கர்நாடகாவில் பாஜக இளைஞரணி செயலாளர் படுகொலை: வன்முறை வெடித்ததால் போலீஸ் குவிப்பு

பெங்களூரு: கர்நாடகாவில் பாஜக இளைஞரணி செயலாளர் ஒருவர் படுகொலை செய்யப்பட்டுள்ள நிலையில், மாநிலத்தில் பரவலாக பல்வேறு இடங்களிலும் போராட்டங்கள் வலுத்துள்ளது. சில இடங்களில் போராட்டக்காரர்கள் வன்முறையில் ஈடுபட்டனர். இதனால், மாநிலம் முழுவதும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. படுகொலை – நடந்தது என்ன? – கர்நாடகாவில் பாஜக இளைஞரணி செயலாளர் ஒருவர் நேற்றிரவு படுகொலை செய்யப்பட்டார். கர்நாடக மாநிலம் தக்‌ஷின கன்னட மாவட்டத்தைச் சேர்ந்தவர் பிரவீன் நெட்டாரு. இவர் பாஜக மாவட்ட இளைஞரணி (யுவ மோர்சா) செயலாளராக உள்ளார். பெல்லாரி … Read more

பி.எஸ்.என்.எல். நிறுவனத்தை மேம்படுத்த ரூ.1.64 லட்சம் கோடியில் புதிய திட்டத்தை செய்யப்படுத்த ஒன்றிய அரசு முடிவு!!

டெல்லி: பி.எஸ்.என்.எல். நிறுவனத்தை மேம்படுத்த ரூ.1.64 லட்சம் கோடியில் புதிய திட்டத்தை செய்யப்படுத்த ஒன்றிய அரசு முடிவு செய்துள்ளது. பி.எஸ்.என்.எல். நிறுவனத்துடன் பி.பி.என்.எல். நிறுவனத்தை இணைக்க ஒன்றிய அமைச்சரவை ஒப்புதல் கொடுத்துள்ளது.பி.எஸ்.என்.எல். நிறுவனத்தை வலுப்படுத்த ஒன்றிய அரசு நடவடிக்க எடுத்துள்ளதாக தொலைதொடர்பு அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் கூறியுள்ளார். பி.எஸ்.என்.எல். நிறுவனத்தை வலுப்படுத்தவும் சேவைகளை விரிவுப்படுத்தவும் ரூ 1.64 லட்சம் கோடி வழங்க ஒன்றிய அமைச்சரவை முடிவு செய்துள்ளது.   பி.எஸ்.என்.எல். நிறுவனத்துடன் பி.பி.என்.எல். நிறுவனத்தை இணைக்க ஒன்றிய அமைச்சரவை … Read more

கடன் தொல்லையால் வீட்டை விற்க முயன்ற நபர் – 2 மணி நேரத்திற்கு முன்பு கதவை தட்டிய அதிர்ஷ்டம்

கடன் தொல்லையால் வீட்டை விற்க முயன்ற நேரத்தில் லாட்டரியின் மூலம் அடித்த அதிர்ஷ்டத்தால் கேரளாவில் குடும்பம் ஒன்று உச்சக்கட்ட மகிழ்ச்சியில் உள்ளது. கேரளா மாநிலம் காசர்கோடு மாவட்டம் மஞ்சேஸ்வரம் டவுன் அருகே உள்ள பாவூர் கிராமத்தைச் சேர்ந்தவர் முகமது என்கிற பாவா. 50 வயதான இவர், பெயிண்டராக பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி அமினா (45). இந்த தம்பதிக்கு 4 மகள்கள் மற்றும் ஒரு மகன் உள்ளனர். முதல் மகளுக்கு திருமணம் ஆனநிலையில், கடந்த 8 மாதங்களுக்கு … Read more

சோனியா காந்தியிடம் விசாரணை நிறைவு – 12 மணி நேரத்தில் 100 கேள்விகள்!

காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா காந்தியிடம் அமலாக்கத் துறையினர் நடத்திய விசாரணை இன்றுடன் நிறைவு பெற்றது. நேஷனல் ஹெரால்டு வழக்கில் நடைபெற்ற சட்ட விரோதப் பணப் பரிமாற்றம் தொடர்பாக, அமலாக்கத் துறை தனியாக வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகிறது. இந்த வழக்கு தொடர்பாக, கடந்த மாதம், டெல்லியில் உள்ள அமலாக்கத் துறை அலுவலகத்தில், காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் ராகுல் காந்தியிடம் தொடர்ந்து ஐந்து நாட்கள் அமலாக்கத் துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர். விசாரணை நடைபெற்ற ஐந்து … Read more

மத்திய பிரதேச மின்சார நிறுவனம் அலட்சியம்: ஒரு குடும்பத்திற்கு ரூ.3,419 கோடி மின் கட்டணம்: அதிர்ச்சியில் மாமனார் மருத்துவமனையில் அட்மிட்

குவாலியர்: மத்திய பிரதேச மாநிலம் குவாலியரில் உள்ள ஷிவா விஹார் காலனியைச் சேர்ந்த பிரியங்கா குப்தா என்பவருக்கு மாநில மின்வாரியத்தில் இருந்து ரூ.3,419 கோடி மின் கட்டணம் செலுத்த வேண்டும் என்று பில் வந்தது. அதிர்ச்சியடைந்த பிரியங்கா குப்தா மற்றும் அவரது குடும்பத்தினர் என்ன செய்வது என்றே தெரியாது குழம்பம் அடைந்தனர். அப்போது பிரியங்கா குப்தாவின் மாமனாருக்கு திடீரென உடல்நிலை பாதிப்பு ஏற்பட்டதால், அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். குடும்பமே பெரும் குழப்பத்தில் இருந்த நிலையில், அவர்களது உறவினர்கள் … Read more

