தமிழகத்தின் இந்த துறைக்கு மத்திய அரசு ஒதுக்கிய நிதி வெறும் ரூ.12,000…எந்த துறை தெரியுமா?

தமிழக சிறுபான்மையினர் நலத்துறைக்கு மத்திய அரசு கடந்த 4 ஆண்டுகளில் 12 ஆயிரம் ரூபாய் மட்டுமே ஒதுக்கீடு செய்ததாக தகவல் அறியும் உரிமை சட்டத்தின் மூலம் தெரியவந்துள்ளது. மதுரையை சேர்ந்த கார்த்திக் என்பவர் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் எழுப்பிய கேள்விக்கு கடந்த 2018-19 முதல் 2021-22 வரையில் ஆண்டிற்கு 3 ஆயிரம் ரூபாய் வீதம் நான்கு ஆண்டுகளில் 12 ஆயிரம் ரூபாய் மட்டுமே தமிழக சிறுபான்மையினர் நலத்துறைக்கு ஒதுக்கப்பட்டுள்ளது தெரிய வந்துள்ளது. 2016-17 மற்றும் … Read more

இந்தியா போன்று வேறு எந்த நாடும் இலங்கைக்கு உதவவில்லை – அமைச்சர் ஜெய்சங்கர்

இந்தியா போன்று வேறு எந்த நாடும் இலங்கைக்கு அதிக உதவிகளை வழங்க வில்லை என வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார். இலங்கையில் நிலவும் சூழல் தொடர்பாக டெல்லியில் அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் தி.மு.க., அ.தி.மு.க., காங்கிரஸ், தேசிய வாத காங்கிரஸ், ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளை சேர்ந்தவர்கள் பங்கேற்றனர். இதில் பேசிய ஜெய்சங்கர், மீனவர் பிரச்சனை உள்பட இலங்கையுடன் நீண்ட கால பிரச்சினைகள் பல உள்ளதாகவும், அங்கு ஸ்திரத்தன்மை பாதிக்கப்பட்டது ஆழ்ந்த கவலை அளிப்பதாகவும் … Read more

நீட் தேர்வு மையத்தில் மாணவிகளின் உள்ளாடைகளை அகற்றிய விவகாரம்.: 5 பெண்கள் கைது

திருவனந்தபுரம்:  நீட் தேர்வு மையத்தில் மாணவிகளின் உள்ளாடைகளை அகற்றிய விவகாரத்தில் 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கேரளாவில் மாநிலம் கொல்லத்தில் நீட் தேர்வு மையத்தில் மாணவிகளின் உள்ளாடைகளை அகற்றிய விவகாரத்தில் 5 பெண்கள் கைது செய்யப்பட்டனர். அதில் 3 பேர் தேர்வு முகமை பணியாளர்கள், 2 பேர் கல்லூரி ஊழியர்கள் என போலீசார் கூறியுள்ளனர். தேர்வு மைய வளாகத்தில் இருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்ததில், இந்த சம்பவம் நடந்திருப்பது உறுதியானது.

நடப்பாண்டில் தமிழகத்தில்தான் அதிக கழிவுநீர் தொட்டி மரணங்கள்.. புள்ளி விவரம் சொல்வது என்ன?

நடப்பாண்டில் இதுவரை நாடு முழுவதும் 17 தொழிலாளிகள் கழிவு நீர் தொட்டிகளை சுத்தம் செய்ய சென்று உயிரிழந்திருப்பதாக மத்திய அரசு கூறியுள்ளது. இதில் ஐந்து மரணங்கள் தமிழகத்தில் நிகழ்ந்துள்ளது. கழிவுநீர் தொட்டி மரணங்கள் தொடர்பாக மக்களவையில் கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளித்துள்ள மத்திய சமூக நீதித்துறை அமைச்சகம் இந்த தகவலை வெளியிட்டுள்ளது. நடப்பாண்டில் அதிகபட்சமாக தமிழகத்தில்தான் இத்தகைய மரணங்கள் நிகழ்ந்து இருப்பதும் புள்ளி விவரங்கள் மூலமாக தெரிகின்றது. கடந்த 2017ஆம் ஆண்டு 92 பேரும் 2018 ஆம் ஆண்டு … Read more

இலங்கைக்கு தேவையான அனைத்து உதவிகளும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் செய்து வருகிறார்.: டி.ஆர்.பாலு எம்.பி

டெல்லி: இலங்கைக்கு தேவையான அனைத்து உதவிகளும் தமிழக அரசு தரப்பில் செய்து வருகிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் என்று திமுக எம்.பி டி.ஆர்.பாலு கூறியுள்ளார். இலங்கையில் பொருளாதார நெருக்கடி நிலவி வரும் நிலையில், தமிழக அரசு தரப்பில் அனைத்து உதவிகளும் செய்யப்பட்டு வருவதாக எம்.பி டி.ஆர்.பாலு தெரிவித்துள்ளார்.

