எந்த கட்சியிலும் சேர மாட்டேன்: யஸ்வந்த் சின்கா அறிவிப்பு

கொல்கத்தா: ‘இனிமேல் எந்த அரசியல் கட்சியிலும் சேரமாட்டேன்,’ என ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்டு தோல்வியை தழுவிய யஸ்வந்த் சின்கா தெரிவித்துள்ளார். பாஜ.வில் இருந்து பிரதமர் மோடியை எதிர்த்து வெளியேறிய முன்னாள் ஒன்றிய பாஜ அமைச்சரான யஸ்வந்த் சின்கா (84), மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரசில் சேர்ந்தார். அக்கட்சியில் அவர் தேசிய துணை தலைவராக இருந்தார். சமீபத்தில் நடந்த ஜனாதிபதி தேர்தலில், எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக அவர் நிறுத்தப்பட்டார். இதற்காக, கட்சி பதவியை ராஜினாமா செய்தார். இந்த தேர்தலில் … Read more

காவிரி ஆணைய கூட்டத்தில் மேகதாது பற்றி விவாதிக்க ஆக. 10ம் தேதி வரை தடை: உச்ச நீதிமன்றம் உத்தரவு

புதுடெல்லி: ‘காவிரி ஆணையத்தின் கூட்டத்தில் மேகதாது குறித்து ஆகஸ்ட் 10ம் தேதி வரை விவாதிக்க கூடாது,’ என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காவிரி நீர் மேலாண்மை ஆணைய கூட்டத்தில் மேகதாது அணை விவகாரம் பற்றி விவாதிக்க கர்நாடகா அரசுக்கு அனுமதி அளிக்கக் கூடாது என தமிழக அரசு தொடர்ந்த வழக்கை கடந்த 20ம் தேதி விசாரித்த உச்ச நீதிமன்றம், இதற்கு பதில் மனு தாக்கல் காவிரி ஆணையம், தமிழகம், கர்நாடகா அரசுகளுக்கு உத்தரவிட்டது. அதன்படி, தமிழக அரசு … Read more

மேற்கு வங்கத்தில் உள்ளுர் மின்சார ரெயில்களில் எல்இடி டி.வி.க்கள்

மேற்கு வங்க மாநிலத்தில் பயணிகளின் சோர்வை போக்க உள்ளுர் மின்சார ரெயில்களில் எல்இடி டிவிக்களை பொருத்த கிழக்கு ரெயில்வே முடிவு செய்துள்ளது.  எல்இடி டிவிக்கள் பொருத்தப்பட்ட முதல் உள்ளுர் மின்சார ரெயில் ஹவுரா ரயில் நிலையத்தில் இருந்து இன்று புறப்பட்டது. மொத்தமுள்ள 50 ரயில்களிலும் 2400 டிவிக்கள் பொருத்தப்படும் என்று கூறப்படுகிறது.  Source link

பாஜ தலைமையிலான ஒன்றிய அரசு விசாரணை அமைப்புகளை தவறாக பயன்படுத்துகிறது: ஜனாதிபதிக்கு எதிர்க்கட்சிகள் கடிதம்

புதுடெல்லி: ‘விசாரணை அமைப்புகளை ஒன்றிய அரசு தவறாக பயன்படுத்துகிறது,’ என ஜனாதிபதி திரவுபதி முர்முவுக்கு எதிர்க்கட்சிகள் கூட்டாக கடிதம் எழுதி உள்ளன. காங்கிரஸ், ஆம் ஆத்மி, ராஷ்டிரிய ஜனதா தளம், மார்க்சிஸ்ட் உள்ளிட்ட பல்வேறு எதிர்க்கட்சிகள் சார்பில் ஜனாதிபதி திரவுபதி முர்முவுக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது:ஒன்றிய பாஜ அரசு தனது எதிர்க்கட்சிகளுக்கு எதிராக பழிவாங்கும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக, புலனாய்வு அமைப்புகளை தொடர்ந்து தவறாக பயன்படுத்துவதை உங்கள் கவனத்திற்கு கொண்டு வருகிறோம். சட்டம் என்பது எல்லோருக்கும் … Read more

நேஷனல் ஹெரால்டு வழக்கில் அமலாக்கத் துறையில் மீண்டும் ஆஜர் சோனியாவிடம் 6 மணி நேரம் விசாரணை: டெல்லியில் ராகுல் காந்தி, எம்பி.க்கள் கைது

புதுடெல்லி: நேஷனல் ஹெரால்டு வழக்கு தொடர்பாக காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியிடம் அமலாக்கத் துறை அதிகாரிகள் நேற்று 6 மணி நேரம் விசாரணை நடத்தப்பட்டது. இந்த விசாரணையை எதிர்த்து நாடு முழுவதும் காங்கிரசார் சத்தியாகிரகப் போராட்டம் நடத்தினர். டெல்லியில் போராட்டம் நடத்திய ராகுல் காந்தி  கைது செய்யப்பட்டார். நேஷனல் ஹெரால்டு தொடர்பாக காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, இக்கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, காங்கிரஸ் மாநிலங்களவை தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, பவன் பன்சால் உள்ளிட்டோர் மீது … Read more

