பிரதமர் மோடி, ஜெர்மனியில் இருந்து இன்று ஐக்கிய அரபு அமீரகம் செல்கிறார்

டெல்லி : பிரதமர் மோடி, ஜெர்மனியில் இருந்து இன்று ஐக்கிய அரபு அமீரகம் செல்கிறார். ஐக்கிய அரபு அமீரக அதிபர் ஷேக் முகமது பின் சையது அல் நஹ்யானை சந்திக்கிறார் பிரதமர் மோடி. முன்னாள் அதிபர் ஷேக் கலிஃபா பின் சையது அல் நஹ்யானின் மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவிக்கிறார்.

சோனியா காந்தியின் பி.ஏ பிபி மாதவன் மீது பாலியல் வன்கொடுமை வழக்குப்பதிவு!

காங்கிரஸ் இடைக்காலத் தலைவர் சோனியா காந்தியின் தனி உதவியாளர் (பிஏ) பிபி மாதவன் மீது பாலியல் வன்கொடுமை வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் அவர் மீது “கிரிமினல் மிரட்டல்” குற்றச்சாட்டும் பதிவு செய்துள்ளனர் டெல்லி காவல்துறையினர். டெல்லி போலீசில் பெண் ஒருவர் அளித்த புகாரில், 71 வயதான பிபி மாதவன் தன்னை பாலியல் வன்கொடுமை செய்ததாகவும், திருமணத்தை காரணம் காட்டி பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாகவும் குற்றம்சாட்டினார். அவரது புகாரில் பிபி மாதவன் அந்தப் பெண்ணிடம் தனது காதலை வெளிப்படுத்தியதாகவும், … Read more

ஒரு பக்கம் போராட்டம், வன்முறை.. மறுபக்கம் ஒரு லட்சத்தை நெருங்கிய விண்ணப்பம் !!

முப்படையில் ஒப்பந்த அடிப்படையில் இளைஞர்களை சேர்க்கும் அக்னிபத் திட்டம், கடந்த 14ஆம் தேதி மத்திய அரசால் அறிமுகப்படுத்தப்பட்டது. ஆனால் அதற்கு அடுத்த நாள் முதல் நாட்டின் பல்வேறு மாநிலங்களில் போராட்டங்கள் வெடித்தன. ரயில்கள் தீவைத்துக் கொளுத்தப்பட்டன. அக்னிபத் திட்டத்தை திரும்பப் பெற வலியுறுத்தி பல்வேறு அரசியல் கட்சிகளும் வலியுறுத்தியிருந்தன. இந்த திட்டத்தின் கீழ் தேர்வு செய்யப்படுவோருக்கான தகுதிகள், விதிகள், நிபந்தனைகள் உள்ளிட்டவை தொடர்பான அறிவிப்பு ராணுவத்தின் இணையதளத்தில் வெளியிடப்பட்டது. இந்த அறிவிப்பின்படி, பொதுப்பணி, தொழில்நுட்பம் (விமான போக்குவரத்து, … Read more

செம உத்தரவு.. ஆவணங்கள் சரிபார்ப்பு என்ற பெயரில் வாகன ஓட்டிகளை நிறுத்தக்கூடாது !!

வாகன தணிக்கை, வாகன சோதனை உள்ளிட்ட பணிகளின்போது அதிகம்பாதிக்கப்படுவது வாகன ஓட்டிகள் தான். இதுபோதாது என்று போலீசார் சில இடங்களில் திடீரென வாகனங்களை நிறுத்தி சோதனையிட்டு வருகின்றனர். இது அவசரமாக அலுவலகம் செல்வோர் அல்லது வேறு பணிக்கு செல்பவர்களுக்கு பெரிதும் இடையூராக உள்ளது.  இந்த நிலையில், இதுபோன்று வாகன சோதனைக்கு டி.ஜி.பி. கட்டுப்பாடுகள் விதித்துள்ளார். கர்நாடக மாநில போலீஸ் டி.ஜி.பி.யாக இருந்து வருபவர் பிரவீன்சூட். இவருக்கு ட்விட்டர் மூலமாக பெங்களூருவை சேர்ந்த ஸ்ரீவஸ்தவ் வாஜபேயம் என்பவர் நேற்று முன்தினம் ஒரு … Read more

சமாஜ்வாதியின் கோட்டையான ஆஸம்கரில் வெற்றி – பாஜகவில் 3-வது எம்.பி.யான போஜ்புரி மொழி நடிகர் நிரவ்வா

புதுடெல்லி: உத்தர பிரதேசத்தின் கிழக்கு பகுதி மற்றும் பிஹார் மாநிலத்தில் போஜ்புரி மொழி பேசுவோர் அதிகம் உள்ளனர். இதனால், கடந்த 20 ஆண்டுகளாக உ.பி., பிஹாரில் போஜ்புரி மொழி திரைப்படங்கள் வெளியாகி பிரபலமாகி வருகின்றன. போஜ்புரி கதாநாயகர்களுக்கும் மக்களிடம் செல்வாக்கு கூடி வருகிறது. அதனால், அவர்களை தேர்தல்களில் நிற்க வைத்து பாஜக பலனடைந்து வருகிறது. அந்த வகையில், தற்போது நடந்து முடிந்த உ.பி.யின் கிழக்கு பகுதியிலுள்ள ஆஸம்கர் தொகுதியின் மக்களவை இடைத்தேர்தலில் போஜ்புரி நடிகர் நிரவ்வா எனும் … Read more

மும்பையில் அடுக்கு மாடி குடியிருப்பு இடிந்து விழுந்து விபத்து.!

மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் நான்கு அடுக்கு மாடி குடியிருப்பு கட்டிடம் இடிந்து விழுந்தது. குர்லா பகுதியில் உள்ள அந்த கட்டிடம் நேற்றிரவு இடிந்து விழுந்தது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு மற்றும் மீட்பு படையினர் மீட்பு பணிகளில் ஈடுபட்டனர். முதற்கட்டமாக இடிபாடுகளில் இருந்து 7 பேர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர். மேலும் 20 முதல் 25 பேர் கட்டிட இடிபாடுகளுக்குள் சிக்கியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது. மீட்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. சம்பவ இடத்தை நேரில் … Read more

சோனியா காந்தியின் தனி செயலாளர் மீது பலாத்கார வழக்கு பதிவு

புதுடெல்லி: சோனியா காந்தியின் தனிச் செயலாளர் பி.பி.மாதவன்(71) மீது 26 வயது இளம்பெண்கள் டெல்லி உத்தம்நகர் போலீஸ் நிலையத்தில் பாலியல் புகார் அளித்துள்ளார். அதில் வேலை வாங்கித் தருவதாக வாக்குறுதி தந்து மாதவன் தன்னை பாலியல் பலாத்காரம் செய்ததாகவும், மிரட்டியதாகவும் அவர் கூறி உள்ளார். டெல்லி காங்கிரஸ் அலுவலகத்தில் பணிபுரிந்த பெண்ணின் கணவர் கடந்த 2020ம் ஆண்டு இறந்துவிட்டார். இந்த புகார் தொடர்பாக போலீசார், மாதவன் மீது பாலியல் பலாத்காரம், மிரட்டல் உள்ளிட்ட பிரிவின் கீழ் வழக்கு … Read more

‘ஸ்டார் ஹோட்டல்தான்.. ஆனா பில் கட்டல’- மும்பை அதிருப்தி எம்எல்ஏக்களுக்கு பின்னால் யார்?

மகாராஷ்ட்ராவில் உத்தவ் தாக்கரே அரசுக்கு எதிராகக் குரல் எழுப்பும் எம்எல்ஏக்களுக்குப் பின்னணியில் இருப்பது யார்? என்ற கேள்வி எழுப்பப்பட்டு வரும் நிலையில், அவர்கள் கவுகாத்திக்குச் செல்லும் முன் தங்கியிருந்த சூரத் தங்கும் விடுதிக்கான கட்டணம் செலுத்தப்படாமல் உள்ளது தெரியவந்துள்ளது. தேசிய அளவில் பெரிதும் பேசப்பட்டு வரும் மகாராஷ்டிர அரசியல் குழப்பத்திற்கு வித்திட்டிருக்கும் அதிருப்தி சட்டமன்ற உறுப்பினர்களுக்கான செலவினங்களை கவனிப்பது யார்? என மக்கள் எழுப்பும் கேள்விக்கு இதுவரை விடை தெரிந்தபாடில்லை. மகாராஷ்ட்ரா அரசுக்கு எதிராகக் குரல் எழுப்பும் … Read more

'அச்சப்படமாட்டேன்; என்னை கைது செய்யலாம்' – அமலாக்கத் துறை சம்மனுக்கு சஞ்சய் ராவத் ரியாக்சன்

மும்பை: மகாராஷ்டிராவில் அரசியல் குழப்பம் நீடிக்கும் நிலையில், முதல்வர் உத்தவ் தாக்கரேவுக்கு மிகவும் நெருக்கமானவராக கருதப்படும் சிவசேனா எம்.பி.சஞ்சய் ராவத் 28-ம் தேதி (இன்று) விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என அமலாக்கத் துறை சம்மன் அனுப்பி உள்ளது. மகாராஷ்டிராவில் ஆளும் சிவசேனா கட்சியை சேர்ந்த அமைச்சர் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சுமார் 40 அதிருப்தி எம்எல்ஏக்கள் அரசுக்கு எதிராக போர்க்கொடி தூக்கியுள்ளனர். தேசியவாத காங்கிரஸ் மற்றும் காங்கிரஸுடனான கூட்டணியை முறித்துக் கொண்டு பாஜகவுடன் இணைந்து ஆட்சி அமைக்க … Read more

விமானப்படையில் சேர அக்னிபாதை திட்டத்தில் 94,000 பேர் விண்ணப்பம்

புதுடெல்லி: அக்னிபாதை திட்டத்தின்கீழ் விமான படையில் சேர 94 ஆயிரம் பேர் விண்ணப்பித்துள்ளனர். அக்னிபாதை என்ற ராணுவ ஆட்சேர்ப்புத் திட்டத்தை  கடந்த 14ம் தேதி ஒன்றிய அரசு அறிவித்தது. இதன் மூலம் தேர்ந்தெடுக்கப்படும் ராணுவ வீரர்களுக்கு 4 ஆண்டுகள் பணி வழங்கப்படும். இத்திட்டத்தின் கீழ் ராணுவ வீரர்களை சேர்க்க கடும் எதிர்ப்பு கிளம்பி இளைஞர்கள் போராட்டம் நடத்தினர். அக்னிபாதை திட்டத்தின் கீழ் விமான படையில் சேருவதற்கு விண்ணப்பங்கள் கடந்த 24ம் தேதி முதல் பெறப்பட்டு வருகின்றன. விமான … Read more