ஒரே ஆண்டில் இந்திய குடியுரிமையை துறந்த ஒன்றரை லட்சம் இந்தியர்கள்

சென்ற ஆண்டில் மட்டும் 1,63,370 பேர் இந்திய குடியுரிமையை துறந்துள்ளனர். நாடாளுமன்ற மக்களவையில் பகுஜன் சமாஜ் கட்சி எம்.பி.யின் கேள்விக்கு பதிலளித்துப் பேசிய மத்திய உள்துறை இணை அமைச்சர் நித்யானந்த ராய், 2019ஆம் ஆண்டு முதல் 2021 வரை குடியுரிமையை துறந்த இந்தியர்கள் எண்ணிக்கை குறித்த விபரங்களை வெளியிட்டார். அதன்படி இந்தியாவில் கடந்த 2019ஆம் ஆண்டில் 1,44,017 பேரும், 2020இல் 85,256 பேரும், 2021இல் 1,63,370 பேரும் இந்திய குடியுரிமையை துறந்துள்ளனர் என தெரிவித்து உள்ளார். அமெரிக்கா … Read more

பிரதமர் வீடு கட்டும் திட்டத்தில் தொகையை உயர்த்தும் யோசனை இல்லை: மத்திய அரசு

புதுடெல்லி: பிரதான் மந்திரி ஆவாஸ் ஜோஜ்னா எனும் பிரதமர் வீடு கட்டும் திட்டத்தில் (PMAY) வீட்டுக்கான தொகையை உயர்த்தும் யோசனை அரசிடம் இல்லை என்ற தகவல் வெளியாகி உள்ளது. இதனை நாடாளுமன்ற மக்களவையில் இன்று ரவிக்குமார் எம்.பி எழுப்பிய வினாவுக்கு மத்திய அமைச்சர் சாத்வி நிரஞ்சன் ஜோதி அளித்த பதிலில் தெரிவித்தார். இது குறித்து விழுப்புரம் தொகுதி எம்.பியான டி.ரவிகுமார் எழுப்பிய கேள்வியில், ”பிரதமர் வீடுகட்டும் திட்டத்தின்கீழ் (PMAY-G) கிராமப்புறங்களில் உள்ள பயனாளிகளின் பட்டியலைப் புதுப்பிக்க அரசு … Read more

5% ஜிஎஸ்டி உடனடியாக திரும்ப பெற வேண்டும் – அரவிந்த் கெஜ்ரிவால் ஆவேசம்!

மத்திய அரசு உணவுப் பொருட்கள் மீது விதித்துள்ள 5% ஜிஎஸ்டி யை உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என்று முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் திங்கள்கிழமை வலியுறுத்தினார். “ஒருபுறம், ஒட்டுமொத்த நாடும் பணவீக்கத்துடன் போராடுகிறது, மறுபுறம், மத்திய அரசு தினசரி பொருட்களின் மீது ஜிஎஸ்டி வரியைவிதித்து, அவற்றின் விலையை அதிகப்படுத்தியுள்ளது. “உணவுப் பொருட்களுக்கு விதிக்கப்பட்ட ஜிஎஸ்டியை திரும்பப் பெற வேண்டும் என்று மத்திய அரசை கேட்டுக்கொள்கிறேன்” என்று சட்டப்பேரவையில் குடியரசுத் தலைவர் தேர்தலில் வாக்களித்த பின்னர் முதல்வர் திங்களன்று … Read more

44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி தொடக்க விழாவில் பங்கேற்க பிரதமர் மோடிக்கு தமிழ்நாடு அரசு சார்பில் நேரில் அழைப்பு

டெல்லி: பிரதமர் மோடியிடம் 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டிக்கான அழைப்பிதழை தமிழ்நாடு முதலமைச்சரின் சார்பில் அமைச்சர் மெய்யநாதன், நாடாளுமன்ற உறுப்பினர்கள் டி.ஆர். பாலு மற்றும் கனிமொழி, தலைமைச் செயலாளர் ஆகியோர் வழங்கினார்கள். கொரோனா நோய்த்தொற்று காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 15.7.2022 அன்று இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியிடம் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு உடல் நலம் விசாரித்தார்.அப்போது முதலமைச்சர், சென்னையில் 28.7.2022 அன்று நடைபெறவுள்ள 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி … Read more

ஜார்க்கண்ட்: 23 சாக்குப் பைகள்…போலீசார் மடக்கிய ரூ.1 கோடி மதிப்பு கஞ்சா

ஜார்க்கண்டில் கிட்டத்தட்ட ரூ.1 கோடி மதிப்புள்ள கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். பொதுவாக கஞ்சா கடத்தலில் பிடிபட்டால் கிலோ கணக்கில்தான் பிடிபடும். ஆனால் ஜார்க்கண்ட் மாநிலம் ராம்கார் மாவட்டத்தில் இதுவரை நாம் கேட்டிரா அளவுக்கு கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. அதாவது 7 குவிண்டால் கஞ்சா, 23 சாக்குப் பைகளில் அடைக்கப்பட்டு கடத்தப்பட்டபோது போலீசார் மடக்கி பிடித்துள்ளனர். போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின்படி, ராஞ்சி – பாட்னா செல்லும் தேசிய நெடுஞ்சாலை 33-இல் மண்டு … Read more

