படிக்கட்டுகளில் இருந்து தவறி விழுந்தார் லாலு பிரசாத் யாதவ்.!

பீகார் முன்னாள் முதலமைச்சரும் ராஷ்ட்ரிய ஜனதா கட்சியின் தலைவருமான லாலு பிரசாத் யாதவ் தமது வீட்டுப் படிக்கட்டுகளில் தவறி விழுந்தார். அவருக்கு தோள்பட்டையில் எலும்பு முறிவு ஏற்பட்டதையடுத்து மருத்துவமனயில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ஏற்கனவே சிறுநீரக பாதிப்பு உள்பட பலவித உடல் நல பாதிப்புகளால் அவதிப்படும் லாலு பிரசாத் யாதவ் சிகிச்சைக்காக வெளிநாடு செல்லத் திட்டமிட்டுள்ளார்.  Source link

வைர நகைகள் விற்பனையில் நடுத்தர மக்களின் பங்களிப்பு அதிகரித்து வருகிறது: இந்தாண்டு விழாக்கால விற்பனை 12% வரை உயரும் என எதிர்பார்ப்பு

மும்பை: வைர நகை விற்பனையில் நடுத்தர மக்களின் பங்களிப்பு அதிகரித்திருப்பதாகவும், இந்த ஆண்டு விழாக்காலத்தில் 10 முதல் 12 சதவீதம் விற்பனை உயரும் எனவும் டி பியர்ஸ் நிர்வாக இயக்குநர் சச்சின் ஜெயின் தெரிவித்தார். வைர உற்பத்தி மற்றும் விற்பனையில் முன்னணி நிறுவனங்களில் ஒன்றான டி பியர்ஸ், தனது ‘என்றென்றும் எப்போதும் வைரம்’ என்ற கருத்துருவின் 75வது ஆண்டு கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக, மும்பையில் 3 நாள் அரங்கிற்கு ஏற்பாடு செய்திருந்தது.  இதில் வைர வர்த்தகத்தில் ஈடுபட்டுள்ள … Read more

எந்தவொரு எம்எல்ஏவையும் நிர்பந்திக்கவில்லை: மகாராஷ்டிர முதல்வர் ஏக்நாத் ஷிண்டே விளக்கம்

மும்பை: எனக்கு ஆதரவு அளிக்கக் கோரி எந்தவொரு எம்எல்ஏவையும் நிர்பந்திக்கவில்லை என்று மகாராஷ்டிர முதல்வர் ஏக்நாத் ஷிண்டே தெரிவித்துள்ளார். மகாராஷ்டிர சட்டப்பேரவையில் நேற்று பேரவைத் தலைவர் தேர்தல் நடைபெற்றது. அப்போது மாநில முதல்வர் ஏக்நாத் ஷிண்டே பேசியதாவது: சிவசேனா நிறுவனர் பால் தாக்கரேவின் கொள்கைகளின் அடிப்படையில் மகாராஷ்டிராவில் பாஜக-சிவசேனா அரசு பதவியேற்றுள்ளது. இந்திய அரசியலில் இதற்கு முன்பு எதிர்க்கட்சிகளை சேர்ந்தவர்கள் ஆளும் கட்சியில் இணைவது வாடிக்கையாக இருந்தது. மகாராஷ்டிராவில் ஆளும் அரசில் இருந்து எதிர்க்கட்சிகளுக்கு தலைவர்கள் மாறியுள்ளனர். … Read more

காலதாமதமாக புறப்பட்ட நூற்றுக்கணக்கான இண்டிகோ விமானங்கள்.. விளக்கமளிக்க DGCA நோட்டீஸ்.!

நாடு முழுவதும் இண்டிகோ நிறுவனத்தின் நூற்றுக்கணக்கான விமானங்கள் காலதாமதமாக சென்றது குறித்து விளக்கமளிக்க சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இண்டிகோ நிறுவனத்தில் பணியாளர்கள் பற்றாக்குறை ஏற்பட்டதன்  காரணமாக, நேற்றும், இன்றும் நூற்றுக்கணக்கான விமானங்கள் காலதாமதமாக புறப்பட்டு சென்றன.  Source link

2 தீவிரவாதிகளை துணிச்சலாக பிடித்த காஷ்மீர் கிராம மக்கள்: ஆயுதங்கள் வைத்திருந்த போதும் பயப்படவில்லை

ஜம்மு:  காஷ்மீரில் பயங்கர ஆயுதங்களுடன் தாக்குதல் நடத்த வந்த 2 தீவிரவாதிகளை, கிராம மக்கள் உயிரை துச்சமென நினைத்து மடக்கி பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர். காஷ்மீரில் இது பெரும் பரபரப்பையும், பாராட்டையும் பெற்றுள்ளது. ஜம்மு காஷ்மீரில் கடந்த சில மாதங்களாக தீவிரவாதிகள்  தாக்குதல் அதிகரித்து வருகிறது. இந்நிலையில், ரியாசி மாவட்டத்தில் உள்ள துக் சான் டோக் என்ற இடத்தில் பயங்கர  ஆயுதங்களுடன் லஷ்கர் இ தொய்பா தீவிரவாதிகள் இருவர் நேற்று பதுங்கி இருந்தனர். இருவரையும் கிராம மக்கள் … Read more

