சிவசேனா தொண்டர்கள் வீதியில் இறங்கினால் தெருக்கள் தீப்பற்றி எரியும் – சஞ்சய் ராவத் மிரட்டல் பேச்சு.!

சிவசேனா தொண்டர்கள் வீதியில் இறங்கினால் தெருக்கள் தீப்பற்றி எரியும் என அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சஞ்சய் ராவத் பேசியுள்ளது சர்ச்சையாகியுள்ளது. ஏக்நாத் சிண்டே தலைமையிலான சட்டமன்ற உறுப்பினர்கள் தங்கள் குடும்பத்தினருக்குப் பாதுகாப்பு அளிக்கக் கோரிக் கடிதம் எழுதியுள்ளது பற்றி சஞ்சய் ராவத் கருத்துத் தெரிவித்தார். அப்போது, சட்டமன்ற உறுப்பினர்களுக்குத் தான் பாதுகாப்பு அளிக்க முடியும் என்றும், அவர்களின் குடும்பத்தினருக்கு அளிக்க முடியாது என்றும் கூறினார். Source link

புதுச்சேரி பெரிய மார்க்கெட்டில் வாழைப்பழ கடைகளில் இருந்து ரசாயன திரவங்கள் பறிமுதல்..!!

புதுச்சேரி: புதுச்சேரி பெரிய மார்க்கெட்டில் வாழைப்பழ கடைகளில் இருந்து ரசாயன திரவங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. வாழைப்பழங்களுக்கு ரசாயனம் பூசப்பட்ட காணொலி சமூக வலைத்தளத்தில் வெளியான நிலையில் அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

வெளிச்சத்தில் தூங்குபவரா நீங்கள்? உங்களுக்கு இந்த பிரச்னைகள் ஏற்படும் வாய்ப்புகள் இருக்கு

இரவு நேரங்களில் வெளிச்சத்திலேயே இருந்தால் அவர்களுக்கு உடற்பருமன், நீரிழிவு மற்றும் உயர் ரத்த அழுத்தம் போன்ற பிரச்னைகள் ஏற்பட வாய்ப்புள்ளதாக கூறுகிறது வடமேற்கு மருத்துவத்தின் சமீபத்திய ஆய்வு. இளைஞர்களுடன் ஒப்பிடுகையில் வயதானவர்களுக்கு குறிப்பாக, 63 – 84 வயதுக்கு இடைப்பட்டவர்களுக்கு இந்த பிரச்னை அதிகளவில் ஏற்படும் என்கிறது இந்த ஆய்வு. மணிக்கட்டில் அணியக்கூடிய சாதனத்தில் 7 நாட்களுக்கு ஒளி வெளிப்பாட்டு அளவை கணக்கிட்டு இந்த முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது. இது நிஜத்தில் நடப்பதை வைத்து எடுக்கப்பட்ட ஆய்வின் முடிவாகும். … Read more

கரோனா பரவலை கட்டுப்படுத்த கண்காணிப்பு – மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் அறிவுறுத்தல்

புதுடெல்லி: கரோனா வைரஸ் தொற்று பரவலைக் கட்டுப்படுத்த தீவிர கண்காணிப்பு அவசியம் என்று மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா தெரிவித்துள்ளார். நாட்டில் ஒமைக்ரான் வைரஸ் மற்றும் அதன் துணை வைரஸ்களால் தூண்டப்பட்ட கரோனா அலை மீண்டும் எழுச்சி பெற்றுவருகிறது. குறிப்பாக ஒமைக்ரான் மற்றும் அதன் துணை வைரஸ்களான பிஏ.2, பிஏ.2.38 ஆகியவைதான் இந்த எழுச்சியின் பின்னால் இருப்பதாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. தற்போது மகாராஷ்டிரா, கேரளா, டெல்லி, கர்நாடகா, தமிழ்நாடு, ஹரியாணா, … Read more

ஏக்நாத் சிண்டேயுடன் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினரின் அலுவலகத்தை அடித்துநொறுக்கிய சிவசேனா தொண்டர்கள்!

மகாராஷ்டிரத்தின் புனேயில் ஏக்நாத் சிண்டேயுடன் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினரின் அலுவலகத்தை சிவசேனா தொண்டர்கள் அடித்து நொறுக்கிச் சூறையாடினர். புனேயில் கட்ராஜ் என்னுமிடத்தில் சட்டமன்ற உறுப்பினர் தானாஜி சாவந்தின் அலுவலகத்துக்குச் சென்ற சிவசேனா தொண்டர்கள் இரும்புக் கம்பிகளைக் கொண்டு கண்ணாடியையும், அறைகலன்களையும் அடித்து நொறுக்கினர். காவல்துறையினர் வருவதற்குள் முழக்கமிட்டபடியே அங்கிருந்து வெளியேறினர். Source link

சிவசேனா கட்சி மிகப்பெரியது; அவ்வளவு எளிதாக யாராலும் உடைக்க முடியாது: சஞ்சய் ராவத்

