நீதி கிடைப்பது எளிதாக இருக்க வேண்டும்: பிரதமர் மோடி!

நமது நீதித்துறை பழங்கால இந்திய நீதியின் மாண்புகளை மதிப்பதுடன் 21 ஆம் நூற்றாண்டின் நடைமுறை உண்மைகளுக்கு பொருத்தமான அர்ப்பணிப்புடனும் உள்ளதாக பிரதமர் மோடி பெருமிதம் தெரிவித்துள்ளார். முதலாவது அகில இந்திய மாவட்ட சட்ட சேவைகள் அதிகாரிகள் கூட்டத்தின் தொடக்க அமர்வில் பிரதமர் மோடி கலந்து கொண்டார். இந்திய தலைமை நீதிபதி என்.வி.ரமணா, உச்ச நீதிமன்ற நீதிபதிகள் நீதிபதி யு.யு.லலித், நீதிபதி டி.ஒய்.சந்திரசூட், மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு, இணையமைச்சர் எஸ்.பி.சிங் பாகேல், மற்றும் உச்ச நீதிமன்ற நீதிபதிகள், … Read more

இந்தியாவின் முதல் குரங்கு அம்மை நோயாளி குணமடைந்துவிட்டார் : கேரள சுகாதார அமைச்சர் வீணா ஜார்ஜ் தகவல்!!

திருவனந்தபுரம்: இந்தியாவின் முதல் குரங்கு அம்மை நோயாளி குணமடைந்துவிட்டதாக கேரள சுகாதார அமைச்சர் வீணா ஜார்ஜ் தெரிவித்துள்ளார். ஆப்பிரிக்காவில் முதன் முதலில் கண்டறியப்பட்ட குரங்கு அம்மை (மங்கிபாக்ஸ்) நோய், தற்போது உலகம் முழுவதும் 80க்கும் மேற்பட்ட நாடுகளில் வேகமாக பரவி வருகிறது. இந்நிலையில், இந்த நோய் இந்தியாவுக்கும்  வந்து விட்டது. கேரள மாநிலம், கெல்லத்தை சேர்ந்த 35 வயது நபர் கடந்த 12ம் தேதி அமீரகத்தில் இருந்து வந்தார். இவருக்கு குரங்கு அம்மைக்கான அறிகுறிகள் தென்பட்டன.இதனால் அவர் … Read more

இந்தியாவின் முதல் குரங்கு அம்மை நோயாளி குணமடைந்தார்: கேரள சுகாதார அமைச்சர்

திருவனந்தபுரம்: இந்தியாவின் முதல் குரங்கு அம்மை நோயாளி குணமடைந்துவிட்டதாக கேரள சுகாதார அமைச்சர் வீணா ஜார்ஜ் தெரிவித்துள்ளார். கேரளாவின் கொல்லம் மாவட்டத்தைச் சேர்ந்த 35 வயது நபருக்கு குரங்கு அம்மை தொற்று உறுதியானது. வெளிநாட்டில் வேலை பார்த்துவந்த அவர் கடந்த 14-ஆம் தேதி நாடு திரும்பினார். அவருக்கு குரங்கு அம்மை பாதிப்பு அறிகுறிகள் ஏற்பட்டன. இதனால் அவர் உடனடியாக தனிமைப்படுத்தப்பட்டார். அவருக்கு பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. அப்போது அவருக்கு குரங்கு அம்மை நோய் இருப்பது உறுதியானது. இதனையடுத்து, நாட்டிலேயே … Read more

மதுக்கடைகளை மீண்டும் ஏற்று நடத்த டெல்லி அரசு முடிவு!

டெல்லியில் மதுக்கடைகளை மீண்டும் அரசே ஏற்று நடத்த முடிவு செய்துள்ளது. டெல்லியில், முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி கட்சியின் ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த மாநிலத்தில், புதிய மதுக் கொள்கை கடந்த 2021 ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது. அதன்படி சில்லறை மதுபானக் கடைகளை இனி அரசு நடத்துவதில்லை என்ற முடிவெடுக்கப்பட்டு மதுபான விற்பனை செய்வதற்கான உரிமம் தனியாருக்கு வழங்கப்பட்டது. இந்த கொள்கையின் கீழ் 850 மதுபானக் கடைகளை திறக்க தனியாருக்கு அனுமதியும் வழங்கப்பட்டது. அந்த … Read more

புத்த அமர்நாத் யாத்திரை

ஜம்மு காஷ்மீரில் கடந்த சில நாட்களாக தொடர் கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில், கொரோனா தொற்றினால் கடந்த 2 ஆண்டுகளாக ரத்து செய்யப்பட்டிருந்த, பூஞ்ச் மாவட்டத்தின் புகழ்பெற்ற புத்த அமர்நாத் யாத்திரை நேற்று தொடங்கியது. முதல் கட்டமாக 1,056 பக்தர்கள் யாத்திரை செல்ல அனுமதிக்கப்பட்டனர். இதற்காக, ஜம்மு தேசிய நெடுஞ்சாலையில் கொட்டும் மழையை பொருட்படுத்தாது பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த ராணுவ வீரர்.

