சந்திரபாபு நாயுடு விரலில் மைக்ரோ சிப் மோதிரம்: மூட நம்பிக்கையை நம்புவதாக பரபரப்பு

திருமலை: ஆந்திர முன்னாள் முதல்வர் சந்திரபாபு அணிந்திருந்தது ஜாதக மோதிரம் அல்ல என்றும், உடல்நிலையை கண்காணிக்கும் மைக்ரோ சிப் பொருத்தப்பட்ட ேமாதிரம் தான் என சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்தார். ஆந்திர மாநில முன்னாள் முதல்வரும், தெலுங்கு தேசம் கட்சியின் தலைவருமான சந்திரபாபு நாயுடு, மூட நம்பிக்கைகள் மற்றும் அதை சார்ந்தவைக்கு முக்கியத்துவம் அளிப்பதில்லை. அவர் வெளியே எங்கு சென்றாலும் பேனா மட்டும் எடுத்து செல்வது வழக்கம்.  மோதிரங்கள் அல்லது கடிகாரங்கள் கூட அணியமாட்டார்.இந்நிலையில், அன்னமய்யா மாவட்டம்  மதனப்பள்ளியில் … Read more

கடன் தொல்லையால் குடும்பத்துடன் தற்கொலை செய்து கொண்ட ஆட்டோ ஓட்டுநர்.!

புதுச்சேரியில், கடன் தொல்லையால் ஆட்டோ ஓட்டுநர் தனது மனைவி, குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து கொலை செய்துவிட்டு தானும் விஷமருந்தி தற்கொலை செய்துக் கொண்டார். அரியாங்குப்பத்தைச் சேர்ந்த தியாகராஜன் – பச்சைவாலி தம்பதிக்கு 7 வயதில் பெண் குழந்தையும், 3 வயதில் ஆண் குழந்தையும் இருந்தனர். வாடகைக்கு ஆட்டோ எடுத்து ஓட்டி வந்த தியாகராஜன், வாடகையை முறையாக செலுத்தாததால் ஆட்டோவை உரிமையாளர் திரும்பப் பெற்றுக் கொண்டதாக கூறப்படுகிறது. இதனால் கடந்த ஓராண்டுக்கு மேலாக எலக்ட்ரீசியனாக கூலிக்கு வேலை செய்து … Read more

அமலாக்கத் துறை சோதனையில் அம்பலம் விவோ ரூ.62,000 கோடி வரி ஏய்ப்பு

புதுடெல்லி: இந்தியாவில் செயல்பட்டு வரும் சீனாவை சேர்ந்த விவோ செல்போன் நிறுவனம், ரூ.62 ஆயிரம் கோடி வரி ஏய்ப்பு செய்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் செயல்பட்டு வரும் சீன செல்போன் தயாரிப்பு நிறுவனமான விவோ,   அதன் சார்பு நிறுவனங்களுக்கு சொந்தமான 48 இடங்களில் அமலாக்கத்துறை சமீபத்தில் சோதனை நடத்தியது. அதில்,  இந்த நிறுவனம் இந்தியாவில் சம்பாதித்த பணத்தை வரி செலுத்தாமல் சீனாவுக்கு திருட்டுத்தனமாக அனுப்பியது கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. இந்தியாவில் ரூ.1 லட்சம் கோடி சம்பாதித்த விவோ, அதில் 50 … Read more

உதய்பூர் படுகொலை.. பொதுமக்களிடையே பீதியை ஏற்படுத்த கொலையாளிகள் வீடியோ வெளியிட்டதாக அறிக்கையில் தகவல்.!

உதய்பூரில் தையல்காரர் கன்னையா லாலை படுகொலை செய்த காட்சிகளை,  மத ரீதியான பகையை வளர்க்கவும், பொதுமக்களிடையே பீதியை ஏற்படுத்தும் நோக்கத்துடனும் கொலையாளிகள் சமூக வலை தளங்களில் பகிர்ந்ததாக தேசிய புலனாய்வு முகமையின் முதல் தகவல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.        Source link

வெளிநாட்டு ராணுவ கொள்முதல் 3 தனியார் வங்கிகளுக்கு ஒன்றிய அரசு ஒப்புதல்

புதுடெல்லி: தனியார் துறை வங்கிகளுக்கு வெளிநாட்டு கொள்முதல் நிதி சேவைகளை வழங்க பாதுகாப்பு அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது. இந்திய ராணுவத்துக்கு வெளிநாடுகளில் இருந்து வாங்கப்படும் ஆயுதங்கள், ராணுவ தளவாடங்களுக்கு தேவையான நிதி, வங்கி உத்தரவாதம் போன்றவை தற்போது பொதுத்துறை வங்கிகள் மூலமாக மட்டுமே பரிமாற்றம் செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில், இதுபோன்ற கொள்முதலுக்கான கடன் உத்தரவாத கடிதம், நேரடி வங்கி பரிமாற்றங்களை செய்வதற்கு ஹெச்டிஎப்சி, ஐசிஐசிஐ மற்றும் ஆக்சிஸ் ஆகிய மூன்று தனியார் துறை வங்கிகளுக்கும் பாதுகாப்பு அமைச்சகம் … Read more

ஒரு லட்சம் மாணவர்களுக்கு உணவு சமைக்கும் பிரமாண்ட சமையல் கூடம்.. பிரதமர் மோடி திறந்து வைத்து, பார்வை..!

