நீதிமன்றங்களில் நிலுவையில் 5 கோடி வழக்குகள் – சட்ட அமைச்சர் கவலை!

நாட்டில் சுமார் 5 கோடி வழக்குகள் நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ளதாக மத்திய சட்டத் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜூ தெரிவித்து உள்ளார். மகாராஷ்டிர மாநிலத்தில் உள்ள தேசிய சட்ட பல்கலைக் கழகத்தில் முதலாமாண்டு பட்டமளிப்பு விழாவில் சட்டத் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜூ பங்கேற்று உரையாற்றினர். அப்போது அவர் பேசியதாவது: இந்திய நீதித் துறையின் தரம் உலகம் அறிந்த ஒன்றாகும். இரு நாள்களுக்கு முன்னர் நான் லண்டன் சென்றிருந்த போது அந்நாட்டின் நீதித் துறையை சேர்ந்தவர்களிடம் உரையாற்றினேன். … Read more

கனமழைக்கு மத்தியில் தார் சாலை அமைக்கு பணி.. 4 பொறியாளர்கள் பணியிடை நீக்கம்..!

பஞ்சாப் மாநிலம் ஹோஷியார்பூரில் கன மழைக்கு மத்தியில் தொழிலாளர்கள் தார்சாலை அமைக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலானதை அடுத்து பொதுப்பணித்துறையை சேர்ந்த நான்கு பொறியாளர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். சப்பேவால் தொகுதியில் உள்ள நங்கல் கிலாடியா மற்றும் ஷெர்பூர் கிராமத்தை இணைக்கும் சாலையில் தேங்கிகொண்டிருந்த மழை நீருடன் சேர்த்து சாலை அமைக்கப்பட்டதால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 

பாஜக ஆளும் மாநிலத்தில் மதுகொள்கையை மாத்துங்க!: மாஜி பெண் முதல்வர் நட்டாவுக்கு கடிதம்

போபால்: பாஜக மூத்த தலைவரும், மத்திய பிரதேச முன்னாள் முதல்வருமான உமா பாரதி, பாஜக தேசிய தலைவர் ஜேபி நட்டாவுக்கு எழுதியுள்ள கடிதத்தில், ‘கட்சியின் விதிகளுக்கு எதிராக நான் செல்லமாட்டேன் என்பதும் உங்களுக்கு நன்றாகத் தெரியும். ஆனால் மதுக்கொள்கை விஷயங்களில் நான் சமரசம் செய்து கொள்ள மாட்ேடன். ஏனென்றால் அவை எனது நம்பிக்கையுடன் தொடர்புடையது. சவுகான் அரசின் மதுபானக் கொள்கை விவகாரம் குறித்து நான் பேசும் போதெல்லாம், நான் கேலிக்கு ஆளாக்கப்படுகிறேன். நேர்மறையான முடிவுகள் எடுக்கப்படும் என்று … Read more

மனதைக் கவரும் கோகாக் நீர்வீழ்ச்சி… ஆபத்தை உணராமல் குளிக்கும் சுற்றுலாப் பயணிகள்

கர்நாடகாவில் மனதைக் கவரும் கோகாக் நீர்வீழ்ச்சியில் ஆபத்தை உணராமல் சுற்றுலாப் பயணிகள் குளித்து மகிழ்ந்து வருகின்றனர். முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துவருகின்றனர்.  கர்நாடக மாநிலம் பெலகாவி மாவட்டம் கோகாக் நீர்வீழ்ச்சியில் சுற்றுலாப் பயணிகள் அருவியின் உச்சிக்கு சென்று புகைப்படம், செல்பி எடுத்து வருகின்றனர். கடந்த ஒரு வாரமாக மேற்குத் தொடர்ச்சி மலை மற்றும் மகாராஷ்டிர மாநிலம் பெல்காம் பகுதிகளில் பெய்து வரும் மழையால், கோகாக் அருவியில் பால் நுரை போல் ஆர்ப்பரித்து கொட்டியதால், … Read more

'கவலைப்படாதீங்க.. நாங்க இருக்கோம்!' – இலங்கைக்கு சோனியா ஆறுதல்

இலங்கையில் ஏற்பட்டுள்ள சிரமங்களை கையாள அந்நாட்டு அரசுக்கும், மக்களுக்கும் இந்தியா உதவும் என நம்புவதாக காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியா காந்தி தெரிவித்து உள்ளார். அண்டை நாடான இலங்கையில், வரலாறு காணாத அளவுக்கு பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இதனால், பெட்ரோல், டீசல், சமையல் கேஸ் சிலிண்டர் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களின் விலை பல மடங்கு உயர்ந்துள்ளது. இதனால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள அந்நாட்டு மக்கள், அதிபர் கோத்தபய ராஜபக்சேவுக்கு எதிராக போராட்டத்தில் குதித்துள்ளனர். தலைநகர் கொழும்புவில் உள்ள இலங்கை … Read more

அரசு மருத்துவமனையில் காலில் அடிபட்டு சிகிச்சை பெறச் சென்ற கர்ப்பிணிக்கு சிகிச்சை அளிக்க மறுத்து தரக்குறைவாக பேசிய மருத்துவர்..!

