ஷின்சோ அபே கொலையும், அக்னிபாத் திட்டமும் – எச்சரிக்கை விடுக்கும் திரிணமூல் காங்கிரஸ்

ஜப்பான் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபே கொலை செய்யப்பட்டதற்கும், அக்னிபாத் திட்டத்துக்கும் சம்பந்தப்படுத்தி திரிணமூல் காங்கிரஸ் கட்சி எச்சரிக்கை விடுத்துள்ளது. ஜப்பானில் நீண்டகாலமாக பிரதமராக இருந்தவர் ஷின்சோ அபே. உடல்நலக்குறைவு காரணமாக தனது பிரதமர் பதவியை 2 ஆண்டுகளுக்கு முன்பு அவர் ராஜினாமா செய்தார். எனினும், கட்சி நடவடிக்கைகளில் அவர் தொடர்ந்து ஈடுபட்டு வந்தார். இதனிடையே, கடந்த 8-ம் தேதி ஜப்பான் மேலவைத் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்த ஷின்சோ அபேவை ஒருவர் சுட்டுக் கொன்றார். இந்த விவகாரம் … Read more

மோசமான வானிலையால் அமர்நாத் யாத்திரை நிறுத்தம்

ஜம்மு-காஷ்மீரின் அனந்தநாக் மாவட்டம், இமயமலையில் அமைந்துள்ள அமர்நாத் குகைக் கோயிலில் இயற்கையாக உருவாகும் பனிலிங்கத்தை வழிபட ஆண்டுதோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் புனித யாத்திரை மேற்கொள்கின்றனர். இந்த ஆண்டு புனித யாத்திரை கடந்த ஜூன் 30-ம் தேதி தொடங்கியது. இதுவரை ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டோர் பனிலிங்கத்தை வழிபட்டுள்ளனர். எதிர்பாராதவிதமாக கடந்த 7-ம் தேதி அமர்நாத் கோயில் பகுதியில் மேகவெடிப்பு ஏற்பட்டு பலத்த மழை பெய்தது. இதில் காட்டாற்று வெள்ளம் ஏற்பட்டு கூடாரங்களில் தங்கி யிருந்த பக்தர்கள் இழுத்து செல்லப்பட்டனர். … Read more

அமர்நாத் பனிலிங்க தரிசனம்.! வானிலை சரியானதும் யாத்திரை தொடங்கும்; ஜம்மு காஷ்மீர் அரசு அறிவிப்பு

ஜம்மு: மோசமான வானிலை காரணமாக ரத்து செய்யப்பட்டுள்ள அமர்நாத் யாத்திரை, விரைவில் மீண்டும் தொடங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தெற்கு காஷ்மீரின் இமயமலை பகுதியில் அமைந்துள்ள அமர்நாத் குகையில் இயற்கையாக உருவாகும் பனிலிங்கத்தை தரிசிக்கும் அமர்நாத் யாத்திரை, கடந்த 2 ஆண்டுகளாக கொரோன தொற்றினால் ரத்து செய்யப்பட்டது. தற்போது தொற்று அபாயம் குறைந்ததால், இந்தாண்டுக்கான அமர்நாத் யாத்திரை கடந்த மாதம் 30ம் தேதி தொடங்கியது. மொத்தம் 43 நாட்கள் நடைபெறும் இந்த யாத்திரையில் 8 லட்சம் பக்தர்கள் பங்கேற்பார்கள் … Read more

காங்கிரஸ் கட்சியில் இருந்து நீக்கப்பட்ட எம்எல்ஏ குல்தீப், அமித் ஷாவுடன் சந்திப்பு

புதுடெல்லி: ஹரியாணா முன்னாள் முதல்வர் பஜன் லால் மகன் குல்தீப் பிஷ்னோய், ஆதம்பூர் சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினராக உள்ளார். பாஜக ஆளும் ஹரியாணாவில் காங்கிரஸ் எதிர்க்கட்சியாக உள்ளது. இம்மாநிலத்தில் காலியான 2 மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு கடந்த மாதம் தேர்தல் நடைபெற்றது. இதில் காங்கிரஸ் கட்சிக்கு ஒரு இடம் கிடைக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அக்கட்சியின் சார்பில் போட்டியிட்ட அஜய் மக்கான் தோல்வி அடைந்தார். காங்கிரஸ் கட்சியின் குல்தீப் பிஷ்னோய் கட்சி மாறி வாக்களித்ததும், மற்றொரு உறுப்பினரின் … Read more