'குஜராத்திகள், ராஜஸ்தானிகள் இல்லாவிட்டால் மும்பையில் பணமே இருக்காது' – மகாராஷ்டிரா ஆளுநர் பேச்சால் சர்ச்சை

மும்பை: “குஜராத்திகள், ராஜஸ்தானிகள் இல்லாவிட்டால் மும்பையில் பணமே இருக்காது” என்று மகாராஷ்டிரா ஆளுநர் பகத் சிங் கோஷியாரி பேசியதால் சர்ச்சை எழுந்துள்ளது. மும்பை அந்தேரியில் அமைக்கப்பட்டுள்ள ஒரு கட்டிட திறப்பு விழாவில் ஆளுநர் கலந்து கொண்டார். அப்போது அவர் பேசுகையில் “மகாராஷ்டிராவில் குஜராத்தி, ராஜஸ்தானிகள் மட்டும் இல்லாவிட்டால் பணமே இருக்காது. அதுவும் குறிப்பாக மும்பை, தானேவில் பணமே இருக்காது” என்று பேசியிருந்தார். ராஜஸ்தானி, மார்வாரி மற்றும் குஜராத்தி சமூகத்தினரின் வியாபார பங்களிப்பை புகழ்ந்து பேசுகையில் ஆளுநர் கோஷியாரி … Read more

சர்ச்சையில் சிக்கிய ஆளுநர் – என்ன சொன்னார் தெரியுமா..?

மகாராஷ்டிர மாநில ஆளுநர் பகத் சிங் கோஷ்யாரியின் சமீபத்திய பேச்சு, அம்மாநிலத்தில் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. மகாராஷ்டிர மாநிலம் மும்பை புறநகர் மாவட்டம் அந்தேரியில், நேற்று நடந்த நிகழ்ச்சியில், அம்மாநில ஆளுநர் பகத் சிங் கோஷ்யாரி பங்கேற்றார். மகாராஷ்டிர மாநிலத்தில் வாழும் ராஜஸ்தான், குஜராத் மாநிலங்கள் தொடர்பான நிகழ்ச்சியில் அவர் பங்கேற்றார். ராஜஸ்தானியர்களும், குஜராத்திகளும் பங்கேற்ற இந்த நிகழ்ச்சியில் ஆளுநர் பகத் சிங் கோஷ்யாரி பேசியதாவது: இங்குள்ள மக்களுக்கு (மகாராஷ்டிர மக்கள்) நான் ஒன்றை கூறுவேன். அது … Read more

ஸ்மிருதி இரானி அவதூறு வழக்கில் காங். தலைவர்களுக்கு நீதிமன்றம் சம்மன்

புதுடெல்லி:  ஒன்றிய அமைச்சர் ஸ்மிருதி இரானி தொடர்ந்த அவதூறு வழக்கில் காங்கிரஸ் தலைவர்கள் ஜெய்ராம் ரமேஷ், பவன் கேரா, நெட்டா டிசோசா ஆகியோருக்கு டெல்லி உயர்நீதிமன்றம் சம்மன் அனுப்பி உள்ளது. ஒன்றிய மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு துறை அமைச்சர் ஸ்மிருதி இரானியின் 18 வயது மகள் கோவாவில் சட்டவிரோதமாக மதுபான பார் நடத்துவதாக காங்கிரஸ் தலைவர்கள் புகார் எழுப்பினர். இது தொடர்பாக ஸ்மிருதி இரானியை பதவி நீக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினர். புகார் எழுப்பிய காங்கிரஸ் … Read more

அமெரிக்கா, இங்கிலாந்துக்கு இணையாக இந்தியா வளர்ச்சி அடைந்து வருகிறது – பிரதமர் நரேந்திர மோடி பெருமிதம்

அகமதாபாத்: அகமதாபாத்தில் சர்வதேச நிதி சேவை மைய ஆணையத்தின் (ஐஎப்எஸ்சிஏ) அடிக்கல் நாட்டு விழா நேற்று நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி பேசியதாவது: சர்வதேச நிதி நிர்வாகத்தில் இதுவரை ஆதிக்கம் செலுத்தும் நாடுகளாக அமெரிக்கா, இங்கிலாந்து, சிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகள் திகழ்ந்தன. தற்போது அந்தவரிசையில் இந்தியாவும் இடம்பெற்றுள்ளது. மிகப்பெரிய பொருளாதார நாடாக இந்தியா வளர்ந்துள்ளது. அத்துடன் மிக அதிக அளவிலான வெளிநாட்டு முதலீடுகளை ஈர்க்கும் நாடாகவும் திகழ்கிறது. கடந்த 2008-ம் ஆண்டு உலக அளவில் மிகப்பெரும் … Read more

எலியைக் கொல்ல நஞ்சு தடவி வைத்த தக்காளியை நூடுல்சுடன் சேர்த்துத் தின்ற மும்பை பெண் உயிரிழப்பு

எலியைக் கொல்லத் தக்காளியில் நஞ்சு தடவியதை மறந்த பெண், அதை மேகி நூடுல்சுடன் சேர்த்துத் தானே தின்றதால் பலியான சோகம் மும்பையில் நேர்ந்துள்ளது. ரேகா நிசாத் என்கிற பெண் வீட்டில் மேகி நூடுல்ஸ் தின்ற சில மணி நேரத்தில் வயிறு குமட்டியதால் கக்கியுள்ளார். அவர் கணவர் அவரை உடனடியாக மருத்துவமனையில் சேர்த்துள்ளார். ஐந்து நாட்களாகச் சிகிச்சை அளித்தும் பயனளிக்காமல் புதனன்று அவர் உயிரிழந்தார். இது குறித்துக் காவல்துறை விசாரித்ததில், வீட்டில் எலியைக் கொல்லத் தக்காளிப் பழங்களில் நஞ்சு … Read more