“மக்களின் கண்களும் செவிகளும் பத்திரிகையாளர்களே” – தலைமை நீதிபதி என்வி ரமணா

புதுடெல்லி: “ஜனநாயகத்தின் முதுகெலும்பாக சுதந்திர ஊடகங்கள் உள்ளன” என்று இந்திய தலைமை நீதிபதி என்வி ரமணா பேசியுள்ளார். டெல்லியில், ராஜஸ்தான் பத்திரிகையின் ஆசிரியர் ஸ்ரீ குலாப் சந்த் கோத்தாரி எழுதிய “கீதா விஜ்ஞான உபநிஷத்” என்ற புத்தகத்தின் வெளியீட்டு விழா இன்று நடந்தது. இதில் கலந்துகொண்டு புத்தகத்தை வெளியிட்டு பேசிய உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி என்வி ரமணா ஊடகங்கள் குறித்து பேசினார். “ஜனநாயகத்தின் முதுகெலும்பாக சுதந்திர ஊடகங்கள் உள்ளன. பத்திரிகையாளர்களே மக்களின் கண்களாக, காதுகளாக அறியப்படுகிறார்கள். … Read more

சென்னை அருகே புதிய விமான நிலையம் ஒன்றிய அமைச்சருடன் தங்கம் தென்னரசு பேச்சு

புதுடெல்லி: சென்னை அருகேல் புதிய விமான நிலையம் அமைப்பது தொடர்பாக ஒன்றிய அமைச்சர் ஜோதிராதித்யா சிந்தியாவை தமிழக அமைச்சர் தங்கம் தென்னரசு நேரில் சந்தித்து ஆலோசித்துள்ளார். இந்தியாவில் உள்ள முக்கிய விமான நிலையங்களில் மீனம்பாக்கம் ஒன்றாகும். இருப்பினும், மக்கள் பயன்பாட்டை அடிப்படையாக கொண்டு சென்னை அருகே 2வது சர்வதேச விமான நிலையம் கட்ட ஏதுவான இடத்தை கண்டறியும் பணி கடந்த சில ஆண்டுகளாக நடந்து வந்தது. நான்கு இடங்கள் கண்டறியப்பட்ட நிலையில் பன்னூர், பரந்தூர் ஆகிய 2 … Read more

முழு தகுதியும், திறமையும் இருந்தும் எய்ம்சில் ஆசிரியர்கள் பணிக்கு கூட எஸ்சி, எஸ்டி சேர்க்கப்படுவதில்லை: நாடாளுமன்ற குழு அறிக்கையில் குற்றச்சாட்டு

புதுடெல்லி: ‘முழு தகுதியும், திறமையும், அனுபவமும் இருந்த போதிலும், எய்ம்ஸ் மருத்துவ கல்லூரிகளில் ஆரம்ப நிலை ஆசிரியர்களாகக் கூட தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடி பிரிவைச் சேர்ந்த விண்ணப்பதாரர்கள் அனுமதிக்கப்படுவதில்லை’ என நாடாளுமன்ற குழு தனது அறிக்கையில் குற்றம்சாட்டி உள்ளது. மக்களவையில் தாழ்த்தப்பட்ட (எஸ்சி) மற்றும் பழங்குடியினர் (எஸ்டி) நலன் குறித்த நாடாளுமன்ற நிலைக்குழுவின் அறிக்கை சமர்பிக்கப்பட்டுள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது:எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரிகளில் 1111 ஆசிரியர், 275 உதவிப் பேராசிரியர், 92 பேராசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன. இப்படிப்பட்ட … Read more

சபரிமலை ஐயப்பன் கோயில் தங்கத் தகடு பதித்த கூரையில் நீர்க்கசிவு

திருவனந்தபுரம்: பிரசித்தி பெற்ற சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு வருடம்தோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் பல்வேறு நாடுகளில் இருந்தும், இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் தரிசனத்திற்காக வருகின்றனர். ஐயப்பனின் மூல விக்ரகம் அமைந்துள்ள கர்ப்பகிரகத்தின் மேற்கூரையில் கடந்த 15 வருடங்களுக்கு முன்பு தங்கத் தகடுகள் பதிக்கப்பட்டன. கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த பிரபல தொழிலதிபரான விஜய் மல்லையாவின் ஏற்பாட்டின் பேரில் இந்த தங்கத் தகடுகள் பதிக்கப்பட்டன. இந்நிலையில், கடந்த சில தினங்களாக கூரையில் இருந்து கோயிலுக்குள் தண்ணீர் ஒழுகுவது கண்டுபிடிக்கப்பட்டது. தங்கத் … Read more

எதிர்க்கட்சியினருடன் ஆளுங்கட்சியினர் கலந்து பேசுவதில்லை: திருச்சி சிவா குற்றச்சாட்டு

டெல்லி: மக்கள் பிரச்சனைகளை பேச அனுமதிக்காமல் 19 எம்பிக்களை சஸ்பெண்ட் செய்துள்ளனர் என டெல்லியில் திருச்சி சிவா பேட்டியளித்தார். 19 எம்.பி.க்கள் மீதான சஸ்பெண்ட் உத்தரவை திரும்ப பெற வேண்டும் என அவர் வலியுறுத்தினார். எதிர்க்கட்சியினருடன் ஆளுங்கட்சியினர் கலந்து பேசுவதில்லை எனவும் குற்றஞ்சாட்டினார்.