மத்திய நீர்வளத்துறை அமைச்சர் கஜேந்திர சிங் செகாவத் உடன் அமைச்சர் துரைமுருகன் இன்று சந்திப்பு

டெல்லி :மத்திய நீர்வளத்துறை அமைச்சர் கஜேந்திர சிங் செகாவத் உடன் தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் இன்று சந்திப்பு மேற்கொள்கிறார். காவிரி ஆணைய கூட்டத்தில் மேகதாது குறித்து விவாதிக்கக்கூடாது என வலியுறுத்த உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேகதாது குறித்து விவாதித்தால் தமிழக அதிகாரிகள் வெளிநடப்பு செய்வர்: அமைச்சர் துரைமுருகன் பேட்டி

புதுடெல்லி: ‘காவிரி ஆணையத்தின் கூட்டத்தில் மேகதாது குறித்து விவாதித்தால் தமிழக அதிகாரிகள் வெளிநடப்பு செய்வார்கள்’ என தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் டெல்லியில் தெரிவித்துள்ளார்.காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தில் மேகதாது குறித்து விவாதிக்கப்படுவதற்கு எதிராக தமிழக அரசு தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுவானது இன்று நீதிபதி கன்வீல்கர் அமர்வில் விசாரணைக்கு வருகிறது. இதற்கிடையே, காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் 16வது கூட்டம் நாளை மறுநாள் நடக்க உள்ளது. இந்த நிலையில் 2 நாள் பயணமாக … Read more

டெல்லி, ஹரியாணாவில் நீட் தேர்வு எழுத ஆள்மாறாட்டம் செய்ததாக 8 பேரை கைது செய்தது சிபிஐ

புதுடெல்லி: கடந்த ஞாயிற்றுக்கிழமை முடிந்த நீட் தேர்வில் ஒருசிலர் ஆள்மாறாட்டம் செய்ததாக புகார் எழுந்துள்ளது. இது தொடர்பாக டெல்லி, ஹரியாணாவில் 8 பேரை சிபிஐ கைது செய்துள்ளது. நாடு முழுவதும் உள்ள மருத்துவக் கல்லூரிகளில் இளநிலை மருத்துவப் படிப்பில் சேர்வதற்கான, மத்திய அரசின் நீட் நுழைவுத் தேர்வு கடந்த 17-ல் நடைபெற்றது. இதில் முறைகேடு நடைபெறுவதைத் தடுக்க கடுமையான சோதனைகளும், முன் எச்சரிக்கை நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டன. இதையும் மீறி டெல்லி மற்றும் ஹரியாணாவில் ஒருசிலர் ஆள்மாறாட்டம் செய்து … Read more

அக்னிபாதை திட்டத்தின் கீழ் ராணுவ வீரர் தேர்வுக்கு சாதி, மதம் கேட்கப்படுகிறது: ஆம் ஆத்மி எம்பி பரபரப்பு குற்றச்சாட்டு

புதுடெல்லி:  அக்னி பாதை திட்டத்தின் கீழ் ராணுவ வீரர்கள் தேர்வு செய்யப்படும்போது சாதி கேட்கப்படுவதாக ஆம் ஆத்மி எம்பி சஞ்சய் சிங் பரபரப்பு குற்றச்சாட்டை சுமத்தி உள்ளார். இதனை பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் மறுத்துள்ளார். அக்னிபாதை திட்டத்தின் கீழ் குறுகிய கால சேவையாற்ற ராணுவத்துக்கு வீரர்கள் தேர்வு செய்யப்படும் நடைமுறையை ஒன்றிய அரசு கொண்டு வந்துள்ளது. இந்நிலையில் இந்த திட்டத்தின் கீழ் வீரர் தேர்வு செய்யப்படும்போது சாதி பார்க்கப்படுவதாக ஆம் ஆத்மி எம்பி சஞ்சய் சிங் … Read more

குடியரசு துணைத் தலைவர் தேர்தல்: மார்கரெட் ஆல்வா வேட்பு மனு தாக்கல்

புதுடெல்லி: குடியரசு துணைத் தலைவர் எம்.வெங்கய்ய நாயுடுவின் பதவிக் காலம் வரும் ஆகஸ்ட் 10-ம் தேதியுடன் முடிவடைகிறது. குடியரசு துணைத் தலைவர் தேர்தல் ஆகஸ்ட் 7-ம் தேதி நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இந்நிலையில், பாஜக கூட்டணியின் குடியரசு துணைத் தலைவர் வேட்பாளர் ஜெகதீப் தன்கர் நேற்று முன்தினம் தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார். மனு தாக்கல் செய்வதற்கான கடைசி நாளான நேற்று, நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள நூலக கட்டிடத்தில் எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளர் … Read more