ஏழுமலையானை தரிசிக்க 24 மணி நேரம் காத்திருப்பு

திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயிலில்  24 மணி நேரம் காத்திருந்து பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பக்தர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. விடுமுறை மற்றும் விசேஷ நாட்கள் மட்டுமின்றி தற்போது சாதாரண நாட்களிலும் பக்தர்களின் வருகை அதிகரித்து காணப்படுகிறது. நேற்று முன்தினம் 87,478 பக்தர்கள் தரிசனம் செய்தனர். இதில், 48,692 பக்தர்கள் தலைமுடி காணிக்கை செலுத்தினர். கோயில் உண்டியலில் ரூ.4.53 கோடியை பக்தர்கள் காணிக்கையாக செலுத்தியுள்ளனர்.இந்நிலையில், ஞாயிற்றுக் கிழமையான நேற்று … Read more

சுகேஷ் சந்திரசேகரிடம் மாதம் ரூ.1.5 கோடி லஞ்சம்: டெல்லி சிறை அதிகாரிகள் 81 பேர் மீது வழக்குப் பதிவு

புதுடெல்லி: மோசடி நபருக்கு சிறையில் அனைத்து வசதிகளையும் செய்து கொடுப்பதற்காக, மாதம் ரூ.1.5 கோடி லஞ்சம் பெற்ற டெல்லியில் உள்ள ரோகினி மாவட்ட சிறை அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் 81 பேர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். சுகேஷ் சந்திரசேகர் என்ற நபர் பலரை ஏமாற்றி கோடிக்கணக்கில் மோடி செய்துள்ளார். ஃபோர்டிஸ் ஹெல்த்கேர் புரோமோட்டர் சிவேந்தர் சிங் மனைவியிடம் இவர் ரூ.200 கோடி மோசடி செய்துள்ளார். இரட்டை இலை சின்னம் முடக்கப்பட்டபோது அதை பெற்றுத் தருவதாக … Read more

சுற்றுலாத்தளமான பிரதமர் இல்லம்..! கேரம் விளையாடி, கூட்டாக இணைந்து சமைத்து சாப்பிட்ட மக்கள்

இலங்கை பிரதமர் இல்லத்தை முற்றுகையிட்ட மக்கள், மாளிகை வளாகத்தில் கூட்டாக இணைந்து சமைத்து சாப்பிடும் வீடியோ இணையத்தில் அதிகம் பேரால் பகிரப்பட்டு வருகிறது. மக்கள் கொந்தளிப்பால் அதிபர், பிரதமர் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் தங்கள் குடியிருப்புகளை காலி செய்து விட்டு குடும்பத்தினருடன் தலைமறைவாகினர்.

நீட் தேர்வுக்கு இன்று முதல் ஹால் டிக்கெட்

டெல்லி: வரும் 17ம் தேதி நடைபெறும் நீட் தேர்வுக்கு இன்று முதல் ஹால் டிக்கெட் வழங்கப்படுகிறது. http://neet.nta.nic.in என்ற இணையதளத்தில் ஹால்டிக்கெட்டை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் என தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது.

அசாமில் விலைவாசி உயர்வுக்கு எதிராக வீதி நாடகம்: சிவன், பார்வதி வேடத்தில் நடிகர், நடிகை போராட்டம்

கவுகாத்தி: விலைவாசி உயர்வுக்கு எதிராக சிவன், பார்வதி வேடத்தில் வீதி நாடகம் நடத்தி பார்வையாளர்களை திரட்டி போராட்டத்தில் ஈடுபட்ட நடிகரும், நடிகையும் கைது செய்யப்பட்டு ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர். அசாம் மாநிலத்தைச் சேர்ந்தவர் நடிகர் பிரின்சி போரா. இவரும் சக நடிகை பரிஷ்மிதா தாஸ் என்ற பெண்ணும் சிவன், பார்வதி வேடத்தில் அசாம் மாநிலத்தின் நகான் நகரில் புல்லட் ஒன்றில் நேற்று முன்தினம் மாலை வலம் வந்தனர். காலேஜ் சவுக் பகுதியில் இவர்கள் இருவரும் வீதி நாடகம் நடத்தினர். … Read more

நீட் தேர்வு : இன்று முதல் ஹால் டிக்கெட் பதிவிறக்கம் செய்யலாம்

எம்.பி.பி.எஸ், பி.டி.எஸ் உள்ளிட்ட இளநிலை மருத்துவ படிப்புகளுக்கான நீட் நுழைவுத்தேர்வுக்கு விண்ணப்பித்தவர்கள் இன்று முதல் ஹால் டிக்கெட்டை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் என தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது. ஜூலை 17-ஆம் தேதி நடைபெறும் நீட் தேர்வு எழுதுவதற்காக தமிழகத்தில் இருந்து ஒரு லட்சத்து 42 ஆயிரத்து 286 பேர் உள்பட நாடு முழுவதும் 18 லட்சத்து 72 ஆயிரத்து 339 பேர் விண்ணப்பித்துள்ளனர். கடந்த ஆண்டை விட இந்த ஆண்டில் கூடுதலாக 2 லட்சத்து 57 ஆயிரம் … Read more