நிதி ஆயோக்கின் புதிய தலைவர் பரமேஸ்வரன்

புதுடெல்லி: நிதி ஆயோக் தலைமை நிர்வாக அதிகாரியாக இருந்த  அமிதாப் காந்த்தின் பதவி காலம் வரும் 30ம்தேதியுடன் முடியும் நிலையில், இப்பதவிக்கு ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி பரமேஸ்வரன் ஐயரை  ஒன்றிய அரசு நியமித்துள்ளது. ஒன்றியத்தில் பாஜ ஆட்சி அமைந்த பிறகு, திட்டக்குழு கலைக்கப்பட்டு அதற்கு பதிலாக நிதிஆயோக் என்ற  அமைப்பு உருவாக்கப்பட்டது.  தற்போது, நிதி ஆயோக்கின் தலைமை செயல் அதிகாரியாக உள்ள அமிதாப் காந்த், வரும் 30ம்  தேதி ஓய்வு பெறுகிறார். இதையடுத்து புதிய தலைவராக … Read more

6 மணி நேரத்தில் ரூ.2 லட்சம் அபராதம் வசூலித்த பெங்களூரு போக்குவரத்து காவலர்

பெங்களூரு: பெங்களூருவில் உள்ள காமாட்சிபாளையா போக்குவரத்து காவல் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டராக இருப்பவர் எம்.சிவண்ணா. இவர் கடந்த 21-ம் தேதி காலை 11 மணி முதல் மாலை 5 மணி வரை ஞானபாரதி சந்திப்பில் பணியில் ஈடுபட்டார். இந்த‌ 6 மணி நேரத்தில் போக்குவரத்து விதிமுறைகளை மீறியவர்க‌ளிடம் 249 போக்குவரத்து விதிமீறல்களுக்காக ரூ.2.04 லட்சம் அபராதமாக வசூலித்துள்ளார். இதில் அதிகபட்சமாக கார் உரிமையாளர் ஒருவரிடம் கடந்த 6 மாதங்களில் நகரில் 36 இடங்களில் ‘நோ பார்க்கிங்’ விதிமுறைகளை மீறியதற்காக … Read more

அரிசி, பால் பவுடர் அனுப்பியது: இலங்கைக்கு இந்தியா ரூ65.3 கோடிக்கு உதவி

கொழும்பு: இலங்கைக்கு இந்தியா மனிதாபிமான அடிப்படையில் அனுப்பிய அரிசி, குழந்தைகளுக்கான பால் மாவு, மருந்துகள் நேற்று வந்தடைந்தது.கடும் நிதி, பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள இலங்கைக்கு மனிதாபிமானம், இந்தியா-இலங்கை இடையேயான நட்புறவின் அடிப்படையில் பெட்ரோலுக்கான கடன் உள்பட இந்தியா தொடர்ந்து உதவிக்கரம் நீட்டி வருகிறது. இதனால், உணவு, பால் மாவு, மருந்து தட்டுப்பாட்டை போக்க இந்தியா அவ்வபோது இவற்றை அனுப்பி உதவுகிறது.இந்நிலையில், இந்தியா அனுப்பிய ரூ65.3 கோடி மதிப்பிலான 14,700 மெட்ரிக் டன் அரிசி, குழந்தைகளுக்கான 250 மெட்ரிக் … Read more

பேச்சுவார்த்தையில் சுமூகம்: தெலுங்கு சினிமா தொழிலாளர் ஸ்டிரைக் வாபஸ்

ஐதராபாத்: சம்பள உயர்வு கோரி போராடி வந்த தெலுங்கு திரைப்பட தொழிலாளர்கள் தங்களது வேலை நிறுத்த போராட்டத்தை கைவிட்டனர். திரைப்பட தொழிலாளர்களுக்கு 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை சம்பள உயர்வு வழங்கப்படும். கொரோனா பாதிப்பு காரணமாக இந்த ஆண்டு வழங்க வேண்டிய சம்பள உயர்வு இதுவரை வழங்கப்படவில்லை. இதையடுத்து 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் திடீரென வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து செவ்வாய்க்கிழமை முதல் ஆந்திரா, தெலங்கானாவில் எந்த படத்தின் படப்பிடிப்பும் நடைபெறவில்லை. தமிழ் படங்களில் பெரும்பாலான … Read more

வயநாட்டில் ராகுல் காந்தியின் அலுவலகம் சூறை

வயநாடு: காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தியின் எம்பி அலுவலகத்தை  கேரளா ஆளும் கட்சியினர் அடித்து நொறுக்கி சூறையாடினர். அனைத்து பாதுகாக்கப்பட்ட வனப்பகுதி, வனவிலங்கு சரணாலயங்கள் மற்றும் தேசிய பூங்காக்களைச் சுற்றி ஒரு கிலோமீட்டருக்கு சுற்றுச்சூழல் உணர்திறன் மண்டலத்தை கட்டாயமாக்குவது தொடர்பாக சமீபத்தில் உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. இதானால் பாதுகாக்கப்பட்ட வனப் பகுதிகளில் உள்ள ஒரு கிலோமீட்டரில் ஆட்கள் வசிப்பது பற்றி ஆய்வு செய்ய கேரள வனத்துறை குழு ஒன்றை அமைத்துள்ளது. இதனால் மலை மாவட்டமாக உள்ள … Read more