மும்பை: சிவசேனா கட்சி மிகப்பெரியது; அவ்வளவு எளிதாக யாராலும் உடைக்க முடியாது என்று சிவசேனா மூத்த தலைவர் சஞ்சய் ராவத் தெரிவித்திருக்கிறார். மகாராஷ்டிராவில் காங்கிரஸ், தேசியவாத காங்கிரசுடன் இணைந்து கூட்டணி ஆட்சி நடத்தி வரும் சிவசேனாவில் பிளவு ஏற்பட்டுள்ளது. சிவசேனா அமைச்சர் ஏக்நாத் ஷிண்டே தனது ஆதரவு எம்எல்ஏக்களுடன் மாயமானதில் இருந்து மகாராஷ்டிர அரசியலில் நாளுக்கு நாள் பரபரப்பு ஏற்பட்டு வருகிறது. சூரத் சென்ற அவருடன் 11 சிவசேனா எம்எல்ஏக்கள் சென்றதாக முதலில் தகவல் வெளியானது. பின்னர் … Read more

மனைவியுடன் லாட்ஜில் தங்கியிருந்த ஆண் நண்பர் – ஆத்திரத்தில் கணவர் செய்த செயல்

தனது மனைவியை லாட்ஜுக்கு அழைத்துச் சென்ற ஆண் நண்பரை அவரது கணவர் சுட்டுக் கொன்ற சம்பவம் டெல்லியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. டெல்லியைச் சேர்ந்தவர் ரிஷப் சக்சேனா (32). தொழிலதிபரான இவருக்கும், ரவ்லீன் சாவ்லா என்ற பெண்ணுக்கும் 2 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றுள்ளது. திருமணத்துக்கு பிறகும் கூட, ரல்வீன் சாவ்லா தனது ஆண் நண்பரான சன்னி ஷெராவத்துடன் நெருங்கி பழகி வந்ததாக கூறப்படுகிறது. இது, அவரது கணவர் ரிஷப்புக்கு பிடிக்கவில்லை. இதுதொடர்பாக பல முறை அவர்களுக்கு … Read more

குஜராத் கலவர வழக்கு தீர்ப்பு | வலியைத் தாங்கி 19 ஆண்டுகள் போராடினார்.. பிரதமர் மோடிக்கு அமித் ஷா புகழாரம்

புதுடெல்லி: குஜராத் கலவர வழக்கில் வழங்கப்பட்ட உச்ச நீதிமன்ற தீர்ப்பை சுட்டிக்காட்டி பிரதமர் மோடியை புகழ்ந்துள்ளார் உள்துறை அமைச்சர் அமித் ஷா. ஏஎன்ஐ செய்தி நிறுவனத்துக்கு அவர் அளித்தப் பேட்டியில், “பிரதமர் நரேந்திர மோடி ஓர் உயர்ந்த தலைவர். அவர் மீது குஜராத் கலவர வழக்கு 19 ஆண்டுகள் நடந்தன. அவர் அத்தனை காலமும் பொறுமையாகவே இருந்தார். அந்த வழக்கு நிலுவையில் இருந்த காலத்தில் அவர் வழக்கு தொடர்பாக எதுவுமே விமர்சிக்கவில்லை. அவருடைய வேதனைகளை நான் அருகிலிருந்து … Read more

கர்நாடகாவில் கோயில் பெயரில் பண மோசடி செய்த 5 பூசாரிகள் மீது போலீசார் வழக்கு..!!

கலபுர்கி: கர்நாடகா மாநிலம் கலபுர்கி மாவட்டத்தில் கோயில் பெயரில் பண மோசடி செய்த 5 பூசாரிகள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். அரசு கட்டுப்பாட்டில் இயங்கும் கோயில் பெயரில் வலைத்தளம் உருவாக்கி பணம் வசூலித்ததாக போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். போலி வலைத்தளம் மூலம் கடந்த 6 ஆண்டுகளாக ரூ.20 கோடி அளவுக்கு நிதி வசூலித்ததாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கண்ணாடி பாட்டில்களில் கண்டெடுக்கப்பட்ட சிசுக்களின் சடலங்கள் – கர்நாடகாவில் அதிர்ச்சி

கர்நாடகாவில் கண்ணாடி பாட்டில்களில் கலைக்கப்பட்ட 7 சிசுக்களின் சடலங்கள் கண்டெடுக்கப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடக மாநிலம் பெலகாவியில் உள்ள நல்லா நதிக்கரையில் சிலர் நேற்று துணிகளை துவைக்க வந்துள்ளனர். அப்போது அங்கு கிடந்த கண்ணாடி பாட்டில்களில் கலைக்கப்பட்ட சிசுக்களின் உடல்கள் இருந்தது தெரியவந்தது. இதுகுறித்து அவர்கள் போலீசுக்கு தகவல் அளித்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், பாட்டில்களை கைப்பற்றி அவற்றை ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு அனுப்பினர். அவர்கள் அவற்றை தடயவியல் பரிசோதனைக்கு அனுப்ப … Read more