ஓபிஎஸ்சுக்கு ஆளுநர் பதவி.. ஆனா 2 கண்டிஷன்.. டெல்லி கொடுத்த ஆஃபர்..!?

டெல்லி சென்றுள்ள ஓ.பன்னீர்செல்வம் பிரதமர் மோடியை சந்திக்க நேரம் கேட்டு இருந்தார். ஜனாதிபதி தேர்தலில் பாஜக கூட்டணி சார்பில் போட்டியிடும் திரௌபதி முர்மு நேற்று வேட்புமனு தாக்கல் செய்தார். இந்த நிகழ்வில் பிரதமர் மோடியுடன் ஓபிஎஸ் கலந்து கொண்டார். அதன்பின் பிரதமர் மோடியை சந்திக்க அவர் முயன்றார். ஆனால், எவ்வளவு முயன்றும் பிரதமர் மோடி தரப்பு இவருக்கு நேரம் தரவில்லை என்று கூறப்படுகிறது. இதையடுத்து, பாஜக நிர்வாகிகள் சிலரை மட்டும் ஓபிஎஸ் சந்தித்து பேசி இருக்கிறார். டெல்லியில் … Read more

'அரசியல் சாசன உரிமைகளைப் பறித்த காங்கிரஸ்' – எமர்ஜென்சி நினைவு நாளில் சாடிய அமித் ஷா

நெருக்கடி நிலை என்ற பெயரில் அரசியல் சாசன உரிமைகளை காங்கிரஸ் பறித்ததாக மத்திய உள் துறை அமைச்சர் அமித் ஷா கூறியுள்ளார். இந்தியாவில் 1975 ஜூன் 25ல் அப்போதைய இந்திராகாந்தி அரசின் பரிந்துரையின் பேரில் குடியரசுத் தலைவர் ஃபரூக் அலி அகமது நாட்டில் அவசரநிலையை பிரகடனம் செய்தார். உள்நாட்டு பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் வந்துவிட்டதாகக் கூறி இந்த நெருக்கடிநிலை அமலாக்கப்பட்டது. 1977 மார்ச் மாதம் வரை சுமார் 19 மாதங்கள் இந்த அவசரநிலை நீடித்தது. இன்று அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்ட … Read more

இப்படி எல்லாமா செத்து போவாங்க மிரண்டு அரண்டு போன போலீஸ்…! அதிகம் படிச்சா இதான் பிரச்சனை

வீட்டை விற்றும் கடனை அடைக்க இயலாத விரக்தியில் கணவன் மனைவி தங்கள் உடல் முழுவதும் மின்சார வயரை சுற்றி மின்சாரத்தை பாய்ச்சி உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கேரள மாநிலம் கொல்லம் அடுத்த கரு நாகப்பள்ளியை சேர்ந்தவர் சாபு, இவரது மனைவி ஷீஜா இந்த தம்பதியருக்கு 12 ஆம் வகுப்பு படிக்கின்ற மகன் இருக்கின்றான். பெட்டிக்கடை நடத்திவந்த சாபு, தொழில் தொடர்பாக ஏராளமாக வட்டிக்கு கடன் பெற்றிருந்தார். ஆனால் கடனை திருப்பி செலுத்த … Read more

பாஜக கூட்டணி குடியரசுத் தலைவர் வேட்பாளர் திரௌபதி முர்முவுக்கு பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி ஆதரவு..!!

டெல்லி: பாஜக கூட்டணி குடியரசுத் தலைவர் வேட்பாளர் திரௌபதி முர்முவுக்கு பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி ஆதரவு தெரிவித்திருக்கிறார். இது பாஜகவுக்கு ஆதரவாக எடுத்த முடிவு அல்ல; பகுஜன் சமாஜ் கட்சியின் கொள்கையை மனதில் வைத்து எடுத்த முடிவு என மாயாவதி தெரிவித்துள்ளார்.

மகாராஷ்டிரா அரசியல் குழப்பம் | இன்று கூடுகிறது சிவசேனா செயற்குழு கூட்டம்

பாஜகவுடன் கூட்டணி சேர வலியுறுத்தி கட்சி எம்எல்ஏ.,க்கள் போர்க்கொடி உயர்த்தியுள்ள நிலையில் சிவ சேனா கட்சியின் பொதுக்குழு கூட்டம் இன்று நடைபெறுகிறது. மகாராஷ்டிராவில் காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சியுடனான கூட்டணியை முறித்து, பா.ஜ.க.வுடன் கூட்டு சேர்ந்து ஆட்சி அமைக்க வேண்டும் என சிவசேன கட்சி எம்.எல்.ஏ.க்கள், மற்றும் சுயேச்சை எம்.எல்.ஏ.க்கள் சுமார் 40 பேர் கோரிக்கை விடுத்துள்ளனர். இந்த எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இவர்கள் முதலில் குஜராத்தின் சூரத் நகருக்கும், பின்னர் அசாம் … Read more

மும்பை தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட தீவிரவாதி சாஜித் மிர்க்கு 15 ஆண்டுகள் சிறை!