கலாமை புகழ்ந்த ஜனாதிபதி

புதுடெல்லி:  முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் நினைவாக இந்திய இஸ்லாமிய கலாசார மையம் நடத்திய 4வது ஆண்டு ஏபிஜே அப்துல் கலாம் ஆசாத் நினைவு விழா கருத்தரங்கம் டெல்லியில் நேற்று நடந்தது. இதில் பங்கேற்ற ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் பேசுகையில், ‘‘இஸ்லாமிய கலாசாரம் என்றதும் அப்துல் கலாம் நினைவுக்கு வருவார். இந்தோ-இஸ்லாமிய கலாச்சாரத்தின் சிறந்த எடுத்துக்காட்டாக வாழ்ந்து காட்டியவர் கலாம். அவர் பள்ளி மாணவர்களை சந்திக்கும் பழக்கம் உள்ளவர். ஏனென்றால், நாட்டின் பொன்னான எதிர்காலத்தை எதிர்கால சந்ததியினரான … Read more

அத்தியவாசியப் பொருட்களுக்கு 5 சதவீத ஜிஎஸ்டி.. எதிர்க்கட்சிகள் போராட்டம்

விலைவாசி உயர்வு, அத்தியவாசிய பொருட்கள் மீதான 5 சதவிகித ஜிஎஸ்டி ஆகியவற்றை கண்டித்து டெல்லியில் நாடாளுமன்ற வளாகத்தில் காந்தி சிலை முன்பு எதிர்க்கட்சிகள் போராட்டம் நடத்தின. இதில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். தெலங்கானா ராஷ்டீரிய சமாதி எம்.பி.க்கள் தனியே போராட்டம் நடத்திய நிலையில், சிங்கப்பூர் செல்வதற்கு அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு அனுமதி வழங்காததை கண்டித்து ஆம் ஆத்மி எம்.பி.க்களும் ஆர்ப்பாட்டம் நடத்தினர். Source link

தமிழக அரசின் நீட் விலக்கு மசோதா மீது இறுதி முடிவு எப்போது எடுக்கப்படும்?: நாடாளுமன்றத்தில் ஒன்றிய அமைச்சர் பதில்

புதுடெல்லி: தமிழக அரசின் நீட் விலக்கு மசோதா குறித்து ஒன்றிய அரசின் நிலைப்பாடு என்ன என்று எழுப்பப்பட்ட கேள்விக்கு மக்களவையில் உள்துறை இணை அமைச்சர் விளக்கமளித்துள்ளார். ‘நீட் தேர்வில் இருந்து தமிழக மாணவர்களுக்கு விலக்கு அளிக்க கோரி தமிழக சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட மசோதோ ஒன்றிய அரசுக்கு அனுப்பப்பட்டுள்ளதா? அப்படியெனில் எப்போது அனுப்பப்பட்டது?. அதன் மீதான ஒன்றிய அரசு நிலைப்பாடு என்ன?’ என்று மக்களவை உறுப்பினர் சு.வெங்கடேசன் கேள்வி எழுப்பியிருந்தார். இதற்கு ஒன்றிய உள்துறை இணை அமைச்சர் அஜய் … Read more

லண்டனில் டாப்சி நடிக்கும் டன்கி

மும்பை: பாலிவுட்டின் முன்னணி நடிகர் ஷாருக்கான் நடித்த ‘சென்னை எக்ஸ்பிரஸ்’ 2013லும், ‘ஹாப்பி நியூ இயர்’ 2014லும், ‘தில்வாலே’ 2015லும் வெளியானது. இப்படங்கள் ஹிட்டான  நிலையில், அடுத்தடுத்து ஷாருக்கான் நடிப்பில் வெளியான ‘ரயிஸ்’, ‘பேன்’, ‘ஜீரோ’ ஆகிய படங்கள் தோல்வி அடைந்தன. இதனால் சற்று ஓய்வு எடுத்துக்கொண்ட அவர், தற்போது கோலிவுட் டைரக்டர் அட்லி இயக்கும் ‘ஜவான்’ படத்தில் இரட்டை வேடத்தில் நடித்து வருகிறார். அவரது ஜோடியாக நயன்தாரா பாலிவுட்டில் அறிமுகமாகிறார். இதையடுத்து ராஜ்குமார் ஹிரானி இயக்கத்தில் ‘டன்கி’ … Read more

விவாகரத்து செய்ய விண்ணப்பித்த இயக்குனர்

ஐதராபாத்: தெலுங்கில் 17 படங்கள் இயக்கியவர், ஸ்ரீனு வைட்லா (50). மகேஷ் பாபு நடித்த ‘தூக்குடு’, ‘ஆகடு’ மற்றும் ஜூனியர் என்டிஆர் நடித்த ‘பாட்ஷா’ உள்பட பல படங்களை இயக்கிய அவர், ‘ரெயின்போ’ படத்தில் நடித்தார். இந்த நிலையில், தனது மனைவி ரூபாவை விட்டு பிரிந்து செல்வதற்காக, விவாகரத்து கேட்டு நீதிமன்றத்தில் விண்ணப்பித்துள்ளார். கடந்த சில வருடங்களாகவே ஸ்ரீனு வைட்லா, ரூபாவுக்கிடையே குடும்ப ரீதியாக பிரச்னைகள் இருந்து வந்துள்ளது. ஸ்ரீனு வைட்லா இயக்கிய படங்களில் ரூபா காஸ்ட்யூம் … Read more