பிரதமர் மோடியுடன் ராஜ்நாத் ஆலோசனை: 40 நிமிட சந்திப்பில் பேசியது என்ன?

பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், பிரதமர் மோடியை நேற்று சந்தித்துப் பேசினார். அப்போது, காஷ்மீர் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து விளக்கம் அளித்தார். காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் கடந்த 22-ம் தேதி தீவிரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதலில் 26 சுற்றுலாப் பயணிகள் உயிரிழந்தனர். இதையடுத்து, காஷ்மீரில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. முப்படைகளும் உஷார் நிலையில் உள்ளன. இந்தியா, பாகிஸ்தான் எல்லையில் பதற்றம் நிலவுகிறது. காஷ்மீர் முழுவதும் தீவிரவாதிகள் என சந்தேகிக்கப்படும் நபர்கள் மற்றும் தீவிரவாதிகளுக்கு ஆதரவு அளித்தவர்கள் வீடுகளில் … Read more

செந்தில் பாலாஜி ஜாமீனுக்கு எதிரான வழக்கு முடித்துவைப்பு: முழு விவரம்!

முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமீனுக்கு எதிரான வழக்கை உச்ச நீதிமன்றம் நேற்று முடித்துவைத்தது. தமிழக அரசு போக்குவரத்து கழகத்தில் வேலை வாங்கி தருவதாக கூறி பண மோசடியில் ஈடுபட்டதாக செந்தில் பாலாஜி மீது குற்றம் சாட்டப்பட்டது. இதுதொடர்பாக கடந்த 2023-ம் ஆண்டு ஜூனில் அமலாக்கத் துறை அவரை கைது செய்தது. சிறையில் இருந்தபோது அவர் இலாகா இல்லாத அமைச்சராக நீடித்தார். இதனால் அவருக்கு ஜாமீன் வழங்க உச்ச நீதிமன்றம் மறுத்துவிட்டது. கடந்த ஆண்டு பிப்ரவரியில் அவர் … Read more

போர் பதற்றம்: பிரான்ஸிடம் இருந்து ரூ.63,000 கோடியில் 26 ரபேல் போர் விமானங்கள் வாங்க ஒப்பந்தம்

இந்திய கடற்படைக்காக ரூ.63 ஆயிரம் கோடியில் 26 ரபேல்-எம் போர் விமானங்களை வாங்குவது தொடர்பாக இந்தியா, பிரான்ஸ் இடையே நேற்று ஒப்பந்தம் கையெழுத்தானது. உலக அளவில் மிகவும் திறமையான போர் விமானங்களில் ஒன்றாக ரபேல்-எம் கருதப்படுகிறது. இது இப்போது பிரான்ஸ் கடற்படையில் மட்டுமே இயங்கி வருகிறது. இதையடுத்து, இந்திய கடற்படைக்காக இந்த ரக விமானங்களை வாங்குவது தொடர்பாக பிரான்ஸின் தஸ்ஸோ நிறுவனத்துடன் மத்திய அரசு பேச்சுவார்த்தை நடத்தி வந்தது. பேச்சுவார்த்தை முடிவடைந்த நிலையில், ரூ.63 ஆயிரம் கோடியில் … Read more

“சமரசம் இல்லை… பாகிஸ்தான் மண்டியிடும்!” – மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி

புதுடெல்லி: “இந்த முறை சமரசம் இருக்காது. அரசு கடுமையான நடவடிக்கை எடுக்கும். அவர்கள் மண்டியிடுவார்கள்” என்று பஹல்காம் தாக்குதல் விவகாரத்தில் பாகிஸ்தான் மீதான நடவடிக்கைகள் குறித்து மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி தெரிவித்துள்ளார். பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுப்பதற்கான மத்திய அரசின் நடவடிக்கைகள் தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி, “எனக்கு நினைவு தெரிந்ததில் இருந்து பயங்கரவாதத்தை அரசு கொள்கையின் ஒரு கருவியாகப் பயன்படுத்தி வரும் நாடு பாகிஸ்தான். இதற்கு … Read more

ஓடிடி தளங்களில் ஆபாசங்களை கட்டுப்படுத்த மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தல்

புதுடெல்லி: ஓடிடி, சமூக வலைதளங்களில் நிலவும் கட்டுப்பாடற்ற ஆபாசங்களை தடுக்க ஏதேனும் நடவடிக்கை எடுக்கலாமே என்று உச்ச நீதிமன்றம் மத்திய அரசுக்கு அறிவுறுத்தியுள்ளது. இது தொடர்பாக, பத்திரிகையாளரும், முன்னாள் தகவல் ஆணையருமான உதய் மஹுர்கர் மற்றும் பிறர் தொடர்ந்த பொதுநல வழக்கு இன்று (ஏப்.28) நீதிபதிகள் பி.ஆர்.கவாய், ஏஜி மாஷிஷ் தலைமையிலான அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் அமர்வு, மத்திய அரசுக்கும், நெட்ஃப்ளிக்ஸ், அமேசான் ப்ரைம், ஆல்ட்பாலாஜி, முபி, உல்லு டிஜிட்டல் … Read more

பஹல்காம் தாக்குதலுக்குப் பின் பாகிஸ்தானை விட்டு வெளியேறி தாயகம் திரும்பிய 1,000+ இந்தியர்கள்!