"அடுத்த 40 ஆண்டுகள் பாஜகவின் காலம்" – அமித் ஷா நம்பிக்கை

ஹைதராபாத்: பாஜக செயற்குழு கூட்டத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பேசியதாவது. நாட்டில் உள்ள எதிர்க்கட்சிகளை மக்கள் மூலையில் உட்கார வைத்துவிட்டனர். அடுத்து வரும் 30 முதல் 40 ஆண்டுகள் வரை மத்தியில் பாஜக கூட்டணியே ஆட்சி நடத்தும். சாதி அரசியல், வாரிசு அரசியல், வாக்குவங்கி அரசியலுக்கு பாஜக முற்றுப்புள்ளி வைத்துள்ளது. தெலங்கானா, மேற்குவங்கத்தில் பாஜக விரைவில் ஆட்சி அமைக்கும். இந்த இரு மாநிலங்களிலும் குடும்ப ஆட்சி ஒழிக்கப்படும். கேரளா, ஆந்திரா, ஒடிசாவில் ஆட்சியை கைப்பற்றுவது … Read more

MS Dhoni: தோனிக்கு மூட்டு வலி சிகிச்சை… கட்டணமாக வெறும் 40 ரூபாய் கேட்ட டாக்டர்!

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேட்பனும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனுமான மகேந்திர சிங் தோனி ஜார்க்கண்ட் மாநிலத்தை சேர்ந்தவர். ராஞ்சியில் குடும்பத்துடன் வசித்துவரும் அவர், தற்போது மூட்டுவலி காரணமாக அவதியுற்று வருகிறார். கால்சியம் பற்றாக்குறை காரணமாகவே அவருக்கு மூட்டு வலி ஏற்பட்டுள்ளதாக மருத்துவர்கள் அண்மையில் தெரிவித்தனர். இதனையடுத்து, ராஞ்சி அருகே லபுங் எனும் வனப்பகுதியில் அமைந்துள்ள ஆயுர்வேத ஆசிரமத்துக்கு சில தினங்களுக்கு முன் சென்ற தோனி, அங்குள்ள மருத்துவரிடம் மூட்டு வலி சிகிச்சை பெற்றார். … Read more

பைக்கில் சென்றவரை துரத்திச் சென்று கடித்து குதறிய வெறிநாய்.. வாகன ஓட்டி மருத்துவமனையில் அனுமதி..!

கேரள மாநிலம் பாலக்காடு அருகே, பைக்கில் சென்ற நபரை வெறிநாய் ஒன்று துரத்திச் சென்று கடித்துக் குதறிய காட்சிகள் சிசிடிவியில் பதிவாகியுள்ளன. நட்டியங்கல் பகுதியைச் சேர்ந்த மனாப், மண்ணார்காடு சாலையில் பைக்கில் சென்ற கொண்டிருந்த போது, முன்னே சென்ற ஒரு பைக்கை வெறிநாய் துரத்தியுள்ளது. அச்சமடைந்த மனாப் பைக்கை நிறுத்திவிட்டு நின்ற நிலையில், அவரை நோக்கி ஓடிவந்த வெறிநாய் எகிறி பைக்கில் அமர்ந்திருந்த மனாப்பின் கையை கடித்துள்ளது. உடனே மனாப் தப்பிச் செல்ல முயன்ற போது, அந்த … Read more

75 ஆம்புலன்ஸ், 17 பேருந்துகள்: நேபாளத்துக்கு இந்தியா பரிசு

புதுடெல்லி: நேபாளத்துக்கு 75 ஆம்புலன்ஸ்கள், 17 பள்ளி பேருந்துகளை இந்தியா பரிசாக வழங்கி உள்ளது. இந்தியா இந்தாண்டு 75வது சுதந்திர தினத்தை கொண்டாடுகிறது. இதற்காக நாடு முழுவதும் பல்வேறு நிகழ்ச்சிகள், கொண்டாட்டங்கள் நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில், இந்தியா-நேபாளம் இடையிலான வலுவான, நீண்டகால நட்புறவை வலுப்படுத்தும் விதமாக, நேபாளத்துக்கு 75 ஆம்புலன்ஸ்கள், 17 பள்ளி பேருந்துகளை இந்தியா பரிசாக வழங்கி உள்ளது. இதற்கான சாவிகளை நேபாளத்துக்கான இந்தியாவின் புதிய தூதர் நவீன் வஸ்தவா, நேபாள கல்வி, அறிவியல் மற்றும் … Read more

“அடுத்த 30-40 ஆண்டுகள் பாஜகவின் காலம் தான்” – பாஜக செயற்குழு கூட்டத்தில் உள்துறை அமைச்சர் அமித்ஷா பேச்சு!

அடுத்த 30 முதல் 40 ஆண்டுகள் பாஜகவின் காலம் தான் என்றும் இந்தியா உலகிற்கே தலைமை தாங்கும் என்றும் உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார். தெலங்கானாவின் ஐதராபாத்தில் நடைபெற்ற பாஜகவின் செயற்குழு கூட்டத்தில் பேசிய அவர், அரசியலமைப்பு சட்டத்தில் நம்பிக்கை வைத்து குஜராத் கலவர வழக்கின் விசாரணையை பிரதமர் மோடி எதிர்கொண்டதாகவும், ஊழல் குற்றச்சாட்டுகளை எதிர்கொள்ளும் போது எதிர்க்கட்சிகள் அராஜகத்தை பரப்புவதாகவும் கூறினார். மேலும், தெலங்கானா போன்ற மாநிலங்களில் குடும்ப ஆட்சியை பாஜக முடிவுக்கு கொண்டு வரும் … Read more