நிர்வாண 'போட்டோஷூட்' – நடிகர் ரன்வீர் சிங்குக்கு காஷ்மீர் ஃபைல்ஸ் இயக்குநர் ஆதரவு

வெளிநாட்டு பத்திரிகைக்கு நிர்வாண போஸ் அளித்ததற்காக பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், அவருக்கு காஷ்மீர் ஃபைல்ஸ் திரைப்பட இயக்குநர் விவேக் அக்னிஹோத்ரி ஆதரவாக கருத்து தெரிவித்துள்ளார். பாலிவுட் நடிகரும், நடிகை தீபிகா படுகோனேவின் கணவருமான ரன்வீர் சிங், துருக்கி நாட்டில் இருந்து வெளியாகும் ‘Turkish Rug’ என்ற இதழுக்கு அண்மையில் நிர்வாண போஸ் அளித்திருந்தார். அவரது நிர்வாணப் படங்கள் வெளியானதை அடுத்து, இந்திய திரையுலகில் பெரும் சலசலப்பு ஏற்பட்டது. துணிச்சலாக … Read more

ஆம் ஆத்மி எம்பி சஸ்பெண்ட் – இதுவரை 24 எம்பிக்கள் மீது நடவடிக்கை!

நாடாளுமன்ற மாநிலங்களவையில் அமளியில் ஈடுபட்டதாகக் கூறி, ஆம் ஆத்மி எம்பி சஞ்சய் சிங், மாநிலங்களவையில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டு உள்ளார். நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர் கடந்த 18 ஆம் தேதி தொடங்கியது. இந்தக் கூட்டத்தொடர், அடுத்த மாதம் 12 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. கூட்டத்தொடர் தொடங்கியது முதலே, காங்கிரஸ், திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்பிக்கள், பல்வேறு முக்கிய பிரச்னைகளை எழுப்பி விவாதம் நடத்த வேண்டும் என தொடர்ந்து முழக்கங்களை எழுப்பி வருகின்றனர். இதனால் இரண்டு … Read more

காங்கிரஸ் ஆளும் மாநிலங்களில் சட்டம் ஒழுங்கை நிலைநாட்டாமல் காங்கிரஸ் முதல்வர்கள் டெல்லியில் முகாம் – மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர் குற்றச்சாட்டு

காங்கிரஸ் ஆளும் மாநிலங்களில் சட்டம் ஒழுங்கை பராமரிக்காமல், மாநில முதல்வர்கள் டெல்லியில் முகாமிட்டுள்ளதாக மத்திய தகவல் மற்றும் ஒளிப்பரப்புத்துறை அமைச்சர் அனுராக் தாக்கூர் குற்றஞ்சாட்டியுள்ளார். புதுடெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், நேஷனல் ஹெரால்டு வழக்கில் சோனியாகாந்தியிடம் அமலாக்கத்துறையினர் விசாரணை நடத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் கட்சியினர் போராட்டம் நடத்துவது ஏற்புடையது அல்ல என்று கூறினார். ஊழல் செய்யாதபோது பயம் எதற்கு என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.   Source link

ஆந்திர மாநிலத்தில் மின் ஊழியர்களின் நலனுக்காக பாடுபட்ட ஒரே முதல்வர் ஜெகன்மோகன்-ஜில்லா பரிஷத் தலைவர் பேச்சு

சித்தூர் :ஆந்திர மாநிலத்தில் மின் ஊழியர்களின் நலனுக்காக பாடுபட்ட ஒரே முதல்வர் ஜெகன்மோகன் தான் என்று ஜில்லா பரிஷத் தலைவர் வாசு தெரிவித்துள்ளார்.சித்தூர் அம்பேத்கர் பவனில் ஆஜாத்அம்ருத் மகோத்சவம் திட்டத்தின்கீழ் சித்தூர் ஜில்லா பரிஷத் தலைவர் வாசு தலைமையில் மின்துறை ஊழியர்களுடன் ஆலோசனை கூட்டம் நேற்று நடந்தது. அப்போது, அவர் பேசியதாவது: இந்தியா சுதந்திரம் பெற்று 75 ஆண்டுகள் நிறைவடைந்ததையொட்டி ஒவ்வொரு துறையை சேர்ந்த ஊழியர்களுடன் விழிப்புணர்வு கூட்டம் நடத்த வேண்டும் என மத்திய அரசு உத்தரவிட்டது. … Read more

சட்டவிரோத பணப்பரிமாற்ற தடுப்பு சட்டம்: உறுதியாகிறது அமலாக்கத்துறையின் கைது அதிகாரம்!

“சட்டவிரோத பணப்பரிமாற்ற தடுப்பு சட்டத்தின்கீழ் கைது செய்யும் அதிகாரம் அமலாக்கத்துறைக்கு உள்ளது” என உள்ளிட்ட முக்கியமான சட்டபிரிவுகளை உறுதியப்படுத்தியுள்ளது உச்சநீதிமன்றம். சட்ட விரோத பண பரிமாற்ற தடுப்புச் சட்டத்தின் கீழ் அமலாக்கத் துறையின் அதிகாரத்திற்கு எதிராக ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வர் மெகபூபா முப்தி காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்திக் சிதம்பரம் உள்ளிட்ட ஏராளமானோர் மனு தாக்கல் செய்திருந்தனர். அதில் `சட்ட விரோத பண பரிமாற்ற தடுப்புச் சட்டத்தின் கீழ் அமலாக்கத்துறை வழக்கு பதிவு செய்த … Read more