புதுடெல்லி: பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்குப் பின் இரு நாடுகளுக்கும் இடையே நிலவும் பதற்றத்தின் எதிரொலியாக, பாகிஸ்தானில் இருந்து வெளியேறி 1,000-க்கும் மேற்பட்ட இந்தியர்கள் தாயகம் வந்துள்ளனர். பாகிஸ்தானில் இருந்து கடந்த 6 நாட்களில் 1,000-க்கும் மேற்பட்ட இந்தியர்கள் வாகா எல்லை வழியாக தாயகம் திரும்பியுள்ளனர். இது தொடர்பாக பேசிய ஓர் அதிகாரி, “கடந்த ஆறு நாட்களில் 1,000-க்கும் மேற்பட்ட இந்தியர்கள் பாகிஸ்தானிலிருந்து வாகா எல்லை வழியாக தாயகம் திரும்பியுள்ளனர். இதேபோல், திங்கட்கிழமைக்குள் 800-க்கும் மேற்பட்ட பாகிஸ்தானியர்கள் அவர்களின் … Read more

பகல்காம் தாக்குதல்: பயங்கரவாத தாக்குதலை நேரில் கண்ட குடும்பம்

பால்டியில் வசிக்கும் ரிஷி பட்டின் குடும்பத்தினர் பகல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலை நேரில் கண்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

26 ரஃபேல் மரைன் போர் விமானங்கள் வாங்க ஒப்பந்தம்: இந்தியா – பிரான்ஸ் கையெழுத்து

புதுடெல்லி: இந்தியக் கடற்படைக்கு 26 ரஃபேல்-மரைன் விமானங்களை வாங்குவதற்கான ஒப்பந்தம் இந்தியா – பிரான்ஸ் அரசுகளுக்கு இடையே இன்று (திங்கள்கிழமை) கையெழுத்தானது. இதில் 22 ஒற்றை இருக்கை விமானங்களும் 4 இரட்டை இருக்கை விமானங்களும் அடங்கும். இது தொடர்பாக பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “இந்தியக் கடற்படைக்கு 26 ரஃபேல்-மரைன் விமானங்களை வாங்குவதற்கான ஒப்பந்தம் இந்தியா – பிரான்ஸ் அரசுகளுக்கு இடையே இன்று (திங்கள்கிழமை) கையெழுத்தானது. இதில் 22 ஒற்றை இருக்கை விமானங்களும் 4 இரட்டை இருக்கை … Read more

CBSE Board Result 2025: சிபிஎஸ்இ 10, 12 ஆம் வகுப்பு தேர்வு; எந்த தளத்தில் முடிவுகளை பார்க்கலாம்?

CBSE Result 2025: மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (CBSE) இடைநிலை மற்றும் முதுநிலைப் பள்ளி தேர்வு முடிவுகளுக்கான எந்த நேரம் வேண்டுமானாலும் வெளியாகலாம்.   

“பஹல்காம் தாக்குதல் குறித்த அனைத்து கட்சிக் கூட்டத்தை பிரதமர் மோடி தவிர்த்தது சரியல்ல” – கார்கே சாடல் 

ஜெய்ப்பூர்: “நாட்டின் பெருமை பாதிப்புக்குள்ளானபோது நீங்கள் பிஹாரில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்தது மிகவும் துரதிருஷ்டமானது” என்று பிரதமர் மோடியை காங்கிரஸ் தலைவர் கார்கே சாடியுள்ளார். காஷ்மீரில் 26 பேர் கொடூரமாக சுட்டுக்கொல்லப்பட்ட பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் குறித்து விவதிக்க நடந்த அனைத்துக் கட்சிக் கூட்டத்தை பிரதமர் மோடி தவிர்த்தாக கார்கே இவ்வாறு விமர்சித்துள்ளார். ராஜஸ்தான் தலைநகர் ஜெய்ப்பூரில் நடந்த ‘அரசியலமைப்பைக் காப்பாற்றுங்கள்’ என்ற பேரணியில் கலந்து காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கலந்து கொண்டு பேசினார். அப்போது … Read more