உத்தரப்பிரதேச மாநிலம் வாரணாசியில் நாள்தோறும் ஒரு லட்சம் மாணவர்களுக்கு மதிய உணவு சமைக்கும் பிரமாண்ட சமையல் கூடத்தை பிரதமர் நரேந்திர மோடி இன்று திறந்து வைத்தார். அட்சய பாத்திரம் என்று பெயரிடப்பட்டுள்ள இந்த சமையல் கூடத்தில் உள்ள வசதிகளை அம்மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்துடன் பிரதமர் இன்று பார்வையிட்டார். சொந்த தொகுதியான வாரணாசியில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பிரதமர் நரேந்திரமோடி இன்று பங்கேற்கிறார். Source link

வணிகம் புரிதலை எளிதாக்குதல் தரவரிசை பட்டியலில் தமிழ்நாடு சிறந்த சாதனையாளர் பிரிவிற்கு முன்னேற்றம்.: ஒன்றிய அரசு

டெல்லி: ஒன்றிய அரசின், தொழில் மற்றும் உள்நாட்டு வர்த்தக ஊக்குவிப்புத் துறை (DPIIT), பல்வேறு காரணிகளின்  அடிப்படையில் வணிகம் புரிதலை எளிதாக்குதல் (Ease of Doing Business) தொடர்பாக அனைத்து மாநிலங்களையும், யூனியன் பிரதேசங்களையும் தர வரிசைப் படுத்தும் நடைமுறையை பல வருடங்களாக மேற்கொண்டு வருகிறது.  இந்த நடைமுறையில், மாநிலங்கள் 1) சிறந்த சாதனையாளர்கள் (Top Achievers), 2) சாதனையாளர்கள் (Achievers), 3) சாதனை படைக்க முயற்சிப்பவர்கள் (Aspirers) மற்றும் 4) வணிக சூழலை உருவாக்கி வருபவர்கள் … Read more

கோடிக்கணக்கில் வரி ஏய்த்த விவோ – அமலாக்கத் துறை குற்றச்சாட்டு

இந்தியாவில் செயல்படும் சீனாவின் விவோ மொபைல் நிறுவனம் வரி விதிப்பைத் தவிர்க்க விற்பனைத் தொகையில் ஐம்பது விழுக்காட்டை அதாவது 62 ஆயிரத்து 476 கோடி ரூபாய் அளவுக்குச் சீனாவுக்கு அனுப்பியுள்ளதாக அமலாக்கத் துறை தெரிவித்துள்ளது. பண மோசடி மற்றும் வரி ஏய்ப்புக் குற்றச்சாட்டில் டெல்லி, உத்தரப் பிரதேசம், மகாராஷ்டிர மாநிலங்களில் விவோ நிறுவனம், அதன் 23 துணை நிறுவனங்கள், இயக்குநர்களின் வீடுகள் என நாற்பதுக்கு மேற்பட்ட இடங்களில் அமலாக்கத் துறையினர் சோதனை நடத்தினர். இதில் 119 வங்கிக் … Read more

டாக்டரை கரம் பிடித்தார்; பஞ்சாப் முதல்வர் திருமணம் எளிமையாக நடந்தது: டெல்லி முதல்வர் கெஜ்ரிவால், நெருங்கிய உறவினர்கள் பங்கேற்பு

சண்டிகர்: பஞ்சாப் முதல்வர் திருமணம் இன்று எளிமையாக நடந்தது. டாக்டர் பெண்ணை கரம்பிடித்துள்ளார். மணமக்களுக்கு டெல்லி முதல்வர் மற்றும் நெருங்கிய உறவினர்கள் வாழ்த்து தெரிவித்தனர். நகைச்சுவையாளர், பாடகர், நடிகர், சமூக சேவகர், அரசியல் பிரமுகர் என பன்முக திறமை படைத்தவர் பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான். கடந்த மார்ச் மாதம் நடந்த பஞ்சாப் மாநில சட்டசபை தேர்தலில் ஆம்ஆத்மி வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்றியது. முதல்வராக 48 வயது நிரம்பிய பகவந்த் மான் பொறுப்பேற்றார். அன்று முதல் … Read more

உ.பி: தேர்தல் அதிகாரியை தாக்கிய வழக்கில் காங்கிரஸ் தலைவருக்கு 2 ஆண்டு சிறை தண்டனை

உத்தரப்பிரதேசத்தில் தேர்தல் அதிகாரியை தாக்கியதாக தொடரப்பட்ட வழக்கில் நடிகரும் காங்கிரஸ் தலைவருமான ராஜ் பப்பருக்கு 2 வருட சிறைத் தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. உத்தரப்பிரதேச மாநில காங்கிரஸ் கமிட்டியில் மூத்த தலைவராக இருப்பவர் ராஜ் பப்பர். இவர் பல பாலிவுட் படங்களிலும் நடித்து பிரபலமானவர் ஆவார். கடந்த 1996ஆம் ஆண்டு நடந்த லோக்சபா தேர்தலின் போது நடிகர் ராஜ் பப்பர், உத்தரப்பிரதேசம் மாநிலம் லக்னோ தொகுதியில் சமாஜ்வாதி கட்சி சார்பில் போட்டியிட்டார். அந்த சமயத்தில் தேர்தல் … Read more