மகாராஷ்டிரா அரசியல் | நாளை மாலை 5 மணிக்குள் பெரும்பான்மையை நிரூபிக்கவும்: உத்தவ் தாக்கரேவுக்கு ஆளுநர் உத்தரவு

மும்பை: மகாராஷ்டிரா அரசியல் களம் உச்சக்கட்ட பரபரப்பை எட்டியுள்ளது. சிவசேனா அதிருப்தி எம்எல்ஏக்கள் போர்க்கொடியால் சட்டப்பேரவையில் தனது பெரும்பான்மையை முதல்வர் உத்தவ் தாக்கரே நாளைக்குள் நிரூபிக்குமாறு மாநில ஆளுநர் பிஎஸ் கோஷியாரி உத்தரவிட்டுள்ளார். நாளை மாலை 5 மணிக்குள் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தி பெரும்பான்மையை நிரூபிக்க ஆளும் மஹா விகாஸ் அகாதிக்கு அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. ஆளுநர் கடிதத்தின் விவரம்: சட்டப்பேரவை செயலருக்கு ஆளுநர் பிஎஸ் கோஷியாரி எழுதியுள்ள கடிதத்தில், அச்சு மற்றும் டிஜிட்டல் ஊடகங்களில், சிவசேனா கட்சியின் … Read more

பெரும்பான்மையை நிரூபிக்க உத்தவ் தாக்கரேவுக்கு உத்தரவு.!

மகாராஷ்டிரா அரசியலில் திடீர் திருப்பமாக நாளை மாலை 5 மணிக்குள் பெரும்பான்மையை நிரூபிக்குமாறு முதலமைச்சர் உத்தவ் தாக்கரேவுக்கு,ஆளுநர் கோஷ்யாரி உத்தரவிட்டுள்ளார். மகாராஷ்டிராவில் உத்தவ் தாக்கரே தலைமையில் சிவசேனா, தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் கட்சிகளின் மகா விகாஷ் கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான 39 சிவசேனா எம்.எல்.ஏ.க்கள், உத்தவ் தாக்கரேவுக்கு எதிர்ப்பு தெரிவித்ததோடு, அசாம் மாநிலம் கவுகாத்தில் முகாமிட்டுள்ளனர். 16 அதிருப்தி எம்.எல்.ஏ.க்களை தகுதிநீக்கம் செய்யும் துணை சபாநாயகரின் உத்தரவுக்கு … Read more

ஆளுநரின் நம்பிக்கை வாக்கெடுப்பு உத்தரவுக்கு எதிராக சிவசேனா உச்சநீதிமன்றத்தில் மனுதாக்கல்

டெல்லி: ஆளுநரின் நம்பிக்கை வாக்கெடுப்பு உத்தரவுக்கு எதிராக சிவசேனா உச்சநீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளது. சிவசேனா கட்சியின் கொறடா சுனில் பிரபு உச்சநீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளார். 16 எம்.எல்.ஏ. தகுதி நீக்க விவகாரம் உச்சநீதிமன்றத்தில் உள்ள நிலையில் ஆளுநர் ஆணை சட்டவிரோதம் என மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்தியாவில் இந்துக்கள் வாழ முடியாத சூழல் உருவாகி வருகிறது – காஷ்மீர் ஃபைல்ஸ் இயக்குநர்

உண்மையான இந்துக்களால் இந்தியாவில் வாழ முடியாத சூழல் உருவாகி வருவதாக காஷ்மீர் ஃபைல்ஸ் இயக்குநர் விவேக் அக்னிகோத்ரி கூறியுள்ளார். ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரில் தையல் கடைக்காரர் கொலை செய்யப்பட்ட சம்பவம் அங்கு பெரும் பதற்றத்தை உருவாக்கியுள்ளது. கொலையாளிகளுக்கு கடுமையான தண்டனை வழங்கக் கோரி மாநிலம் முழுவதும் போராட்டங்கள் வெடித்துள்ளன. இந்நிலையில், இச்சம்பவம் குறித்து காஷ்மீர் ஃபைல்ஸ் திரைப்பட இயக்குநரான விவேக் அக்னிஹோத்ரி தனது ட்விட்டர் பக்கத்தில், “இந்துஸ்தானில் உண்மையான இந்துக்களால் வாழவே முடியாது என்பது போன்ற சூழல் உருவாகி … Read more

உதய்பூர் படுகொலை | இந்திய முஸ்லிம்கள் தலிபான் மனநிலையை அனுமதிக்க மாட்டார்கள்: ஆஜ்மீர் தர்கா தலைவர் கண்டனம்

இந்திய முஸ்லிம்கள் தலிபான் மனநிலையை அனுமதிக்க மாட்டார்கள் என்று கூறி உதய்பூர் சம்பவத்தை கண்டித்துள்ளார் ஆஜ்மீர் தர்காவின் தலைவர் தீவான் ஜைனுல் அப்தீன் அலி கான். இது தொடர்பாக அவர், “மனிதர்களுக்கு எதிராக எந்த மதமுமே வன்முறையை போதிக்கவில்லை. குறிப்பாக இஸ்லாம் மதம் அமைதியையே வலியுறுத்துகிறது. இணையத்தில் வெளியான மிக மோசமான வன்முறை வீடியோ பதறவைக்கிறது. அதைச் செய்தவர்கள் எவ்வித நேர்மையுமில்லாதவர்கள். ஏழை நபர் மீது மிகக் கொடூரமான தாக்குதலை நடத்தியுள்ளனர். அவர்கள் வன்முறையை பாதையாகக் கொண்டவர்கள். … Read more