மும்பை பயங்கரவாத தாக்குதலுக்கு நிதியுதவி அளித்து மூளையாக செயல்பட்ட தீவிரவாதி சாஜித் மீர்க்கு லாஹூர் நீதிமன்றம் 15 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. லஷ்கரி இ தொய்பா அமைப்பைச் சேர்ந்த சாஜித் மிர், கடந்த 2005ஆம் ஆண்டு கள்ள பாஸ்போர்ட் மூலம் இந்தியாவுக்குள் நுழைந்து தாக்குதலுக்கான திட்டம் தீட்டியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சாஜித் மிர்க்கு 15 ஆண்டுகள் சிறைத் தண்டனையும் நான்கு லட்ச ரூபாய் அபராதமும் லாஹூர் பயங்கரவாத தடுப்பு நீதிமன்றம் விதித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது Source link

கர்நாடகாவில் பரபரப்பு: கருக்கலைந்த 7 சிசுக்களின் உடல்கள் கண்டெடுப்பு..!!

பெலகாவி: கர்நாடகா மாநிலம் பெலகாவி மாவட்டம் மூதலகி கிராமத்தில் கருக்கலைந்த 7 சிசுக்களின் உடல்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளது. பஸ்டாப் அருகே சாக்கடையில் 5 மாதமே ஆன 7 சிசு உடல்களை பாட்டிலில் போட்டது யார் என விசாரணை நடைபெற்று வருகிறது. ஆணா, பெண்ணா என கண்டறிந்த பின்னர் கருக்கலைப்பு நடத்தி கருவிலுள்ள 7 குழந்தைகளை கொன்றதாக புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.

60-வது பிறந்த நாளில் ரூ.60 ஆயிரம் கோடி நன்கொடை – கவுதம் அதானி அறிவிப்பு

புதுடெல்லி: ஆசியாவின் பெரும் பணக்காரர்களில் ஒருவரான தொழிலதிபர் கவுதம் அதானி தனது 60-வது பிறந்த நாளன்று சமூக நலத் திட்டங்களுக்காக ரூ. 60 ஆயிரம் கோடி நன்கொடை அளிப்பதாக அறிவித்துள்ளார். இந்தத் தொகை அதானி அறக்கட்டளை மூலம் சுகாதாரம், கல்வி, திறன் மேம்பாடு உள்ளிட்டவற்றுக்கு பயன்படுத்தப்படும் என அதானி தெரிவித்துள்ளார். இந்தியத் தொழில் நிறுவனங்கள் வரலாற்றில் இவ்வளவு அதிகமான தொகை நன்கொடை யாக வழங்கப்பட்டுள்ளது இதுவே முதல் முறை. முதல் தலைமுறை தொழில்முனைவோரான கவுதம் அதானி தனது … Read more

விமானத்தில் ஏசி இயங்காததால் நடுவானில் புழுக்கம் தாங்க முடியாமல் மயங்கி விழுந்த பயணிகள்.!

மும்பை நோக்கி சென்ற கோ பர்ஸ்ட் நிறுவன விமானத்தில் ஏசி இயந்திரம் இயங்காததால் நடுவானில் 3 பயணிகள் மயங்கி விழுந்தனர். உத்தரகாண்ட் மாநிலம் டேராடூனில் இருந்து புறப்பட்ட கோ பர்ஸ்ட் நிறுவன விமானத்தில், ஏசி இயந்திரம் இயங்கவில்லை. புழுக்கம் தாங்க முடியாமல் காகிதங்களை விசிறியாக பயணிகள் வீசிய நிலையில், காற்றோட்ட வசதியில்லாமல் 3 பயணிகள் மயங்கி விழுந்தனர். விமானத்தில் புழுக்கத்துடன் பயணிகள் தவிப்பதாகவும், நோயாளிகள் உள்ளிட்டோர் கடும் அவதியடைந்துள்ளதாகவும் பெண் பயணி வெளியிட்ட வீடியோ இணையத்தில் வேகமாக … Read more

இந்தியாவில் ஒரு நாள் கொரோனா பாதிப்பு 15,940ஆக குறைந்தது… சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 91 ஆயிரத்தை தாண்டியது!!

டெல்லி: நாட்டில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 5 லட்சத்தை தாண்டியது. அதே போல், பாதிப்பு 4 கோடியை தாண்டியது. இன்று காலை 9 மணியுடன் முடிந்த 24 மணி நேரத்தில், நாட்டில் கொரோனாவால் புதிதாக பாதித்தவர்கள், குணமடைந்தோர், பலியானோர், இறப்பு விகித நிலவரம் குறித்து மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:* புதிதாக 15,940 பேர் பாதித்துள்ளனர்.* இதன் மூலம், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 4,33,78,134ஆக உயர்ந்தது.* புதிதாக 20 பேர் இறந்துள்ளனர்.* இதனால், நாட்டின் … Read more