ஷின்சோ அபே மறைவு: இந்தியா ஒருநாள் தேசிய துக்கம் கடைபிடிப்பு

ஜப்பான் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபே மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ள பிரதமர் நரேந்திர மோடி, அவரின் மறைவுக்கு இந்தியாவில் ஒரு நாள் அரசு முறை துக்கம் அனுசரிக்கப்படும் என அறிவித்துள்ளார். ஷின்சோ அபேவின் மறைவுக்கு உலக நாடுகளின் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், சென்னை தலைமை செயலகத்தில் ஷின்சோ அபே மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கும் விதமாக தேசிய கொடி அரைக்கம்பத்தில் பறக்க விடப்பட்டன. இன்று ஒருநாள் தேசிய துக்கம் கடைபிடிக்கப்படுவதால், அரசு விழாக்கள் எதுவும் நடைபெறாது. … Read more

நாளுக்கு நாள் அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு: 18 ஆயிரத்தை தாண்டிய தினசரி பாதிப்பு..ஒரே நாளில் 43 பேர் பலி!!

டெல்லி: நாட்டில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 5 லட்சத்தை தாண்டியது. அதே போல், பாதிப்பு 4 கோடியை தாண்டியது. இன்று காலை 9 மணியுடன் முடிந்த 24 மணி நேரத்தில், நாட்டில் கொரோனாவால் புதிதாக பாதித்தவர்கள், குணமடைந்தோர், பலியானோர், இறப்பு விகித நிலவரம் குறித்து மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:* புதிதாக 18,840 பேர் பாதித்துள்ளனர்.* இதன் மூலம், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 4,36,04,394 ஆக உயர்ந்தது.* புதிதாக 43 பேர் இறந்துள்ளனர்.* இதனால், … Read more

சிகிச்சை பெற்று வரும் லாலு பிரசாத்தை சந்தித்து உடல்நலம் விசாரித்தார் ராகுல்

புதுடெல்லி: உடல் நலக்குறைவு காரணமாக சிகிச்சை பெற்று வரும் ராஷ்டிரிய ஜனதா தள (ஆர்ஜேடி) கட்சித் தலைவர் லாலு பிரசாத் யாதவை, காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி நேற்று சந்தித்து உடல்நலம் விசாரித்தார். மாட்டுத் தீவன ஊழல் வழக்கில் சிறை தண்டனை விதிக்கப்பட்ட பிஹார் மாநில முன்னாள் முதல்வரும், ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சி தலைவருமான லாலு பிரசாத் யாதவ் உடல்நலக் குறைவால் ஜாமீனில் இருந்து வருகிறார். இதற்கிடையே, பாட்னாவில் உள்ள வீட்டில் கடந்த சனிக்கிழமை … Read more

கர்நாடகா மாநிலம் விஜயபுராவில் நிலநடுக்கம்

பெங்களூரு: கர்நாடகா மாநிலம் விஜயபுரா மாவட்டத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது ரிக்டர் அளவுகோலில் 4.6ஆக பதிவாகியுள்ளது. கர்நாடகாவில் கடந்த 15 நாட்களில் பத்துக்கும் மேற்பட்ட இடங்களில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது

”இதுக்கு எங்க அம்மாதான் சரிப்பட்டு வருவாங்க” -சம்பள பேரம் குறித்த டெக்கியின் வைரல் போஸ்ட்!

வேலைக்காக நேர்காணல் சென்ற அலுவலகங்களில் வைத்த எல்லா டெஸ்ட்டிலும் பாஸ் ஆனாலும், சம்பளம் விஷயமாக பேசும் போதும் எல்லாருக்குமே திக் திக் என்றே இருக்கும். அப்படியான சூழலில் நம் வீடுகளில் உள்ள அம்மாக்கள் போன்றோர் சம்பளம் குறித்து பேரம் பேசினால் எப்படி இருக்கும் என நினைத்து பார்த்திருக்கிறீர்களா? இயல்பாகவே அம்மாக்கள் வியாபாரிகளிடம் பேரம் பேசி பொருட்களை வாங்குவதில் கெட்டிக்காரர்களாகவே இருப்பார்கள். அவர்களது அந்த திறமைக்கு பிசினஸ் மேனேஜ்மெண்ட் படித்தவர்களோடவே போட்டியிடலாம் போலவே என எண்ண வைக்கும். அந்த … Read more

மகாராஷ்டிரா ஆளுநர் எடுத்த முடிவுக்கு எதிர்ப்பு – உத்தவ் தாக்கரே மனு மீது 11-ல் உச்ச நீதிமன்றம் விசாரணை