திருப்புவனம் அரசு மருத்துவமனையில் காலில் அடிபட்டு சிகிச்சை பெறச் சென்ற கர்ப்பிணிக்கு சிகிச்சை அளிக்க மறுத்த மருத்துவர், பெண்ணை தரக்குறைவாக பேசிய வீடியோ இணையத்தில் பரவி வருகிறது. நேற்றிரவு 10 மணிக்கு கர்ப்பிணி மருத்துவமனைக்கு சென்ற நிலையில், பணியில் இருந்த மருத்துவர் பாலகிருஷ்ணன் முதலுதவி சிகிச்சை அளிக்க அங்கிருந்த படுக்கையில் ஏறி படுக்குமாறு பெண்ணிடம் கூறியுள்ளார். படுக்கை உயரமாக இருந்ததன் காரணமாக, கர்ப்பிணி அங்கிருந்த மர ஸ்டூலில் அமர முயன்றதால், ஆத்திரமடைந்த மருத்துவர் ஸ்டூலை எட்டி உதைத்ததாக … Read more

திருப்பதி கோயிலுக்கு சென்றபோது தடுப்பு சுவரில் கார் மோதி தாய், மகன் பரிதாப பலி

திருமலை: திருப்பதி அருகே சாலையின் தடுப்பு சுவரில் கார் மோதியதில் ஈரோட்டைச் சேர்ந்த பெண்ணும் அவரது மகனும் பரிதாபமாக இறந்தனர். ஈரோட்டை சேர்ந்த சரண்யா (30) என்பவர் தனது கணவர் மற்றும் மகன் மிதுன் (12) ஆகியோருடன் திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க நேற்றிரவு காரில் சென்றனர். ஆந்திர மாநிலம் பூதலப்பட்டு நாயுடுபேட்டை ேதசிய நெடுஞ்சாலையில் திருப்பதி கிராமிய மண்டலம் மல்லவரம் அருகே சென்றபோது திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த கார் தாறுமாறாக ஓடியது. அங்குள்ள சாலையின் தடுப்பு … Read more

"கோட்டாபயவுக்கு ஏற்பட்ட நிலைமைதான் மோடிக்கும்…" – திரிணாமூல் எம்எல்ஏ ஆவேசம்

இலங்கை அதிபர் கோட்டாபய ராஜபக்சவுக்கு ஏற்பட்ட நிலைமை தான் இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கும் ஏற்படும் என்று திரிணாமூல் காங்கிரஸ் எம்எல்ஏ இட்ரிஸ் அலி கூறியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இலங்கையில் வெடித்துள்ள மக்கள் புரட்சியால் இலங்கை அதிபர் தப்பியோடிய சூழலில், இட்ரிஸ் அலி இவ்வாறு கூறியிருக்கிறார். கொல்கத்தாவில் உள்ள சியால்டா பகுதியில் மெட்ரோ ரயில் நிலையம் திறக்கும் நிகழ்ச்சி நாளை நடைபெறவுள்ளது. மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி இந்த ரயில் நிலையத்தை திறந்து வைக்கிறார். இதனிடையே, இந்நிகழ்ச்சியில் … Read more

மாணவியைத் தேடி பள்ளிக்கூடம் வந்த காணாமல் போன நாய் குட்டி.!

கேரள மாநிலம் கோட்டயத்தில், 4 நாட்களுக்கு முன் காணாமல் போன நாய் குட்டி தன்னை வளர்த்து வந்த பத்தாம் வகுப்பு மாணவியைத் தேடி பள்ளிக்கூடத்துக்கு வந்தது. ஆர்த்திரா என்ற அந்த மாணவி, 9 மாதங்களாக ”பாப்பி” என்ற நாய் குட்டியை வளர்த்து வந்துள்ளார். 4 நாட்களுக்கு முன் உறவினர் ஒருவர் பின்னால் சென்ற ”பாப்பி” மீண்டும் வீட்டிற்கு திரும்பவில்லை என கூறப்படுகிறது. பல இடங்களில் தேடியும் கிடைக்காத நாய் குட்டி, திடீரென ஆர்த்திரா படித்த பள்ளிக்கூடத்துக்கு சென்று … Read more

இலங்கையில் அனைத்துக்கட்சியினரும் பங்கேற்கும் வகையில் கூட்டனி அரசு அமைக்க கட்சிகள் ஆலோசனை

கொழும்பு: இலங்கையில் அனைத்துக்கட்சியினரும் பங்கேற்கும் வகையில் கூட்டனி அரசு அமைக்க கட்சிகள் ஆலோசனை நடைபெற்று வருகிறது. கொழும்புவில் அனைத்துக்கட்சிகள் பிரதிநிதிகள், எம்பிக்கள் பங்கேற்ற கோட்டம் இன்று நடைபெற்றது. இலங்கை அதிபர் கோத்தபய பதவி விலகும்பட்சத்தில் அரசியல் வெற்றிடத்தை சமாளிக்கும் வகையில் அனைத்து கட்சி கூட்டணி நடைபெற்று வருகிறது.