Go First நிறுவனத்தின் இரண்டு விமானங்கள் அவசரமாக தரை இறக்கம்

ஒரே நாளில் கோ ஃபர்ஸ்ட் நிறுவனத்தின் இரு விமானங்கள் இயந்திரக்கோளாறு காரணமாக நடுவானில் இருந்து தரையிறக்கப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இன்று மும்பையில் இருந்து லே நோக்கி சென்ற கோ ஃபர்ஸ்ட் விமானத்தில் ஏற்பட்ட இயந்திரக்கோளாறு காரணமாக, அந்த விமானம் டெல்லிக்கு திசை திருப்பி விடப்பட்டது. அதேபோல் ஸ்ரீநகரில் இருந்து டெல்லி நோக்கி சென்ற கோ ஃபர்ஸ்ட் விமானத்தில் ஏற்பட்ட இயந்திரக்கோளாறு காரணமாக அந்த விமானம் மீண்டும்  ஸ்ரீநகருக்கு திசை திருப்பி விடப்பட்டது. இந்த இரு விமானங்களில் பயணித்த … Read more

விஐபி பாதுகாப்பு… சொகுசு இருக்கை… – ‘மிஸ்டர் பேலட் பாக்ஸ்’ டெல்லி சென்ற கதை

சென்னை: குடியரசுத் தலைவர் தேர்தலில் பயன்படுத்தப்பட்ட வாக்குப் பெட்டிகள் அனைத்தும் விஐபி பாதுகாப்பு, சொகுசு இருக்கையுடன் “மிஸ்டர் பேலட் பாக்ஸ்” என்ற பெயரில் டெல்லி கொண்டு செல்லப்பட்டன. இந்தியாவின் தற்போதைய குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தின் பதவிக் காலம் ஜூலை 24-ம் தேதியுடன் நிறைவடைகிறது. இதன்படி நாட்டின் 15-வது குடியரசுத் தலைவரை தேர்வு செய்வதற்கான தேர்தல் நேற்று நடைபெற்றது. இதில் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளராக ஜார்க்கண்ட் முன்னாள் ஆளுநர் திரவுபதி முர்மு, எதிர்க்கட்சிகள் சார்பில் முன்னாள் … Read more

இலங்கையில் நிலவும் பொருளாதார நெருக்கடி தொடர்பாக டெல்லியில் அனைத்துக்கட்சி கூட்டம் தொடங்கியது

டெல்லி: இலங்கையில் நிலவும் பொருளாதார நெருக்கடி தொடர்பாக டெல்லியில் அனைத்துக்கட்சி கூட்டம் தொடங்கியது. இலங்கை பொருளாதார நெருக்கடி, அரசியல் குழப்பங்களால் இந்தியாவுக்கு ஏற்பட்ட பாதிப்பு தொடர்பாக நாடாளுமன்ற அனைத்துக்கட்சித் தலைவர்களுக்கு ஒன்றிய அமைச்சர் ஜெய்சங்கர் விளக்கம் அளித்து வருகிறார்.

எதிர்கட்சிகள் அமளி: 2-வது நாளாக முழுவதுமாக முடங்கிய நாடாளுமன்றம்

மழைக்கால கூட்டத்தொடரின் இரண்டாவது நாளான செவ்வாய்க்கிழமை அன்றும் நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் எதிர்க்கட்சிகளின் ஆர்ப்பாட்டத்தால் முடங்கின. விலைவாசி உயர்வு, கடும் பணவீக்கம் ஆகிய முக்கிய விவகாரங்கள் மீது பிற அலுவல்களை ஒத்திவைத்து விவாதம் நடத்த வேண்டும் என எதிர்க்கட்சிகள் இரண்டு வகைகளிலும் கோரிக்கை வைத்தன. இந்தக் கோரிக்கைகள் ஏற்றுக் கொள்ளப்படவில்லை என்பதால் எதிர்க்கட்சிகள் மக்களவையிலும் மாநிலங்கள் அவையிலும் தொடர் முழக்கங்களை எழுப்பின. இந்நிலையில் இரண்டு அவைகளும் முதலில் இரண்டு மணி வரையிலும் பின்னர் நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டன. … Read more

உத்தரப் பிரதேச லூலூ மாலில் மத வழிபாடுகள்: முதல்வர் யோகி எச்சரிக்கை

உத்தரப் பிரதேசத்தில் உள்ள லூலூ மாலில் சிலர் தொழுகை நடத்திய சம்பவம் சர்ச்சையான நிலையில், “இதுபோன்ற சம்பவங்களை அனுமதிக்க முடியாது, மீறுவோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும்” என அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் எச்சரித்துள்ளார். இது குறித்து முதல்வர் யோகி ஆதித்யநாத் கூறுகையில் “சிலர் தேவையற்ற தடைகளை ஏற்படுத்துகின்றனர். பொது இடங்களில் மக்களின் அமைதிக்கு குந்தகம் விளைவிப்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். லக்னோ நிர்வாகம் இது குறித்து விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” … Read more