திரவுபதி முர்முவுக்கு வாக்களித்த காங்கிரஸ் பெண் எம்எல்ஏ

ஹைதராபாத்: குடியரசு தலைவர் தேர்தல் நேற்று நடைபெற்றது. தெலங்கானாவின் ஹைதராபாத்தில் உள்ள சட்டப்பேரவையில் முதல்வர் கே.சந்திரசேகர ராவ் உட்பட மாநில சட்டமன்ற உறுப்பினர்கள் வாக்களித்தனர். அப்போது, முலுகு தொகுதி காங்கிரஸ் எம்எல்ஏ.வான பழங்குடியினத்தை சேர்ந்த அனுசுயா என்ற சீதக்கா, எதிர்க்கட்சிகள் சார்பில் நிறுத்தப்பட்ட யஷ்வந்த் சின்ஹாவுக்கு பதிலாக, பாஜக வேட்பாளர் திரவுபதி முர்முவுக்கு வாக்களித்து விட்டார். இதுகுறித்து செய்தியாளர்களிடம் சீதக்கா கூறும்போது, ‘‘முதலில் எனக்கு கொடுத்த வாக்கு சீட்டில் பென்சில் என நினைத்து எழுதி பார்த்தேன். ஆனால், … Read more

Nupur Sharma: நுபுர் சர்மாவை கைது செய்ய தடை – உச்சநீதிமன்றம் உத்தரவு!

முகமது நபிகள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் கருத்துத் தெரிவித்த வழக்கில், பாஜக முன்னாள் நிர்வாகி நுபுர் சர்மாவை கைது செய்ய இடைக்கால விதித்து, உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு, தனியார் செய்தி தொலைக்காட்சி ஒன்றில் நடைபெற்ற விவாதத்தில் பேசிய பாஜக முன்னாள் செய்தித் தொடர்பாளர் நுபுர் சர்மா, முகமது நபிகள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் கருத்துத் தெரிவித்தார். இந்த விவகாரம் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியது. நுபுர் சர்மாவின் கருத்துக்கு, கத்தார், குவைத், … Read more

நாட்டின் 75-வது சுதந்திர தினதையொட்டி அசாமில் 80 லட்சம் தேசியக் கொடிகளை ஏற்ற மாநில அரசு திட்டம்..!

திஸ்பூர்: நாட்டின் 75-வது சுதந்திர தின அமிர்தப் ‍பெருவிழா கொண்டாடப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக ஹர் கர் திரங்கா எனப்படும் திட்டத்தின் கீழ் அனைத்து வீடுகளிலும் மூவர்ண தேசியக்கொடியை ஏற்ற ஒன்றிய கலாச்சாரத்துறை அழைப்பு விடுத்துள்ளது. அஸ்ஸாமில் அடுத்த மாதம் 13-ம் தேதிமுதல் 15-ம் தேதிவரை கிராமப்புற, நகர்ப்புறங்களில் உள்ள  வீடுகள், வர்த்தக அமைப்புகள், தனியார் நிறுவனங்கள், அரசு அலுவலகங்கள் உள்ளிட்ட இடங்களில் 80 லட்சம் தேசியக் கொடிகளை ஏற்ற அசாம் மாநில அரசு திட்டமிட்டுள்ளது.

நீட் தேர்வு: உள்ளாடையை அகற்றச் சொன்னோமா? விளக்கம் கொடுத்த தேசிய தேர்வுகள் முகமை

நீட் தேர்வு எழுத வந்த மாணவியின் உள்ளாடையை அகற்றுமாறு கூறியதாக எழுந்த புகாருக்கு தேசிய தேர்வுகள் முகமை மறுப்பு தெரிவித்துள்ளது. கேரளாவின் கொல்லம் மாவட்டத்தில் நீட் நுழைவுத்தேர்வை எழுத வந்த மாணவிகளிடம் உள்ளாடையை அகற்றுமாறு தேர்வு மைய அதிகாரிகள் கூறியதாக மாணவி ஒருவரின் தந்தை காவல்துறையில் புகார் அளித்துள்ளார். உள்ளாடையில் மெட்டல் இருப்பதாக கூறி அதை அகற்ற வற்புறுத்தியதாகவும் இதனால் தனது மகள் மனரீதியாக பாதிக்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்திருக்கிறார். இதுதொடர்பாக பதிலளித்துள்ள தேசிய தேர்வுகள் முகமை, கடந்த … Read more

சுதந்திர தினத்தன்று நாடு முழுவதும் 100 கோடி தேசியக் கொடிகள் பறக்கவிட ஏற்பாடு – அமித்ஷா அறிவிப்பு

புதுடெல்லி: ஆகஸ்ட் 15 சுதந்திர தினத்தன்று நாடு முழுவதும் 100 கோடி தேசியக் கொடிகள் பறக்கவிடப்படும் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா அறிவித்துள்ளார். ‘அம்ருத் மசோத்சவ் ஆஸாதி’ என்ற பெயரில் 75-ம் ஆண்டு சுதந்திர தினக் கொண்டாட்டம் நாடு முழுவதிலும் நடைபெற்று வருகிறது. இதன் உச்சமாக, ஆகஸ்ட் 15 சுதந்திர தினத்தை நாடு முழுவதும் உற்சாகமாக கொண்டாடுவது குறித்து மத்திய அரசு ஆலோசனை கூட்டம் நடத்தியது. ‘ஹர் கர் திரங்கா (ஒவ்வொரு வீட்டிலும் மூவர்ண கொடி)’ … Read more