மோடி, அமித் ஷா உள்ளிட்டோர் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க உள்ளதாகவும் பாஜக செய்தித் தொடர்பாளர் ஷதாப் … Read more