ராமர் வேடத்தில் நடிக்க ரூ120 கோடி சம்பளம் கேட்கும் பிரபாஸ்

மும்பை: பாலிவுட் இயக்குனர் ஓம் ராவத் இயக்கத்தில் ஆதிபுருஷ் படத்தில் நடித்து வருகிறார் பிரபாஸ். இந்த படம் இந்தி, தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மொழிகளில் திரைக்கு வர உள்ளது. ராமாயணத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்டு வரும் ஆதிபுருஷ் படத்தில் பிரபாஸ் தான் ராமர். கீர்த்தி சனோன், சீதை வேடத்தில் நடிக்கிறார். ஆதிபுருஷ் படத்தில் நடிக்க பிரபாஸுக்கு ரூ100 கோடி சம்பளம் பேசப்பட்டது. இந்நிலையில் மேலும் ரூ20 கோடி வேண்டும் என்று அவர் கேட்டிருக்கிறாராம். பிரபாஸ் திடீர் … Read more

படப்பிடிப்பின்போது மாரடைப்பு: மலையாள நடிகர் காலித் மரணம்

திருவனந்தபுரம்: கேரள மாநிலம் கொச்சியை சேர்ந்தவர் காலித் (74). நாடக நடிகரான இவர் 1973ல் பெரியார் என்ற படத்தின் மூலம் மலையாள சினிமாவில் அறிமுகமானார். தாப்பானா, அனுராக கரிக்கின் வெள்ளம் உட்பட ஏராளமான படங்களில் நகைச்சுவை வேடங்களில் நடித்துள்ளார். சமீபகாலமாக இவர் டிவி தொடரில் நடித்து வந்தார். இந்நிலையில் ஜூட் ஆண்டனியின் இயக்கத்தில் டொவினோ தாமஸ் நடிக்கும் ஒரு படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியிருந்தார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு கொச்சியில் நடைபெற்று வந்தது. நேற்று காலித் வழக்கம்போல படப்பிடிப்பில் … Read more

சிரஞ்சீவி, வெங்கடேஷுக்கு பார்ட்டி கொடுத்த சல்மான்

ஐதராபாத்: சிரஞ்சீவி, வெங்கடேஷுக்கு சல்மான் கான் ஐதராபாத்தில் பார்ட்டி கொடுத்தார். கபி ஈத் கபி திவாலி என்ற இந்தி படத்தில் சல்மான் கான் நடிக்கிறார். இதில் முக்கிய வேடத்தில் தெலுங்கு நடிகர் வெங்கடேஷ் நடிக்கிறார். இதேபோல் சிரஞ்சீவி நடிக்கும் காட்பாதர் தெலுங்கு படத்தில் கவுரவ வேடத்தில் சல்மான் கான் நடித்துள்ளார். இதையடுத்து சல்மான் கான், சிரஞ்சீவி, வெங்கடேஷ் இடையே நல்ல நட்பு ஏற்பட்டுள்ளது. சமீபத்தில் விக்ரம் படத்தின் வெற்றிக்காக கமல்ஹாசனுக்கு சிரஞ்சீவி விருந்து கொடுத்தார். அதில் சல்மான் … Read more

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் 20 மணி நேரம் காத்திருந்து பக்தர்கள் தரிசனம்

திருமலை:திருப்பதி ஏழுமலையான் கோயிலில் தினமும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர். நேற்று கோயிலில் 68,873 பக்தர்கள் தரிசனம் செய்தனர். 38,952 பக்தர்கள் தலைமுடி காணிக்கை செலுத்தினர். உண்டியலில் ரூ4.44 கோடியை காணிக்கையாக செலுத்தினர்.இன்று காலை நிலவரப்படி திருமலையில் பக்தர்கள் அதிகளவு திரண்டுள்ளனர். அதிகளவு பக்தர்களால் வைகுண்டம் கியூ காம்ப்ளக்சில் உள்ள அறைகள் நிரம்பி கோயில் ஆஸ்தான மண்டபம் வரை நீண்ட வரிசையில் காத்திருக்கின்றனர். இவர்கள் சுமார் 20 மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்து … Read more

மீண்டும் அதிகரிக்கும் கொரோனா.. கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 17,336 பேருக்கு தொற்று உறுதி..!

இந்தியாவில் கொரோனா பரவல் மீண்டும் அதிகரித்து வரும் நிலையில், புதிதாக 17 ஆயிரத்து 336 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா தொற்றால் 13 பேர் உயிரிழந்த நிலையில், 13 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் குணமடைந்து வீடு திரும்பினர். Source link