அம்பானி குடும்பத்தாருக்கு மும்பையில் வழங்கப்பட்டுள்ள பாதுகாப்பு விவரம் தொடர்பாக ஒன்றிய அரசு மனு தாக்கல்

டெல்லி: அம்பானி குடும்பத்தாருக்கு மும்பையில் வழங்கப்பட்டுள்ள பாதுகாப்பு விவரம் தொடர்பாக ஒன்றிய அரசு மனு தாக்கல் செய்துள்ளது. பாதுகாப்பு விவரம் கேட்ட திரிபுரா ஐகோர்ட்டுக்கு எதிரான மனுவை உச்சநீதிமன்றம் நாளை விசாரிக்கிறது.

குருகிராமில் தொழுகையை அடுத்து இறைச்சிக்கும் எதிர்ப்பு: புதிய கடைகளுக்கு அனுமதி மறுக்க ஹரியாணா முதல்வரிடம் வலியுறுத்தல் 

புதுடெல்லி: குருகிராமில் புதிய இறைச்சிக் கடைகளுக்கு அனுமதி அளிக்கக் கூடாது என அதன் இந்து அமைப்பு வலியுறுத்தி உள்ளது. இதன் மீது பாஜக ஆளும் ஹரியாணா முதல்வர் மனோகர் லால் கட்டாரிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது. நாட்டின் தலைநகரான டெல்லிக்கு அருகிலுள்ளது குருகிராம். ஐடி நகரமான இங்கு தொழிற்சாலைகள் அதிகரித்துள்ளது. இதனால், அதில் பணியாற்ற வேற்று மாநிலங்களிலிருந்து பலரும் வந்து வசிக்கின்றனர். இதில் கணிசமாக முஸ்லீம்களின் எண்ணிக்கையும் அதிகரித்தது. இவர்களுக்கு வெள்ளிக்கிழமைகளில் சிறப்பு தொழுகைக்கான மசூதிகள் போதுமானதாக இல்லை. … Read more

ஜூலை 1 முதல் பிரசாரத்தை துவக்குகிறார் திரவுபதி முர்மு

பா.ஜ.க.வின் தேசிய ஜனநாயக கூட்டணி குடியரசுத் தலைவர் வேட்பாளர் திரவுபதி முர்மு, ஜூலை 1 ஆம் தேதி முதல் பிரசாரம் மேற்கொள்ள திட்டமிட்டுள்ளார். காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, தேசியவாத காங்கிரஸ் சரத் பவார், திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி உள்ளிட்டோரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு முர்மு ஆதரவு கோரினார். தொடர்ந்து திமுக தலைவர், மு.க.ஸ்டாலின், தெலுங்கானா முதலமைச்சர் சந்திரசேகர ராவ் உள்ளிட்டோரிடம் அவர் ஆதரவு கோர உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. Source link

ஜனாதிபதி தேர்தல்… இன்று வேட்பு மனு தாக்கல் செய்யும் எதிர்க்கட்சி பொது வேட்பாளராக யஷ்வந்த் சின்ஹாவுக்கு டிஆர்எஸ் கட்சி ஆதரவு!!

புதுடெல்லி:  ஜனாதிபதி தேர்தலில் எதிர்க்கட்சிகள் சார்பில் பொது வேட்பாளராக அறிவிக்கப்பட்டு இருக்கும் யஷ்வந்த் சின்ஹா இன்று வேட்பு மனு தாக்கல் செய்ய உள்ளார். ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தின் பதவிக்காலம் அடுத்த மாதம் 24ம் தேதியுடன் முடிவடைய உள்ளதால், புதிய ஜனாதிபதியை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் அடுத்த மாதம் 18ம் தேதி நடத்தப்பட உள்ளது. இந்த ஜனாதிபதி தேர்தலில் பாஜ தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் பழங்குடியின பெண் தலைவர் திரெளபதிமுர்முவும், எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக ஒன்றிய முன்னாள் … Read more

தேர்தல் வெற்றியை காலிஸ்தான் இயக்கத்துக்கு சமர்ப்பித்த எம்.பி….! பஞ்சாபில் பரபரப்பு

பஞ்சாபில் மக்களவைத் தேர்தலில் வெற்றி பெற்று புதிய எம்.பி.யாக பதவியேற்கவுள்ள ஒருவர், தனது வெற்றியை காலிஸ்தான் தீவிரவாத இயக்கத்தின் தலைவருக்கு சமர்ப்பிப்பதாக கூறியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான், சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றி பெற்றதால் தனது சங்கரூர் தொகுதி எம்.பி. பதவியை அண்மையில் ராஜினாமா செய்தார். இதனால் காலியாக இருந்த அந்த தொகுதிக்கு இடைத்தேர்தல் கடந்த 23-ம் தேதி நடைபெற்றது. இதன் வாக்குகள் நேற்று எண்ணப்பட்டன. முடிவில், சிரோமனி அகாலி தளம் (அமிர்தசரஸ்) … Read more

ஏழுமலையானை தரிசிக்க செப்டம்பர் மாதத்திற்கான டிக்கெட்டுகள்.. திருப்பதி தேவஸ்தானம் இன்று வெளியிடுகிறது..!

திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க செப்டம்பர் மாதத்துக்கான ஆர்ஜித சேவை டிக்கெட்டுகளை திருப்பதி தேவஸ்தானம் இன்று மாலை 4 மணிக்கு ஆன்லைனில் வெளியிடுகிறது.  கல்யாண உற்சவம், ஊஞ்சல் சேவை, ஆர்ஜித பிரம்மோற்சவம், சகஸ்ர தீப அலங்கார சேவை டிக்கெட்டுகளைப் பெற பக்தர்கள் இன்று முதல் 29-ந்தேதி காலை 10 மணி வரை ஆன்லைனில் முன்பதிவு செய்யலாம். மேலும் சுப்ர பாத சேவை, தோமால சேவை, அர்ச்சனை, அஷ்டதல பாத பத்மாராதனை சேவை போன்றவற்றுக்கான டிக்கெட்டுகள் ஆன்லைன் எலக்ட்ரானிக் குலுக்கல் … Read more

அக்னி பாத் திட்டத்தை ஒன்றிய அரசு மாரு ஆய்வு செய்ய வேண்டும் .: மேகாலய ஆளுநர் சத்யபால் மாலிக்

மேகாலய: அக்னி பாத் திட்டத்தை ஒன்றிய அரசு மாரு ஆய்வு செய்ய வேண்டும் என்று மேகாலய ஆளுநர் சத்யபால் மாலிக் கோரிக்கை வைத்துள்ளார். அக்னி பாதை திட்டம் வரும் கால ராணுவ வீரர்களுக்கு எதிரானது, அவர்களை ஏமாற்றும் திட்டம் என அவர் தெரிவித்துள்ளார்.

அதிக சப்தம் எழுப்பிய பைக்குகள் பறிமுதல்.. 631 சைலன்சர்கள் ரோடு ரோலர் ஏற்றி அழிப்பு..!

ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் அதிக சப்தம் எழுப்பிய இருசக்கர வாகனங்களை போலீசார் பறிமுதல் செய்தனர். சிறப்பு சோதனையில் அதிக சத்தத்துடன் ஒலி மற்றும் காற்று மாசு ஏற்படுத்திய இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும், 631 வாகனங்களில் பொருத்தப்பட்டிருந்த சைலன்சர்களை அகற்றி சாலையில் வரிசையாக அடுக்கி வைத்து ரோடு ரோலர் ஏற்றி அழித்தனர். Source link

இந்தியாவில் வீரியமாக பரவும் கொரோனா…ஒரே நாளில் பாதிப்பு 17,073 ஆக பதிவு… 24 மணி நேரத்தில் 21 பேர் பலி!!

டெல்லி: நாட்டில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 5 லட்சத்தை தாண்டியது. அதே போல், பாதிப்பு 4 கோடியை தாண்டியது. இன்று காலை 9 மணியுடன் முடிந்த 24 மணி நேரத்தில், நாட்டில் கொரோனாவால் புதிதாக பாதித்தவர்கள், குணமடைந்தோர், பலியானோர், இறப்பு விகித நிலவரம் குறித்து மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:* புதிதாக 17,073 பேர் பாதித்துள்ளனர்.* இதன் மூலம், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 4,34,07,046 ஆக உயர்ந்தது.* புதிதாக 21 பேர் இறந்துள்ளனர்.* இதனால், … Read more

லே – மணாலி 480 கி.மீ தூரத்தை 55 மணி நேரத்தில் சைக்கிளில் கடந்து இரு குழந்தைகளின் தாய் உலக சாதனை

லடாக்கின் லேவில் இருந்து மணாலி வரை 480 கிலோ மீட்டர் தூரத்தை 55 மணி நேரத்தில் தனி ஆளாக 2 குழந்தைகளுக்கு தாயான 45 வயதான பெண் சைக்கிளில் கடந்திருப்பது கின்னஸ் சாதனையில் இடம்பெற உள்ளது. புனேவைச் சேர்ந்த பிரீத்தி மாஸ்கே , எல்லைச் சாலை அமைப்புடன் இணைந்து லேவில் இருந்து சைக்கிள் பயணத்தை தொடங்கினார். 55 மணி நேரம் 13 நிமிடங்களில் மணாலியை அடைந்து அவர் சாதனை படைத்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 8 ஆயிரம் மீட்டர் உயர … Read more