ராஜஸ்தானில் தையல்கடைக்காரர் தலையை வெட்டிய 2 பேர் கைது

ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரில் தையல்கடை உரிமையாளர் கண்ணையா லால் என்பவரை கொன்றதாக ரியாஸ் அக்தர் மற்றும் கவுஸ் முகமது ஆகிய இரண்டு பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களுக்கு ஐ.எஸ்.ஐ.எஸ்.தீவிரவாத இயக்கத்துக்கு தொடர்பு இருப்பதாக சந்தேகிக்கப்படும் நிலையில் தேசியப் புலனாய்வு முகமை அதிகாரிகள் குழு ஒன்று டெல்லியில் இருந்து உதய்பூர் விரைந்துள்ளது. நுபுர் சர்மாவுக்கு ஆதரவாக சமூக ஊடகத்தில் பதிவிட்ட தையல்கடை உரிமையாளரை இரண்டு பேர் கொலை செய்து விட்டு தப்பி ஓடினர். பின்னர் சமூக ஊடகப்பதிவில் … Read more

இந்தியாவில் நாளுக்கு நாள் அதிகரிக்கும் கொரோனா … சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 1 லட்சத்தை நெருங்கியது; அதிர்ச்சி தரும் ரிப்போர்ட்!!

டெல்லி: நாட்டில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 5 லட்சத்தை தாண்டியது. அதே போல், பாதிப்பு 4 கோடியை தாண்டியது. இன்று காலை 9 மணியுடன் முடிந்த 24 மணி நேரத்தில், நாட்டில் கொரோனாவால் புதிதாக பாதித்தவர்கள், குணமடைந்தோர், பலியானோர், இறப்பு விகித நிலவரம் குறித்து மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:* புதிதாக 14,506 பேர் பாதித்துள்ளனர்.* இதன் மூலம், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 4,34,33,345 ஆக உயர்ந்தது.* புதிதாக 30 பேர் இறந்துள்ளனர்.* இதனால், … Read more

ரிலையன்ஸ் ஜியோ நிறுவன இயக்குநர் பதவியிலிருந்து முகேஷ் அம்பானி ராஜினாமா

ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தின் இயக்குநர் பதவியிலிருந்து முகேஷ் அம்பானி ராஜினாமா செய்துள்ளார். முகேஷ் அம்பானியின் இடத்தில் அவரது மகன் ஆகாஷ் அம்பானி நியமிக்கப்பட்டுள்ளார். ரிலையன்ஸ் ஜியோ இயக்குநர்கள் குழு கூட்டத்தில் எடுக்கப்பட்ட இம்முடிவு பங்குச்சந்தைகளுக்கு முறைப்படி தெரிவிக்கப்பட்டுள்ளது. ரிலையன்ஸ் குழுமத்தில் தமது வாரிசுகள் மெல்லமெல்ல கூடுதல் பொறுப்புகளை ஏற்றுக்கொள்வார்கள் என முகேஷ் அம்பானி கடந்தாண்டே அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

இந்த ஆண்டு டெல்லியில் இருந்து ஒரே நாளில் அமர்நாத் யாத்திரையை முடிக்கலாம் – கோயில் நிர்வாகம் தகவல்

ஸ்ரீநகர்: காஷ்மீரில் அமர்நாத் பனிலிங்க யாத்திரை 2 ஆண்டுகளுக்குப் பிறகு நாளை (ஜூன் 30) தொடங்குகிறது. இதுகுறித்து அமர்நாத் கோயில் வாரியத்தின் தலைமை செயல் அதிகாரி நிதிஷ்வர் குமார் நேற்று முன்தினம் கூறியதாவது: இந்த ஆண்டு டெல்லியில் இருந்து பக்தர்கள் ஒரே நாளில் அமர்நாத் யாத்திரையை முடிக்கலாம். இவர்கள் டெல்லியில் இருந்து விமானம் மூலம் ஸ்ரீநகருக்கும் பிறகு ஸ்ரீநகரில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் பஞ்சதாரணி வரையும் சென்று அங்கிருந்து குகைக்கோயிலுக்கு செல்லலாம். வழிபாட்டுக்குப் பிறகு ஹெலிகாப்டரில் ஸ்ரீநகர் … Read more

பக்தர்கள் வருகையால் விழாக் கோலம் பூண்ட அமர்நாத்.. யாத்திரையை ஒட்டி ராணுவம் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள்..!

அமர்நாத் யாத்திரை இரண்டு ஆண்டு இடைவெளிக்குப் பின்னர் மீண்டும் நாளை தொடங்க உள்ளது. இதனை முன்னிட்டு அனுமதி பெற்ற பக்தர்கள் ஜம்மு மலையடிவார முகாமில் திரண்டுவருகின்றனர். நாளை ஜம்மு காஷ்மீரின் துணை நிலை ஆளுநர் மனோஜ் சின்ஹா கொடியசைத்து யாத்திரையின் முதல் குழுவை அனுப்பி வைக்கிறார். அமர்நாத் குகையில் சுயம்புவாகத்  தோன்றும் பனிலிங்கம்  ஒவ்வொரு ஆண்டும் மே மாதம் முதல் ஆகஸ்ட் மாதம் வரை உருவாகிறது. அதன் பின்னர் இந்த பனிலிங்கம் உருகி, விடுகிறது. அமர்நாத் பக்தர்களுக்கு … Read more