புதுடெல்லி: ஏக்நாத் ஷிண்டேவை மகாராஷ்டிரா முதல்வராக, ஆளுநர் நியமித்ததற்கு எதிராக உத்தவ் தாக்கரே தரப்பு தொடர்ந்த வழக்கை உச்சநீதிமன்றம் நாளை மறுநாள் விசாரிக்க ஒப்புக்கொண்டுள்ளது. மகாராஷ்டிராவில் சிவசேனா அதிருப்தி எம்எல்ஏக்கள் 39 பேர் ஏக்நாத் ஷிண்டே தலைமையில் பிரிந்து பா.ஜ.க ஆதரவுடன் ஆட்சி அமைக்க உரிமை கோரினார். இதையடுத்து கடந்த மாதம் 30-ம் தேதி ஏக்நாத் ஷிண்டே முதல்வராக பொறுப்பேற்றார். பா.ஜ.க.வின் தேவேந்திர பட்னாவிஸ் துணை முதல்வராக பொறுப்பேற்றார். பா.ஜ.க எம்எல்.ஏ ராகுல் நர்வேகர் சபாநாயகராக தேர்வு … Read more

அனைத்து வகையான தேசியக் கொடிகளுக்கும் ஜிஎஸ்டி விலக்கு – நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் டுவிட்டரில் தகவல்..!

இயந்திரத்தால் உருவாக்கப்பட்ட பாலிஸ்யடர் தேசியக் கொடிகளுக்கும் ஜிஎஸ்டி விலக்கு அளிக்கப்பட்டுள்ளது என மத்திய நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், நாட்டின் 75-ஆவது சுதந்திர தினக் கொண்டாட்ட தொடக்கத்தையொட்டி, அனைத்து வீடுகளிலும் மூவர்ணக் கொடி என்ற திட்டத்தை மத்திய அரசு கொண்டு வந்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார். இதற்காக இயந்திரத்தில் உருவாக்கப்படும் பாலியஸ்டர் துணியால் உருவாக்கப்பட்ட இந்திய தேசியக் கொடிகளுக்கும் அனுமதி அளித்து இந்திய தேசியக் கொடி-2002 சட்டத்தில் மத்திய அரசு … Read more

நிர்மலா சீதாராமன் உட்பட 27 எம்பிக்கள் பதவியேற்பு

புதுடெல்லி: மாநிலங்களவைக்கு புதிதாக தேர்வு செய்யப்பட்ட ஒன்றிய அமைச்சர்கள் நிர்மலா சீதாராமன், பியூஷ் கோயல் உட்பட 27 எம்பி.க்கள் நேற்று பதவியேற்றனர். சமீபத்தில் நடந்து முடிந்த நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர்கள் தேர்தலில் 57 பேர் தேர்வு செய்யப்பட்டனர். இவர்களில் 27 எம்பி.க்கள் நேற்று பதவியேற்றனர். மாநிலங்களவை தலைவர் வெங்கையா நாயுடு முன்னிலையில் இவர்களின் பதவியேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. 10 மாநிலங்களை சேர்ந்த 27 எம்பி.க்கள் 9 மொழிகளில் பதவி பிரமாணம் செய்தனர். 12 எம்பி.க்கள் இந்தியிலும், ஆங்கிலத்தில் … Read more

மெஸ் சாப்பாட்டால் துவண்டுப் போன மகனின் தோழிக்கு சர்ப்ரைஸ் கொடுத்த அம்மா!

“வீட்டு சாப்பாட்டோட அருமை வெளியே போனாதான் உங்களுக்கு தெரிய வரும்” அம்மாக்கள் பல நேரங்களில் பிள்ளைகளிடம் கூறும் ஒரே சொற்றொடராக இருக்கும். அதுவும் ஹாஸ்டலில் தங்கி படிக்கும், வேலை பார்ப்போரால் அம்மாக்களின் இந்த அன்பு கலந்த வசை எப்போதும் உணர்ச்சி மிகுந்ததாகவே இருந்திருக்கும். அப்படியான சம்பவத்தை பற்றிதான் பார்க்கப்போகிறோம். ஷ்ருபெர்ரி என்ற ட்விட்டர் பயனர் ஒருவரின் ட்வீட்தான் நெட்டிசன்களிடையே பேசுபொருளாகியிருக்கிறது. அதில், “மெஸ் சாப்பாடு மீதான அதிருப்தி குறித்து என்னுடைய நண்பனிடம் தொடர்ந்து கூறிவந்தேன். அவர் தன்னுடைய அம்மாவிடம் … Read more

50 சதவீத ஆஃபர் – கேரள மாலில் 'நள்ளிரவு ஷாப்பிங்' செய்ய குவிந்த மக்கள் கூட்டம்

கொச்சி: கேரளாவின் பிரபல வணிக வளாகத்தில் நள்ளிரவு ஷாப்பிங் செய்ய மக்கள் அதிகமாக கூடிய காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. கேரள மாநிலத்தில் பிரபலமாக மால்களில் லூலூ மால். திருவனந்தபுரம் மற்றும் கொச்சி இரண்டு இடங்களில் செயல்பட்டு வரும் இந்த மால், கேரளாவில் பிறந்து வளர்ந்து அரபுநாட்டில் கொடிகட்டி பறக்கும் தொழிலதிபர் எம்ஏ யூசுப் அலிக்கு சொந்தமானது. சில நாள்கள் முன் இந்த மால் தரப்பில் இருந்து ஒரு அறிவிப்பு வெளியானது. ஜூலை 6 அன்று இரவு … Read more